நன்னீர் முத்துக்கள் வளர்ப்பு என்பது 6 நிலைகளில், முறையாக செய்யப்படுகிறது. அவையாவன; சிப்பிகள் சேகரிப்பது, வளர்ப்புக்கு முன் முறைப்படுத்துதல், அறுவை சிகிச்சை, வளர்ப்புக்கு பின் முறைப்படுத்துதல், குளத்தில் வளர்ப்பு, முத்துக்களை அறுவடை செய்தல்
வளமான சிப்பிகள், குளங்கள் ஆறுகளிலுள்ள நன்னீரிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. நேரடியாக மனிதர்களே இவற்றை சேகரித்து, தண்ணீர் உள்ள வாலி, பெரிய பாத்திரங்களில் வைக்கப்படுகின்றன. முத்து வளர்ப்பதற்கு சிப்பியின் சரியான அளவு, 8 செ.மீட்டருக்கு மேல் இருக்கு வேண்டும்.
|
|
சேகரிக்கப்பட்ட சிப்பிகள், 2-3 நாட்களுக்கு ஒரே இடத்தில் சற்று கூட்டமாக, குழாய் தண்ணீரையும் சேர்த்து இருப்பு செய்யப்படுகிறது. இவ்வாரு செய்தல், சிப்பிகளின் சில தசைகளை வலுவிழக்கச் செய்யும். இதனால் அறுவை சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்.
|
|
எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்கிறோம் என்பதை பொருத்து, தசைகளில் வெளிபொருளை உள்ளிருப்பு செய்வது மூன்று விதமாக செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும்போது தேவைப்படும் பொருட்களாவன- உள்ளிருப்பு செய்யப்படும் மணிகள் அல்லது உட்கருவாகும்.
மான்டில் காவிட்டிக்குள் உள்ளிருப்பு செய்தல்- இம்முறையில் வட்டமான (4-6 மி.மீ.சுற்றளவு) அல்லது அலங்கரிக்கப்பட்ட (பிள்ளையார், புத்தா படம் போட்ட) மணிகள் மான்டில் காவிட்டிகுள் நிலை நிறுத்தப்படுகின்றன. மான்டில் காவிட்டியில் உள்ளிருப்பு செய்தல், சிப்பியின் இரண்டு பகுதிகளிலும் செய்யலாம். அலங்கரிக்கப்பட்ட மணிகளை உள்ளிருப்பு செய்யும்போது மணிகளிலுள்ள அலங்காரம் செய்துள்ள பகுதி ஓட்டை பார்த்து இருக்க வேண்டும். மணிகளை தகுந்த இடத்தில் வைத்த பிறகு, சிப்பியை மூட வேண்டும்.
மான்டில் திசுக்களுக்குள் உள்ளிருப்பு செய்தல்: இதில் சிப்பிகளை இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அதாவது கொடுப்பவை, வாங்குபவை. இம்முறையில் சிறிய மான்டில் திசுக்கள் தயார் செய்யப்படுகின்றன. கொடுக்கும் சிப்பிகளிலிருந்து ஒரு ரிப்பன் வடிவ மான்டில் திசுக்களை எடுத்து, இதனை 2.மி.மீட்டர் அளவில் சிறு துண்டுகளாக வெட்டி பிரிக்கப்படுகிறது. வாங்கும் சிப்பிகளில், இவை உள்ளிருப்பு செய்யப்படுகிறது. இது இரண்டு வகைப்படும். அதாவது, உட்கருவுடன், உட்கரு இல்லாமல். உட்கரு இல்லாத முறையில், மான்டில் திசுக்கள் மட்டும் சிப்பிகளின் உள்ளே வைக்கப்படுகின்றன். . உட்கரு உள்ள முறையில், மான்டில் திசுக்களுடன் உட்கருவும் சிப்பிகளின் உள்ளே வைக்கப்படுகின்றன்.
இனப்பெருக்க உடல் உறுப்புகளுக்குள் உள்ளிருப்பு செய்தல்:இம்முறையில் மேலே கூறப்பட்ட வகையில், திசுக்களுடன் உட்கருவும் சிப்பியின் இனப்பெருக்க உறுப்பில் வைக்கப்படுகின்றன.
|
|
உள்ளிருப்பு செய்யப்பட்ட சிப்பிகளை நைலான் பைகளில் பத்து நாட்கள் வைத்து, எதிர் உயிர் மருந்துகள் அளித்து, இயற்கையான உணவுகளைக் கொடுத்து கவனமாக பராமரிக்க வேண்டும். இவை தினமும் பார்க்கப்பட்டு, செத்த சிப்பிகள் மற்றும் உட்கருவை நிகராகரித்த சிப்பிகள் வெளியில் எடுக்கப்படுகின்றன.
|
|
நன்னீர் முத்து சிப்பி வளர்ப்பு
வளர்ப்புக்கு பின் முறைப்படுத்தப்பட்ட சிப்பிகள் குளத்தில் இருப்பு செய்யப்படுகின்றன. ஒரு நைலான் பைக்கு இரண்டு சிப்பிகள் என்ற அளவில் இருப்பு செய்யப்பட்டு, குளத்தில் ஒரு மீட்டர் ஆழத்தில் மூங்கில் அல்லது PVC குழாய் உதவியுடன் நிலை நிறுத்தப்படுகின்றன. சிப்பிகள் ஒரு ஹெக்டருக்கு 20,000- 30,000 வரை இருப்பு செய்யப்படுகின்றன. குளத்தில் இயற்கையான மற்றும் செயற்கையான உரங்கள் அவ்வப்போது இடப்பட்டு நீர்த்தாவரம், பாசிகள் உற்பத்தி கண்காணிக்கப்படுகிறது. முறையான பரிசோதனை, இறந்த சிப்பிகளை வெளியேற்றுதல், நைலான் பைகளை சுத்தம் செய்தல் இவையாவும் வளர்ப்பு காலமான 12-18 மாதங்களுக்கு செய்யப்படவேண்டும்.
|
|
வட்ட வடிவ வளர்ப்பு முத்துக்களை சேகரித்தல்
வளர்ப்பு காலம் முடிந்தபின் சிப்பிகள் அறுவடை செய்யப்படுகின்றன. தனித்தனி முத்துக்கள், மான்டில் திசுக்களிலிருந்து, இனப்பெருக்க உடல் உறுப்புகளிலிருந்து, மான்டில் காவிட்டியிலிருந்து வெளியே தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றன. பல்வேறு உள்ளிருப்பு செய்தல் முறையில் வளர்க்கப்பட்ட சிப்பிகளிலிருந்து அரை வட்ட மற்றும் கூட்டோடு கூடிய முத்துக்கள், வடிவமில்லாத முத்துக்கள், வட்டவடிவ முத்துக்கள் கிடைக்கும்.
|
|
|
No comments:
Post a Comment