Tuesday 3 April 2012

இந்த வார டவுண்லோட்-ஹாட் கீஸ் (Hotkeyz)--சமையல் குறிப்பு அப்லோட் செய்திட--கூகுள் வழிதான் இன்டர்நெட் இயங்குகிறது--Save மற்றும் Save As என்ன வேறுபாடு?--விண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு?--மவுஸ் பிடிக்க சில யோசனைகள்--எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம்--எக்ஸெல்: டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் -3--வேர்ட் டிப்ஸ், டிபஸ், டிப்ஸ்-3


இந்த வார டவுண்லோட்-ஹாட் கீஸ் (Hotkeyz)


பலரும் மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டின் மூலமே தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள எண்ணுவார்கள். இவர்களுக்கு அதிகம் உதவிடுவது ஷார்ட் கட் கீ தொகுப்புகளே. பொதுவாக இவை விண்டோஸ் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம்களிலேயே தரப்படுகின்றன.
ஹாட் கீஸ் (Hotkeyz) என்னும் புரோகிராம், இந்த அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க, கண்ட்ரோல் பேனல் என்ட்ரிகளைக் கொண்டு வர, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட போன்ற வேலைகளுக்கான ஷார்ட் கட் கீகளை நாமே செட் செய்திட வழி தருகிறது. ஸ்கைனெர்ஜி (Skynergy) என்ற நிறுவனம் இந்த இலவச புரோகிராமினைத் தருகிறது. http://www.skynergy .com/hotkeyz.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இதனைப் பெறலாம். இதன் மூலம் திறந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற விண்டோக்களை மினிமைஸ் செய்திட, ரீபூட் அல்லது ஷட் டவுண் செய்திட, ஒலியை முடக்க, மீண்டும் பெற, வெப் பிரவுசர்களை ஒரு குறிப்பிட்ட இணைய தளத்துடன் திறக்க என இது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஷார்ட் கட் கீகளை, இந்த புரோகிராம் மூலம் அமைக்கலாம்.
ஒரு ஹாட் கீ அமைத்து அதன் மூலம் மீடியா புரோகிராம்களை இயக்கலாம், ரீசைக்கிள் பின்னிலுள்ள நீக்கப்பட்ட புரோகிராம்களை அழித்துவிடலாம். கம்ப்யூட்டரை ஹைபர்னேஷன் மூடுக்குக் கொண்டுவரலாம். இது போல பல சிஸ்டம் வேலைகளை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கீகளில் செட் செய்துவிடலாம்.

No comments:

Post a Comment