1. தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்
2. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே
3. அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. - ரிரேஸ்
4. சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா
5. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். - கர்னல் கீல்
6. தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. - லெனின்
7. வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்
8. அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது. - விவேகாநந்தர்
9. தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா
10. அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.
==================================================================
செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது
- சபாகிளிஸ்
கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
-முகமதுநபி
இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
-நபிகள் நாயகம்
வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன.
பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்
எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது
- ஆப்ரகாம் லிங்கன்
நல்லவனுக்கு நலம் நடக்கும்
என மட்டும் நம்பாது
வல்லவனாயும் வாழ்ந்துவிடு பாப்பா
-பாரதியார்
பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்
=============================================================
பொன்மொழிகள்
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ்
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் - எமர்சன்
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது - இந்தோனேசியா
கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது - தாமஸ் ஆல்வா எடிசன்
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் - செனாக்கா
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - ஜார்ஜ்
எலியட்ய் நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது- கார்ல் மார்க்ஸ்
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள் - ஜி. டி. நாயுடு
சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் நமக்கு வேண்டும் - நேரு
=====================================================================
குழந்தைகளே, மனிதர்கள் மனிதர்களாக வாழ பல சிறந்த பொன்மொழிகளை மகான்களும், அறிந்தவர்களும் கூறியுள்ளனர். அவற்றை படித்து அதன்படி வாழ்ந்து காட்டுவோம்.
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
உனக்கு ஒரே நண்பன் நீயே, ஒரே பகைவனும் நீயே, உன்னைத் தவிர பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை
இயற்கை தன் வழியிலேயே செல்லும், அடக்குதல் என்ன செய்யும்.
சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை.
தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் விருத்தியாகும்.
அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக சரியாகச் செய்வதே மேல்
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழக்கும் வரை அதன் மதிப்பு தெரிவதில்லை.
மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவனால் நற்செயல்களை செய்ய இயலாது.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
ஊசி முனையில் தவம் செய்தாலும் உன்னதுதான் கிட்டும்.
வியாதிக்கு மருந்து உண்டு, விதிக்கு மருந்த உண்டா
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
=============================================================================
1. மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது !- தாகூர்
2. உழைத்துப் போராடாமல் வெற்றியை அடைய முடியாது! - தாமஸ்
3. படிப்பு என்ற மெழுகுவர்த்திக்கு ஆர்வமே திரி! - யாரோ
4. சிந்திக்காமல் பேசத் தொடங்குவது, குறி பார்க்காமல் அம்பை விடுவது போன்றது! - ஆஸ்கர் ஒயில்ட்
5. மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான்! -விவேகானந்தர்
6. மன்னிக்கும் உள்ளத்தில் கடவுள் குடியிருக்கின்றார்! - குருநானக்
7. நறுமண மலர்களோ மெதுவாக மலரும்; களைகளோ வேகமாக வளரும்! - ஷேக்ஸ்பியர்
8. நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்! -ஷெல்லி
9. சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது! - கன்ஃபூசியஸ்
10. சிறிய கடன் கடனாளியை உருவாக்கும்; பெரிய கடன் எதிரியை உருவாக்கும்! - சைரஸ்
===============================================================================
பொன்மொழிகள்
தேகத்தையே
ஆத்மா என்று மயங்கும் புத்தியே த்வைதம்; அந்த நிலை இல்லாமல் போவதே
அத்வைதம்.
- ஸ்ரீரமணர்
தீமைகளைச்
செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற
சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
- ஸ்ரீரமணர்
ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.
- ஸ்ரீரமணர்
இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There is no any Short Routes to Reach the Feet of God.
- ஸ்ரீரமணர்
முன் பின்
தெரியாதவனை உபசரித்தால் கடவுளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
-பைபிள்
புலன்கள் உனக்குக் கட்டுப்பட்டு அடங்குமானால் உன் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள இறைவனைக் காண்பது உறுதி.
- ஆதி சங்கரர்
தினம்தோறும் குருவைத் தியானித்தலும், இறைவனை வழிபடுதலும் மனிதனை உயர்த்தும்.
- சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்
மனிதன் கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் தன்னில் முழுமையாக இறைவனைக் காண்கிறான்.
-ஸ்ரீஅன்னை
தன் குறைகளையும் தவறான செயல்களையும் ஒப்புக் கொண்டு அவற்றினிலிருந்து விலகுவதும், அவற்றை விலக்குவதுமே முக்திக்கு வழியாகும்.
-ஸ்ரீஅரவிந்தர்
கருணையும், மன்னிக்கும் தன்மையும் சாந்தியும் நிறைந்தவர்களின் இதயமே கடவுள்
- ராமதாசர்
ஏழைகள் மீது
இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்பவன், பகலெல்லாம் நோன்பு நோற்று இரவு
முழுவதும் இறைவனைத் தொழுபவனை விட
உயர்ந்தவன்
- நபிகள் நாயகம்
உண்மை, பற்றின்மை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.
-கபீர்
தன் உயிரைக் காக்கவேண்டி வந்தாலும் அதற்காக தர்மத்தைக் கைவிடக் கூடாது.
-மகாபாரதம்
எளியவர்களுக்கு ஒரே புகலான இறைவனை, சரணடைவதன் மூலம் மட்டுமே, நாம் அவன் அருளைப் பெற முடியும்.
- சுவாமி விவேகாநந்தர்
சொர்க்கம்
வேண்டும் என்பதற்காக இறைவனைத் தொழுபவன் ஒரு வியாபாரி; நரகத்தில் இருந்து
விடுபட இறைவனை வேண்டுபவன் ஒரு கோழை; இறைவனுக்காக மட்டுமே இறைவனை வழிபடுபவனே
உண்மையான பக்தன்.
- இமாம் கஸ்ஸாலி.
ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம்.
-பகவத்கீதை
அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருபெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்.
- வள்ளலார்
Intha thathuvangal anaithum nammudaya valvai neripadhuthum.
ReplyDeletePandiKanagaraj.