இணையத்தில் கிடைக்கும் பிழைச் செய்திகள்
இணையத்தில் கிடைக்கும் பிழைச் செய்திகள்
இன்டர்நெட்டில் வேக வேகமாக நாம் தேடும் தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென வெப்சைட் லோடு ஆகும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் ஏதோ ஒரு எண்ணுடன் பிழைச் செய்தி காட்டப்படும்.
இது இன்டர்நெட் சமாச்சாரம் என்பதால் நாம் அதனைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் மீண்டும் அந்த தளத்தினைப் பெறும் முயற்சியிலேயே இருப்போம். முதலில் வந்த அந்த பிழைச் செய்தி நீங்கள் முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்படும். ஆனால் நாம் முதலில் காட்டப்பட்டது மாற்றப்படாமல் இருப்பதாக எண்ணிக்கொண்டு என்டர் தட்டி வெப்சைட் லோட் ஆகிறதா என்று பார்ப்போம். இத்தகைய பிழைச் செய்திகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொண்டு அதன்பின் தொடர்ந்து முயற்சி செய்வது குறித்து யோசித்து தொடர்வதே நல்லது.
இன்டர்நெட்டில் வேக வேகமாக நாம் தேடும் தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென வெப்சைட் லோடு ஆகும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் ஏதோ ஒரு எண்ணுடன் பிழைச் செய்தி காட்டப்படும்.
இது இன்டர்நெட் சமாச்சாரம் என்பதால் நாம் அதனைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் மீண்டும் அந்த தளத்தினைப் பெறும் முயற்சியிலேயே இருப்போம். முதலில் வந்த அந்த பிழைச் செய்தி நீங்கள் முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்படும். ஆனால் நாம் முதலில் காட்டப்பட்டது மாற்றப்படாமல் இருப்பதாக எண்ணிக்கொண்டு என்டர் தட்டி வெப்சைட் லோட் ஆகிறதா என்று பார்ப்போம். இத்தகைய பிழைச் செய்திகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொண்டு அதன்பின் தொடர்ந்து முயற்சி செய்வது குறித்து யோசித்து தொடர்வதே நல்லது.
400 Bad Request: நீங்கள் தேடவிரும்பிய தளத்தின் முகவரியைத் தவறாக டைப் செய்திருக்கலாம். நீங்கள் டைப் செய்த முகவரியிலிருந்து உங்கள் தேடல் குறித்து எந்தவிதமான செய்தியும் உங்கள் இணைய சர்வரால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
பெரும்பாலும் வெப்சைட்டின் முகவரியைத் தவறாக டைப் செய்திடும்போதுதான் இத்தகைய செய்தி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் டைப் செய்த முகவரியில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கலந்திருக்கலாம். அல்லது உங்களை அறியாமலேயே புள்ளிக்குப் பதிலாக கமா அடித்திருக்கலாம். எனவே இந்த செய்தி கிடைக்கையில் ஏற்கனவே டைப் செய்த முகவரியில் ஏதேனும் பிழை இருக்கிறதா என ஒருமுறைக்கு இரு முறை சோதனை செய்தபின் மீண்டும் முயற்சிக்கவும்.
பெரும்பாலும் வெப்சைட்டின் முகவரியைத் தவறாக டைப் செய்திடும்போதுதான் இத்தகைய செய்தி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் டைப் செய்த முகவரியில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கலந்திருக்கலாம். அல்லது உங்களை அறியாமலேயே புள்ளிக்குப் பதிலாக கமா அடித்திருக்கலாம். எனவே இந்த செய்தி கிடைக்கையில் ஏற்கனவே டைப் செய்த முகவரியில் ஏதேனும் பிழை இருக்கிறதா என ஒருமுறைக்கு இரு முறை சோதனை செய்தபின் மீண்டும் முயற்சிக்கவும்.
401 Unauthorized Request: நீங்கள், உங்களுக்கு அனுமதியில்லாத வகையில் உங்கள் சர்வர் வழியாக ஒன்றைப் பெற முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் இன்டர்நெட் தளம் ஒன்றில் அல்லது தளத்தில் அத்து மீறி நுழைய முயற்சித்திருக்கிறீர்கள். அதனால் முயற்சியைக் கைவிடுதே நல்லது.
403 Forbidden: இது போன்ற பிழைச் செய்தி கிடைத்தால் அந்த தளத்தினுள் நீங்கள் சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். ஏதேனும் பாஸ்வேர்ட் தர வேண்டிய கட்டாயம் இருக்கலாம். எனவே உங்களுக்கு ஏற்கனவே இந்த தளம் குறித்து தெரிந்து நீங்கள் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே இதனுள் செல்ல முயற்சிக்கவும்.
403 Forbidden: இது போன்ற பிழைச் செய்தி கிடைத்தால் அந்த தளத்தினுள் நீங்கள் சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். ஏதேனும் பாஸ்வேர்ட் தர வேண்டிய கட்டாயம் இருக்கலாம். எனவே உங்களுக்கு ஏற்கனவே இந்த தளம் குறித்து தெரிந்து நீங்கள் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே இதனுள் செல்ல முயற்சிக்கவும்.
404 Not Found: நீங்கள் தேடும் வெப்சைட் அந்த தளத்தில் இல்லை. இது போல அடிக்கடி பல தளங்களுக்கான தேடல்களில் இந்த செய்தி கிடைக்கும். நீங்கள் தேடும் இணைய தளம் குறிப்பிட்ட சர்வரிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம். அல்லது அந்த வெப்சைட்டிற்கு வேறு பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம்.
500 Internal error: இது நீங்கள் மேற்கொண்ட செயலினால் ஏற்படும் பிழைச் செய்தி. இணைய தளத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு படிவத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை அளித்திருக்கலாம். ஆனால் வெப்சைட்டால் அந்த தகவல்கள் சரியான முறையில் கையாள இயலவில்லை. இதனை தொழில் நுட்ப ரீதியில் இஎஐ ஞுணூணூணிணூ என அழைப்பார்கள்.
503 Service Unavailable: நீங்கள் தேடும் வெப்சைட்டை தாங்கி இயங்கும் சர்வரை அதிக எண்ணிக்கையில் மக்கள் பார்க்க முயற்சிக்கையில் அல்லது அந்த வெப்சைட் வேறு பிரச்னையால் முடங்கிப் போயிருந்தால் அல்லது அந்த சர்வரின் கட்டமைப்பு அப்போதைய ஹிட்களைத் தாங்க முடியாமல் இருந்தால் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். எடுத்துக் காட்டாக 10 ஆம் வகுப்பு அல்லது +2 வகுப்பு தேர்வு முடிவுகளை நாடெங்கும் பலர் காண முயற்சிக்கையில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு மேற்படி பிழைச் செய்தி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் டைப் செய்த முகவரியில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கலந்திருக்கலாம். அல்லது உங்களை அறியாமலேயே புள்ளிக்குப் பதிலாக கமா அடித்திருக்கலாம். எனவே இந்த செய்தி கிடைக்கையில் ஏற்கனவே டைப் செய்த முகவரியில் ஏதேனும் பிழை இருக்கிறதா என சோதனை செய்தபின் மீண்டும் முயற்சிக்கவும்.
புல்லட் பாய்ண்ட்ஸ்
வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப் படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.
இமெயில் முகவரி திருட்டு
திடீரென வழக்கத்திற்கு மாறாக சிலருக்கு அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் வரத் தொடங்கும். ஒரு சிலர் கவலைப் படுவார்கள். ஒரு சிலர் காரணத்தை ஆய்வு செய்வார்கள்.நம் வாசகர்கள் பலர் தங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுடைய இமெயில் முகவரிகளை தேவையில்லாமல் பல வெப் சைட்டுகள் பயன்படுத்துகின்றனவோ எனகவலைப்பட்டு எழுதி, இதனைக் கண்டு பிடிக்க முடியுமா எனக் கேட்டுள்ளனர். உங்கள் இமெயில் முகவரிகளைப் பயன் படுத்தும் வெப்சைட்டுகள் சிலவற்றை நீங்கள்நிச்சயமாய்க் கண்டறியலாம். ஆனால் அனைத்து ஸ்பேம் மெயில்களும் எங்கிருந்து வந்தன என்று கண்டறிவது சற்று கஷ்டமான செயல்.
முதலில் உங்களுக்குப் பிடித்த அல்லது நீங்கள் பயன்படுத்தும் சர்ச் இஞ்சினில் உங்களுடைய இமெயில் முகவரியினை டைப் செய்து உங்கள் முகவரி எங்கெல்லாம் இருக்கிறது அல்லது பயன்படுத்தப்படுகிறது எனக் கண்டறியவும். இந்த தேடல் முடிவுகள் மூலம் எந்த எந்த தளங்கள் உங்கள் இமெயில் முகவரியை அணுக முடியும் எனக் காணலாம். இவற்றில் பெரும்பாலும் நீங்கள் கடிதங்கள் எழுதும் இணைய தள முகவரிகளாக இருக்கலாம். அல்லது நீங்கள் பயன்படுத்தும் சமூக தளங்களாக இருக்கலாம். இவற்றிற்கும் மீறி பல தளங்கள் காட்டப்பட்டால் உடனே ஒவ்வொரு தளம் குறித்தும் அவற்றுடன் உங்களுக்கான தொடர்பு குறித்தும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவும். நீங்கள் அடிக்கடி இணைய தளங்கள் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்களா? அல்லது சமுதாய சேவை செய்திடும் அமைப்புகளின் இணையதளங்களைப் பார்வையிட்டு ஏதேனும் கடிதங்கள் எழுதுகிறீர்களா? அவற்றின் உறுப்பினரா? ஏதேனும் நியூஸ் லெட்டர்களைப் படித்து அவை இலவசமாக அனுப்பப்படுகிறது என்பதற்காக அவற்றைப் பெற உங்கள் முகவரிகளைத் தருகிறீர்களா? மேற்கண்ட செயல்களை நீங்கள் மேற்கொள்கையில் நிச்சயம் உங்கள் இமெயில் முகவரிகளை அவை கேட்டிருக்கும்.
இத்தகைய தளங்களில் சில, சில மட்டுமே, உங்கள் முகவரிகளை தளங்களில் வெளியிடும். அல்லது பிற தள நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அவற்றிற்கு முகவரிகளைத் தரும். அல்லது பாதுகாப்பற்ற முறையில் இவை உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களின் முகவரிகளைத் தங்கள் தளத்தில் வைத்திருக்கும். அவற்றை மற்றவர்கள் எளிதாகத் தேடி எடுத்து ஸ்பேம் மெயில்கள் அனுப்ப பயன்படுத்தலாம். எப்படியோ, உங்களுக்கு ஸ்பேம் மெயில்கள் அனுப்பும் தளங்களின் முகவரிகள் கிடைக்கையில் அவற்றுடன் உங்கள் உறவினை முறித்துக் கொள்ளும் வசதியைப் பயன்படுத்துங்கள். தேவையற்ற நியூஸ் லெட்டர்கள் அனுப்பும் தளங்களின் வாசகர்கள் பட்டியலிலிருந்து முகவரியை எடுக்கும் வசதியைப் பயன்படுத்தி நீக்கிவிடுங்கள். தளங்கள் பாதுகாப்பானது என்று தெரிந்தால் மட்டுமே உங்கள் முகவரிகளைத் தரவும். இல்லையேல் முகவரிகளைத் தரும் பழக்கத்தினை விட்டுவிட
இத்தகைய தளங்களில் சில, சில மட்டுமே, உங்கள் முகவரிகளை தளங்களில் வெளியிடும். அல்லது பிற தள நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அவற்றிற்கு முகவரிகளைத் தரும். அல்லது பாதுகாப்பற்ற முறையில் இவை உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களின் முகவரிகளைத் தங்கள் தளத்தில் வைத்திருக்கும். அவற்றை மற்றவர்கள் எளிதாகத் தேடி எடுத்து ஸ்பேம் மெயில்கள் அனுப்ப பயன்படுத்தலாம். எப்படியோ, உங்களுக்கு ஸ்பேம் மெயில்கள் அனுப்பும் தளங்களின் முகவரிகள் கிடைக்கையில் அவற்றுடன் உங்கள் உறவினை முறித்துக் கொள்ளும் வசதியைப் பயன்படுத்துங்கள். தேவையற்ற நியூஸ் லெட்டர்கள் அனுப்பும் தளங்களின் வாசகர்கள் பட்டியலிலிருந்து முகவரியை எடுக்கும் வசதியைப் பயன்படுத்தி நீக்கிவிடுங்கள். தளங்கள் பாதுகாப்பானது என்று தெரிந்தால் மட்டுமே உங்கள் முகவரிகளைத் தரவும். இல்லையேல் முகவரிகளைத் தரும் பழக்கத்தினை விட்டுவிட
லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?
லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?
நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப்கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.
நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப்கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.
1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும் உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக் கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல் லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.
2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம்.
2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம்.
இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது. மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம். பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.
5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்.
இந்திய மொழிகளில் புதிய பரிமாணங்களுடன் ஆப்பரா பிரவுசர் தொகுப்பு
இந்திய மொழிகளில் புதிய பரிமாணங்களுடன் ஆப்பரா பிரவுசர் தொகுப்பு
கூகுளின் குரோம் பிரவுசர் வெளியானபின் பிரவுசர் சந்தையில் பலமான சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலி தான் அண்மையில் வெளியான ஆப்பரா பிரவுசர் பதிப்பு 9.6. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்குப் பதிலாக முதன் முதலாகப் பலர் நாடிய தொகுப்பு ஆப்பரா பிரவுசராகும். இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு ஆப்பரா பிரவுசரைப் பயன் படுத்தும் அனைவரும் அதுதான் மிகச் சிறந்த பிரவுசர் என அதற்கான பல அம்சங்களை எடுத்துச் சொல்வார்கள்.
கூகுளின் குரோம் பிரவுசர் வெளியானபின் பிரவுசர் சந்தையில் பலமான சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலி தான் அண்மையில் வெளியான ஆப்பரா பிரவுசர் பதிப்பு 9.6. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்குப் பதிலாக முதன் முதலாகப் பலர் நாடிய தொகுப்பு ஆப்பரா பிரவுசராகும். இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு ஆப்பரா பிரவுசரைப் பயன் படுத்தும் அனைவரும் அதுதான் மிகச் சிறந்த பிரவுசர் என அதற்கான பல அம்சங்களை எடுத்துச் சொல்வார்கள்.
இருப்பினும் குரோம் வெளியானபோது ஏற்பட்ட சலசலப்பு என்றைக்கும் ஆப்பராவிற்கு ஏற்பட்டதில்லை. தொடர்ந்து மறைவிலேயே அவ்வளவாகப் பேசப் படாமல் இருந்த ஆப்பராவிற்கு தற்போது புதிய பல பரிமாணங்கள் தரப்பட்டுள்ளன.
இத்தொகுப்பின் (டெஸ்க்டாப் பதிப்பு 9.6) இந்திய மொழி தொகுப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இவை கிடைக்கின்றன. இதன் மொபைல் பிரவுசர் பதிப்பான ஆப்பரா மினியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளதால் ஆப்பரா பிரவுசர் தயாரிப்பவர்கள் இந்திய மொழிகளில் ஆர்வம் கொண்டு இவற்றை வடிவமைத்துள்ளனர். இந்திய மொழிகளில் கிடைக்கும் வசதியுடன் இதனை கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராம்களுடன் இணைந்தும் பயன்படுத்தலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கான பதிப்பினை http://www.opera.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்தும் மொபைல் போனுக்கான பதிப்பினை http://www.operamini.com/pc/ generic/generic_advanced_midp_2/ என்ற தளத்திலிருந்தும் இலவசமாக இறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இந்தியாவில் ஆப்பராவின் அவதாரம் பலரைப் பேசவைத்துள்ளது. இதன் புதிய வெளியீட்டிற்கென இந்தியா வந்த இதன் தலைவர் டெட்ஸ்னர் இது பற்றி பத்திரிக்கையாளர்களுடன் மனந்திறந்து உரையாடினார்.
முதலில் ஆப்பராவின் சிறப்பம்சங்கள் சில:
* ஆப்பரா லிங்க் பயன்படுத்தி பல்வேறு கம்ப்யூட்டர்களிடையே புக்மார்க்குகளை சிங்க்ரனைஸ் செய்திடலாம்.
முதலில் ஆப்பராவின் சிறப்பம்சங்கள் சில:
* ஆப்பரா லிங்க் பயன்படுத்தி பல்வேறு கம்ப்யூட்டர்களிடையே புக்மார்க்குகளை சிங்க்ரனைஸ் செய்திடலாம்.
* இதில் இணைந்துள்ள இமெயில் புரோகிராமினைப் பயன்படுத்தி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இமெயில் அனுப்பலாம்.
* இணையத் திருடர்களிடமிருந்து உங்கள் பெர்சனல் தகவல்களைக் காப்பாற்றும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* படங்களைத் தேவைப்பட்டால் மட்டுமே கொடுப்பதன் மூலம் பேண்ட்வித் திறனைக் காப்பாற்றுகிறது.
* இதன் டவுண்லோட் மேனேஜர் டவுண்லோட் செய்யப்படுகையில் இடைவெளி ஏற்பட்டால் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது.
* ஆப்பரா 9.6 குறைந்த மெமரி உள்ள பழைய கம்ப்யூட்டர்களிலும் சிறப்பாக இயங்குகிறது.
* முழுத் திரையையும் பயன்படுத்தி இணைய தளங்களைக் காட்டும் திறனும் இதற்கு உள்ளது.
* ஆப்பரா எப்போதும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கென ஒரு பிரவுசரைவடிவமைக்கும். பின் அதிலேயே சில மாற்றங்கள் செய்து மொபைல் போனுக்கும் மாற்றி அமைக்கும். ஏனென்றால் அப்போதுதான் அதனைப் பயன்படுத்துபவர் களுக்கு அது எளிதாக இருக்கும்.
* ஆப்பரா முழுமையான ஓப்பன் சோர்ஸ் புரோகிராமாக இருக்காது. ஏனென்றால் அனைத்து பிரவுசர்களுமே ஒரே மாதிரியாக இருந்துவிட்டால் பின் போட்டியும் அதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் புதிய அனுபவும் கிடைக்காமல் போய்விடும். போட்டி இருந்தால் தான் ஒன்று மற்றவற்றைக் காட்டிலும் நல்லது என்று தெரிய வரும்.
* ஆப்பரா பிரவுசர் ஐ–போனில் கிடைக்காது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டு மற்றவற்றை அனுமதிக்க வேண்டும்.
* ஆப்பரா பல காலமாக தந்து வந்த அம்சங்களையே காட்டி பயர்பாக்ஸ் அல்லது குரோம் மீடியாக்கள் மூலமாக சலசலப்பை ஏற்படுத்தியபோது ஆப்பரா என்றும் அமைதியாகவே இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களிடையே செய்தி பரவியதனால் குரோம் வெளியான போது ஆப்பராவை டவுண்லோட் செய்தவர்கள் எண்ணிக்கை 20% உயர்ந்தது. ஒவ்வொரு போட்டி பிரவுசரும் வெளியாகும்போது இது நடப்பது வாடிக்கையாகி விட்டது.
* ஒவ்வொரு முறை போட்டி பிரவுசர் வருகையிலும் அதனை ஒரு பயமுறுத்தலாகத்தான் ஆப்பரா எடுத்துக் கொள்கிறது. ஆனால் புதிய பிரவுசர் வருகையில் ஆப்பராவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. ஏனென்றால் புதிய பிரவுசர்களின் செயல்பாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில் மீடியாக்களும் மக்களும் ஆப்பராவைப் பற்றி அதிகம் பேசுகின்றனர்.
* பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஆப்பராவினை 2.5 லிருந்து 3 கோடி பேர் வரை பயன்படுத்துகின்றனர். மொபைல் போனுக்கான பிரவுசரைப் பொறுத்தவரை ஆப்பரா மினி மற்றும் ஆப்பரா மொபைல் முன்னணியில் உள்ளது.
* பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஆப்பராவினை 2.5 லிருந்து 3 கோடி பேர் வரை பயன்படுத்துகின்றனர். மொபைல் போனுக்கான பிரவுசரைப் பொறுத்தவரை ஆப்பரா மினி மற்றும் ஆப்பரா மொபைல் முன்னணியில் உள்ளது.
* ஆப்பரா மினி மற்றும் ஆப்பரா மொபைல் பிரவுசர்கள் மிகக் குறைந்த அளவிலான பேண்ட் வித் கொண்டு இயங்கும் மொபைல் போன்களில் கூட நல்ல பிரவுசிங் அனுபவத்தினைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கை பயர் போன்ற பிரவுசர்கள் அதிக அளவிலான பேண்ட் வித் மற்றும் அதிக அளவில் டேட்டாவினைக் கையாளும் திட்டங்களைக் கொண்டுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் உள்ளது. ஆப்பரா பிரவுசர்கள் குறைந்த பேண்ட்வித் உள்ள இடத்திலும் சிறப்பாகச் செயல்படும். அதிக பேண்ட் வித் கிடைக்கும்போது இன்னும் திறனுடன் செயல்படுகிறது.
* இதுவரை இல்லாத வகையில் மக்கள் அதிகமான நேரத்தை ஆன்லைனில் செலவிடுகிறார்கள். டெலிவிஷனில் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் இன்டர்நெட் பயன்படுத்துதல் கூடுதல் என்று சொன்னால் அது மிகையாகாது. இதனால் பிரவுசரின் பயன்பாட்டில் பல புதிய பரிமாணங்கள் உருவாகி வருகின்றன. இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. அதாவது ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் புதியவழிகளோ வகைகளோ ஏற்படுவது இல்லை.
ஆப்பராவின் சண்டிகார் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. இந்தியாவில் ஆப்பராவின் பயன்பாடு குறித்து அந்த நிறுவனம் அதிக மகிழ்ச்சியில் உள்ளது. அதன் விளைவுதான் இந்திய மொழிகளில் இதன் பதிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும் ஆப்பரா நெட்வொர்க் ஆப்பரேட்டர்களுடன் பல ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. டாட்டா இண்டிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பார பிரவுசர்களை விற்பனை செய்திடும்போதே பதிந்து கொடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது. இது போல உலக அளவில் 30 நிறுவனங்களுடன் ஆப்பரா ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
எக்ஸெல் செல் கொஞ்சம் பார்மட்டிங்
எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் உள்ள டேட்டா ( எண் அல்லது சொற்கள்) வில் ஒரு பகுதியினை மட்டும் பார்மட் செய்திட திட்டமிட்டால் என்ன செய்யலாம்? எடுத்துக் காட்டாக செல் ஒன்றில் மூன்று சொற்களில் ஒரு பெயர் இருக்கலாம். அதில் ஒரு குறிப்பிட்ட சொல்லை மட்டும் போல்டாகவோ அல்லது சாய்வாகவோ அல்லது வேறு எழுத்து வகையிலோ அமைக்க வேண்டும் என்றால் முடியுமா? இந்த சந்தேகம் எங்கள் அலுவலகத்தில் பணியாற்றுபவருக்கு வர அவர் முயற்சித்துப் பார்த்தார். செல்லைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தால் அனைத்துமே பார்மட் ஆகிறதே என்று முதல் முயற்சியிலேயே சந்தேகப்பட ஆரம்பித்தார். ஆனால் பின்னர் பாதி அளவில் செயல்பட முடிந்ததைக் கண்டு பிடித்தார்.
முதலில் செல்லை ஜஸ்ட் அப்படியே தேர்ந்தெடுக்காமல் அதன் மீது டபுள் கிளிக் செய்திடுங்கள். இப்போது கர்சர் செல்லினுள் சென்றுவிடும். இதன் மூலம் செல்லினுள் உள்ளதை நீங்கள் எடிட் செய்திட முடியும். அல்லது செல்லைத் தேர்ந்தெடுத்த பின் பார்முலா பாருக்குள் கர்சரைக் கொண்டு சென்று எடிட் செய்திடலாம். இப்போது கர்சரைப் பயன்படுத்தி நீங்கள் எதனை எடிட் செய்திட வேண்டுமோ அதனை மட்டும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பின் பார்மட்டிங் ஆப்ஷனைப் பெறுங்கள். இதனைப் பெறவும் இரு வழிகள் உள்ளன. Format மெனு சென்று Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு கண்ட்ரோல் + 1 அழுத்தலாம். இப்போது தேவையான பார்மட்டிங் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியேறினால் நீங்கள் விரும்பிய பகுதியில் பார்மட்டிங் முடிந்திருக்கும்
வைரஸை கட்டுப்படுத்தும் வழிகள்
எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது?
1. ஏற்கனவே வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது.
2. வைரஸ் கெடுத்த புரோகிராம்கள் அல்லது டேட்டா பைல்களைக் கம்ப்யூட்டருக்குள் கொண்டு வருவதன் மூலம்.
3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்.
4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.
அதைப் பார்க்கும் முன்னர் எப்படி அவை நம் கம்ப்யூட்டரில் தொற்றிக் கொள்வதனைத் தடுக்கலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால் வைத்தியம் செய்வதைக் காட்டிலும் தடுப்பு வழிகள் அதிக பாதுகாப்பானது அல்லவா!
1. உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸிற்கு எதிரான antivirus program வைத்திருந்தால் (Norton, McAfee, AVG, போன்றவை) உங்கள் பைல்களை ஸ்கேன் செய்வதற்கு முன் அதனை அப்டேட் செய்திடுங்கள். மேலும் பணம் செலுத்தி வாங்கியிருந்தால் அதற்கான காலம் இன்னும் முடியவில்லை என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணத்திற்கான காலம் முடிந்திருந்தால் லேட்டஸ்ட் டாக வந்திருக்கும் வைரஸிற்கான விளக்கம் மற்றும் நீக்கும் புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாது. இவ்வகையில் அப்டேட் செய்யாத ஆண்டி வைரஸ் புரோகிராம்களைக் கொண்டு ஸ்கேன் செய்வதில் பயனே இல்லை. ஏனென்றால் லேட்டஸ்ட்டாக வந்த வைரஸ்களை இவை கண்டறியாது.
2. அடுத்து உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கும் முறைகளுக்கு வருவோம். இந்த புரோகிராமின் சிறிய ஐகான் நிச்சயம் உங்கள் சிஸ்டம் ட்ரேயின் வலது ஓரத்தில் மற்ற ஐகான்களுடன் இடம் பெற்றிருக்கும். பின்புலத்தில் இது இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் இது. இதனை இருமுறை கிளிக் செய்தால் புரோகிராம் விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். இந்த ஐகான் இங்கு இல்லை என்றால் மற்ற புரோகிராம்களைப் பெறுவது போல Start மற்றும் All Programs சென்று இதனைப் பெறலாம்.
3. இப்போது உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் main page அல்லது control center கிடைக்கும். இங்கு ஆண்டி வைரஸ் புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்குக் கிடைக்கும். முழுமையாகப் பார்த்து கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்வதற்கான டேப் அல்லது பட்டனில் கிளிக் செய்து அப்போது கிடைக்கும் விண்டோவில் எவ்வகை ஸ்கேன் மற்றும் எந்த பைல்கள் என்பதனையும் தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் ஸ்கேன் செய்யப்படத் தொடங்கும். இதற்கு Scan டேப் கிளிக் செய்தவுடன் எந்த பைல்கள் அல்லது டிரைவ் எனத் தேர்ந்தெடுக்க ஒரு விண்டோ கிடைக்கும். முழுமையாகக் கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்திட Scan Computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அனைத்து பைல்களும் டிரைவ் வரிசைப்படி ஸ்கேன் செய்யப்படும். இது ஒரு விண்டோவில் காட்டப் படும். அந்த ரிப்போர்ட் விண்டோவில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட் டால் அது அழிக்கபட்டதா? வைரஸ் பாதித்த பைல் குணப்படுத்தப்பட்டதா? வைரஸ் பாதுகாப்பான இடத்தில் (quarantine) வைக் கப்பட்டதா? என்ற தகவல் உங்களுக்குக் கிடைக்கும். இருக்கிற வேலையில் பறக்கிற நேரத்தில் இந்த ஸ்கேன் செய்வதற்கு மறந்து போகிறது என்று நினைக்கிறவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வேலையை எளிதாக்கிட ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் வழி தருகின்றன. தானாக ஸ்கேன் (Automatic Scan) பணி நடைபெற செட் செய்திடலாம்.
1. ஆண்டி வைரஸ் புரோகிராமைத் திறந்திடுங்கள்.
2. கிடைக்கும் விண்டோ மூலம் நீங்கள் தானாக ஸ்கேன் செய்யப்பட வேண்டிய டிரைவ் மற்றும் பைல்களைத் தேர்ந்தெடுங்கள்.
3. Tools மெனு செல்லுங்கள். அதில் Scheduler (இந்த சொற்கள் உங்கள் புரோகிராமிற்கு ஏற்றபடி மாறி இருக்கலாம்) என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். பின் Schedule Scan என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.
4. New என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதில் கிடைக்கும் விண்டோவில் சிலவற்றை நீங்கள் குறிப்பிட்டுத் தர வேண்டியதிருக்கும். முதலாவதாக ஸ்கேன் செய்யப்பட வேண்டியது எவை? இதனை சில புரோகிராம்கள் Event Type எனக் குறிப்பிட்டிருக்கும். அடுத்து எந்த நேரத்தில் மேற்கொள்ள என்பதற்கு When To Do என்ற பிரிவில் அமைக்கலாம். How Often என்பதன் மூலம் வாரம் ஒருமுறையா, தினந்தோறுமா என்று காலவரையறை செய்திடலாம். நேரத்தை வரையறை செய்திட Start Time என்பதனைப் பயன்படுத்தவும். அனைத்தையும் செட் செய்திட்ட பின்னர் Done என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த காலப்படி ஸ்கேன் நடைபெறும்.
2. கிடைக்கும் விண்டோ மூலம் நீங்கள் தானாக ஸ்கேன் செய்யப்பட வேண்டிய டிரைவ் மற்றும் பைல்களைத் தேர்ந்தெடுங்கள்.
3. Tools மெனு செல்லுங்கள். அதில் Scheduler (இந்த சொற்கள் உங்கள் புரோகிராமிற்கு ஏற்றபடி மாறி இருக்கலாம்) என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். பின் Schedule Scan என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.
4. New என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதில் கிடைக்கும் விண்டோவில் சிலவற்றை நீங்கள் குறிப்பிட்டுத் தர வேண்டியதிருக்கும். முதலாவதாக ஸ்கேன் செய்யப்பட வேண்டியது எவை? இதனை சில புரோகிராம்கள் Event Type எனக் குறிப்பிட்டிருக்கும். அடுத்து எந்த நேரத்தில் மேற்கொள்ள என்பதற்கு When To Do என்ற பிரிவில் அமைக்கலாம். How Often என்பதன் மூலம் வாரம் ஒருமுறையா, தினந்தோறுமா என்று காலவரையறை செய்திடலாம். நேரத்தை வரையறை செய்திட Start Time என்பதனைப் பயன்படுத்தவும். அனைத்தையும் செட் செய்திட்ட பின்னர் Done என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த காலப்படி ஸ்கேன் நடைபெறும்.
அதெல்லாம் சரி, என்னிடம் ஆண்டி வைரஸ் புரோகிராம் இல்லையே என்று நீங்கள் கவலைப்படலாம். அப்படியானால் இன்னொரு வழியும் உள்ளது. இதற்கு உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். இணையத்தில் இலவசமாக இயங்கும் ஆண்டி வைரஸ் புரோகிராம் உள்ளது. கூகுள் அல்லது யாஹூ சர்ச் இஞ்சின் மூலம் ஒன்றைக் கண்டறிந்து இயக்கினால் பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வைரஸ்கள் அழிக்கப்படும்.
வைரஸ் புகுந்து பிரச்னை செய்கிறதா? எப்போதாவது உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து கட்டுப்பாட்டினையும் அதன் பிடிக்குள் எடுத்துக் கொண்டுவிட்டதா? கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் இயக்க விடாமல் தடுக்கிறதா? அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? இதற்காக உங்களுக்குக் கம்ப்யூட்டர் வழங்கிய நிறுவனம் அல்லது மற்றவரின் உதவியைக் கேட்டபோது அவர்கள் அதிகமான அளவில் பணம் செலுத்த சொல்கிறார்களா? இதனால் நீங்களே இதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய விரும்புகிறீர்களா? கீழே அதற்கான சில வழிகள் தரப்படுகின்றன.
1. முதலில் உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் அல்லது நெட் வொர்க்கிலிருந்து (அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தால்) இணைப்பு நீக்கம் செய்திடவும். இதனால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அடுத்த கம்ப்யூட்டருக்குப் பரவுவது தடுக்கப்படுகிறது. மேலும் இன்டர்நெட் மூலமாக இமெயில் கடிதங்களில் ஒட்டிக் கொண்டு செல்வது தடுக்கப்படுகிறது. உங்கள் இமெயில் அட்ரஸ் புக்கிலுள்ள ஒவ்வொரு முகவரிக்கும் வைரஸ் அனுப்பப்படுவதும் தடுக்கப்படுகிறது. இணைப்பை நீக்க கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க் கேபிளை நீக்கினாலே போதும்.
2. அடுத்து கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான பைல்கள், அல்லது அனைத்து பைல்களையும் வைரஸ் பாதிக்காத ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பேக்கப் காப்பி எடுத்துக் கொள்ளவும்.
3. அடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) பயன் பாட்டினைக் கவனிக்க வேண்டும். இதனை அவ்வப்போது இயக்கி சில System Restore புள்ளிகளை அமைத்திருந்தால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படும் நாளில் அந்த நாளுக்குக் கம்ப்யூட்டரை அமைக் கும்படி செய்திடலாம். இதனால் வைரஸ் எந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதன் மூலம் வந்ததோ அது நீக்கப்படும். நீங்கள் இந்த சிஸ்டம் ரெஸ்டோர் புள்ளிகளை அமைக்க Start, Control Panel செல்லுங்கள். (உங்கள் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்). அடுத்து Backup and Restore Center என்ற லிங்க்கில் கிளிக் செய்திடுங்கள்.
அடுத்து பக்கவாட்டில் கொடுக்கப் பட்டிருக்கும் பாரில் “Repair Windows Using System Restore” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். பின் அதில் வரிசையாகத் தரப்படும் குறிப்புகளைப் பின்பற்றினால் ரெஸ்டோர் பாய்ண்ட் களை அமைக்கலாம். ஓகே, இனி வைரஸ் பிரச்னைக்கு வருவோம். வைரஸ் எந்த பைலில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும் என்றால் அதை அழித்துவிட்டு பின் ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அதனை நீக்கிவிடலாம். வைரஸ் எங்குள்ளது என்று அறிய முடிய வில்லை என்றால் இன்டர்நெட் இணைப்பில் Trend Micro’s HouseCall Antivirus Scan என்ற புரோகிராமினைப் பயன்படுத்தி வைரஸ் எங்கிருக்கிறது என்று அறியலாம்.
இந்த புரோகிராமை http://housecalltrendmicro.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று இயக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் இந்த ஸ்கேனை அறியாது. எனவே முழுமையாக கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடலாம். பெரும்பாலும் பலர் நீக்க முடியாதபடி வைரஸ் வந்துவிட்டால் சி டிரைவினை பார்மட் செய்திடும் வேலையையே மேற்கொள்கின்றனர். இது சரியான வேலை என்றாலும் எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் பார்மட் செய்த பின்னர் பழைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும்வேலை எல்லாம் நம்மைக் கொல்லாமல் கொல்லும் செயல்களாக மாறும். எனவே மேலே கூறப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டுவிட்டு இறுதி முயற்சியாக பார்மட்டிங் வழியை மேற்கொள்ளலாம்.
மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர்
நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம்.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட்புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம்.
சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள், இல்லையா? அதே போலத் தான் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மற்றும் வேர்ட் புராசசிங் சாப்ட்வேர் தொகுப்புகளும்.
இதற்காக நம் சிபியூ டவரைத் தூக்கிக் கொண்டு செல்லவா முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் வேண்டாம். ஒரு சின்ன பிளாஷ் டிரைவ் இருந்தால் போதும். உங்களுடைய பிரியமான, உங்களுடைய விருப்பங்களுக்கேற்றபடி வடிவமைக்கப் பட்ட சாப்ட்வேர் புரோகிராம்களைத் தூக்கிச் சென்று பயன்படுத்தலாம். ஒரு மெமரி ஸ்டிக்கில் எடுத்துச் சென்று உங்களுடையதாக மட்டும் பயன்படுத்தும் பல புரோகிராம்கள் இப்போது புழக்கத் தில் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிளாஷ் டிரைவில் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் வேர்ட் புரோகிராம் முழுவதையும் இன்ஸ்டால் செய்து கொண்டு போய் பயன்படுத்த முடியாது. இதற்கென போர்டபிள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. அவற்றைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
அவை புரோகிராம்களையும் அதில் உள்ள ஸ்பெஷல் செட்டிங்குகளையும் பதிந்து வைத்து எடுத்துச் சென்று பயன்படுத்த தருகின்றன. இப்படி அனைத்து புரோகிராம்களும் நமக்குக் கிடைப்பதில்லை. ஒரு சில முக்கிய பயன்பாடு களுக்கான போர்ட்டபிள் புரோகிராம்கள் கிடைக்கின்றன. முதலில் இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கான புரோகிராம் குறித்து பார்க்கலாம். இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசர் புரோகிராம். இதற்கு ஒரு மெமரி கீ ஸ்டிக்கில் 30 எம்பி அளவு இடம் இருந்தால் போதும். இதனை www.portableapps.com/apps.internet/firefox_portable என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இதனை முதலில் டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் மெமரி ஸ்டிக்கை அதன் ஸ்லாட்டில் செருகி ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் டெஸ்க்டாப்பில் இருக்கும் புரோகிராமினை இருமுறை கிளிக் செய்து இன்ஸ்டாலேஷன் செயல்பாட்டை மேற்கொள் ளுங்கள்.
முதலில் கிடைக்கும் விண்டோக்களில் லைசன்ஸ் அக்ரிமெண்ட் ஆகியவற்றிற்கு சரி என்று கிளிக் செய்து எங்கு இன்ஸ்டால் செய்திட என்று கேட்கும்போது மெமரி ஸ்டிக்கின் டிரைவைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுக்கவும். சில நிமிடங்களில் மெமரி ஸ்டிக்கில் புதிய போல்டர் ஒன்று உருவாக்கப்பட்டு பயர்பாக்ஸின் போர்டபிள் பதிப்பு ஒன்று அதில் இருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்து இயக்கிப் பார்க்கவும். மெமரி ஸ்டிக்கில் இருந்து இயங்கும் பிற புரோகிராம்கள் மற்றும் பைல்களைப் போல இதுவும் சற்று மெதுவாகத்தான் இயங்கும். அது குறித்து கவலைப் படாமல் தொடர்ந்து பிரவுஸ் செய்திடுங்கள்.
உங்கள் வழக்கமான செட்டிங்குகளை ஏற்படுத்துங்கள். புக் மார்க்குகளை உருவாக்குங்கள். இனி இந்த மெமரி ஸ்டிக் மூலம் நீங்கள் யாருடைய கம்ப்யூட்டரில் வேண்டுமென்றாலும் உங்களுக்குப் பிரியமான பிரவுசர் மூலம் இன்டர்நெட் உலா வரலாம். போர்ட்டபிள் பயர்பாக்ஸ் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் இன்டர்நெட் தளம் சென்று இமெயில்களைக் காண முடியும் என்றாலும் நீங்கள் உங்களுடைய இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் மூலம் அவர்களின் சர்வரில் இருந்து மெயில் களை டவுண்லோட் செய்திட உங்களுக்கு ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம் தேவை. இதற்கென தண்டர்பேர்ட் போர்ட்டபிள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் கிடைக்கிறது. www.portableapps.com/nes/20080502_ thunderbird_portable_2.0.0.14 என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே முன் பத்தியில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் புரோகிராமினை மெமரி ஸ்டிக்கில் இன்ஸ்டால் செய்தது போல இதனையும் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்து இயக்கி எப்படி டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள தண்டர்பேர்ட் தொகுப்பில் அக்கவுண்ட் உருவாக்கி இமெயில்களை டவுண்லோட் செய்து கையாண்டீர்களோ அதே போல இதிலும் செயல்படலாம். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் டவுண்லோட் செய்திடும் இமெயில்களெல்லாம் மெமரி ஸ்டிக்கிலேயே இடம் பெறும். எனவே மிக அதிக அளவில் இமெயில்களைப் பெறுபவர்கள் சற்று கவனத்துடன் அவற்றை டெஸ்க் டாப்பிற்கு அல்லது இணையத்தில் உள்ள ஸ்டோரேஜ் டிரைவ்களுக்கு மாற்றிவிட வேண்டும். இந்த தொல்லையைத் தவிர்க்க விடுமுறை நாட்களில் வெளியே செல்கையில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் இந்த மெமரி ஸ்டிக் இமெயில் டவுண்லோடிங் செயல்பாட்டை மேற்கொள்ளவும்.
ஓகே. உங்கள் ஸ்டிக் மூலம் நீங்கள் விரும்பும் வகையில் இணையம் செல்வதும் இமெயில் பார்ப்பதுவும் சரி. வேறு டெக்ஸ்ட் உருவாக்கும் செயல்பாடுகளை மெமரி ஸ்டிக் மூலம் மேற்கொள்வது எப்படி? அதிர்ஷ்டவசமாக நமக்கு ஓர் அருமையான வேர்ட் பிராசசிங் புரோகிராம் கிடைத்துள்ளது. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு தரும் அனைத்து புரோகிராம் வசதிகளும் இதில் உள்ளன. அது ஓப்பன் ஆபீஸ் என அழைக்கப்படும் புரோகிராம் ஆகும்.
ஓப்பன் ஆபீஸ் சற்று பெரிய புரோகிராம். மெமரி ஸ்டிக்கில் 190 எம்பி இடம் எடுத்துக் கொள்கிறது. இதனை http://tinyurl.com/y84z89 என்ற தளத்திலிருந்து இன்ஸ்டால் செய்திடலாம். இதனை இன்ஸ்டால் செய்வது பயர்பாக்ஸ் மற்றும் தண்டர் பேர்டைக் காட்டிலும் எளிதானது. ஏனென்றால் லைசன்ஸ், கண்டிஷன் என்பதெல்லாம் கிடையாது. இது சற்று நேரம் பிடிக்கும் என்பதால் மெமரி ஸ்டிக்கில் பதியும்போது பொறுமையாக இதனைப் பதிய வேண்டும். இதுவும் செயல்படுகையில் சற்று மெதுவாகவே செயலாற்றும் என்றாலும் இது தரும் வசதிகளுக்காக இதனைப் பொறுத்துக் கொள்ளலாம்.
போட்டோக்களைக் கையாளவும் நமக்கு ஒரு போர்ட்டபிள் அப்ளிகேஷன் உள்ளது. இதனை எடிட்ணீ என்று அழைக்கின்றனர். இதனை www.portableapps.com/apps/ graphics_pictures/gimp_portable என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இது மெமரி ஸ்டிக்கில் 18 எம்பி இடத்தைக் கேட்கிறது. இந்த பைலை டவுண்லோட் செய்த பின்னர் டபுள் கிளிக் செய்து Extract என்பதில் கிளிக் செய்திடவும்.
இது Gimp portable என்ற போல்டரை உருவாக்கும். இந்த போல்டரை அப்படியே மெமரி ஸ்டிக்கில் காப்பி செய்திடவும். பின் இன்ஸ்டால் செய்திடவும். பயர் பாக்ஸ், தண்டர் பேர்ட், ஓப்பன் ஆபீஸ் போல இது விண்டோஸ் மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் நன்றாக இயங்குகிறது. போட்டோக்களைக் கையாளவும் ஒரிஜினல் ஆர்ட் ஒர்க் மேற் கொள்ளவும் தேவையான அனைத்து டூல்களும் இந்த புரோகிராமில் கிடைக்கின்றன. பெரும்பான் மையான இமேஜ் பைல்களை இது ஏற்றுக் கொள்கிறது.
மேலே சொன்னவை எல்லாம் கடமைகளை மேற்கொள்ள நமக்கு உதவிடும் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள். பொழுது போக்குவதற்கான அப்ளிகேஷன்கள் ஒன்றுமே கிடையாதா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். VLC என்ற புரோகிராம் இதற்கெனவே தயாரிக்கப்பட்டு கிடைக்கிறது. மெமரி ஸ்டிக்கில் 17 எம்பி இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதனை http://tinyurl.com/2erg6s என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். மேலே சொன்ன வழிகளிலேயே இதனையும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். எம்பி3, ஙிMஅ மற்றும் டிவ் எக்ஸ் வீடியோ போன்ற பலவகை ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இந்த போர்ட்டபிள் புரோகிராம் மூலம் இயக்கலாம்.
பி.டி.எப். பைல்களை நாம் அடிக்கடி திறந்து படிக்க வேண்டியுள்ளது. சிலர் இந்த பைல்களை அறவே பயன்படுத்துவதில்லை. அப்படிப்பட்டவர்களின் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகையில் நாம் பி.டி.எப். பைல்களை எப்படி படிக்க முடியும். இதற்கெனவே http://tinyurl.com/2Vr39c என்ற தளத்தில் Sumatra PDF என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதே போல Clamwin Portable என்ற புரோகிராம் ஆண்டி வைரஸ் புரோகிராமாகவும், 7Zip என்ற புரோகிராம் விண்ஸிப் புரோகிராம் போலவும் செயல்படுகின்றன.
ஒரு காலத்தில் செங்கல் ஒன்றில் பாதியளவு ஹார்ட் டிஸ்க் ஒன்று எடுத்துச் சென்று பயன்படுத்தும் விதத்தில் 20 எம்பி டேட்டாவை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. இன்று பாக்கெட்டில் பல ஜிபி டேட்டாவை எடுத்துச் செல்ல முடிகிறது. மேலே குறிப்பிட்ட போர்ட்டபிள் அப்ளிகேஷன்களை ஒரு மெமரி ஸ்டிக்கில் பதிந்து எடுத்து செல்வதன் மூலம் ஒரு கம்ப்யூட்டரை அல்லவா பாக்கெட்டில் எடுத்துச் செல்கிறோம்.
No comments:
Post a Comment