Thursday 5 April 2012

கணினி கேள்வி பதில்--ரைட் கிளிக் எத்தனை முறை?--எத்தனை பேவரிட் தளங்கள்--கம்ப்யூட்டரில் மின்சார சிக்கனம்--எங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்--போல்டர் டூல் பார்


கணினி கேள்வி பதில்

பயர்வால் கட்டாயமா?
  1. கேள்வி: விண்டோஸ் எக் ஸ்பி உள்ள கம்ப்யூட்டரில் பல மானிட்டர்களை இணைக்கலாம் என்கிறார்களே உண்மை யா? எத்தனை மானிட்டர்களை இணைக்க முடியும்?
  • பதில்: 10 மானிட்டர்களை விண்டோஸ் எக்ஸ்பி கம்ப் யூட்டர் ஏற்கும். ஆனால் அவ்வளவு வீடியோ கார்டுகளை உங்கள் மதர்போர்டில் செருக இடம் உள்ளதா?
Dual port வீடியோக் கார்டுகள் கிடைக் கின்றன. ஒரு கார்டில் இரு மானிட்டர்களை இணைக்கலாம். இல்லையெனில் சாதாரண வீடியோகக் கார்டுகள் இரண்டை வாங்கி, கம்ப்யூட்டரில் செருகி, இரு மானிட்டர்களை இணைக்கலாம்.
  • கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில சொற்களை கீழாக அன்டர்லைன் செய்கையில் இரட்டைக் கோடுகளாக வர வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எனக்கு ஒரு கோடு மட்டுமே கிடைக்கிறது. என்ன செய்ய வேண்டும்?
  • பதில்: Underline லைத் தானே அழுத்தி கோட்டினை அமைக்கிறீர்கள். அப்போது ஷிப்ட் கீயை அழுத்தினால் கோடு இரண்டாக அமையும். இது மட்டுமல்ல. இன்னும் பல வகைகளில் அன்டர்லைன் கோடுகள் உங்களுக்குக் கிடைக்க Format=>Cells என கட்டளை கொடுத்து அதன் பின் கிடைக்கும் டேப்களில் Font டேபை அழுத்தவும். இங்குபல வகையான அடிக்கோடுகளை Underline என்னும் பகுதியில் காணலாம்.
  • கேள்வி: படங்கள் பைல் களை உருவாக்குகையில் GIF மற்றும் JPG , வகைகளை உருவாக்குகிறோம். இவற்றில் எது சிறந்த பார்மட்?
  • பதில்: இரண்டுமே சிறந்தவை தான். உங்களுடைய நோக்கத்தினைப் பொறுத்தது. படம் மிக மிகத் துல்லிதமாகவும் தெளிவாகவும் தெரிய வேண்டும் என எண்ணினால் JPG , பைல் வகையை உருவாக்கவும். இணைய தளங்களில் பயன்படுத்த வேண்டும் எனில் பக்கங்களின் அளவைக் கூடுமானவரை குறைத்திட எஐஊ பார்மட்டைப் பயன்படுத்தவும்.
  • கேள்வி: கம்ப்யூட்டரில் பயர்வால் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமா? இணையத்தில் இலவசமாக பயர்வால் அமைக்கும் வசதியை யார் தருகிறார்கள்?
  • பதில்: உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் கம்ப்யூட்டருக்குள் இன்டர்நெட் இணைப்பு வழியாக யாரும் நுழையாமல் பயர்வால் பாதுகாக்கும். ஏதேனும் ஒரு பயர்வாலை அமைத்துப் பதிந்து விட்டால் உங்கள் கம்ப்யூட்டர் எந்த தளத்தை அணுகலாம் என்பதனை நிரந்தரமாகவோ அந்த நேரத்திற்கு மட்டுமோ நீங்கள் அனுமதிக்கலாம். அதே போல வெளியிலிருந்து ஒருவர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய முயன்றால் இந்த எண்ணுள்ள தளத்திலிருந்து ஒருவர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய முயற்சி செய்கிறார் அல்லது முயற்சி தடுக்கப் பட்டது என்று செய்தி கிடைக்கும். இவ்வகையில் இலவசமாகக் கிடைப்பதில் சிறந்தது. கீழ்க்காணும் இரு தளங்களில் கிடைக்கும் இலவச பயர்வால்கள் பதிந்து இயக்க எளிதானவை.
http://www.sunbeltsoftware.com /Kerio.cfm
http://www.zonelabs.com/store/content/company/products/znalm/freeDownload.jsp முதலில் காட்டப்பட்டுள்ள பயர்வாலில் தரப்பட்டுள்ள சில சிறப்பு வசதிகள் 30 நாட்களுக்குப் பின் மறைந்துவிடும். ஆனாலும் அடிப்படை வசதிகளுடன் தொடர்ந்து இயங்கும். கட்டணம் செலுத்தினால் கூடுதல் வசதிகளுடனும் தொடர்ந்து கிடைக்கும்.
  • கேள்வி : Instant Messaging மூலம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கிறேன். எனக்குச் சற்றும் தொடர்பில்லாதவர்களிடமிருந்து இப்பொழுது சில நாட்களாகத் தேவையற்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை எப்படித் தடுத்து நிறுத்துவது?
  • பதில்: இமெயில்கள் வழியாக வருகிற குப்பைகளை SPAM என்பார்கள். நீங்கள் குறிப்பிட்டது போல Instant Messaging மூலம் வருகிற குப்பை செய்திகளை குகஐM என்று குறிப்பிடுவார்கள். நீங்கள் Instant Message செய்வதற்கு என்ன சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று குறிப்பிடவில்லை. உங்களிடம் யாஹூ மெசஞ்சர் இருந்தால் Login என்பதில் Privacy Settings என்பதனைத் தேர்வு செய்து Ignore anyone who is not on my Friends List என்பதனைக் கிளிக் செய்திடுங்கள். எம்.எஸ்.என். மெசஞ்சர் வைத்திருந்தால் Tools என்பதைக் கிளிக் செய்து, Only people on my Allow List can see my status and send me messages என்பதைத் தேர்வு செய்து ஓகே செய்திடுங்கள்.
  • கேள்வி: என்னிடம் இருக்கும் பிடிஎப் டாகுமெண் ட்டின் டெக்ஸ்ட்டின் ஏதேனும் ஒரு பகுதியை செலக்ட் செய்கையில் கர்சர் சிறிய கை போன்ற உருவாக மாறுகிறது. பின் மவுஸின் இடது பட்டனை அழுத்துகையில் அது மறைகிறது. ஆனால் டெக்ஸ்ட்டைக் காப்பி செய்திட முடியவில்லை. பிடிஎப் டெக்ஸ்ட்டில் எப்படி செலக்ட் செய்து காப்பி செய்வது?
  • பதில்: பிடிஎப் டாகுமெண்ட் என்பது ஒரு பக்கம் அது உருவாக்கப்பட்ட போது எப்படி இருக்க வேண்டும் என விரும்பினோமோ அதே போல அதனைப் பெறுபவருக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்பில் நமக்குக் கிடைக்கும் கை போன்ற கர்சர் டெக்ஸ்ட்டை மேலும் கீழுமாக நகர்த்த உதவுகிறது. அப்படி இருக்கையில் நாம் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து காப்பி செய்திட முடியுமா என்பது உங்கள் கேள்வி. முடியும். உங்கள் கர்சரை மேலாக இருக்கும் மெனு பாரில் குஞுடூஞுஞிt கூஞுதுt என்னும் இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். இப்போது கர்சர் ஒரு சிறிய நெட்டுக் கோட்டுடனும் ஒரு “T ” எழுத்துடனும் இருக்கும். “Select Text” என்ற சொற்களும் காணப்படலாம். இப்போது இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்க விரும்பும் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் அடோப் அக்ரோபட் ரீடர் இந்த வசதியைத் தரவில்லை என்றால் நீங்கள் புதிய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இது http://www.adobe.com/products/acrobat/readstep2. என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது.
  • கேள்வி: ஆங்கிலச் சொற்கள் முழுமையும் பெரிய எழுத்துக்களாகவும் சிறிய எழுத்துக்களாகவும் மாற்றுவது குறித்து தெரியும். முதல் எழுத்தை மட்டும் பெரிய எழுத்தாக மாற்ற எந்த கீயை அழுத்த வேண்டும்?
  • பதில்: மாற்ற வேண்டிய சொல்லைத் தேர்ந்தெடுத்த பின் பார்மட் (FORMAT) கிளிக் செய்து பின் அதில் CHANGE CASE என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் அதில் உங்களுக்குத் தேவையான வசதியைப் பெறலாம். அதாவது முழுவதும் சிறிய எழுத்துக்களாகவோ அல்லது பெரிய எழுத்துக்களாகவோ மாற்றலாம். நீங்கள் விரும்பியபடி முதல் எழுத்து மட்டும் மாற்றிட டைட்டில் கேஸ் Title Case என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். ஆபீஸ் 2003 வைத்திருக்கிறீர்களா? அப்படியானால் SHIFT F3 என்ற கீகளைக் கிளிக் செய்து வரிசையாக இந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். தலைப் பெழுத்தை மாற்றலாம். ஆனால் தலை எழுத்தை எது மாற்றும்? என்று கேட்காதீர்கள்.
  • கேள்வி: வேர்டில் பைல் ஒன்றை எடிட் செய்துவிட்டு புதிய பெயரில் சேவ் செய்திட எந்த கட்டளையைக் கொடுக்க வேண்டும். எக்ஸ்புளோரர் சென்று ரீ நேம் கட்டளை கொடுத்தால் செயல்படவில்லை. என்ன வழி?
  • பதில்: ஒரு பைல் திறந்திருக்கும் போது அதன் பெயரை மாற்ற முடியாது. திறந்து எடிட் செய்து பெயர் மாற்ற வேண்டும் என்றால் சேவ் அஸ் கட்டளை கொடுத்து புதிய பெயரில் இன்னொரு பைலாகத்தான் சேவ் செய்திட வேண்டும். இதே பைலுக்கு புதிய பெயர் வழங்க வேண்டும் என்றால் இதனை மூடிவிட்டு பின் அதன் போல்டரில் இருந்து செலக்ட் செய்து அதன் மேல் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Rename என்பதைத் தேர்ந்தெடுத்து புதிய பெயர் கொடுக்கலாம். அல்லது அதன் பெயரைத் தேர்ந்தெடுத்து F2 கீயை அழுத்தி புதிய பெயர் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment