Thursday 5 April 2012

பேஜ் பிரேக் அடிப்படைக் கூறுகள்--ஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட--ஆன்லைன் பேங்கிங் நன்மைகளும் குறைகளும்--ஒரிஜினல்… அதே இடத்தில் அப்படியே!--ஸ்குரோல் வீல் ட்ரிக்ஸ்--RAM அண்ட் ROM வித்தியாசம் தெரியுமா?--எக்ஸெல் தெரிந்ததம்… தெரியாததும்…


பேஜ் பிரேக் அடிப்படைக் கூறுகள்
வேர்ட் தொகுப்பில் மிக முக்கியமான ஒன்று, பக்க பிரிவு ஆகும். இதனை பேஜ் பிரேக் எனக் குறிப்பிடுகின்றனர். எளிதாகக் கூறுவதென்றால் பேஜ் பிரேக் என்பது ஒரு பக்கம் முடிந்து இன்னொரு பக்கம் தொடங்குவதைக் குறிக்கின்றது. இதனை நாமாக மேற்கொள்ள வேண்டியதில்லை. வேர்ட் தொகுப்பு ஒரு பக்கத்தில் டெக்ஸ்ட் அமைந்து முடியும் போது தானாக இந்த இடைவெளியை உருவாக்கி அடுத்த பக்கத்திற்கு டெக்ஸ்ட்டை கொண்டு போய் அமைக்கிறது. இவ்வாறு வேர்ட் அமைக்கும் பக்க பிரிவை சாப்ட் பேஜ் பிரேக் (soft page break)  என்று கூறலாம்.

இந்த பேஜ் பிரேக் சொற்களை அமைக்கும்போது மட்டுமல்ல; டேபிள் மற்றும் கிராபிக்ஸ் படங்களை அமைக்கும்போதும் அவை ஒரு பக்க அளவைத் தாண்டுகையில் தானாக அடுத்த பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அதே போல டாகுமெண்ட் ஒன்றை எடிட் செய்திடும்போதும் டெக்ஸ்ட் அல்லது படங்க ளை நாம் திருத்தி அமைக்கும் போது புதிதாக அமைக்கப்படும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்றபடி, படத்திற்கு அல்லது அட்டவணைக்கு ஏற்றபடி பக்க பிரிவுகள் உருவாக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. சில வேளைகளில் பக்க பிரிவுகளை நாமாக அமைக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து சில பக்கங்களில் எழுதி இருப்போம். அடுத்து புதிய பொருள் குறித்து புதிய தலைப்பில் எழுத எண்ணுவோம்.
அப்போது அந்த டெக்ஸ்ட் அடுத்த புதிய பக்கத்தில் அமைக்கப்பட்டாலே சரியானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும். இந்த இடத்தில் பேஜ் பிரேக் அமைந்தால் சரியாக இருக்கும். ஆனால் வேர்ட் தொகுப்பிற்கு இந்த எண்ணம் தெரியாது. நாமாகத்தான் இந்த பேஜ் பிரேக் அமைக்க வேண்டும். அப்போது என்ன செய்யலாம். தொடர்ந்து என்டர் அடித்து சிலர் அந்த பக்கம் முழுவதும் சென்று கர்சர் அடுத்த பக்கம் செல்லும் வரை செயல்பட்டு பின் அடுத்த பக்கத்தில் புதிய டெக்ஸ்ட் அமைப்பார்கள். ஆனால் இது தேவையற்ற செயல். இவ்வாறு நாமாக பேஜ் பிரேக் அமைக்க சில வழிகள் உள்ளன. நாமாக பேஜ் பிரேக் அமைப்பதனை ஹார்ட் பேஜ் பிரேக் (hard page break)   என அழைக்கின்றனர். இதற்கு  Insert  மெனு சென்று அங்கு Break  என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் விண்டோவில் Page Break  என்பதனைத் தேர்ந்தெடுத்து OK  கிளிக் செய்திட வேண்டும். அல்லது இன்னொரு எளிய வழி ஒன்று உள்ளது. தெரிந்த அனைவரும் அதனையே தான் பின்பற்றுவார்கள். அது கண்ட்ரோல் + என்டர் (Ctrl + Enter)  தட்டுவது. இந்த கீகளை ஒரு சேர அழுத்துகையில் தானாக ஒரு ஹார்ட் பேஜ் பிரேக் அமையும்.

No comments:

Post a Comment