Thursday 26 April 2012

விடுகதைகள்


மஞ்சள் குருவி ஊஞ்சலாடும் – விடுகதைகள்

1. ”அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு
அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி”
அது என்ன?
========================================
2. வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க முடியாது
கறுத்தப்பிள்ளையார் கோவிலில் கால்வைக்க முடியாது
அது என்ன?
=========================================
3. பெட்டியைத் திறந்தேன்
கிருஷ்ணன் பிறந்தான்”
அது என்ன?
=========================================
4. செண்பகவல்லி அம்மனும்
பூவண்ண நாதரும் சிரித்து மகிழ்ந்து
தொடுத்த பூவைச் சிக்கில்லாமல்”
அவிழ்த்தவருக்குச் சிக்கந்தா மலை சீதனம்…
அது என்ன?
=========================================
5. மஞ்சள் குருவி ஊஞ்சலாடும்
மகாதேவனுக்குப் பூசைக்காகும் -
அது என்ன?
===========================================
விடைகள்:-
1. மயில்
2. கண்
3.நிலக்கடலை
4. தூக்கணாங்குருவிக் கூடு
5. எலுமிச்சம் பழம்)

நாக்கில்லை, ஆனால் பேசுவேன்…(விடுகதைகள்)

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
-
2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
-
3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?
-
4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?
-
5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
-
6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?
-
7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
-
8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
-
9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?
-
10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?
-
============================
விடைகள் :
-
1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
-
2. கால் தடங்கள்
-
3. சோப்
-
4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)
-
5. நினைவுகள்
-
6. பயம்
-
7. பொம்மை
-
8. கடிகாரம்
-
9. வரைபடம்
-
10. புத்தகம்
-
==================

சருகுச் சேலைக்காரி …!

==============================
1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?
-
2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?
-
3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
-
4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
-
5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?

-
6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
-
7. குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?
-
8. கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும். அது என்ன?
-
9. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?
-
10. ஓட்டுக்குள்ளே வீடு; வீட்டுக்குள்ளே கூடு. அது என்ன?
-
விடைகள் :
1. வெங்காயம்
2. மின்விசிறி
3. பொம்மை
4. தையல்காரர்
5. நிழல்
6. படகு
7. வெளவால்
8. தலைமுடி
9. தண்ணீர்
10. நத்தை

விடுகதைகள் 21-30

21) குதிரை ஓட ஓட வால் குறையும்.
அது என்ன?
-
22) பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால்
பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?
-
23) எல்லா வித்தையும் தெரிந்தவன்.
தெரியாதவன் போல் பாவனை செய்கிறான்.
அவன் யார்?
-
24) ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான்
அவன் யார்?
-
25) தொப்பைப் பையனுக்கு ஒரு வாசல்.
தோழனுக்கு இரண்டு வாசல். அவன் யார்?
-
26) அடிப்பக்கம் மத்தளம், இலை பர்வதம்,
குலை பெரிது, காய் துவர்ப்பு, பழம்
தித்திப்பு. அது என்ன?
-
27) கடலைக்கலக்குது ஒரு குருவி, கடல்
ஓரம் போகுது ஒரு குருவி, செடியைத்தின்பது
ஒரு குருவி, செடியோரம் போகுது ஒரு குருவி
அவை யாவை?
-
28) உடல் உண்டு, தலை இல்லை, கையுண்டு
கால் இல்லை, தானாகவே ஓடும். அது என்ன?
-
29) ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே
கூட்டும். அவன் யார்?
-
30) எங்க வீட்டுத் தோட்டத்திலே தொங்குதே
ஏகப்பட்ட பச்சைப் பாம்புகள்-அது என்ன?
==================================விடைகள்;30) புடலங்காய்
29) காகம்
28) கடிகாரம்
27) நண்டு, ஆடு, பாம்பு
26) வாழைமரம்
25) சட்டை
24) யானை
23) கோமாளி
22) இலவம்பஞ்சு
21) ஊசி நூல்

 

விடுகதைகள் 11-20

11) ஊருக்கு நடுவே உயர்ந்திருக்கும், உருவங்கள்
பலவும் சுமந்திருக்கும். அது என்ன?
-
12) ஊரெல்லாம் மூடி இருக்கும், ஊறுகாய்ப் பானை
திறந்திருக்கும். அது என்ன?
-
13) கொதிக்கும் குளத்தில் குதிப்பான், குண்டுப்
பையனாய் மிதப்பான்- அவன் யார்?
-
4) உள்ளே இறுகுவான், வெளியே உறுகுவான்-
அவன் யார்?
-
15) எண்ணெய் வேண்டாம், திண்ணை போதும்
எரிவான், வெளிச்சம் தருவான்- அவன் யார்?
16) ஒட்டியிருந்த மகளை விட்டுப் பிரிந்து
வந்தேனே- அது என்ன?
-
17) அழிக்கும் பணி கொண்ட இவனுக்கு
பள்ளிப் படிப்பில் தனியிடம் உண்டு-
அது என்ன?
-
18) மரக் கிளையே தலையில் இருந்தாலும்
மனம் கலங்கித் திரிவான் காட்டுக்குள்.
அவன் யார்?
-
19) வேகாத வெயிலில் வெள்ளையன் விளைகிறான்
-அவன் யார்?
-
20) மண்ணிலே பிறந்து விண்ணிலே மறையும்-
அது என்ன?
===============================
விடைகள்;20) சாம்பிராணி
19) உப்பு
18) மான்
17) ரப்பர்
16) உமி- நெல்
15) மெழுகுவர்த்தி
14) ஐஸ்கட்டி
13) பூரி
12) கிணறு
11) கோபுரம்

விடுகதைகள்

[bTree3.jpg]

1) ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை.
அது என்ன?
-
2) காய்ந்த மரத்தில் கல் எடுத்துப் போட்டால்
காவற்காரப்பையன் கோபத்திற்கு வருவான்.
அவன் யார்?
-
3) முகம் இருக்கிறது, கைகள் இருக்கிறது.
கால்கள் இல்லை, நடக்கிறேன்.நான் யார்?
-
4) சின்னச்சின்ன கதவுகள், தச்சன் செய்யாக்
கதவுகள், கதவடைக்கும் சத்தம் கேட்காது.
அவை என்ன?
-
5) அதிகாலை அலாரம், விசேஷ நாட்களில்
சமையல் ஆகிவிடும். அது என்ன?
-
6) ஒரு சாண் மனிதனுக்கு உடம்பெல்லாம்
பற்கள். அவன் யார்?
-
7) சமைக்க முடியாத மீன்கூட்டம் எட்டாத
உயரத்தில். அது என்ன?
-
8- இறக்கையில்லாப் பறவை ஊர்விட்டு ஊர்
பறக்கும். வாயில்லாத சேதிகளைச் சொல்லும்.
அது என்ன?
-
9) இவனைப் புரட்டப் புரட்ட புது புது அர்த்தங்களை
உணர்த்திடுவான். அவன் யார்?
-
10) ஆயிரம் கதைகள் எழுதுவான், அகிலத்தை
ஆட்டி வைப்பான், நாக்கு வறண்டால்
வீழ்ந்திடுவான். அவன் யார்?
==================================
விடைகள்;10) பேனா
9) அகராதி
8-கடிகாரம்
7) விண்மீன்
6) சீப்பு
5) சேவல்
4) கண்ணிமைகள்
3) கடிகாரம்
2) தேன்கூடு
1) மரம்

சுற்றும்போது சுகம் தருவாள்..!

) சின்ன மீசைக்காரன், ‘மியாவ் மியாவ்’
ஓசைக்காரன்- அவன் யார்?
2)சாத்திய கதவிருக்க, ஏற்றிய விளக்கிருக்க,
இரவில் வந்தது யார்? இரத்தத்தைக்
குடித்தது யார்?
3)செடிக்குக் கீழ் வரும் கிழங்கு, செழுமையாக
இருக்கும் பெண்மைக்கு இது பெருமை-
அது என்ன?
4)செக்கச் சிவந்திருப்பாள், செட்டியார் மகள்
நாளைச்சந்தைக்கு வருவாள் நாத்தியார்
மகள்- அது என்ன?
5) சேலம் சிவப்ப,செவ்வாய்ப்பேட்டை கருப்பு,
உடைத்தால் வெள்ளை, உண்டால் கசப்பு-
அது என்ன?
6) சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள்-
அது என்ன?
7) சுமையும் தாங்கும், உதையும் கொடுக்கும்-
அது என்ன?
8- செய்தி வரும் முன்னே, மணியோசை வரும்
முன்னே -  அது என்ன?
9) சாவடிக்குள்ளே ஒரு சப்பட்டைக் கல்-
அது என்ன?
10) சிலு சிலுத்த தண்ணீரில் செம்மறிஆடு
மேயுது- அது என்ன?
=============================
விடைகள்;

10) குழிப்ணியாரம்
9) நாக்கு
8- தொலைபேசி
7) கழுதை
6) மின்விசிறி
5) குன்றிமணீ
4) மிளகாய்
3) மஞ்சள்
2) கொசு
1) பூனை


புலி-புல்லுக்கட்டு-ஆடு!

ஒரு விவ​சாயி இருந்​தான்.​ அவன் ஒரு ஆட்டை​யும் புலியை​யும் வளர்த்து வந்​தான். இரண்டை​யும் தனித்தனியாகத்​தான் வைத்தி​ருந்​தான்.
ஏனெ​னில் புலி, ஆட்​டைத் தின்றுவி​டும் என்று அவ​னுக்கு நன்​றாகத் தெரி​யும். ஆட்​டிற்கு வைத்தி​ருந்த புல் தீர்ந்து​விட்டது.
எனவே புல் கட்டு வாங்குவதற்​காக சந்​தைக்​குச் சென்​றான். புலியை​யும் ஆட்டை​யும் பாது​காப்​பாக தன்னுடன் அழைத்​துச் சென்​றான்.
-
புல்கட்டு வாங்கி வீடு திரும்​பும் போது மழை வருவது போலி​ருந்தது. எனவே குறுக்கு வழி​யில் சீக்கிரம் வீட்​டிற்​குச் சென்றுவிட​லாம் என்று நினைத்​தான் விவ​சாயி.​ குறுக்கு வழி​யில் செல்வ​தென்​றால் ஒரு ஆற்​றுப் பாலத்​தைக் கடந்து செல்ல வேண்​டும்.
மிகக் குறுக​லான பாலம் அது. ஒரு நேரத்​தில் ஒருவர்​தான் செல்ல முடி​யும். சுற்று வழி​யில் சென்​றால் மழையி​லும் காற்றி​லும் மாட்டி துன்பப்பட வேண்டியி​ருக்​கும். எனவே அவன் பாலத்தை நோக்​கிச் சென்​றான்.
-
குறுக​லான பாலத்​தில் அவன் மட்​டுமே செல்ல முடி​யும். ஆனால் தன்னுடன் எதையாவது ஒன்றை மட்​டும் தூக்​கிச் செல்ல​லாம். புலி, புல்​லுக்கட்டு, ஆடு – இதில் ஏதாவது ஒன்றை மட்​டும் தன்னுடன் தூக்​கிச் செல்ல​லாம்.
-
இப்​போது என்ன செய்வது?
புலியை​யும் ஆட்டை​யும் இக்கரை​யில் விட்டு​விட்டு புல்​லுக்கட்டை தூக்​கிச் சென்​றால்,​புலி ஆட்​டைக் கொன்றுவி​டும். புல்​லுக்கட்டை வைத்து​விட்டு புலி​யைத் தோளில் தூக்​கிச் சென்​றால் ஆடு புல்​லுக்கட்டை தின்று சிதற​டித்துவி​டும்.
ஆட்டை​யும் புலியை​யும் ஒன்​றாக விட்டு​விட்​டுப் போக​வும் முடி​யாது.​ புல்​லுக்கட்டை​யும் ஆட்டை​யும் விட்டு​விட்​டுப் போக​வும் முடி​யாது.​ பிறகு எப்படி மூன்றை​யும் அக்கரை சேர்ப்பது? அவன் யோசித்து யோசித்​துப் பார்த்​தான். ஒரு வழி​யும் தெரிய​வில்லை. நீங்கள் ஏதாவது அவ​னுக்கு ஆலோ​சனை சொல்​லுங்க​ளேன்.
விடை இது​தான்:
-
முத​லில் ஆட்டை அக்​க​ரைக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். பிறகு தனியாகத் திரும்பி வர​வேண்​டும்.​ பிறகு புலி​யைத் தூக்​கிச் செல்ல​வேண்​டும்.
அங்கி​ருக்​கும் ஆட்டை எடுத்​துக் கொண்டு இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​ (அக்கரையி​லேயே விட்டு​விட்​டால் புலி ஆட்​டைத் தின்றுவி​டும்).
ஆட்டை இக்கரை​யில் விட்டு​விட்டு புல்​லுக்கட்டை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல வேண்​டும். பின்பு தனியாகத் திரும்பி இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​
அடுத்தது,ஆட்டை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல​வேண்​டும்.
-
இன்​னொரு வழி:
-
முத​லில் ஆட்டை அக்​க​ரைக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். தனி​யாக இக்க​ரைக்கு வர​வேண்​டும்.​ புல்​லுக்கட்டை தூக்​கிச் சென்று அக்கரை​யில் வைத்து​விட்டு ஆட்டுடன் இக்கரை வர​வேண்​டும்.​ ஆட்டை இக்கரை​யில் விட்டு​விட்டு புலியை அக்க​ரைக்​குக் கொண்டு செல்ல வேண்​டும். பிறகு தனியாகத் திரும்பி வந்து ஆட்​டைக் கொண்டு செல்ல வேண்​டும்.
-

உவகையூட்டும் விடுகதைகள்

1) கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்-
அது என்ன?
2) கடுகு மடிக்க இலை இல்லை, யானை
படுக்க இடமுண்டு- அது என்ன?
3) கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன்,
பள்ள நீரைக் கண்டு பதைக்கிறான்- அது
என்ன?
4) கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில்
எழுப்பி விடுவாள்- அது என்ன?
5) கட்டைக்காளை குட்டைக்கொம்பு- கிட்டப்
போனால் முட்ட வருது- அது என்ன?
6) கழனியில் விளைந்த கதிரை, கத்தரி
போட்டு வெட்டுவார்- அது என்ன?
7) கந்தல் துணி கட்டியவன், முத்துப்
பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான்-
அது என்ன?
8-கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து,
தெருவிலே திரியும் பூ எது?
9) கரிச்சக்கட்டி வயிற்றிலே வெள்ளை
முத்துக்கள், அது என்ன?
10) கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை
காகம் நிற்குது- அது உன்ன?
================================
விடைகள்
10)உளுந்து
9) சாதம்
8- உப்பு
7) சோளக்கதிர்
6) தலைமுடி
5) முள்
4) சேவல்
3) செருப்பு
2) சவுக்குமரம்
1) தலை,பேன்கள்
-

பொது அறிவூட்டும் விடுகதைகள் 31- 40
31) உலகின் முதல் அழகுப் போட்டி நடந்த நாடு எது?
பிலிப்பைன்ஸ், பெல்ஜியம், எகிப்து
32) கருணைக் கொலையை சட்டபூர்வமாக்கிய நாடு எது?
அமெரிக்கா, இந்தியா, நெதர்லாந்து
33) அதிக அளவில் ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாடு எது?
சீனா, அமெரிக்கா, இந்தியா
34) பூமிக்கு அடியில் உள்ள நீரைக் கண்டுபிடிக்கும்
கருவியின் பெயர்?
தெர்மாமீட்டர், ஹைட்ராஸ்கோப், குழிலென்ஸ்
35) உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலை இருந்த நாடு?
ஆப்கானிஸ்தான் பாபியான் மலையில் 170 அடி உயரம்,
ரஷ்யா, பிரான்ஸ்
36) இந்தியாவின் முதல் பெண் தூதர் பெயர்?
சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட் 1947-1949 ரஷியா,
அன்னிபெஸன்ட்
37) முதல் சட்ட மன்ற உறுப்பினரான பெண்?
எம்..எஸ்.சுப்புலட்சுமி, டாக்டர் எஸ்.முத்துலட்சுமி ரெட்டி 1926,
சுலோக்சனா சம்பத்
38) முதல் பெண் கவர்னர்?
மரகதம் சந்திரசேகர், சரோஜினிதேவி நாயுடு, பாத்திமாபீவி
39) ராஜ்யசபையின் முதல் தலைவர்?
முரசொலி மாறன், எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி, மோதிலால் நேரு,
டாக்டர். கு.ராதாகிருஷ்ணன்,
40) முதல் இந்தி ஜனாதிபதி;
வி.வி.கிரி, ராஜேந்திர பிரசாத், பக்ருதீன் அலி அகமது
-
விடைகள்;-
40) ராஜேந்திரபிரசாத்
39) கு.ராதாகிருஷ்ணன்
38) சரோஜினிதேவி நாயுடு
37) டாக்டர் எஸ்.முத்துலட்சுமி ரெட்டி(1926)
36) விஜயலட்சுமி பண்டிட் (1947-49, ரஷியா)
35) ஆப்கானிஸ்தான்
34) ஹைட்ரோஸ்கோப்
33) அமெரிக்கா
32) நெதர்லாந்து
31) பெல்ஜியம்

No comments:

Post a Comment