Thursday, 5 April 2012

ஆசிய நாடுகளில்தான் அதிக பிராட்பேண்ட்--பிராட் பேண்ட் ஹெல்ப் லைன்--எம்.பி.3 பிளேயர் வாங்கலாமா….--எக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற--பைல்களைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திட….--கம்ப்யூட்டர் கேள்வி – பதில்களும்


ஆசிய நாடுகளில்தான் அதிக பிராட்பேண்ட்
இன்டர்நெட்டுக்காக பிராட் பேண்ட் இணைப்பு பெறுவது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான குறியீடு என உறுதி செய்யப்பட்டுள்ளது. தகவல் தேடல் மற்றும் பகிர்ந்து கொள்ள இன்றைய உலகில் இது அடிப்படையான ஒரு தேவையாகும்.
அவ்வகையில் உலக நாடுகளில் ஆசிய நாடுகளில்தான் அதிக அளவில் இன்டர்நெட்டி ற்கான பிராட்பேண்ட் இணைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு தெரியப்படுத்துகிறது. இவற்றில் முதல் இரண்டு நாடுகளாக இடம் பெற்றிருப்பது தென் கொரியா மற்றும் ஹாங்காங் நாடுகள் தான். 2007 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் 93 சதவிகித மக்கள் பிராட் பேண்ட் இணைப்பு வைத்திருந்தனர். இது வரும் 2012 ஆம் ஆண்டில் 97 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் அடுத்து நெதர்லான்ட்ஸ் மற்றும் ஹாங்காங் முறையே 74 மற்றும் 76 சதவிகிதம் கொண்டு இடம் பிடித்துள்ளன. 74 சதவிகிதம் கொண்டிருந்தாலும் இரண்டாவது இடத்தில் நெதர்லாண்ட்ஸ் இருக்கக் காரணம் வரும் 2012ல் இந்த நாட்டின் பிராட்பேண்ட் பயன்பாடு 82 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதுதான்.
ஹாங்காங் அப்போது 81 சதவிகித உயர்வை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடுத்து கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உள்ளன. மிகச் சிறிய இடத்தில் அதிக மக்கள் வாழும் நாடுகளில் அதிக பிராட்பேண்ட் இணைப்பு தரப்பட்டுள்ளதனை இங்கு கவனிக்க வேண்டும். மேலும் தென் கொரியாவிலும் ஹாங்காங்கிலும் இன்டர் நெட் பிராட்பேண்டிற்கான அடிப்படைக் கட்டமைப்பினை அமைத்திட அங்குள்ள அரசுகள் செலவழிக்கின்றன என்பதுவும் குறிப்பிடத் தக்கது. இதில் சிங்கப்பூரின் வளர்ச்சியும் பாராட் டத்தக்கது. சென்ற ஆண்டு 57 சதவிகித இணைப் பில் இருந்தது 2012ல் 75 சதவிகித உயர்வைக் கொள்ளும் என்று கண்டறியப் பட்டுள்ளது.
இந்த நாடுகளில் இன்டர்நெட் இணைப்பு என்பது ஏறத்தாழ உச்ச கட்ட வளர்ச்சியை அடைந்துவிட்டன. குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இவை மக்களை ஆட்டிப் படைக்கின்றன. இன்டர்நெட்டுக்கு மக்கள் அடிமையாகிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். எனவே தான் இங்கு இன்டர்நெட் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய வழிகளில் இன்டர்நெட் இணைப்பு வழங்குவது எப்படி என்று தொடர்ந்து சிந்தித்து செயல் வழிகஷ்ளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்தியாவைப் போல வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சந்தை வேறு இலக்குகளில் வளர்ந்து வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்காக உள்ளது. அவர்களுக்கு ஓர் அடிப்படை இன்டர்நெட் வசதியைத் தருவதனை ஒரு பெரிய சாதனையாக இங்குள்ள நிறுவனங்கள் எண்ணுகின்றன. தற்போது உலக அளவில் பன்னாடுகளில் 2007 ஆம் ஆண்டு 32 கோடியே 30 லட்சம் பேர் பிராட்பேண்ட் இணைப்புகளில் இருந்தனர். இது 2012ல் 49 கோடியே 90 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப மரத்தை உருவாக்குவோமா!
தமிழ் நாட்டில் சில பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பல முன்னெழுத்துக்களை போட்டுக் கொள்வார்கள். தந்தை, பாட்டனார், முப்பாட்டனார், கொள்ளுத் தாத்தா என பின்னோக்கிய காலத்தில் முன்னோக்கி செல்வார்கள். இப்படியே எத்தனை தலைமுறையை நாம் அறிந்து கொள்ள முடியும். யாராவது அதிக வயதில் வாழும் தாத்தாவை பேச வைத்து அறிந்து கொண்டால் தான் முடியும்.
அவர் கூறுவதையும் எழுதி வைத்தால் தானே நாம் நம் சந்ததிக்குக் கொடுக்க முடியும். இதனால் பெரிய பயன் இல்லை என்றாலும் நான் இந்தக் குடும்ப மரத்தைச் சேர்ந்தவன். அதன் ஒரு கிளையிலிருந்து வந்தவன் தான்நீ என்று இன்னொருவருடன் உறவு கொள்ள முடியும். இந்த குடும்ப மரத்தின் கிளைகளை எழுதி வைத்திட ஒரு இணைய தளம் உதவுகிறது. http://www.tribalpages.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இங்கு உங்கள் குடும்ப மரத்தை உருவாக்கலாம். அதில் போட்டோக் களை பதிக்கலாம்.
குடும்பத்திற்கென ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதனை இந்த தளம் தரும் இலவச சர்வரில் போட்டு வைக்கலாம். மற்றவர்கள் அமைத்துள்ள குடும்ப பாரம்பரியத்தைப் பார்த்து நாமும் அவ்வாறு அமைக்கலாம். இவ்வாறு அமைக்கப்பட்ட குடும்ப பரம்பரையின் உறுப்பினர்களை சர்ச் இஞ்சின் மூலம் தேடி அறியலாம். இந்த இணைய தளம் குறித்த செய்திகளை அவ்வப்போது அறிந்து கொள்ளவும் தனி பிரிவு உள்ளது. செய்திகளை தகவல்களை பகிர்ந்து கொள்ள மெசேஜ் போர்டு தரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பதிவது குறித்த தொழில் நுட்ப செய்திகளுக்கும் தனியாக மெசேஜ் போர்டு தரப்பட்டுள்ளது. முதலில் இந்த தளத்தில் பதிந்து கொண்டு பின் தகவல்களை இலவசமாகப் பதியலாம்.

No comments:

Post a Comment