Thursday, 5 April 2012

விண்டோஸ் எக்ஸ்பி வழி வாய்ஸ் மெய்ல்--ஸ்டார்ட் செய்யும் போது பிரச்னையா?--புதுக் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் இல்லாமல் வைத்திருக்க--விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்--நீங்களே உங்கள் மெனுவை தயாரிக்கலாம்!--இன்டெல் நடந்து வந்த 40 ஆண்டுகள்--இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7க்கான சில கூடுதல் டிப்ஸ்கள்


விண்டோஸ் எக்ஸ்பி வழி வாய்ஸ் மெய்ல்

உங்கள் நண்பர்களுக்கு அடிக்கடி இமெயில் அனுப்பி செய்திகளை, தகவல்களை அனுப்புகிறீர்கள். ஒரு சில வேளைகளில் நேரில் பேசியது போல பேசுவதையே அனுப்பினால் என்ன? என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். ஏனென்றால் அதனையே மற்றவர்களும் எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கேட்கலாம்.
எடுத்துக் காட்டாக ஒரு செயலை மேற்கொள்ள அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க விரும்பலாம். அந்த காரியத்தில் இயங்கும் அனைவரும் அதனை கேட்டு நடக்க வேண்டும் என்பது உங்கள் நோக்கமாக இருக்கும். இதற்கு நீங்கள் பேசி பதிவு செய்த பைலை யாரேனும் ஒருவருக்கு இமெயில் அட்டாச்மெண்ட்டாக அனுப்பி அதனை மற்றவர்களும் நகலெடுத்துப் பயன்படுத்த அனுப்பலாம். அல்லது அனைவருக்கும் இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மைக் மூலம் பேசி ரெகார்ட் செய்திடும் வழியைப் பார்ப்போம். எக்ஸ்பி சிஸ்டத்தில் அட்மினிஸ்ட்ரேட்டராக நுழைய வேண்டும். மைக் சரியாக பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Start button> All prorams> Accessories  என்ற படி செல்லவும். பின் இதில் Entertainment  என்பதில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் Sound Recorder  தேர்ந்தெடுக்கவும். இனி ஒரு சிறிய விண்டோ “Sound Sound Recorder” என்ற தலைப்புடன் கிடைக்கும். இதில்   மெனு திறக்கவும். புதிய பைல் ஒன்றில் நீங்கள் பேசுவதைப் பதிவு செய்திட  New  என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து பேசத் தயாராக இருந்து கொண்டு Record   என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். கோர்வையாகப் பேசி முடித்தவுடன் Stop   என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இப்போது ரெகார்டிங் நின்றுவிட்டது. இனி பைல் மெனு சென்று இதற்கு ஒரு பெயர் தரவும். பைல் என்ற துணைப் பெயரில் பதிவாவதை உறுதி செய்து கொள்ளவும். பின் இந்த பைலை இமெயில் இணைப்பாக அனுப்பினால் அதனைப் பெறுபவர் தன் சிஸ்டத்தில் எந்த ஆடியோ பிளேயர் மூலமும் இயக்கி நீங்கள் பேசுவதைக் கேட்கலாம். இனி அடிக்கடி வாய்ஸ் மெயில் அனுப்புவீர்களா!

ஸ்டார்ட் செய்யும் போது பிரச்னையா?
சிஸ்டம் சந்தேகங்கள்

விண்டோஸ் இயக்கம் தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா? வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா? இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது.
உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம். எனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்
ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ரன் விண்டோவினைப் பெறவும். இந்த விண்டோவில் “msconfig”  என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் General”   என்ற டேபில் கிளிக் செய்திடவும். இதில் “Selective Startup”  என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல பிரிவுகள் சிறிய கட்டங்களுடன் இருக்கும். இந்த டிக் அடையாளங்களை எடுத்துவிடவும். முதல் கட்டத்தில் மட்டும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ரீ பூட் செய்திடவும். பின் மீண்டும் அடுத்ததில் மட்டும் டிக் அடையாளம் ஏற்படுத்தி இதே போல் ரீ பூட் செய்திடவும். வரிசையாக இவ்வாறு செயல்படுகையில் பிரச்னை இருக்கும் புரோகிராம் உங்களுக்குத் தெரியவரும். அது உங்களுக்கு வேண்டுமா என்று பார்க்கவும். இப்படியே தேவயற்ற புரோகிராம்களுக்கு எதிரே உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து பூட் செய்திடவும். இனி எந்த சிரமமுமின்றி விண்டோஸ் இயங்கத் தொடங்கும். தேவையில்லாமல் உங்கள் ராம் மெமரியும் வீணாகாது.இதை ஒவ்வொன்றாக செய்வது நேரம் எடுக்கும் செயல் என்று நீங்கள் நினைத்தால் பாதி பாதியாக தேர்ந்தெடுத்து ரீபூட் செய்திடலாம். பின் எந்த பாதியில் பிரச்னை உள்ளது என்று பார்த்து அதில் ஒவ்வொன்றாக இறங்கலாம். இது போல ஸ்டார்ட் அப் புரோகிராம்களை சுத்தம் செய்வது ஷட் டவுண் செய்வதில் உள்ள பிரச்னைகளையும் தீர்த்துவிடும்.

No comments:

Post a Comment