
மூச்சின் கவனம்: குனியும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:காலிலுள்ள மூட்டு தசைகளை தளர்த்துகிறது. வயிற்றின் கீழ்ப்புற பகுத அதிக இரத்தஓட்டம் பெறுகின்றது. சிறுநீரகம் வலிமை அடையும். முதுகெலும்பு நெகிழ்வுத் தன்மை பெறும். தலைப்பகுதியில் இரத்தஓட்டம் மிகும். நினைவாற்றல் கூடும். பிட்யுட்டரி, பீனியல், தைராய்டு பாராதைராய்டு போன்ற சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாளை அதிகரிக்கும். தாது பலவீனத்தை சீராக்கும்.
குணமாகும் நோய்கள் : அதிக இரத்த அழுத்தம், இடுப்பு, வாயுப்பிடிப்பு, இரைப்பை குடல் சம்பந்தமான கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும். வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : குண்டலினி சக்தி மேல் எழும்பும். உடல் குளிர்ந்து மனம் அமைதியடைகிறது.
எச்சரிக்கை : தீவிர முழங்கால் வலி உள்ளவர்கள் கவனமாக செய்யவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்பில் வாயுப்பிடிப்பு, கழுத்துவலி உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.
No comments:
Post a Comment