Showing posts with label சிறு தொழில். Show all posts
Showing posts with label சிறு தொழில். Show all posts

Thursday, 22 March 2012

மண் புழு உரம் தயாரிப்பு


மண் புழு உரம் தயாரிப்பு

கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.

உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்

உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500 வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும். எனவே மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம். மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம்.

 எவ்வாறு உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்?

   1. மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின்  ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.
   2. 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
   3. வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
   4. 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
   5. அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எரு-குழி தயாரித்தல்

எரு-குழி தயாரிப்பதற்கு பல முறைகள் இருந்தாலும், நாம் நம் வசதிக்கேற்ற வடிவமைப்பில், வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம். செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் போன்றவற்றை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும். வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும். தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

நான்கு அறை தொட்டி / குழி முறை

நான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுடன், மற்றொரு அறைக்கு சென்று கழிவுகளை மட்கச் செய்கின்றன.

மண்புழு படுக்கை தயாரித்தல்

மண்புழு படுக்கை

அடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 15-20 செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.

வண்டல் மண்ணின் மீது மண்புழுக்களை விட்டவுடன், அவை மண்புழு படுக்கையை தன் சொந்த இருப்பிடம் போல் எண்ணுகின்றன. குழியை 2 மீ x 1 மீ x 0.75 செமீ  என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 - 20 செமீ என்ற அளவிலும் அமைய வேண்டும்.

·   கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

·   படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது. பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.

·  வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது என்பதால் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது. 30 நாட்கள்  கழித்து ஈரப்பதமுடைய தாவரம் அல்லது கால்நடைக் கழிவுகளை, சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்து அவற்றை சீர் செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும். இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு முறையே கலக்கிவிட வேண்டும்.

· சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க, முறையாக நீர் தெளிக்க வேண்டும். வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.

எப்பொழுது எரு தயாராகும்?

1.   அடர்-காப்பி நிறத்தில், பொடியாக, குருணையாக, எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய மண் அடுக்கமைப்புடன் இருக்கும் தருணமே தொழுஉரம் தயார் நிலையில் இருக்கும் தருணம் ஆகும்.

2.  60 - 90 நாட்களில் (குழி அல்லது தொட்டியின் அளவை பொருத்து) தொழு எரு தயாராகி விடும். புழுக்களின் கூடுகளைப் பார்த்து, குழியிலிருந்து தொழு எருவை அறுவடை செய்யலாம்.

3.  புழுக்களை தொழு எருவிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க, எரு எடுக்கும் 2-3  நாட்களுக்கு முன்பிருந்து நீரிடுவதை நிறுத்த வேண்டும். இதனால் 80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.

4.  மேலும் புழுக்களை சல்லடை அல்லது வலைகள் கொண்டும் பிரித்து எடுக்கலாம். புழுக்களும், தடிமனான பொருட்களும் வலையின் மீது நின்று விடும். இதனை குழியில் கொட்டி திரும்பவும் பயன்படுத்தலாம்.   மட்கிய உரம் மண்வாசனை போன்ற மணம் உடையது. முழுமையாக மக்காமல் இருந்தால் அதிலிருந்து கெட்ட வாடை வரும். இது நுண்ணுயிரின் செயல்பாடு முடிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்கும். புளித்த வாடை வந்தால், அது பூஞ்சாணம் மற்றும் அதிக வெப்பத்தின் அறிகுறி ஆகும். இதனால் தழைச்சத்து இழப்பு நேரிடும். இவ்வாறு இருப்பின், நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி, நாறு போன்ற பொருட்களை சேர்த்து  உலர்த்த வேண்டும். பின்பு மட்கிய எருவை சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.

5. சேகரித்த பொருட்களை சூரிய ஒளியில் குவித்து வைக்க வேண்டும். இதனால் புழுக்கள் குளிர்ச்சியான அடிப்பகுதிக்கு சென்றுவிடும்.

6.  இரு அறை அல்லது நான்கு அறை குழியில் நீரிடும் போது, முதல் அறைக்கு நீரிடுவதை நிறுத்தி விடவேண்டும். இதம் மூலம் புழுக்கள் தானாகவே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றன. இவ்வாறு செய்வதால் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக எருவை அறுவடை செய்ய முடிகிறது.

மண்புழு மட்கு உரத்தின் பயன்கள்
·  இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது.

·  பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.

·  தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.

·  பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும், சமுகத்தின் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும், மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.

·   ஒவ்வொரு கிராமத்திலும், வேலையில்லாத இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள்அமைத்து, மண்புழு உரம் தயார்செய்யலாம். மேலும் அவர்களே விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஒரு புதுமை படைக்கலாம். இதன் மூலம் இளைஞர்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அதோடுமட்டுமல்லாமல் நல்ல தரமான தொழுஉரத்தை அளித்து ஒரு நல்ல நீடித்த வேளாண்மை தொழில் செய்ய ஊக்குவிக்கிறது.

சிப்பிக் காளான் வளர்ப்பு



சிப்பிக் காளான் வளர்ப்பு

பருவம் மற்றும் இரகங்கள்
·          வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம்
·          காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.
·          வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
  காளான் குடில்
·          16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும். குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும்.
·          வித்து பரவும் அறை :25-300சி வெப்பநிலை, நல்ல காற்றோட்டம்,இருட்டு இல்லாமல் இருக்க வேண்டும்.
·          வளர்ப்பு அறை :23-250சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் தேவை.
(தெர்மாமீட்டர், ஈரப்பத மீட்டர் போன்றவை எலக்ட்ரிக் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்).
  காளான் வித்து
·          ஏற்ற தானியங்கள் :சோளம் / மக்காச்சோளம் / கோதுமை
·          வித்து தயார் செய்தல் : தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து, காற்றில் உலர்த்தி, 2% சுண்ணாம்புடன் கலந்து,காலியான குளுக்கோஸ் பாட்டில்களில் இடவேண்டும். பின்பு தண்ணீர் உறிஞ்சாப் பஞ்சினால் அடைத்து நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
·          வேளாண் பல்கலைக் கழகமோ, வேளாண் துறையோ உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15நாட்கள் தனியாக வைக்க வேண்டும். பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்தவேண்டும்.
காளான் படுக்கை அமைத்தல்
·          ஏற்ற பொருட்கள்: வைக்கோல்/ கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது
·          மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி, 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, 65% ஈரப்பதம் வரை காற்றில் உலர்த்திய (கைகளால் வைக்கோலைப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாமல் இருக்கும் வரை) வைக்கோலை பயன்படுத்த வேண்டும்.
  காளான் பைகள் / படுக்கைகள் தயார் செய்தல்
·          காளான் படுக்கைகள் தயார் செய்ய 60 X 30 செ.மீ பாலீத்தின் பைகளை உபயோகிக்க வேண்டும் (உபயோகபபடுத்தும் பைகள் இரு பக்கமும் திறந்திருக்க வேண்டும்).
·          பாலித்தீன் பையை ஒரு பக்கத்தில் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவிற்கு நடுவில் 2 ஓட்டை போடவும்.
·          வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட வட்ட வடிவப் பைக்குள் 5செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும்.
·          இதே போல் 25 செ.மீ வைக்கோல் தளத்தை அமைக்கவும். காளான் வித்து தளத்தையும் வைக்கோல் தளத்தையும் 4 அல்லது 5அடுக்குள் மாறி மாறி நிரப்ப வேண்டும். வாயிலை நன்றாகக் கட்டி,குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் வைக்க வேண்டும்.
·          விதைத்த 15-20 நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருக்கும். பின்னர் சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.
·          காளான் படுக்கை காயாமல் இருக்க தினமும் தண்ணீரைக் கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
அறுவடை
·          பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும். 3 நாட்களில் முழுவளர்ச்சி அடையும்.
·          தண்ணீர் தெளிக்கும் முன் காளான் அறுவடை செய்ய வேண்டும். அறுவடையை தினமுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்யலாம்.
·          முதல் அறுவடைக்குப் பின் காளான் படுக்கையை ஒரு தகடு கொண்டு லேசாகச் சுரண்டி விட்டு, பின்பு தண்ணீர் தெளித்துவந்தால் இரண்டாம், மூன்றாம் அறுவடை செய்யலாம்.

சிப்பிக் காளான் விதை உற்பத்தி (வீடியோ)

சிப்பிக் காளான் உற்பத்தியில் படுக்கை தயாரிக்கும் முறை (வீடியோ)
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களையோ அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையங்களையோ அணுகவும்.

பட்டு வளர்ப்பு


வளர்ப்பு முறை

பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும்பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்கஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் 5-10 முறை அறுவடை செய்யலாம். இதன் இடைவுளி  70-80நாட்கள் ஆகும்.
·       மல்பெரி சாகுபடி
மல்பெரி ரகம்
வி-மற்றும் எஸ்-36 ஆகிய இரு ரகங்களும் அதிக மகசூலைக் கொடுக்கக்கூடிய பட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இரகங்கள் ஆகும். பட்டுப்புழுக்கள் நன்கு வளரஇந்த இரு ரகங்களும் நல்ல சத்தான இலைகளை கொடுக்கின்றன. இவ்விரு ரகங்களைப்பற்றி விவரமாகப் பார்ப்போம்.
  எஸ்-36 (S-36) ரகம்
  • இலைகள் இதயவடிவில், தடிமனாகவும்இளம்பச்சையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
  • இலைகள் அதிகமான ஈரப்பதத்தையும், சத்துக்களையும் பெற்றிருக்கும்.
  • ஒரு ஏக்கரில், வருடத்திற்கு 20,000 - 24,000 கிலோ தரமான இலைகள்உற்பத்தியாகும்.
வி-1 (V-1) ரகம்
  • இந்த ரகம் 1997ல் மைசூரில் உள்ள பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது ஒரு பிரபலமான ரகம் ஆகும்.
  • இலைகள் நீள்வட்ட வடிவமாகவும்அகலமாகவும்அடர்பச்சையாகவும் சதைப்பற்றாகவும் இருக்கும்.
  • ஒரு ஏக்கருக்குஒரு வருடத்தில் 20,000 - 24,000 கிலோ இலை உற்பத்திகிடைக்கும். 
மல்பரி நடவு முறை
  • இணை வரிசை நடவு முறையைப் பின்பற்றினால்தற்பொழுது உள்ள முறையைவிட நல்ல பலன் கிடைக்கும். இம்முறையில் தற்பொழுது உள்ள 90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ என்ற இடைவெளியை காட்டிலும், (90 + 150) செ.மீ X 60செ.மீ இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது.
  • இம்முறையில் இடைவெளி அதிகமாக இருப்பதால், விசைக்கருவி கொண்டு இடைஉழவு செய்வதற்கும்அறுவடை செய்த இலைகளை எடுத்துச் செல்வதற்கும்,சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்கும் ஏற்றதாக இருக்கும்.
  • ஒரு ஏக்கரில் அதிகமான செடிகளை நடவு செய்யலாம்.
  • சுலபமாகவும், வேகமாகவும் இலைகளை எடுத்துச் செல்ல முடிவதால்ஈரப்பதம் குறைவதைத் தடுக்கமுடியும்
  • தண்டு அறுவடை செய்யப்படுவதால் 40% வேலையாட்கள் குறையும். 
இரசாயன உரம் மற்றும் தொழு உரமிடுதல்
  • 20 டன் தொழுஉரத்தைசமமாக இரண்டாகப் பிரித்து இருமுறை இடவேண்டும்.
  • ஒரு வருடத்திற்குவிரகத்திற்கு 350:140:140 கிலோ/எக்டர் என்ற அளவிலும் எஸ்36 இரகத்திற்கு 300:130:120 கிலோ/எக்டர் என்ற அளவிலும் தழைமணி மற்றும் சாம்பல் சத்தை சமமாகப் பிரித்து 5 முறை இடவேண்டும்.
நீர் மேலாண்மை
  • 80-120 மி.மீ அளவிற்கு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நீர் தட்டுப்பாடு ஏற்படும் போதுவிவசாயிகள் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பின்பற்றி 40 சதவீதம் நீரைச் சேமிக்க முடியும். 

பட்டுப்புழு வளர்ப்பு
1. பட்டுப்புழு கலப்பினங்கள் 
இரு சந்ததி கலப்பினங்களாகிய CSR2 X CSRமற்றும் இருவழிக்கரு ஒட்டாகிய கிருஷ்ணராஜாவும் பரிந்துரை செய்யப்படுகிறது.
2. இளம்புழு வளர்ப்பு
முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இரண்டாம் பருவம் வரை அவை இளம் புழுக்கள் பருவத்தைச் சேரும். புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள்,நோய்களை உண்டாக்கும் என்பதால்அவற்றை சிறந்தமுறையில் கவனிக்க வேண்டும். நல்ல தரமான புழுவளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால்தனி புழுவளர்ப்பு மனை அவசியமாகும். இளம்புழு வளர்ப்பிற்கும்வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 
3. வளர்ந்த புழு வளர்ப்பு
வளர்ந்த புழு வளர்ப்பு மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்குகிறது. பட்டுப்புழுக்கள் மிகவேகமாகவும்அதிகமாகவும் இலைகளை உண்ணும். பட்டுவளர்ப்பிற்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிகள் கீழ்க்கண்டவாறுஉள்ளன.
4.வளர்ப்பு மனை
மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பினை தனியே பேணி வளர்க்கும் போது அதற்கு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் மிகவும் அவசியம். 24-280சி வெப்பமும் 70-80%ஈரப்பதமும் தேவை. நல்ல குளிர்ச்சியான காற்றோட்டமான வளர்ப்பு மனை மிகவும் அவசியம். வளர்ப்பு மனையின் கூறை அமைக்கும்போதும்கட்டிடத்தை வடிவமைக்கும் போதும்குளிர்ச்சியுடன் அமைப்பதற்கு ஏற்ற வழிகளை மேற்கொள்ள வேண்டும். இலைகளை சேமிப்பதற்கும்இளம்புழு வளர்ப்பிற்கும்வளர்ந்த புழு வளர்ப்பிற்கும்,தோலுரிப்பிற்கும் வேண்டிய இடவசதிகளுடன் அமைக்க வேண்டும். சுத்தம்செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கு ஏறுறவாறு வளர்ப்பு மனையைக் கட்ட வேண்டும். 
பட்டுபுழு வளர்ப்பின் வகை மற்றும் அளவைப் பொறுத்து வளர்ப்பு மனையின் அளவு வேறுபடும். 400 சதுர அடி தரையளவைக் கொண்ட வளர்ப்பு மனையில் 100 நோயற்ற முட்டைத் தொகுதிகளை (டி.எப்.எல்.) வளர்க்க முடியும் (1 டி.எப்.எல். = 500 புழுக்கள்).
5.வளர்ப்புச் சாதனங்கள்
அதிகமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தையும், காற்றோட்டத்தையும் வளர்ந்த புழுக்களால் தாங்கிக்கொள்ளமுடியாது. வளர்ப்பு மனையின்வெப்பத்தைக் குறைக்கவும்புழுக்களின் கழிவிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மற்றும் சூடான காற்றை வெளியேற்றவும், நல்ல காற்றோட்ட கட்டமைப்புகள் அவசியம். 
  100 நோயற்ற முட்டைத் தொகுதிகளுக்கு (50000 புழுக்கள்) ஏற்ற குறைந்தபட்ச தேவைகள் 
எண்
சாதனம்
அளவு
1.
தண்டு-வளர்ப்புத் தட்டு (40' x 5’) 5 அடுக்கு
1
2.
கூடு கட்டும் தட்டி
35
3.
விசைத் தெளிப்பான்
1
4.
ஈரப்பதம் ஏற்றி
1


6. கிருமி நீக்கம் செய்தல்
வளர்ப்பு மனையையும்வளர்ப்புச் சாதனங்களையும் இருமுறை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அறுவடை முடிந்தவுடன் 5% பிளீச்சிங்பவுடரிலும்அடுத்து வளர்ப்பு தொடங்கும் 2 தினங்களுக்கு முன் 2.5%சேனிடெக் கொண்டும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  கிருமி நீக்கம் செய்யப் பின்பற்ற வேண்டிய அட்டவணை 
நாள்
வேலையைஅட்டவணைப்படுத்துதல்
வேலையின்விபரம்
புழு வளர்ப்பு முடிந்தவுடன்
1
நோய்வாய்ப்பட்ட புழுக்கள்உருகிய மற்றும் கழிவான கூடுகளைச் சேகரித்து எரித்தல்

2
கூடு கட்டு தட்டிகளில் உள்ள பட்டு கூட்டின்வெளியுறையை எரித்தும்புகை பரப்பியும் கிருமி நீக்கம் செய்யவேண்டும்

3
வளர்ப்பு மனை மற்றும் சாதனங்களை முதல் முறைகிருமி நீக்கம் செய்தல்
புழு வளர்ப்பு தொடங்கும்5நாட்களுக்குமுன்பு
4
வளர்ப்பு சாதனங்களை சுத்தம் செய்துகழுவுதல்

5
சூரிய ஒளியில் சாதனங்களைக் காயவைக்கவேண்டும்
புழு வளர்ப்பு தொடங்கும்4நாட்களுக்குமுன்பு
6
0.3% சுண்ணாம்பு கொண்டு கிருமி நீக்கம் செய்தல்
புழு வளர்ப்பு தொடங்கும்3நாட்களுக்குமுன்பு
7
இரண்டாம் முறையாக வளர்ப்பு மனையையும்,சாதனங்களையும் கிருமி நீக்கம் செய்தல்
புழு வளர்ப்பு தொடங்கும்2நாட்களுக்குமுன்பு
8
வளர்ப்பு மனையின் முன்பும்,வாயிலிலும் கிருமி நாசினி அடித்தல்

9
காற்றோட்டம் உருவாக்க ஜன்னல்களைத் திறந்து வைத்தல்
தொடங்கும்நாளுக்கு முன்பு
10
பட்டுபுழு வளர்ப்புக்குதயாராதல்

7. தண்டு வளர்ப்பு - ஒரு சிக்கன வழி
இம்முறையில்கடைசி மூன்று பருவங்களில் உள்ள புழுக்களுக்கு இலைகளைத் தண்டோடு அறுவடை செய்து உணவளித்துப் புழு வளர்க்கலாம். தண்டு வளர்ப்பில் 40% வேலையாட்கள் குறைவதற்கு இது சிக்கன வழியாகும். இத்திட்டத்தின் பிற நன்மைகள்,
  • புழுக்களை கையால் தொடுவது குறைவதால் நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.
  • புழுக்களும்இலைகளும் புழுக்களின் கழிவிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதால்இரண்டாம் நிலைத் தொற்று நோய் பரவலைத் தடுக்க முடிகிறது
  • நல்ல சுகாதாரமான சூழல் பராமரிக்கப்படுகிறது
  • இலைகளின் தரம்அறுவடையின் போதும்புழுப்படுக்கையிலும் நன்கு காக்கப்படுகிறது
  • புழுப்படுக்கையில் நல்ல காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது
  • புழுக்கள் நோய் தாக்கத்திலிருந்து தப்பித்து நன்கு வளர்வதால் தரமான கூடுகள் கிடைக்கின்றன
  • இம்முறையில் செலவுகள் குறைகிறது.
    8. உணவளித்தல்
  •       50-55 நாட்கள் வயதுடைய 3/4 அடி உயரத்தில் உள்ள தண்டுகளை காலையில் குளிர்ச்சியானசமயத்தில் பறித்து புழுக்களுக்கு உணவளிக்க வேண்டும். ஐந்தாம் பருவ புழுக்களுக்கு 60-65 நாட்கள் வயதுடைய தண்டுகளைக் கொடுக்க வேண்டும்.
  •       அறுவடை செய்த தண்டுகளை நிழற்பாங்கான, குளிர்வானஈரப்பதம் உள்ள இடத்தில்சுத்தமானகிருமி நீக்கம் செய்யப்பட்ட கோணிப்பைகளைக் கொண்டு போர்த்தி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
  •       இருவழிச்சந்ததிப் புழுக்களுக்கு, 4 ஆம் பருவத்தில் 460 கிலோவும் 5 ஆம் பருவத்தில் 2880கிலோத் தண்டும் தேவைப்படும்.
  •       தினமும் மூன்று முறை உணவளிக்க வேண்டும் (காலை 6 மணிமதியம் 2 மணிஇரவு 10 மணி)
  •       முற்றிய இலைகளையோ அல்லது மண்ணுடன் உள்ள இலைகளையோ கொடுக்கக்கூடாது
  •       புழுக்களைப் படுக்கையில் சீராக கிடக்கச் செய்யவேண்டும். 100 நோயற்ற முட்டைத் தொகுதிக்கு, 5 ஆம் பருவ கடைசியில் 600 சதுரஅடி இடம் தேவைப்படும். 
  •     ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போது, நோய் பரவுவதைத் தடுக்கஎடைகுறைவானபுழுக்களையும்நோய் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய புழுக்களைபற்றுக் குச்சிக்கொண்டு அகற்ற வேண்டும். பொறுக்கிய புழுக்களை 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீதம் நீர்த்த சுண்ணாம்பில் போட வேண்டும். 
  9.புழு படுக்கைகளை சுத்தம் செய்தல்
  •   ஏதேனும் நோய்வாய்ப்பட்ட புழுக்கள் தென்பட்டால் அவற்றை 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீதம் சுண்ணாம்பு தண்ணீரில் போட வேண்டும்.
  • படுக்கையில் உள்ள கழிவுகளைத் தரையில் போட்டுவிடக்கூடாது.
  • வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க கடைசி பருவ வளர்ப்பிற்கு 260சிமூன்றாம் பருவத்திற்கு250சிநான்காம் பருவத்திற்கு 240சிஐந்தாம் பருவத்திற்கு 240சி வெப்பம் தேவை. ஈரப்பதம் மூன்றாம்பருவத்திற்கு 80 சதவீதமும்நான்கு மற்றும் ஐந்தாம் பருவத்திற்கு 70 சதவீதமாகவும் இருக்கவேண்டும்.
  • வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் தேவைக்கேற்ப பராமரிக்க வேண்டும். குளிர் சாதன பெட்டிவெப்பக்கருவிகரிஅடுப்புஈரக்கோணிப்பைகொண்டு தேவைக்கேற்ப வெப்பத்தையோகுளிர்ச்சியையோ பெறமுடியும். மேலும் கூரைமீது நீர் தெளித்தும்,ஈரமணல் கொண்டும் பராமரிக்க முடியும். 
  • குறுக்காக காற்றோட்ட வசதி செய்து புழுக்களின் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். 
  11.தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை
  • தோலுரிப்பு நேரங்களில் வளர்ப்பு மனை காற்றோட்டமாகவும் ஈரப்பதமின்றி இருக்க வேண்டும்.
  • புழுக்கள் தோலுரிப்பிற்கு தயாரானவுடன்படுக்கை காய்ந்து இருக்க நீர்த்த சுண்ணாம்பு தூள் தூவ வேண்டும்.
  • திடீர் வெப்பம் மற்றும் ஈரப்பத மாற்றத்தையும்அதிவேகமான காற்றையும்அதிக சூரிய ஒளியையும் தவிர்க்க வேண்டும்.
  • 95 சதவீத புழுக்கள் தோலுரித்த பின்பு உணவளிக்க வேண்டும்.   
12.சுகாதாரம் மற்றும் பராமரிப்பு
  • வளர்ப்பு மனைக்குள் செல்வதற்கு முன்புகைகால்களை கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும். முதலில் சோப்பு போட்டு கழுவிய பின்பு கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும் (2.5சதவீதம் சேனிடெக் / செரிக்ளோர் உள்ள 0.5 சதவீதம் சுண்ணாம்பு கரைசல் அல்லது 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீத சுண்ணாம்பு கரைசல்)
  • நோய்வாய்ப்பட்ட புழுக்களை நீக்கிய பின்பும்படுக்கையைச் சுத்தம் செய்த பின்பும்உணவளிக்கச் செல்லும் முன்பும் கிருமி நாசினிக் கரைசல் கொண்டு கையைக் கழுவ வேண்டும்
  • நோய்தாக்கப்பட்ட புழுக்களைத் தினமும் அகற்றி சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட வேண்டும். பின்பு அதனை எரிக்கவோ அல்லது தூரமான இடத்தில் குழி தோண்டிப் புதைக்கவோ வேண்டும்
  • பட்டுப்புழு வளர்ப்பின் போதுவளர்ப்பு மனையைச் சுத்தமாகவும்,காற்றோட்டமாகவும் வைக்க வேண்டும் 
13.புழுப்படுக்கை கிருமிநாசினி பயன்படுத்துதல்
விஜேதாவிஜேதா கிரீன்அங்குஷ் ஆகியவற்றை புழுபடுக்கையில் மற்றும் புழுக்களின் மேல் தூவியும் நோய்களைத் தடுக்கலாம். இவற்றைக் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். ஒவ்வொரு தோலுரிப்பிற்குப் பின்பும், 5 ஆம் பருவத்தில் 4 ஆம் நாளும் புழுப்படுக்கையின் மீது ஒரு சதுர அடிக்கு 5 கிராம் என்ற அளவில் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி ஒரே சீராக எல்லா புழுக்களின்மீதும் படும்படி தூவவேண்டும். 
100 (dfl) நோயற்ற முட்டைத் தொகுப்பிற்கான அளவுஅட்டவணை
தூவும் நேரம்
கிருமி நாசினி
கிராம் (ஒரு சதுர அடிபடுக்கைப்பரப்புக்கு)
100அட்டைக்குதேவையான அளவு (கிராம்)
மூன்றாம் தோலுரிப்பிற்கு பின்பும்உணவளிப்பதற்கு முன்பும்
விஜேதா, விஜேதா கிரீன்,அங்குஷ்
5
900
ஆம் பருவத்தின் 3ஆம் நாள்
விஜேதா
3
600
நான்காம் தோலுரிப்பிற்கு பின்புஉணவளிப்பதற்கு முன்பு
விஜேதா,விஜேதா கிரீன்,அங்குஷ்
5
1200
ஐந்தாம் பருவத்தின் இரண்டாம் நாள்
விஜேதா
3
1300
ஐந்தாம் பருவத்தின் நான்காம் நாள்
விஜேதா. விஜேதா கிரீன்,அங்குஷ்
5
3000
ஐந்தாம் பருவத்தின் ஆறாம் நாள்
விஜேதா
3
100


  குறிப்பு
·       மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் பூசண நோயைத் தடுக்க விஜேதா கிருமி நாசினி பரிந்துரை செய்யப்படுகிறது.
·        தோலுரிப்பிற்கு செல்லாத புழுக்கள் மீதும் உண்ணக்கூடிய இலைகள் மீதும் தூவக்கூடாது.
·       பவுடர் தூவிய அரைமணி நேரம் கழித்து புழுக்களுக்கு உணவளிக்க வேண்டும்.
     14.முதிர்ந்த புழுக்களைத் தட்டியில் விடுதல்
நல்ல தரமான கூடுகளைப் பெறமுதிர்ந்த புழுக்களை உரிய நேரத்தில்,தரமான கூடு கட்டும் தட்டுகளில்விடவேண்டும்.
ஐந்தாம் பருவத்தின் 7 ஆம் நாளில் புழுக்கள் முற்றிஉணவு உண்பதை நிறுத்திகூடு கட்ட இடம் தேடும். கூடு கட்டு தட்டின் அளவை மீறி புழுக்களைத் தட்டியில் விடக்கூடாது.
புழுக்கள் கூடுகட்டிக் கொண்டிருக்கும் போது. 240சி வெப்பமும் 60-70சதவீதம் ஈரப்பதமும் நல்ல காற்றோட்டமும் தேவை.
100 நோயற்ற முட்டை தொகுப்பிற்கு 35 செட் கூடு கட்டும் தட்டிகள்தேவைப்படும். தொங்கும் தட்டிகளுக்கு தனி அறை அவசியமாகும்.
  15.பட்டுக்கூடு அறுவடை மற்றும் பிரித்தல்
கூடு கட்டிய ஆறாம் நாளில் அறுவடை செய்ய வேண்டும். நலிந்தகூடுகளை அகற்ற வேண்டும். பின்பு கூடுகளின் தரத்தைப் பொறுத்து பிரிக்க வேண்டும். குளிர் காலத்தில் 1 நாள் தாமதித்து அறுவடை செய்ய வேண்டும்.
  16.விற்பனை
அறுவடை செய்த கூடுகளை குளிர்ச்சியான நேரத்தில், 7 ஆம் நாளில் அனுப்பவேண்டும். 30-40 கிலோ தாங்கக்கூடிய நைலான் வலைப்பைகளில்காற்றோட்டமாக நிரப்பிஅறைவசதி உள்ள வாகனங்களில் எடுத்துச்செல்ல வேண்டும்.
  17.பட்டுப்புழு கூடு மகசூல்
100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக்கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.