எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் டிரைவ்
பிளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு பிளாஷ் டிரைவிற்கு மாறியவரா நீங்கள்?உங்களின் பிளாஷ் டிரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் டிரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் டிரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் டிரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம்.
ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது. எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த டிரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் டிரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும். கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் டிரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு டிரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.
வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?
வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?
ஆண்டி வைரஸ் புரோகிராம் பதிந்து வைத்திருக்கும் பலர் திடீரென என் ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் மீறி சில வைரஸ்கள் வந்து என் பொழைப்பையே கெடுத்துருச்சே! என்று அங்கலாய்ப்பார்கள். இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்களே இப்படித்தான். வைரஸ்களை எதிர்த்து திடீரென வேலை செய்யாது என்று புலம்புவார்கள். நப்பாசையில் ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தி ஸ்கேன் ஓடவிட்டுப் பார்ப்பார்கள்.
எந்த வைரஸும் இல்லை என்று செய்தி வந்தவுடன் நம் தலைவிதி அவ்வளவுதான் என்று கூறி டெக்னீஷியன் மூலம் வைரஸ்களைக் காலி செய்வார்கள் அல்லது இந்த புரோகிராம் சரியில்லை என்று வேறு ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமிற்குத் தாவுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது? என்று சற்றுப் பார்ப்போம். நீங்கள் என்ன செய்கிறீர்கள். நீங்களே அல்லது யார் மூலமாவது ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கிறீர்கள். அதுவும் அவ்வப்போது நீங்கள் இன்டர்நெட்டில் உலா வருகையில், இமெயில் இறக்குகையில், பிளாஷ் டிரைவ் பயன்படுத்துகையில் சிகப்பு கட்டத்தைக் காட்டி இதில் வைரஸ் இருந்தது. நான் கிளீன் செய்துவிட்டேன் என்று காட்டுகிறது. உங்களுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.
ஆனால் சிறிது நாட்கள் கழித்து கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது என்று தெரிகிறது. அப்போது தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். இங்கு நீங்கள் செய்யத் தவறிய சில செயல்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்ப்போம்.
1. ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் அதை மறந்துவிடக் கூடாது. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை அப்டேட் செய்திட வேண்டும். அப்போதுதான் அண்மைக் காலத்தில் வந்த வைரஸ்களைக் கண்டறிவ தற்கான புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்பட்டு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மேம்படுத்தப்படும். எனவே நீங்கள் ஸ்கேன் செய்வதாக இருந்தால் முதலில் இன்டர்நெட் இணைப்பு பெற்று உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று அப்டேட் செய்திடவும். அதன்பின் ஸ்கேன் செய்திடவும்.
2. முதலில் உங்கள் ஆண்டிவைரஸ் புரோகிராமினை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். வழக்கமாக டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் இதன் ஐகான் இருக்கும். இதனை டபுள் கிளிக் செய்தால் இந்த புரோகிராம் திறக்கப்படும். ஐகான் இல்லையா? ஸ்டார்ட் கிளிக் செய்து புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் பட்டியலில் ஆண்டி வைரஸ் புரோகிராமைக் காணலாம். அங்கு கிளிக் செய்திடலாம்.
3. இது திறந்தவுடன் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் மெயின் பக்கத்தில் நீங்கள் இருப்பதைக் காணலாம். இதில் இந்த புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏதுவான பிரிவுகள் இருக்கும். அனைத்தையும் பார்த்து ஸ்கேன் செய்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
4. ஸ்கேன் டேபைக் கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட டிரைவ் அல்லது அனைத்து டிரைவ்களையுமா எனத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கும். அனைத்து டிரைவ்களையும் அல்லது முழு கம்ப்யூட்டரையும் ஸ்கேன் செய்திடும் வசதியினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே ரிபோர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும். ஸ்கேன் முடிந்தவுடன் ஸ்கேன் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு கண்டறியப்பட்ட வைரஸ்கள், அவை இருந்த பைல்கள், வைரஸ் அழிக்கப்பட்டுவிட்டதா, காப்பு இடத்தில் (குவாரண்டைன்) வைக்கப்பட்டுள்ளதா என்று காட்டப்படும்.
இவற்றை அழிப்பதற்கான ஆப்ஷன் உங்களிடமே விடப்படும். அதே மெயின் விண்டோவிலேயே தொடர்ந்து தானாகக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாக ஸ்கேன் செய்திடும் பணியை செட் செய்திடவும் வாய்ப்பு தரப்படும். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யப்படும் போதெல்லாம் ஸ்கேன் செய்திடும் வகையிலோ அல்லது வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறையோ ஸ்கேன் செய்திட செட் செய்திடலாம்.
5. ஆட்டோமேடிக் ஸ்கேன் செய்திட எப்படி செட் செய்வது எனப் பார்ப்போம். முதலில் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின் டூல்ஸ் (Tools) மெனு செல்லுங்கள். Scheduler என்பதைத் தேர்ந்தேடுங்கள். அதன்பின் Schedule Scan என்ற பிரிவிற்குச் செல்லுங்கள். (இந்த சொற்கள் சில ஆண்டி வைரஸ் புரோகிராமில் வேறு மாதிரியாக இருக்கலாம்) ஷெட்யூல் ஸ்கேன் தேர்ந்தெடுத்தவுடன் நியூ என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
இப்போது சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் வகையில் சில ஆப்ஷன்கள் காட்டப்படும். அவை Event Type, When To Do, How Often, Start Time எனப் பலவகைப்படும். இவற்றின் தன்மைக்கேற்ப உங்கள் முடிவுப்படி செட் செய்திடுங்கள். அனைத்தும் முடித்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இதன்பின் நீங்கள் செட் செய்த படி ஸ்கேன் தானாக நடைபெறும். கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் இல்லாமல் இயங்கிட எப்போதும் மேம்படுத்தப்பட்ட உயிர்த்துடிப்புள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம்களை வைத்திருக்கவும். நீங்கள் மறந்தாலும் அது தானாக இயங்கும்படி செட் செய்திடவும்.
இந்த எழுத்து எங்கு இருக்கும்?
வேர்ட் டாகுமெண்ட்டில் அல்லது பிரசன்டேஷன் ஸ்லைட்களில் வரிசையாக 1,2,3 அல்லது a, b, c என அமைக்கும்போது தானாக இந்த வரிசை எண்கள் அல் லது வரிசையான எழுத்துக் கள் அமைக்கப்படும். ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் ஒரு பிரேக் கொடுத்து புதிய வரிசையிலோ அல்லது லைன் ஸ்பேஸ் பிரேக் கொடுத்து அதே வரிசையைத் தொடரவோ திட்டமிடலாம்.
எடுத்துக் காட்டாக
1. Item A
2. Item B
3. Item C
4. Item D
5. Item E
என அமைக்கலாம். இந்த பிரேக் அமைத்திட என்ன செய்கிறீர்கள்? புல்லட் அல்லது நம்பரிங் வசதியை எடுத்துவிட்டு பின் நோக்கிச் சென்று ஒரு லைன் ஸ்பேஸை உருவாக்கிப் பின் மீண்டும் அமைக்கிறீர்கள். எண்கள் தொடர்ந்து வர வேண்டும் என்றால் மீண்டும் அந்த எண்ணுக்கு புல்லட் லிஸ்ட் டைத் தயார் செய்கிறீர்கள்.
1. Item A
2. Item B
3. Item C
4. Item D
5. Item E
என அமைக்கலாம். இந்த பிரேக் அமைத்திட என்ன செய்கிறீர்கள்? புல்லட் அல்லது நம்பரிங் வசதியை எடுத்துவிட்டு பின் நோக்கிச் சென்று ஒரு லைன் ஸ்பேஸை உருவாக்கிப் பின் மீண்டும் அமைக்கிறீர்கள். எண்கள் தொடர்ந்து வர வேண்டும் என்றால் மீண்டும் அந்த எண்ணுக்கு புல்லட் லிஸ்ட் டைத் தயார் செய்கிறீர்கள்.
தலைவலி தரும் வேலை தானே! இந்த சுற்று வழி தேவையில்லை. இன்னொரு வேகமான வழி உள்ளது. ஷிப்ட் கீயைப் பயன்படுத்துவதுதான். எங்கு இடைவெளி லைன் ஸ்பேஸ் தேவைப்படுகிறதோ அங்கு ஷிப்ட் + என்டர் கீகளை அழுத்தவும். அது அடுத்த வரியை தொடர் எண் அல்லது புல்லட் இல்லாமல் டேட்டாவினை அமைத்திட உதவும். இப்போது மீண்டும் என்டர் கீயை அழுத்துங்கள். ஒரு லைன் ஸ்பேஸ் கொடுத்து மீண்டும் அதே புல்லட் அல்லது தொடர் எண்ணோடு பட்டியல் அமைத்திட வழி கிடைக்கும். எவ்வளவு எளிது என்பதை நீங்கள் வேகமாக இது போன்ற பணிகளில் ஈடுபடும் போதுதான் தெரியும்.
விண்டோஸ் ரீ ஸ்டார்ட் – ஷார்ட் கட்
விண்டோஸ் ரீ ஸ்டார்ட் – ஷார்ட் கட்
விண்டோஸ் இயக்க தொகுப்பினை பலமுறை ரீஸ்டார்ட் செய்திட எண்ணுகி றோம். சில வேளைகளில் இயங்கிக் கொண் டிருக்கும் வேர்ட் அல்லது பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் செய்து ஒவ்வொரு செயலாக முடிக்கலாம் என்று முயற்சி செய்தாலும் அது சண்டித் தனம் செய்தவாறு அப்படியே நிற்கும்.
விண்டோஸ் இயக்க தொகுப்பினை பலமுறை ரீஸ்டார்ட் செய்திட எண்ணுகி றோம். சில வேளைகளில் இயங்கிக் கொண் டிருக்கும் வேர்ட் அல்லது பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் செய்து ஒவ்வொரு செயலாக முடிக்கலாம் என்று முயற்சி செய்தாலும் அது சண்டித் தனம் செய்தவாறு அப்படியே நிற்கும்.
அது போன்ற நேரத்தில் அல்லது வேறு ஏதாவது நேரத்தில் நாம் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திட முயற்சிப்போம். ஆனால் அதற்காக ஸ்டார்ட் பட்டனை அழுத்தி அதன் பின் கம்ப்யூட்டர் ஆப் செய்வதற்கான பிரிவில் கிளிக் செய்து கிடைக்கும் மூன்று கட்டங்கள் நிறைந்த விண்டோவில் ரீஸ்டார்ட் தேர்ந்தெடுத்து ஓகே செய்திட வேண்டுமே! ஏன் இத்தனை சுற்றுவழி. இதற்கு ஒரு ஷார்ட் கட் ஐகான் ஒன்று உருவாக்கினால் என்ன? செய்ய லாமா! கீழே படியுங்கள்.
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மானிட்டரில் ரைட் கிளிக் செய்து New, Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் “Type the location of the item” என்ற விஸார்ட் பாக்ஸில் %windir%\ System32\ shutdown.exer என டைப் செய்திடவும். அடுத்து Next கிளிக் செய்திடவும். அதன்பின் Finish என்பதையும் கிளிக் செய்திடவும்.
இப்போது ஒரு புதிய ஐகான் ஒன்றை உங்கள் டெஸ்க் டாப்பில் பார்க்கலாம். இந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Rename என்பதைத் தேர்ந்தெடுத்து அதற்கு “Restart” என்று பெயர் கொடுக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட ஒரு ஐகான் கிடைத்துவிட் டது. இதனைக் கிளிக் செய்து ஒரு முறை டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
2.A . வேர்ட்…. வேர்ட்…..
வேர்டில் புட் நோட் அமைக்கும் செயல்பாடு புட்நோட் என்பது டெக்ஸ்ட் ஒன்றில் சிறிய விளக்கத்தினைத் தனியாகத் தருவதற்காக பக்கத்தின் அடிப்பகுதியில் தனியே அமைக்கும் டெக்ஸ்ட் ஆகும். இந்த செயல்பாட்டில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது என எண்ணுகிறீர்களா! சரி அமைக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டின் கடைசி பக்கம் எப்படி உள்ளது? அங்கு புட் நோட்டினை பக்கத்தின் அடிப்பாகத்தில் அமைத்தால் டெக்ஸ்ட்டிற்கும் நோட்டிற்கும் இடையே காலி இடைவெளி அமையும். அல்லது டெக்ஸ்ட் முடிந்த உடனேயே அது பக்கத்தின் முன்பகுதியாக இருந்தாலும் அங்கு புட் நோட்டை அமைக்கலாம்.
உங்களுடைய விருப்பம் என்ன? இதற்கு வேர்ட் துணைபுரிகிறது. வேர்ட் தொகுப்பில் Insert மெனு சென்று அங்கு Reference சப்மெனு தேர்ந்தெடுக்கவும். பின் அதில் Footnote என்னும் பகுதியைக் கிளிக் செய்திடவும்.
இப்போது Footnote and Endnote என்று ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீங்கள் புட்நோட் எங்கு அமைய வேண்டும். அது என்ன வடிவத்தில் இருக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவம் டெக்ஸ்ட் முழுவதும் இருக்க வேண்டுமா அல்லது குறிப்பிட்ட வரியில் இருந்து இருக்க வேண்டுமா என்பதனை முடிவு செய்து தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இந்த மெனுக்கள் நாம் விரும்பியபடி புட் நோட்களை அமைக்க உதவுகின்றன.
வேர்டில் ஜம்ப் செய்தால் . . . .
பெரிய வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் டெக்ஸ்ட்டை ஓரிடத்தில் குறுக்கே இணைக்கிறோம். இணைத்துவிட்டு பின் கர்சரை பல பக்கங்கள் தள்ளி கொண்டு செல்கிறோம். அங்கு சில எடிட்டிங் வேலைகளை மேற்கொள்கிறோம். இப்போது முதலில் எந்த இடத்தில் டெக்ஸ்ட்டை இணைத்தோம் என்று அறிய ஆசைப்படுகிறீர்கள். ஆனால் எந்த இடம் என்று தான்தெரியவில்லை. கவலைப்பட வேண்டாம். ஷிப்ட் + எப் 5 கீயை அழுத்துங்கள். கடைசியாக நீங்கள் எங்கு எடிட்டிங் செய்தீர்களோ அங்கு கர்சர் செல்லும். மீண்டும் மீண்டும் இந்த கீகளை அழுத்த முன்பு கர்சர் இருந்த இடத்திற்குக் கூட்டிச் செல்லும். இப்படியே பின் வழியாக முன்பு எடிட்டிங் செய்த ஐந்து நிகழ்வுகளுக்குச் செல்லும். ஆனால் எந்த இடத்திலும் நீங்கள் டெக்ஸ்ட் எதனையும் இடைச் செருகல் செய்திடவில்லை என்றால் இந்த கீகள் செயல்பாடு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது.
அனைத்தும் செலக்ட் செய்திட
வேர்ட் தொகுப்பில் சில கீகளின் செயல்பாடுகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நாம் நினைக்கும் வேளையில் ஒரு சிலர் அது குறித்து அறியாமலேயே இருக்கின்றனர். சொன்னால் அப்படியா! என்கின்றனர். வேர்டில் டெக்ஸ்ட் முழுவதும் செலக்ட் செய்திட, அது ஒரு பக்கமாக இருந்தாலும் இருபது பக்கமாக இருந்தாலும், என்ன செய்கிறோம். மவுஸ் கர்சரை முதல் வரியில் பிடித்து அப்படியே இழுத்து இறுதி வரை கொண்டு சென்று செலக்ட் செய்கிறோம்; பின்னர் காப்பி செய்கிறோம்; அல்லது அழிக்கிறோம். ஆனால் பெரும்பாலான வேளைகளில் மவுஸைப் பிடித்து இழுக்கையில் அழுத்தத்தை விட்டுவிட்டு மீண்டும் முதல் வரியிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது. இதற்கான பிற வழிகளைப் பார்ப்போம். இரண்டு வழிகள் உள்ளன. Edit மெனு சென்று பின் Select AllIz தேர்ந்தெடுப்பது.
இது முழு டெக்ஸ்ட்டையும், படங்கள் உட்பட, தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். இவ்வாறு தேர்ந்தெடுத்தனை பின் எங்கு வேண்டுமென்றா லும் ஒட்டலாம். இன்னும் வேகமாகச் செயல்பட ஒரு குறுக்கு வழி உள்ளது. அது கண்ட்ரோல் மற்றும் ஏ (Ctrl + A) கீகளை அழுத்துவதுதான். இதுவரை அறிந்திராவதர்களுக்கு இது ஒரு புதிய வழி. தெரிந்தவர்களுக்கு ஒரு நினைவூட்டல்.
புதிய தேடுதல் தளம் கூல்
புதிய தேடுதல் தளம் கூல்
“மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம்’ என்ற அறிவிப்புடன் கூல் ( Cuil.com ) என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று கடந்த ஜூலை 28 முதல் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது. இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
“மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம்’ என்ற அறிவிப்புடன் கூல் ( Cuil.com ) என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று கடந்த ஜூலை 28 முதல் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது. இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஐரிஷ் மொழியில் இதடிடூ என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர். அறிவு வளர்ச்சியின்அடிப்படையே தேடல் தான். எனவே தேடலுக்குத் துணை புரியும் இந்த தளத்திற்கு இது சரியான பெயராகவே தோன்றுகிறது. நாம் தேடும் சொல்லுக்குத் தளங்களைத் தேடாமல், இருக்கின்ற கோடிக்கணக்கான தளங்களைத் தேடி வகைப்படுத்திக் கொண்டு அந்த தகவல் கட்டமைப்பிலிருந்து தளப்பட்டியலைத் தருகிறது கூல் தளம். கூகுள் தளத்தைக் காட்டிலும் மூன்று பங்கும், மைக்ரோசாப்ட் தளத்தைக் காட்டிலும் பத்து பங்கும் கூடுதலாக தளங்களைத் தேடி தகவல்களை எளிதான முறையில் புதிய பார்மட்களில் தருகிறோம் என இந்த தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் (கணவன் மனைவியான) டாம் மற்றும் அன்னா . அலுவலகத் தலைமையிடம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. டாம் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் ஆராய்ச்சி யாளராகப் பணியாற்றியவர்.
அன்னா பேட்டர்சன் கூகுள் அலுவலகத்தில் முதன்மை கட்டமைப்பாளராக பணியாற்றியவர். கூல் நிறுவனத்தில் அலுவலர்கள் 30 பேர். கூகுள் தளத்துடன் போட்டியிடும் அளவிற்கு சிறப்பாகத் தளத்தை வடிவமைத்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளில் இன்டர்நெட் வளர்ச்சி பெற்ற அளவிற்கு அதில் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சின் என்னும் தேடல் தளங்கள் வளர்ச்சி அடையவில்லை. கூகுள் தளம் ஒன்றுதான் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தித் தந்து வருகிறது. தற்போது அதனை முந்தும் வகையில் கூல் தளம் வந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் இன்டர்நெட் வளர்ச்சி பெற்ற அளவிற்கு அதில் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சின் என்னும் தேடல் தளங்கள் வளர்ச்சி அடையவில்லை. கூகுள் தளம் ஒன்றுதான் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தித் தந்து வருகிறது. தற்போது அதனை முந்தும் வகையில் கூல் தளம் வந்துள்ளது.
18 ஆயிரத்து 600 கோடி தளங்களை ஆய்வு செய்து அவற்றில் மோசமானவற்றையும் டூப்ளிகேட் தளங்களையும் விலக்கிவிட்டு 12 ஆயிரம் கோடி இணைய தளங்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு வைத்து தேடல் சொற்களுக்கேற்ப அவற்றைத் தருகிறது. தேடுதல் சொற்களுக்கான இத் தளம் தரும் பட்டியல் அடுக்கே மிக நன்றாக வேறுபாட்டுடன் இருக்கிறது. தளத்திலிருந்து சில வாக்கியங்கள், தளம் சார்ந்த போட் டோ என தளம் குறித்த அடிப்படைத் தகவல்கள் தரப்படுவதால் அதனைக் கிளிக் செய்து பின் அடடா இது தேவையில்லையே என்று ஏமாற வேண்டியதில்லை.
தளங்கள் அதில் தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஒரு பத்திரிக்கையில் லே அவுட் போல காட்டப்படுகின்றன. அடையாளம் கண்டுகொள்ள முக்கிய வாக்கியங்கள் மற்றும் போட்டோக்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன. மற்ற தேடல் தளங்கள் அந்த தளங்களை எத்தனை பேர் பார்த்திருக்கின்றனர் என்ற ஹிட் ரேட் படி வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றன. ஆனால் கூல் அவற்றில் தரப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. கூல் தளத்தினைப் பயன்படுத்துபவர் குறித்த எந்த பெர்சனல் தகவல்களையும் இத்தளம் கேட்டுப் பெறுவதில்லை. பயன்படுத்துபவர் பிரைவசியில் தலையிடுவதே இல்லை.
தேடலுக்கான சொல்லை டைப் செய்கையில் பிற தளங்களில், நாம் ஏற்கனவே டைப் செய்த சொற்களை மட்டும் நினைவில் வைத்து பட்டியல் காட்டப்படும். ஆனால் கூல் தளத்தில், ஆன் லைன் டிக்ஷனரியில் கிடைப்பது போல, ஏற்கனவே கோடிக்கணக்கான தளங்களை ஆய்வு செய்து அமைக்கபட்ட பட்டியலிலிருந்து சார்ந்த சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் முழுமையான சொல்லை நாம் டைப் செய்திட வேண்டிய தில்லை.
காட்டப்படும் பட்டியலில் அந்த தளத்தில் அதற்கான ஐகான் இருந்தால் அந்த ஐகான் காட்டப்படுகிறது. இதனால் நமக்கு வேண்டிய தளங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. தேடலைக் கூர்மைப்படுத்தி நமக்கு வேண்டியதை நோக்கி நம்மைச் செலுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேடலை மேற்கொண்டபின் வலது பக்கம் ஒரு பேனல் தரப்படுகிறது. அதில் ‘Explore By Category’ என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது.
நம் தேடலுடன் தொடர்புள்ள மற்ற பொருள் குறித்த பட்டியல் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்து முன்னேறுவதன் மூலம் தேடல் பொருளின் சரியான தகவல் தரும் தளத்திற்கு நாம் எடுத்துச் செல்லப்படுவோம். மேலும் இந்த வகையில் கர்சரைக் கொண்டு சென்றவுடன் சார்ந்த சொற்களுக்கான சரியான பொருள் பாப் அப் விண்டோவில் தரப்படுகிறது. இதைக் கொண்டு நாம் அந்த தளம் வேண்டுமா? அது நம் தேடலுடன் தொடர்புடையதா என்று முடிவெடுக்கலாம்.
கூல் தளத்தில் தேடல் மேற்கொள்கையில் தேடல் சொல்லுடன் தொடர்புடைய வெவ்வேறு பொருள்களுக்கு தனித்தனி டேப்கள் தரப்படுகின்றன. இவற்றின் மூலம் நமக்குத் தேவையான தளத்தினைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம். சேப் சர்ச் (Safe search) என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது தொடக்கத்திலேயே இயங்குகிறது. இதனால் பாலியியல் மற்றும் சிறுவர்கள் காணக் கூடாத தளங்கள் வடிகட்டப்பட்டு பட்டியலிடப்படுகின்றன. அனைத்து தளங்களும் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வசதியை ஆப் செய்துவிட்டு தேடலாம்.
புதிய தேடுதல் தளம் – கூல்: ஐரிஷ் மொழியில் கூல் என்றால் அறிவு மற்றும் சால்மன் (வஞ்சிர மீன்) என்ற மீனையும் குறிக்கும். பழங்கால கதை ஒன்று அயர்லாந்து நாட்டில் இன்றும் வழங்குகிறது. சால்மன் மீன் ஒன்று ஒன்பது ஹேஸல்களை (பாதாம் பருப்பு கொட்டை போன்றது) மொத்தமாகத் தின்று விட்டு அறிவுக் குளத்தில் வீழ்ந்து விட்டது. அதன் மூலம் உலகின் அறிவு அனைத்தும் அந்த மீனுக்கு வந்துவிட்டது. இந்த மீனை பிடித்து முதலில் சாப்பிடுபவருக்கு மட்டும் உலக அறிவு வந்துவிடும் என்பது ஐதீகம்.
ஐரிஷ் நாட்டின் பிரபல கவிஞர் ஒருவர் இந்த மீனை எப்படியும் பிடித்துச் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாய்ன் என்ற ஆற்றில் பல ஆண்டுகள் மீன் பிடித்தாராம். இறுதியில் தன் முயற்சியில் வெற்றி பெற்று அந்த அறிவு மீனைப் பிடித்தார். அதைத் தன் சிஷ்யனான “பின்கூல்’ என்பவனிடம் கொடுத்து மீனை வறுத்துக் கொடு; ஆனால் ஒரு பிட் கூடச் சாப்பிடக் கூடாது என்று மிரட்டிவிட்டு குளிக்கச் சென்றார்.
பின்கூல் தன் தலைவரின் ஆணைக்கேற்ப பொறுமையாக மீனை பொன் நிறத்திற்கு வறுக்கத் தொடங்கினான். சாப்பிட ஆசை இருந்தாலும் தலைவரின் எச்சரிக்கையால் அடக்கிக் கொண்டான். வறுவல் முடியும் தறுவாயில் வறுத்த மீனை கைகளில் எடுக்கும் போது கட்டைவிரலில் சூடு பட்டு பொறுக்க முடியாமல் உடனே சூடு தணிக்க விரலை வாயில் வைத்து சூப்பினான். விரலை அழுத்தி எடுத்ததால் விரலோடு வந்த மீனின் இறைச்சி வாயினுள் சென்றது. அதனால் அவனுக்கு உலக அறிவு வந்ததாக இன்றும் அயர்லாந்தில் கதை உண்டு.
(நம் நாட்டிலும் விரல் சூப்பும் பிள்ளைகளை அறிவு அதிகம் என்று சொல்வது இதனால்தானோ) ஐரிஷ் நாட்டு கதைகளில் எல்லாம் இந்த பின்கூல் ஒரு ஹீரோவாக இன்றும் வர்ணிக்கப்படுகிறார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டால் உடனே விரலை வாயில் வைத்து அதற்கான விடையைத் தந்துவிடுவதாக அனைத்து கதைகளும் சொல்கின்றன. கூல் தள நிறுவனர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அதே பாய்ன் என்ற ஆற்றில் அடிக்கடி மீன் பிடிப்பாராம். அதனாலேயே இந்த பெயரைத் தான் உருவாக்கிய தளத்திற்கு டாம் வழங்கியுள்ளார்.
கிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ்
பல மாடல்களில் யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களை விற்பனைக்கு அனுப்பி வரும் கிங்ஸ்டன் நிறுவனம் அண்மையில் DT100, DT101 மற்றும் DT400 என்ற பெயர்களில் மூன்று டேட்டா யு.எஸ்.பி. டிரைவ்களைக் கொண்டு வந்துள்ளது.
பல மாடல்களில் யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களை விற்பனைக்கு அனுப்பி வரும் கிங்ஸ்டன் நிறுவனம் அண்மையில் DT100, DT101 மற்றும் DT400 என்ற பெயர்களில் மூன்று டேட்டா யு.எஸ்.பி. டிரைவ்களைக் கொண்டு வந்துள்ளது.
DT100 16 ஜிபி டேட்டா வரை கொள்ளக் கூடியது. இவற்றில் மைகோ சிங்க் என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிரைவில் உள்ள இமெயில் செட்டிங்ஸ் அமைப்பை ஒருங்கிணைத்து செயல்படுத்தலாம். இதில் 20mbps வேகத்தில் பைல்கள் படிக்கப்படுகின்றன. எழுதும் வேகம் 10mbps இவற்றில் உள்ள செக்யூர் ட்ராவலர் புரோகிராம் உள்ளிருக்கும் டேட்டாவிற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு அளிக்கிறது. DT400 விண்டோஸ் மட்டுமின்றி மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் இணைந்து செயல்படுகிறது. DT 100 மூடி இல்லாமல் இழு வகையில் திறந்து செயல்படும் வகையில் சிறியதாகவும் உள்ளது. DT 101 பல வண்ணங்களில் கிடைக்கிறது. அனைத்து டிரைவ்களும் ஐந்தாண்டு வாரண்டியில் கிடைக்கின்றன. எந்த நேரமும் இது குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளைப் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.DT 100 மற்றும் DT 400 டிரைவ்கள் 2,4,8 மற்றும் 16 ஜிபி கொள்ளளவு திறனுடன் பல மாடல்களில் கிடைக்கின்றன. DT 101 2,4, மற்றும் 8 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. அவற்றிற்கேற்ப இவை விலையிடப்பட்டுள்ளன.
பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு அடுத்த பதிப்பு
இரு வாரங்களுக்கு முன் பல புதிய வரவுகள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 3 அதிரடியாக கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் அறிமுகமாகியது. இப்போது இதன் அடுத்த பதிப்பு சில மாற்றங்களுடன் சென்ற ஜூலை 16ல் வெளிவந்தது.
இது பயர்பாக்ஸ் 3.0.1. நீங்கள் நினைக்கலாம், வந்து சில வாரங்களுக்குள் பதிப்பு 3க்கு புதியதாக என்ன கிடைக்கப் போகி றது என நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் சில விஷயங்கள் புதியதாகக் கிடைத்துள்ளன. பல பாதுகாப்பு விஷயங்கள் நிலைப்படுத் தப்பட்டுள்ளன. மேலும் பல சின்ன சின்ன பிரச்னைகள் வாடிக்கையாளர்க ளிடமிருந்து பெறப் பட்ட கருத்துக்களிலிருந்து கண்டறியப் பட்டு வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பயர் பாக்ஸ் 2 பதிந்த டைரக்டரியிலேயே பயர்பாக்ஸ் 3 பதிந்தவர்கள் தங்களின் பயர்பாக்ஸ் 2 தொகுப்பு அதிலிருந்து சரியாக இயங்கவில்லை என்று குறை சொன்னார்கள். அது தற்சமயம் களையப்பட்டுள்ளது. அதே போல இணைய தள தகவல்களைப் பிரிண்ட்டிற்கு எடுத்துச் செல்கையில் குறிப்பிட்ட பகுதி தளத்தின் நடுவாக இருந்தால் அச்சேற வில்லை என்ற குறை பரவலாகச் சொல்லப் பட்டது. இதுவும் தீர்க்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிய http://www.mozilla.com/enUS/ firefox/3.0.1/releasenotes/ என்ற தளத்திற்குச் செல்லவும். இங்கேயே பதிப்பு 3.0.1ஐ இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். நீங்கள் இன்னும் பயர்பாக்ஸ் பதிப்பு 2 பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா! உங்களுக் கும் ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட தொகுப்பு ஜூலை 16 அன்று தரப்பட்டுள்ளது.
ஒரு சில விஷயங்கள் இதில் மாற்றப்பட்டுள்ளன என்றாலும் அவை முக்கிய மானவையே. எனவே இறக்கிப் பதிந்து கொண்டு இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். மேலும் இந்தப் பதிப்பிற்கான உதவிடும் மையத்தினை மொஸில்லா வரும் டிசம்பர் வரையே இயக்கிடும். அதன் பின்னர் இதற்கான உதவிக் குறிப்புகள் கிடைக்காது. அதன் பின் அனைவரும் பயர்பாக்ஸ் 3க்கே செல்ல வேண்டும்.
ஒரு சில விஷயங்கள் இதில் மாற்றப்பட்டுள்ளன என்றாலும் அவை முக்கிய மானவையே. எனவே இறக்கிப் பதிந்து கொண்டு இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். மேலும் இந்தப் பதிப்பிற்கான உதவிடும் மையத்தினை மொஸில்லா வரும் டிசம்பர் வரையே இயக்கிடும். அதன் பின்னர் இதற்கான உதவிக் குறிப்புகள் கிடைக்காது. அதன் பின் அனைவரும் பயர்பாக்ஸ் 3க்கே செல்ல வேண்டும்.
காம்பேக்ட் பிளாஷ் கார்ட் 300 எக்ஸ்
பென் க்யூ நிறுவனம் உலகின் மிக ஸ்லிம்மான எல்.சி.டி. மானிட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. BenQ V2400W என அழைக்கப்படும் இதன் அதிக பட்ச தடிமன் 24 மிமீ. இதன் அகலம் 24 அங்குலம்.
பென் க்யூ நிறுவனம் உலகின் மிக ஸ்லிம்மான எல்.சி.டி. மானிட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. BenQ V2400W என அழைக்கப்படும் இதன் அதிக பட்ச தடிமன் 24 மிமீ. இதன் அகலம் 24 அங்குலம்.
ஏரோ டைனமிக் வளைவுகளுடன் பளபளக்கும் கருப்பான வண்ணத்தில் மிக மெல்லிய நீல எல்.இ.டி. விளக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரேபிட் ஹீட் சைக்கிள் மோல்டிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஸ்குரூ போல்ட் எதுவுமின்றி அழகாகக் காட்சி அளிக்கிறது. இதனை ஐந்து வெவ்வேறு வகையில் செட் செய்து கொள்ளலாம். இதன் காண்ட்ராஸ்ட் விகிதம் 4000:1. இந்த மானிட்டரின் விலை ரூ.25,000.
இந்தியாவில் ட்ரான்ஸெண்ட் நிறுவனம் தன்னுடைய காம்பேக்ட் பிளாஷ் 300 எக்ஸ் மெமரி கார்டினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது 16 ஜிபி கொள்ளளவு உடையது. இதில் விநாடிக்கு 45 எம்பி அளவில் தகவல் பரிமாறிமிகச் சிறப்பான வகையில் செயல்படும் ரீட் / ரைட் ஹெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி தற்போது காம்பேக்ட் கார்ட்களில் அதிக வேகம் தரப் பயன்படுத்தப்படும் அல்ட்ரா டி.எம். ஏ. மோட் 5 (Ultra DMA mode 5) இதில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதில் போட்டோ கிராபர்கள் தொடர்ந்து போட்டோக்களை எடுக்கலாம். அதே போல வீடியோ காட்சிகளையும் இடைவெளி இன்றி எடுத்துக் கொண்டே இருக்கலாம். இதில் உள்ள பிழை திருத்துவதற்கான Error Correction Code புரோகிராம் இணைக்கப் பட்டுள்ளது. தகவல்கள் பரிமாறப் படுகையில் ஏற்படும் பிழைகளையும் இது கண்டறிந்து உடனே திருத்துகிறது. ஏறத்தாழ 130 கார்டுகளை சோதனை செய்ததில் சிறப்பிற்கான முதல் இடத்தைப் பெற்றது. 4 ஜிபி கார்ட் ரூ. 4,000, 8 ஜிபி ரூ.6,000 மற்றும் 16 ஜிபி ரூ.11,000 விலையிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் ட்ரான்ஸெண்ட் நிறுவனம் தன்னுடைய காம்பேக்ட் பிளாஷ் 300 எக்ஸ் மெமரி கார்டினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது 16 ஜிபி கொள்ளளவு உடையது. இதில் விநாடிக்கு 45 எம்பி அளவில் தகவல் பரிமாறிமிகச் சிறப்பான வகையில் செயல்படும் ரீட் / ரைட் ஹெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி தற்போது காம்பேக்ட் கார்ட்களில் அதிக வேகம் தரப் பயன்படுத்தப்படும் அல்ட்ரா டி.எம். ஏ. மோட் 5 (Ultra DMA mode 5) இதில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதில் போட்டோ கிராபர்கள் தொடர்ந்து போட்டோக்களை எடுக்கலாம். அதே போல வீடியோ காட்சிகளையும் இடைவெளி இன்றி எடுத்துக் கொண்டே இருக்கலாம். இதில் உள்ள பிழை திருத்துவதற்கான Error Correction Code புரோகிராம் இணைக்கப் பட்டுள்ளது. தகவல்கள் பரிமாறப் படுகையில் ஏற்படும் பிழைகளையும் இது கண்டறிந்து உடனே திருத்துகிறது. ஏறத்தாழ 130 கார்டுகளை சோதனை செய்ததில் சிறப்பிற்கான முதல் இடத்தைப் பெற்றது. 4 ஜிபி கார்ட் ரூ. 4,000, 8 ஜிபி ரூ.6,000 மற்றும் 16 ஜிபி ரூ.11,000 விலையிடப்பட்டுள்ளன.
கம்ப்யூட்டர் பதில்கள்
கேள்வி: பல இணைய தளங்களைப் பார்வை யிடுகையில் இந்த இடத்தில் கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. இதில் கிளிக் செய்தால் உடனே ஏதாவது அனிமேஷன் புரோகிராம் இயங்குகிறது. இதனை கிளிக் செய்திடுகையில் என்ன நடக்கிறது?
பதில்: இது குறித்து கொஞ்சம் விவரமாகத்தான் எழுத வேண்டும். உங்களில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வெப் பிரவுசிங்கில் ஈடுபடுகையில் அதில் ஏதேனும் பிளாஷ் அனிமேஷன் வழி தகவல் இருந்தால் இதனைச் செயல்படுத்த கிளிக் செய்திடவும் (“Click to activate and use this control”) என்ற செய்தி தரப்பட்டிருக்கும். பிளாஷ் பிளேயர் மட்டுமின்றி ஷாக் வேவ் மற்றும் ஆதர்வேர் பிளேயர், அடோப் ரீடர், சன் ஜாவா, ரியல் பிளேயர், குயிக்டைம் பிளேயர் போன்ற தொகுப்புகளின் மூலம் இயக்கப்பட வேண்டிய அனைத்திற்கும் இந்த செய்தி இருக்கும். இதில் உள்ள சங்கதி நீங்கள் மவுஸைக் கிளிக் செய்திடாமல் இயங்காது. கிளிக் செய்திட்டபின் அனிமேஷன் அல்லது மற்ற தகவல்கள் தளத்தின் சர்வரிலிருந்து இறங்கத் தொடங்கி இயக்கப்படும். இவ்வகையான செயல்பாடு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6க்கான சில அப்டேட் பைல்கள் வந்த பின்னர் தொடங்கியது. தற்போது இது பெரும்பாலான இணைய தளங்களில் உள்ளது. இத்தகைய செய்தி கிடைக்கையில் சுட்டப்பட்டுள்ள இடத்தில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். இருந்தாலும் இத்தகைய ஏற்பாடு பலருக்கு கூடுதல் வேலையாகத் தான் தோன்றுகிறது.
கேள்வி: எக்ஸெல் மற்றும் வேர்ட் தொகுப்பில் டெக்ஸ்ட் ஒன்றை பேஸ்ட் செய்தால் அதன் அருகே சிறிய சதுரக் கட்டம் ஒன்று தொங்கிக் கொண்டே இருக்கிறது. இதனைத் தவிர்க்க முடியாதா? அந்த இடத்தில் பேஸ்ட் செய்ததை இது சுட்டிக் காட்டுகிறதா?
பதில்: பேஸ்ட் செய்ததைச் சுட்டிக் காட்டுவதற்கு மட்டும் இல்லை. இதில் ரைட் கிளிக் செய்தால் பேஸ்ட் செய்த டெக்ஸ்ட்டின் பார்மட்டை திருத்துவதற்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இது நல்லதொரு வசதிதான் என்றாலும் உங்களைப் போன்ற பலருக்கு பிடிக்கவில்லை என்றால் இது போன்ற சிறிய ஐகான் வராமல் செட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்டைத் திறந்த பின் Tools கிளிக் செய்து Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுங்கள். இதில் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் Edit என்னும் டேபினைத் தட்டவும். கிடைக்கும் பல வரிகளில் Show Paste Options buttons என்ற வரியைக் கண்டு அதன் எதிரே உள்ள கட்டத்தில் காணப்படும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு கிளிக் செய்தால் டிக் அடையாளம் எடுக்கப்பட்டுவிடும். பின் OK கிளிக் செய்து வெளியேறவும். வேர்டிலும் இதே போல் அமைக்கலாம்.
கேள்வி: ஆப்டிகல் மவுஸ், வயர்லெஸ் மவுஸ் போக வேறு மவுஸ்கள் உள்ளனவா? அவை என்ன
பதில்: நிறைய உள்ளன. கார்ட்லெஸ் மவுஸ் எனப்படும் வயர்லெஸ் மவுஸ், புட் மவுஸ் (கால்களில் இயக்கலாம்; எனவே கரங்கள் தடையின்றி கீ போர்டில் இயங்கலாம்) டச்பேட் அல்லது கிளைட் பாயின்ட் மவுஸ், வீல் மவுஸ், ஆப்டிகல் மவுஸ், ஜே மவுஸ், இன்டெல்லி மவுஸ் எனப் பலவகைகள் உள்ளன. இப்போது பரவலாக அனைவரும் பயன்படுத்துவது ஆப்டிகல் மவுஸ்தான். இதனை மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் வழங்குகின்றன. கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் மவுஸ்களை வாங்கித் தங்கள் நிறுவனப் பெயர்களில் இவற்றை வழங்கும் பழக்கமும் உள்ளது.
கேள்வி: அண்மையில் விண்டோஸ் பதிப்பு 6 லிருந்து 7க்கு மாறினேன். வெப் தளத்தை சேவ் செய்திட முயன்றால் அதற்கான மெனு கிடைக்கவில்லை. ஏன் இது தரப்படவில்லை. இதற்கு என்ன வழி? வைரஸ் வந்து மறைக்கிறதா?
பதில்: வைரஸ் எதுவும் இல்லை, சின்னதுரை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7ல் இது மறைத்து வைக்கப்பட்டு உங்கள் இணைய தேடலுக்கு மானிட்டரில் அதிக இடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த மெனு பாரினை அடூt பட்டன் அழுத்தினால் கிடைக்கும். எனவே உங்களை அறியாமல் நீங்கள் Alt பட்டனை அழுத்துகையில் அது தெரிகிறது.
பின் மீண்டும் மறைந்துவிடுகிறது. இது நிரந்தரமாகக் காட்சி அளிக்க முதலில் Alt பட்டனை அழுத்தி மெனு பாரினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின் View பிரிவில் கிளிக் செய்தால் வரும் மெனுவில் Tools பார் என்பதை அழுத்தவும். பின் அதில் கிடைக்கும் துணை மெனுவில் Menu bar என்பதற்கு முன் டிக் அடையாளத்தை மவுஸின் துணை கொண்டு ஏற்படுத்தவும். இனி மெனு பார் நிரந்தரமாக உங்களுக்குக் கிடைக்கும்.
பின் மீண்டும் மறைந்துவிடுகிறது. இது நிரந்தரமாகக் காட்சி அளிக்க முதலில் Alt பட்டனை அழுத்தி மெனு பாரினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின் View பிரிவில் கிளிக் செய்தால் வரும் மெனுவில் Tools பார் என்பதை அழுத்தவும். பின் அதில் கிடைக்கும் துணை மெனுவில் Menu bar என்பதற்கு முன் டிக் அடையாளத்தை மவுஸின் துணை கொண்டு ஏற்படுத்தவும். இனி மெனு பார் நிரந்தரமாக உங்களுக்குக் கிடைக்கும்.
கேள்வி: என் கம்ப்யூட்டரில் வேர்ட் பயன்படுத்துகையில் மேலாக படுக்கை வசத்தில் ரூலர் கிடைக்கிறது. ஆனால் இடது பக்கம் ரூலர் தெரியவில்லை. ஏன் என்னுடையதில் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது.
பதில்: உங்களுக்கு மட்டும் ஏன் மறைக்கப்பட வேண் டும்? நீங்கள் அதனை இயக்கி வைத்துக் கொள்ளலாம். செட் செய்ய வேண்டிய வழிகளைப் பார்க்கலாமா? நீங்கள் விரும்பும் இடது பக்க ரூலர் பிரிண்ட் வியூவில் மட்டுமே கிடைக்கும். Tools கிளிக் செய்து பின் Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவைக் கவனிக்கவும். இதில் உள்ள பல டேப்களில் View என்ற டேபினைக் கிளிக் செய்திடவும். இங்கு நான்கு பிரிவுகள் இருக்கும. இதில் மூன்றாவது பிரிவான Print and Web Layout Options என்ற பிரிவிற்குச் செல்லவும். அதில் Vertical Ruler (Print Layout only ) என்று இருப்பதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் இடது பக்கமும் ரூலர் தெரியும். ஆனால் வேர்ட் டாகுமெண்ட் வியூ பிரிண்ட் லே அவுட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கேள்வி: என் வேர்ட் தொகுப்பில் இருந்த டூல்பார் திடீரென மறைந்துவிட்டது. டாப் ரூலருக்கு மேலே எதுவும் இல்லை. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ரெகவரி டிஸ்க்கினையும் பயன்படுத்தி பார்த்துவிட்டேன். சரியாகவில்லை. இதற்கு என்ன காரணம்? எப்படி டூல்பாரினை மீண்டும் அமைப்பது?
பதில்: வேர்ட் எப்போதும் எந்த எந்த டூல்பார்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற தேர்வை உங்களிடமே விட்டுவிடுகிறது. அதே போல அனைத்து டூல் பார்களையும் கூட வேண்டாம் என்று நீங்கள் அமைக்கலாம். இவ்வாறு மறைப்பதற்கான தேர்வை நீங்கள் உங்களை அறியாமல் எடுத்திருக்கலாம். அல்லது வேர்ட் தொகுப்பில் முழுத்திரையும் (full screen) காட்டும் வகையில் நீங்கள் செட் செய்திருக்கலாம். இந்த வகைத் தேர்வில் அனைத்து டூல்பார்களும் மறைந்து போகும். அப்படியானால் Alt + V அழுத்தவும். இப்போது View மெனு கிடைக்கும். இதில் U அழுத்தவும். உடனே நார்மல் வியூ கிடைக்கும். இந்நிலையிலேயே வேர்ட் தொகுப்பை மூடவும். இனி மீண்டும் வேர்ட் இயக்குகையில் full screen க்குச் செல்லாது. பின் View மெனு அழுத்தி அதில் டூல் பாரினையும் அழுத்தி உங்களுக்கு என்ன என்ன டூல் வேண்டுமோ அவற்றை டிக் செய்து பெறவும்.
No comments:
Post a Comment