களைகள் உள்ள குளங்கள்
மீன் வளர்ப்பு மூலம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் முறையில், கழிவுநீர் உட்புகும் பாதை, களை வளர்ப்பு பகுதி, கழிவுநீரில் மீன் வளர்க்கப்படும் குளங்கள், முதன்மைக்குளம், நீர்வெளியேறும் பகுதி ஆகியன இருக்கும்.
- களைவளர்ப்பு பகுதியில் ஒருசில குளங்கள் வரிசையாக அமைக்கப்பட்டு அதில் பைரோடீலா, ஓல்பியா, லெம்னா ஆகிய களைகள் வளர்க்கப்படுகின்றன. கழிவுநீர் இந்தக் குளங்களுக்குள் மோட்டார் உதவியுடன் பம்ப் செய்யப்பட்டு, 2 நாட்கள் நிலைநிறுத்தபட்டு, பின்னர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு அனுப்பப்படுகிறது.
- சுத்திகரிப்பு பணிக்கான இந்த அமைப்பில் ஒரு MLD கழிவு நீரை சுத்தம் செய்ய, 18 களைவளர்ப்பு குளங்கள் (25மீ x 8மீ x 1மீ) மூன்று வரிசைகளில் கட்டப்படுகின்றன. இக்குளங்கள் வழியாக கழிவுநீர் அனுமதிக்கப்பட்டு சுத்திகரிப்பு பணி நடைபெறுகிறது.
- இம்முறையில் 2 மீன் வளர்ப்பு குளங்கள் (50மீ x 20மீ x 2மீ) இரண்டு மீன் விற்பனை குளங்கள் (40மீ x 20மீ x 2மீ) அமைக்கப்படுகிறது. இதில், முதன்மை சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீர் அனுமதிக்கப்படுகிறது.
- மேலும் புவனேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளில், 8 MLD கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யலாம். அதிக அளவு கழிவு நீரை சுத்தம் செய்வதற்கான சில மாற்றங்களும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
- கழிவு நீரில் உள்ள உயிரிகளின் பிராணவாயுத் தேவை (BOD) 100-150 மி.கிராம்/ ஒரு லிட்டருக்கு என்றளவில் இருத்தல் நல்லது. இதற்கு மேல் BOD அளவுகள் காணப்பட்டால், காற்று புகா சுத்திகரிப்பு தொகுதிகளை உபயோகிக்க வேண்டும்.
- களை வளர்ப்பு குளங்கள் பயன்படுத்தப்படுவது, உயர் உலோகங்களையும் சில ரசாயனங்களையும் கழிவுகளிலிருந்து நீக்க உதவியாய் இருக்கிறது. இல்லையென்றால் இவை மீன் உடலில் சேர்ந்து, மனித உடலுக்கும் இந்த உலோகங்கள்/ ரசாயனங்கள் சென்று உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் இம்முறை தூய்மையான சத்துக்கள் வழங்குவதோடு, பிராண வாயு கொடுப்பதோடு, சரியான சூழலுக்கும் வழிவகுக்கின்றது. இந்த சுத்திகரிப்பு பணியினால் கழிவுகளிலுள்ள உயிரிகளின் பிராணவாயுத் தேவை (BOD) 100 கிராம்/ ஒரு லிட்டர் என்றளவிலிருந்து, சுத்திகரிப்பு செய்தபின் 15-20 மி.கிராம்/ஒரு லிட்டர் என்றளவிற்கு 5 நாட்களில் குறைகிறது.
- மேலும் இந்த சுத்திகரிப்பு பணியினால் உயர் உற்பத்தி பெறலாம். 3-4 டன் கெண்டை - ஒரு ஹெக்டரில் உற்பத்தி செய்ய முடிகிறது. உயிரியல் முறை சுத்திகரிப்பு செய்வதில் உள்ள கடினம், குளிர்காலத்திலும், மித உண நிலை நிலவும் இடங்களிலும், சுத்திகரிப்பு பணி சற்று காலதாமதமாகும். ஒரு MLD கழிவுகளை சுத்தம் செய்ய அமைக்கப்படும் குளத்தின் அளவு ஒரு ஹெக்டர் ஆவதுடன், நடைமுறைச் செலவுகளை சந்திக்க உதவும் வருமானமும், இம்முறையின் சிறப்பு அம்சமாகும்.
|
No comments:
Post a Comment