Friday, 23 March 2012

பொன்மொழிகள்

 1.”உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்.”

2.”துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்.”

3.”போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்).”

4.”பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி.”

5.”ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இருமடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு.” (பெண்கள் வருந்தற்க)

6.”அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!”


7.”செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை.”


 8.”பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.”

9.”எழுதப்படும் சொல்லைவிட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது.”

10.”நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.”

11.”உன்னை நீ நம்பினால் ஊர் உன்னை நம்பும்.”

12.”பொறுமைசாலிக்குக் கோபம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் விலகி இருந்துகொள்வது நல்லது.”

13.”துன்பங்கள் நிலையானவை அல்ல; அவை ஆற்றில் ஓடும் தண்ணீர்போல் ஓடிவிடும்.”

14.”வல்லமையற்ற நீதி ஆற்றலற்றது; நீதியற்ற வல்லமை கொடுங்கோன்மை.”

15.”எந்த ஒரு முட்டாளும் பணம் ஈட்டமுடியும்; ஆனால் அறிவாளியால் மட்டுமே அதைக் காப்பாற்ற இயலும்.”

16.”ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்.”

 17.”சிந்தனையாளனுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம்; செயலற்றவர்கட்கோ துன்பியல் நாடகம்.”

18.”இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!”

19.”நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.”

20.”துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது;
      துயரமானது.”

21 “உன்னுடைய விருப்பங்கள் மகிழ்ச்சி தருவதில்லை; பிறர் உன்னை விரும்புவதே மகிழ்ச்சி தரும்.” SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள் சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்

22.“பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான தன்னலமேயாகும்.” SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள் சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்

23. “உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொருவனைவிட முந்தச் செய்கிறது.”
24. “நாளைய நன்மைக்காக இன்றைய தேவைகளைக் குறைத்துக் கொள்.”
25. “சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த
      செயல்களாகின்றன.”
26. “உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு
       எல்லாம் இருக்கும்.”
27. “மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.”
28. “உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்.”
 29. “நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்.” 30. “எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை;   
      அதன்படி நடத்தல் அருமையோ அருமை.”

No comments:

Post a Comment