Tuesday 3 April 2012

இலவச புரோகிராம்கள் நான்கு--பிரைவேட் பிரவுசிங்:--பெயர் சூட்டலாமா!-உங்கள் கம்ப்யூட்டர்--கொஞ்சம் கூகுள் தேடல்--வந்துவிட்டது கிளவ்ட் கம்ப்யூட்டிங்--இந்த வார இணைய தளம் --இலவச ஆன்லைன் ஸ்பேஸ்


இலவச புரோகிராம்கள் நான்கு


இணையத்தில் உலா வருகையில் உங்களுக்கான இலவச புரோகிராம்கள் நான்கு என்ற தலைப்பில் சில புரோகிராம் களின் பட்டியல் கிடைத்தது. இவை அனைவருக்கும் உதவும் புரோகிராம்களாக இருந்தது மட்டுமின்றி, பலரும் எதிர்பார்க்கும் அப்ளிகேஷன்களாகவும் இருந்தன. கீழே அவை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
1. பயர்பாக்ஸை வேகப்படுத்த:
யார் தான் தங்கள் பிரவுசர் வேகமாக இயங்கி நாம் பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும் , சிறப்பாகவும் டவுண்லோட் செய்திட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம். இதனை SpeedyFox என்ற புரோகிராம் நமக்குத் தருகிறது. இது முதலில் பயர்பாக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக் கொண்டு வருகிறது. பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் குக்கிகளை வழக்கத்தைக் காட்டிலும் விரைவாகச் செயல்படுத்துகிறது. இதனை http://www.crystalidea.com/speedyfox என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
2. சிஸ்டத்திற்குள் சிஸ்டம்:
ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு சிஸ்டங்கள் இருந்தால், பூட் செய்கையில் எந்த சிஸ்டத்தில் நுழைய என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, நம் ஆப்ஷனைக் கேட்கும் ஒரு விண்டோ தரப்படும். ஐ ரிபூட் (iReboot) என்ற புரோகிராம் விண்டோஸ் தொடங்கிய பின்னரும் அதனுள்ளாக இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதற்கான ஆப்ஷனைத் தருகிறது. அப்படி ஆப்ஷன் தரும் சிஸ்டம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் உள்ளது. விண்டோஸ் இயங்கிய பின் இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. அதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேர்வு செய்திட ஆப்ஷன்ஸ் தருகிறது. இதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், தேர்ந் தெடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் நுழைந்து கொள்கிறது. இதைப் போன்ற ஒரு வசதி, விண்டோஸ் 7 உட்பட, எந்த விண்டோஸ் சிஸ்டத்திலும் தரப்படவில்லை. இதனைப் பெற http://neosmart .net/dl.php?id=11 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. விண்டோஸ் நேரம்:
கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? விண்டோஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்ற புரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்குத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். “Work”, “School”, “Fun” எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டும். இந்த புரோகிராமினை http://code.google .com/p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.
4: ஈஸி பைல் லாக்கர் (Easy File Locker):
எத்தனையோ வாசகர்கள் அவர்களின் கடிதங்களில் பைல்களை எப்படி மற்றவர்கள் அணுகாமல் பாதுகாப்பது என்று கேள்விகளை அனுப்பி வருகின்றனர். நாமும் அவர்களுக்குப் பலமுறை பல வழிகளைச் சொல்லி வந்திருக்கிறோம். இந்த புரோகிராம் சரியாகத் தன் பெயருக்கேற்றபடியான வேலைகளைச் செய்கிறது. இந்த புரோகிராம் பைல்களை லாக் செய்வது மட்டுமின்றி, மற்றவர் கண்களிலிருந்து மறைக்கவும் செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எந்த பாஸ்வேர்டும் இன்றி இது செயல்படுத்துகிறது. அந்தக் கால விண்டோஸ் 95 தொகுப்பில் செயல்படுவது போல இது செயல்படுகிறது. கருப்பு பின்னணியில் வெள்ளை பட்டன்களுடனும், பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் வழியில் கொண்டு வரும் வசதிகளுடனும் செயல்படுகிறது. இதனைப் பெற http://www.xoslab.com/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

No comments:

Post a Comment