மனித உடல் உறுப்புகள் (Parts of the human body)
மனித உடம்பில் இருக்கும் உறுப்புகளுக்கான ஆங்கிலச் சொற்கள் அநேகமாக பலரும் அறிந்தவைகளாகவே இருக்கும். அதில் சில உறுப்புகளின் பெயர்கள் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம், புதிதாக தெரிந்துக்கொள்ள விரும்புகின்றவர்களும் இருக்கலாம். அதனால் இன்றையப் பாடத்தில் மனித உடலின் உறுப்புகளின் பெயர்களை தமிழ் விளக்கத்துடன் கற்போம்.
சரியான உச்சரிப்பு பயிற்சியை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.
படங்களை பெரிதாக பார்க்க விரும்புகின்றவர்கள் படங்களின் மேல் சொடுக்கிப் பார்க்கலாம்.
No: | English | தமிழ் | |
1 | Head | தலை | |
2 | Eyes | கண்கள் | |
3 | Ears | காதுகள் | |
4 | Cheek | கன்னம் | |
5 | Nose | மூக்கு | |
6 | Mouth | வாய் | |
7 | Neck | கழுத்து | |
8 | Nipple | முலைக்காம்பு | |
8A | Shoulder | தோள்/புயம் | |
9 | Chest | மார்பு/நெஞ்சு | |
9A | Rib | விலா (எலும்பு) | |
10 | Breast | மார்பு (பெண்) | |
11 | Arm | கை | |
12 | Elbow | முழங்கை | |
13 | Abdomen | வயிறு | |
14 | Umblicus/Bellybutton | தொப்புள்/நாபி | |
15 | Groins | கவட்டி | |
16 | Wrist | மணிக்கட்டு | |
17 | Palm | உள்ளங்கை | |
18 | Fingers | விரல்கள் | |
19 | Vegina/Vulva | யோனி/புணர்புழை | |
20 | Penis | ஆண்குறி | |
20A | Testicle/scrotum | விரை | |
21 | Thigh | தொடை | |
22 | Knee | முழங்கால் | |
23 | Calf | கெண்டைக்கால் | |
24 | Leg | கால் | |
25 | Ankle | கணுக்கால் | |
26 | Foot | பாதம் | |
27 | Toes | கால் விரல்கள் |
No: | English | தமிழ் | |
28 | Wrist | மணிக்கட்டு | |
29 | Palm | உள்ளங்கை | |
30 | Thumb | கட்டைவிரல் | |
31 | Little Finger | சுண்டுவிரல் | |
32 | Ring Finger | மோதிரவிரல் | |
33 | Middle Finger | நடுவிரல் | |
34 | Index Finger | சுட்டுவிரல் | |
35 | Knee | முழங்கால் | |
36 | Calf | கெண்டைக்கால் | |
37 | Leg | கால் | |
38 | Lowerleg | கீழ்கால் | |
39 | Ankle | கணுக்கால் | |
40 | Toes | கால் விரல்கள் | |
41 | Toenails | கால்(விரல்) நகங்கள் | |
42 | Foot | பாதம் | |
43 | heel | குதிகால் | |
44 | Fist | கைமுட்டி (மூடிய கை) | |
45 | Nail | நகம் | |
46 | Knuckle | விரல் மூட்டு | |
47 | Muscle | தசை | |
48 | Skin | தோல் | |
49 | Hair | முடி | |
50 | Forehead | நெற்றி | |
51 | Eyebrow | கண் புருவம் | |
52 | Eyelash | கண் இரப்பை மயிர்/ கண் மடல் முடி | |
52A | Eyelid | கண் இரப்பை/கண் மடல்/கண் இமை | |
53 | Eyeball | கண்மணி | |
54 | Nose | மூக்கு/நாசி | |
55 | Nostril | மூக்குத்துவாரம்/நாசித்துவாரம் | |
56 | Face | முகம் | |
57 | Chin | முகவாய்க் கட்டை | |
58 | Adam's apple | குரல்வளை முடிச்சு (ஆண்) | |
59 | Mustache | மீசை | |
60 | Beard | தாடி | |
61 | Lip | உதடு | |
62 | Uvula | உள்நாக்கு | |
63 | Throat | தொண்டை | |
64 | Molars | கடைவாய் பல் | |
65 | Premolars | முன்கடைவாய் பல் | |
66 | Canine | கோரை/நொறுக்குப் பல் | |
67 | incisors | வெட்டுப் பல் | |
68 | Gum | பல் ஈறு | |
69 | Tongue | நாக்கு |
மேலே படங்களில் குறிக்கப்படாத சில உடல் உறுப்புகளின் பெயர்கள் கீழே இடப்பட்டுள்ளன.
No: | English | தமிழ் | |
70 | Belly | வயிறு (குழிவானப் பகுதி) | |
71 | Back | முதுகு | |
72 | Backbone | முதுகெலும்பு | |
73 | Rib bone | விலாவெலும்பு | |
74 | Buttock | குண்டி/ புட்டம் | |
75 | Anus/asshole | குதம் | |
76 | Skull | கபாலம்/மண்டையோடு | |
77 | Muscular | தசை | |
78 | Nerve | நரம்பு | |
79 | Endocrine | சுரப்பி | |
80 | Hip | இடுப்பு | |
81 | Lung | நுரையீரல் | |
82 | Heart | இதயம் | |
83 | Kidney | சிறுநீரகம் | |
84 | Brain | மூளை |
இப் பெயர்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment