Thursday, 26 April 2012

பொது அறிவூட்டும் விடுகதைகள்


பொது அறிவூட்டும் விடுகதைகள் 21- 30

21) முடிக்கு தேவையான வைட்டமின்
A,  E , D
-
22) போர் விமானத்தைத் தாங்கிச் செல்லும்
கப்பலுக்கு என்ன பெயர்?
விமானந்தாங்கிக் கப்பல், போர் கப்பல், சமாதான கப்பல்
-
23) ஒரு சவரன் தங்கத்திற்கு எத்தனை குண்டுமணிகள்?
12 குண்டுமணி, 10 குண்டுமணி, 8 குண்டுமணி
-
24) உலகின் மிகப்பெரிய தங்க மார்க்கெட் எங்குள்ளது?
லண்டன், சிங்கப்பூர், ஹாங்காக்
-
25) சினிமாவுக்கு சென்ஸார் இல்லாத நாடு எது?
ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ்
-
26) ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
230 240, 250
-
27) நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது?
ஐதராபாத், மைசூர், சென்னை
-
28) முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர்?
ஜவஹர்லால் நேரு, மகாத்மாகாந்தி, டி.டி.கிருஷ்ணமூர்த்தி
-
29) பத்திரிகையில் தொடர்கதை எழுதும் பழக்கத்தை முதன்
முதலில் உருவாக்கியவர் யார்?
பெர்னார்ட் ஷா, டாக்டர் வில்லியம்ஸ், சார்லஸ் டிக்கன்ஸ்
-
30) உலகில் மிகக் குறைந்த வயதில் உலக சமாதானத்திற்கு
நோபல் பரிசு பெற்றவர்?
அன்னி பெசண்ட், லார்க்னர், மார்டின் லூதர் கிங்
-=============================================
விடைகள்;
30) மார்டின் லூதர் கிங்
29) சார்லஸ் டிக்கன்ஸ்
28) டி.டி.கிருஷ்ணமூர்த்தி
27) ஐதராபாத்
26) 250
25) பிரான்ஸ்
24) லண்டன்
23) 12 குண்டுமணி
22) விமானம் தாங்கி கப்பல்
21) E

பொது அறிவூட்டும் விடுகதைகள் 11-20

ஊர்வன மற்றும் பூச்சிகள் குறித்தான விடுகதைகள்
—————————————————————–
11)காலாறும் கப்பற்கால்
கண்ணிரண்டும் கீரை விதை – அது என்ன?
-
12) மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை
வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது – அது என்ன?
-
13) உருவத்தில் சிறியவன்
உழைப்பில் பெரியவன்- அவன் யார்?
-
14) கன்னங்கரேல் என்று இருக்கும், காரிருள் அல்ல
கானம் பாடித் திரியும்,வானம்பாடி அல்ல- அது என்ன?
-
15) ஓடியாடித் திரியும்- உடலைத்
தேடிக் குத்தும் – அது என்ன?
-
16) நூல் நூற்கும், ராட்டை அல்ல
ஆடை நெய்யும், தறி அல்ல- அது என்ன?
-
17) இருந்தாலும்,  இறந்தாலும்,  பறந்தாலும்
இறக்கை மடக்காத பட்சி – அது என்ன?
-
18) தண்ணீரில் நீந்தி வரும்
தரையில் தாவி வரும் – அது என்ன?
-
19) ஊசி போட்ட வைத்தியர்
ஊமை போல போகிறார் – அவர் யார்?
-
20) போகும் இடமெல்லாம்
கோடு கிழித்திடுவான் – அவன் யார்?
=====================================
விடைகள்;
20) நத்தை
19) தேனீ
18) தவளை
17) தட்டாம் பூச்சி
16) சிலந்தி
15) கொசு
14) கருவண்டு
13) எறும்பு
12) ஈசல்
11) ஈ

பொது அறிவூட்டும் விடுகதைகள் 1-10

பறவைகள் குறித்தான விடுகதைகள்
தொகுத்தவர்; பொன்.ராஜன்பாபு
————————————————-
1) நடைக்கு உவமை
நளனுக்கு தூதுவன் – அது என்ன?
-
2) பகலில் துயிலுவாள்
இரவில் அலறுவாள்- அது என்ன?
-
3) ஓஹோஹோ மரத்திலே உச்சாணிக் கிளையிலே
வைகுண்ட ராஜனுக்கு கழுத்திலே வெள்ளை- அது என்ன?
-
4) கன்னங்கரேலென்று இருக்கும், இரண்டு காலிருக்கும்
பகலில் பார்க்கலாம், இரவில் பார்க்க முடியாது-
அது என்ன?
-
5) மழையின்றி மாரியின்றி பச்சையாவதென்ன?
பூவின்றி காயின்றி பழம் பழுப்பதென்ன?
-
6) அவள் ஒரு பாடகி
ஆனால் பெண் அல்ல- அது என்ன?
-
7) ஒற்றைக் கால் நாராயணன்
ஓடையில் மீன் பிடிக்கிறான் – அது என்ன?
-
8) அரியலூர் தாதி அதிக பிள்ளைக்காரி
பாலில்லாமல் பிள்ளை வளர்ப்பதில் பலே கெட்டிக்காரி-
அது என்ன?
-
9) இருப்பது இரண்டு கால், ஓடுவது குதிரை வேகம்
இறக்கை உண்டு பறக்காது – அது என்ன?
-
10) அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணாடி
அங்கம் முழுதும் தங்கக் கண்ணாடி – அது என்ன?
==============================================
விடைகள்;
10) மயில்
9)  நெருப்புக் கோழி
8)  சேவல்
7)  கொக்கு
6)  குயில்
5)  கிளி
4)  காகம்
3)  கருடன்
2)  ஆந்தை
1)  அன்னம்

விடுகதைகள் 11-15

11. வண்ணத்தில் சிவப்பழகன்; வாய்க்குள் சேதி வாங்குவான். அவன் யார்?
12. வெள்ளை நிற சாமியார்; தண்ணீரைக் கண்டால் தவமிருப்பார். அவர் யார்?
13. விழுந்தால் படுக்காது; எழுந்தால் நிற்காது. அது என்ன?
14. வெள்ளைப் பெட்டிக்குள் மஞ்சள் தங்கம். அது என்ன?
15. வேகமான ஓட்டக்காரன். அவன் ஓட்டத்தில் வரவும் உண்டு; செலவும் உண்டு. அது என்ன?
————————————————————-
விடைகள்
15.குதிரை
14.முட்டை
13.தஞ்சாவூர் பொம்மை
12.கொக்கு
11.தபால்பெட்டி

விடுகதைகள் 1-10

1. காலால் உதைத்தால் காற்றால் உருளும். அது என்ன?
2. அச்சு இல்லாத சக்கரம்: அழகு காட்டும்
சக்கரம். அது என்ன?
3. நிரப்பலாம் பிடிக்க முடியாது; உணரலாம் காண முடியாது. அது என்ன?
4. கோயில்களில் முன்னால் நிற்பார். அவர் யார்?
5. ஓங்கி வளர்ந்தவன் ஒரு பக்கம் சாய்ந்தான். அவன் யார்?
6. கறுத்த மேகம் கண்ணீர் விட்டால் ஓடோடி வந்து உதவுவான். அவன் யார்?
7. செய்வதைச் செய்யும் குரங்கும் அல்ல;
சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல.
அது என்ன?
8. குண்டு முழி ராசாவுக்கு குடல் எல்லாம் பல். அது என்ன?
9. கிண்ணம் போல் பூப்பூக்கும்;
கிள்ளி முடிக்க முடியாது.
அது என்ன?
10. ஒல்லி உடம்புக்காரிக்கு ஒரு முழ நீள ஜடை. ஜடையில் ஒரு கல். அது என்ன?
—————————————————————-
விடைகள்:
——————–
10.புடலங்காய்
9.ஊமத்தம்பூ
8.மாதுளம்பழம்
7.கண்ணாடி
6.குடை
5.மூங்கில்
4.பிள்ளையார்
3.காற்று
2.வளையல்
1.சைக்கிள்
—————-

விடுகதைகள்

1.ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,  உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?
2. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல,
பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
4. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?
5. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து,
அது என்ன?
6. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான்
அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
7. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது,
அது என்ன?
8. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு,
அது என்ன?
9. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன்,
அவன் யார்?
10.மழை காலத்தில் குடை பிடிப்பான்,
அவன் யார்?
விடை:
10. காளான்
09. எறும்பு
08. பாய்
07. மின்விசிறி
06. பூட்டு,சாவி
05. கோலம்
04. சங்கு
03. அணில்
02. கண்
01. கடல்

Riddles !

1) which comes down but never goes up?
2) what does sea monsters eat ?
3) what did the baby corn say to the mother corn
4) WHAT IS THE NEVER PLANTED BUT YET IT GROW
5) Which goes up but never comes down?
6) when traveliing it will not wear cap,when taking rest it will wear cap -what is that ?
Answers:
6. Pen
5 Age
4. Hair
3. Where is the pop-corn
2. fish and ships
1. rain

அறிவுப் பதிர்கள் 41-50

41) துடுக்குப் பையனின் வாலில் இருக்குது அபாயம்-அது என்ன?
42) மஞ்சள் தோல் பைக்குள், இனிய வெள்ளைப் பணியாரம்-அது என்ன?
43) வெள்ளை உடம்புக்காரிக்கு,பச்சை நிறக் கூந்தல்-அது என்ன?
44) தன் வீட்டை, தானே சுமந்து, எங்கும் சுற்றி வருவாள்-அவள் யார்?
45) வீட்டுக்கு வீடு தவறாது வரும், புத்தாண்டின் முதல் விருந்தாளி-அது என்ன?
46) பச்சைக் குடத்திற்குள், இனிப்பான பானம்-அது என்ன?
47) இரட்டைக் குழல் துப்பாக்கியில்,எப்போதாவது வேட்டுச் சத்தம்-அது என்ன?
48) நாலுபுறமும் வேலி அடைத்து, பந்தலிலே தொங்குதடி பச்சைப் பாம்பு-அது என்ன?
49) தாவிக் குதித்தால் எட்டடி பாய்வான், பைக்குள் பிள்ளையை சுமந்த படி-அவன் யார்?
50) தாடிக்கார அரசனுக்கு காடே சொந்தம்-அவன் யார் ?
***********************************************************
விடைகள்
50. சிங்கம்
49. கங்காரு
48. புடலங்காய்
47. மூக்கு, தும்மல்
46. இளநீர்
45. காலண்டர்
44. நத்தை
43. முள்ளங்கி
42. வாழைப்பழம்
41. தேள்

அறிவுப் புதிர்கள் 31-40

31) ஆழ்கடலில் தேடிக் கண்டுபிடித்தவள், அழகு மங்கையர்
கழுத்தில் நிலைத்தவள்-அவள் யார்?
32) ‘கர்புர்’ சங்கீதக்காரன், சளைக்காமல் சுமை சுமப்பவன்-அவன் யார்?
33) இமைகள் எங்களுக்கு கிடையாது, நாங்கள் யார்?
34) வேகமாக ஓடுபவனை வென்றவன்,பற்கள் எனக்கு கிடையாது-நான் யார்?
35) நாற்பத்திரண்டு பற்கள் எனக்கு,-நான் யார்?
36) என் நிழலில் ஆயிரம் பேர் தங்கலாம்,-நான் யார்?
37) கார்மேக அரசனுக்கு இரண்டு தூதுவர்கள்-யார யார்?
38) ஒரு கல் வீசினால் ஓராயிரம் பேர் தாக்க ஓடி வருவார்கள்-அவர்கள் யார்?
39) புற்றுக்குள் இருந்தால் பால் கிடைக்கும்,வீட்டுக்குள் வந்தால் தடியடி
நடக்கும்-அது என்ன?
40) கண்ணுக்கு அழகு,பார்வைக்கு தெளிவு,-அது என்ன?
**********************************************************************
விடைகள்;
40. கண் கண்ணாடி
39. பாம்பு
38. தேன் கூடு ,தேனீக்கள்
37. இடி,மின்னல்
36. ஆலமரம்
35. நாய்
34.ஆமை
33. பாம்பு,மீன்
32. கழுதை
31. முத்து
21) ஒவ்வொரு கணுவிலும் இனிப்பான்,ஒவ்வொரு அணுவிலும் ருசிப்பான்
-அவன் யார்?
22) மூன்று காசுக் குதிரைக்கு பின்னால் கடிவாளம்-அது என்ன?
23) ஆகாயத்திற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி-அது என்ன?
24) இருட்டுக்காட்டில் குருட்டுப் பன்றி மேயுது-அது என்ன?
25) வம்பிற்குப் போக மாட்டேன் ,கொம்பில் எனக்கு கண் உண்டு-அது என்ன?
26) சாந்த குணம் எனக்குண்டு,சமாதானத் தூதுவன் நான்- நான் யார்?
27) கடலில் வாழ்கின்றேன் ,துன்பம் யார்க்கும் செய்வதில்லை,மூளை இரண்டு எனக்கு-நான் யார்?
28) நின்று கொண்டே தூங்குவோம்-நாங்கள் யார்?
29) பிறக்கும் போது நாங்களில்லை,வயதாகி இறக்கும்போதும் நானிருப்பதில்லை -நான் யார்?
30) காணக் கறுப்பழகி,கானக் குரலழகி-அவள் யார்
———————————————————————————————
விடைகள்;
30. குயில்
29. பற்கள்
28. குதிரை & யானை
27. டால்பின்
26. புறா
25. நத்தை
24. பேன்
23 மழை
22. ஊசி
21. கரும்பு

No comments:

Post a Comment