சிந்தனைக்கு – 1
சிந்தனைக்கு – 1 *************** பரம்பரை பரம்பரையாக சமக்(ஸ்)கிருத மொழி
மூலமே சமய போதனைகள் இந்தியாவில் கற்பிக்கப்பட்டன. அம்மொழிமூலம் சமயக்
கல்வி கற்பிப்பதை புத்தர் புறக்கணித்து விட்டார். ஏனெனில், சமக்(ஸ்)கிருத
மொழி மூலம் சமயக் கல்வி கற்பித்தால் அம்மொழியில் உள்ள மூடநம்பிக்கைகள்
தம்மைப் பின்பற்றுவோருக்கு ஏற்படக்கூடும். ஆகவே அதற்கு வாய்ப்புத் தரலாகாது
எனக் கருதினார். – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 2
மூடக்கொள்கைகளை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ள வேண்டாம். புது உண்மைகளை
ஏற்க ஆயத்தமாக இருங்கள்; பிறர் வெட்டிய கிணறு என்பதற்காக, அதில் ஊறியுள்ள
தீஞ்சுவை நீரைப் பருகாமல் இருக்க வேண்டாம்; தன் முன்னோர்கள் தோண்டிய கிணறு
என்பதற்காக, உவர் நீரைப் பருகி, முட்டாள் ஆகவேண்டாம். – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 3
யாரோ ஒரு தீர்க்கதரிசி அல்லது அவதார புருடர் சொன்னார் என்பதற்காக நாம்
மதத்தைப் பின்பற்றுவதில்லை. கிருஷ்ணர் சொன்னார் என்பதற்காக நாம் வேதங்களை
நம்புவதில்லை.வேதங்களின் காரணமாகத்தான் கிருஷ்ணனை நாம் நம்புகிறோம். –
விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 4
நல்ல காரியமாயினும், அதற்கென நிதி திரட்டுவது சந்நியாசியின் தருமம் ஆகாது என மனு கூறியுள்ளார். இக்கருத்து முற்றும் சரி என நானும் உணரத் தொடங்கியுள்ளேன். அதற்காக அவரின் கருத்துகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டதாகக் கொள்ளுவது தவறு. – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 4
நல்ல காரியமாயினும், அதற்கென நிதி திரட்டுவது சந்நியாசியின் தருமம் ஆகாது என மனு கூறியுள்ளார். இக்கருத்து முற்றும் சரி என நானும் உணரத் தொடங்கியுள்ளேன். அதற்காக அவரின் கருத்துகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டதாகக் கொள்ளுவது தவறு. – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 5
5. தமது கடவுடளிடத்தும் சமயத்தினடத்தும் அதிகப் பிடிப்புக்(வெறி) கொண்ட
ஒருவன் பிற சமயத்தையோ கடவுளையோ காதால் கேட்டவுடனேயே வெறிகொண்டு
ஊளையிடுவதற்கு, பக்குவம் அடையாத தாழ்ந்த பக்தியே காரணம். – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 6
சிந்தனைக்கு – 6 *********************** எதையும் தவிர்க்காதே! எதையும்
தேடிச் செல்லாதே! இறைவனின் திருவுள்ளத்திற்கு இயைய நடந்துகொள்ளக் காத்திரு.
– விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 7
சிந்தனைக்கு – 7 ******************** கையில் எதுவும் இல்லாது ஏழைகளாய்
இருக்கும்போது, பிறர் கொடைக் குணத்துடன் இருப்பதை விரும்புகிறோம். பணமும்
அதிகாரமும் நமக்கு வந்துவிடுமாயின் அக்கணமே நாம் குறுகிவிடுகிறோம். ஏழை
பணக்காரன் ஆனதும், தன்னை உயர்ந்தவனாகக் கருதுகிறான்; சமய நிறுவனங்களிலும்
இந்நிலையே நீடிக்கிறது. – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 8
சிந்தனைக்கு – 8 *********************** தன்னை வெல்லக்
கற்றுக்கொண்டவனிடமே நாகரிகத்தின் முதிர்ச்சி இருப்பதாகச் சொல்லலாம். –
விவேகாநந்தர்(4-196)
சிந்தனக்கு – 9
சிந்தனைக்கு – 9 *********************** 9.”புத்தர் தியானத்தாலும்,
இயேசுநாதர் பக்தியாலும் அடைந்த உயரிய நிலையை ஒருவன்
கர்மயோகத்தின்(கருமங்களைச் செய்வதன்) மூலம் அடையலாம்.” – விவேகநந்தர்
சிந்தனைக்கு – 10
சிந்தனைக்கு – 10 ******************** “மண்ணைக்கொண்டு மண்ணை எப்படிக்
கழுவமுடியாதோ, அதேபோல வேற்றுமை உணர்வைக் கொண்டு ஒற்றுமையை உருவாக்க
முடியாது.” – விவேகாநந்தர் (6-295)
சிந்தனைக்கு – 11
சிந்தனைக்கு – 11 ****************** 11. சமயம் என்பது புலன்களையும்
உணர்வுகளையும் கடந்து அப்பால் இருப்பது. புலன் மூலம் யாரும் கடவுளைக் காண
முடியாது. கண்கள் மூலம் இதுவரை யாரும் கடவுளைக் கண்டது இல்லை. இனிக்
காணவும் இயலாது. உணர்வின் மூலமும் இறைவனை உணரமுடியாது. – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 12
சிந்தனைக்கு – 12 ***************** 12. “சாதாரணமான எனது வாழ்விலே
எனக்கு ஏற்பட்ட அனுபவமானது, நல்ல நோக்கம், நேர்மை, அளவற்ற அன்பு
இவற்றைக்கொண்டு ஒருவன் உலகத்தையே வெல்லலாம். இத்தகைய அறநெறி உள்ளம் படைத்த
ஒருவரைக் கோடிக்கணக்கான கொடியவர்களும் விலங்குகளும் ஒன்றுகூடி முயன்றாலும்
அவருக்குத் தீமை செய்ய முடியாது.” – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 13
சிந்தனைக்கு – 13 ************************ 13.”பணத்தையும்
அதிகாரத்தையும் சேர்த்துப் பங்கிட்டுக்கொள்ளும் கருத்துடன் இரு சாரார்
இணைதல் கூடாது. பலவீனருக்கு உதவவும், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும்
மனிதர்களுக்கு அறிவு கிட்டச் செய்யவும், இழந்த பண்டைப் பெருமையை நாடு
மீண்டும் பெறவும், அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.” – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 14
சிந்தனைக்கு – 14 *********************** 14.”ஏழை மக்களை அரைத்து,
அரைத்துக் கசக்கிப் பிழிந்த செல்வத்தை வைத்துக்கொண்டு, பகட்டாக உடை
அணிந்து, உலாவருபவர்கள் பதர்கள். பசியால் வாடும் காட்டுமிராண்டிகளைக்
காட்டிலும் மோசமாக வாழ்ந்துகொண்டு இருக்கும் கோடான கோடி ஏழை மக்களுக்கு
உதவாது வாழும் இவர்களைப் பதர் என்றுதான் கூறவேண்டும்.” – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 15
சிந்தனைக்கு – 15 ************************ 13.”முரட்டுத்தனமான
சீர்திருத்தப் போக்கு முடிவில் சீர்திருத்தத்தையே தடைப்படுத்திவிடும்.
யாரையும் தீயவன் என்று கூறலாகாது. ‘நீ நல்லவன்; இன்னும் நல்லவனாய் இரு’
என்று சொல்லுங்கள்.” – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 19
சிந்தனைக்கு – 19 ****************** தொடர்ந்து மனதில் புனிதமான
எண்ணங்களையே சிந்தியுங்கள். யாருக்காவது உங்களால் சிறு நன்மையாவது செய்ய
முடியுமா என்று எண்ணி உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 20
சிந்தனைக்கு – 20 ****************** சமநிலையில் இருந்து பிறழாதவர்கள்,
நெஞ்சில் சாந்தகுணம் கொண்டவர்கள், இதயத்தில் இரக்கமும் அமைதியும்
உடையவர்கள், பிறர் சொல்வதை ஆராய்ந்து ஏற்பவர்கள் ஆகியோர் தங்களுக்கு
தாங்களே நன்மையைத் தேடிக்கொள்கிறார்கள். – விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 21
சிந்தனைக்கு – 21 *********************** உங்களை ஏழை என்று
நினைக்காதீர்கள். பணம் மட்டுமே சக்தி என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.
பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியுமே சக்தி என்பதை உணருங்கள். –
விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 22
சிந்தனைக்கு – 22 ****************** உள்ளத்தையும் உடலையும் பற்றிய
கேடுகள் அனைத்தையும் எதிர்த்து நில்லுங்கள். அதில் வெற்றி பெறும் போது
நீங்கள் நினைத்த அத்தனையும் கைகூடும் வல்லமை பெற்றிடுவீர்கள். –
விவேகாநந்தர்
சிந்தனைக்கு – 23
சிந்தனைக்கு – 23 ****************** அன்பு ஒருபோதும் யாரையும்
நிர்பந்திக்கவோ, கட்டாய படுத்தவோ, நிந்திக்கவோ செய்யத் துணிவதில்லை. –
விவேகாநந்தர்
No comments:
Post a Comment