Thursday, 5 April 2012

எக்ஸெல் செல்களை வேர்டில் ஒட்ட…--பயர்வால்கள் எப்படி செயல்படுகின்றன?--மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம்--சிஸ்டம் டிப்ஸ்--பக்கங்களை வேகமாக நகர்த்த


எக்ஸெல் செல்களை வேர்டில் ஒட்ட…
எப்போதாவது எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள செல்களை வேர்ட் தொகுப்பில் கொண்டு சென்று ஒட்ட முயற்சி மேற் கொண்டிருக்கிறீர்களா?  செய்திருப்பீர்கள். இதற்கு ஒர்க் ஷீட்டைத் திறந்து தேவையான செல்களைத் தேர்ந்தெடுத்து பின் வேர்டில் பைல் ஒன்றை உருவாக்கி அதில் அப்படியே பேஸ்ட் செய்திருப்பீர்கள். அதுவும் சரியாக ஒட்டப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் வேர்ட் மற்றும் எக்ஸெல் 97 பயன்படுத்துபவராக இருந்தால் சில பிரச்னைகளைச் சந்தித்திருப்பீர்கள். செல்களை நகர்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்று உணர்ந்திருப்பீர்கள்.
புதிய தொகுப்பைப் பயன்படுத்துபவருக்கும் இவ்வகையில் சில வசதிகள் தரப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தினால் இந்த காப்பி மற்றும் பேஸ்ட் வேலை சிறப்பாகவும் எளிதில் பின்னர் எடிட் செய்யக் கூடிய வகையிலும் அமைவதைப் பார்க்கலாம். வழக்கம்போல எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் செல்களைத் தேர்ந்தெடுத்து காப்பி செய்திடுங்கள். பின் வேர்டில் நீங்கள் எங்கு இந்த செல்களை ஒட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களோ அங்கு சென்று கர்சரை வைத்திடுங்கள்.
பின் Edit   மெனு சென்று Paste Special   பிரிவில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Microsoft Excel Worksheet Object  என்பதில் கிளிக் செய்திடுங்கள். செல்கள் அனைத்தும் அழகான டேபிளாக ஒட்டப்பட்டுவிடும். இதில் என்ன ஸ்பெஷல் ஒட்டு உள்ளது என்று கேட்கிறீர்களா? இப்போது அந்த டேபிளில் உள்ள டேட்டா எதிலாவது டபுள் கிளிக் செய்திடுங்கள். உடனே இந்த டேபிள் எக்ஸெல் டேபிளாக மாறும். அதில் வழக்கம்போல் எக்ஸெல் தொகுப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம். பின் மீண்டும் அந்த டேபிளுக்கு மேலாக கர்சரை எடுத்துச் சென்று கிளிக் செய்தால் வேர்ட் அட்டவணையாக டேட்டா கிடைத்துவிடும்.
பார்முலா பிரிண்ட்
இந்த வேலையை கம்ப்யூட்டரில் மேற்கொண்டாலும் (வேர்ட் டாகுமெண்ட், எக் ஸெல் ஒர்க் ஷீட் போன்றவை)
அதனை பிரிண்ட் எடுத்து புரூப் பார்ப்பவரா நீங்கள்! அப்படியானால் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பார்முலாக்களை எப்படி பார்ப்பீர் கள்? பார்முலாவின் முடிந்த வேல்யூ தானே பிரிண்ட்டில் கிடைக்கும். பார்முலாவை பிரிண்ட் செய்திட எப்படி செட் செய்யலாம் என்பதனைப் பார்ப்போம். முதலில் Tools  மெனு சென்று அதில் Options  என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் என்ற View  டேபில் என்டர் தட்டவும். இந்த விண்டோவில் விண்டோ ஆப்ஷன்ஸ் என்ற பிரிவில் பார்முலாஸ் என்று கொடுக்கப்பட்டிருப்பதற்கு எதிராக கிளிக் செய்திடவும். இங்கு ஓகே கிளிக் செய்தவுடன் நீங்கள் உங்கள் ஒர்க் ஷீட்டிற்குத் திரும்புவீர்கள். அங்கே பார்த்தால் உங்கள் பார்முலாவிற்கான வேல்யூ இருந்த இடத்தில் பார்முலா இருக்கும். இனி பிரிண்ட் செய்தால் பார்முலா மட்டும் கிடைக்கும். நீங்கள் அதன் தவறுகளைத் திருத்திவிட்டுப் பின் மீண்டும் பார்முலாவில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால் மீண்டும் வேல்யூக்களோடு பிரிண்ட் எடுக்கலாம்.

No comments:

Post a Comment