Saturday 21 April 2012

நாய் பண்ணை



நாய் பண்ணை அமைக்க முடிவு எடுத்துவிட்டால், சில அடிப்படையான விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பல வெளிநாட்டு நாய்களை விட, நமது நாட்டு நாய்கள் நீண்ட காலம் உயிர் வாழக்கூடியவை.

சிறிய அளவில் பண்ணை அமைக்க வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாய் தேவைப்படும். நாட்டு நாய்களை பொறுத்தளவு ராஜபாளையம் ரக நாய்களை வளர்த்தால் நல்ல லாபம் பெறலாம். சந்தையில் கிடைக்கும் பெரிய நாய்கள் பெரும்பாலும் குட்டி போடாது. வியாபாரிகள் மலட்டுத் தன்மை கொண்ட நாய்களை தலையில் கட்டி விடுவார்கள். எனவே குட்டி நாய்களை வாங்கி பண்ணையை ஆரம்பிப்பதே சிறந்தது.

பெட்டை நாய்க் குட்டிகள் எட்டு இருந்தால், இரண்டு ஆண் குட்டிகள் போதும். பெட்டை நாய் எட்டு மாதத்தில் சினைக்கு தயாராகிவிடும். அதே நேரம், ஆண் நாய்களை இரண்டு ஆண்டுகள் கழித்து பெட்டையுடன் சேர்ப்பதுதான் நல்லது. ஒரு நாய் சராசரியாக ஆறு குட்டிகள் வரை போடும். எட்டு மாதத்தில் 48 குட்டிகள் கிடைக்கும். பெட்டைக் குட்டி ஒன்று மூன்றாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆண் என்றால், நான்காயிரம் ரூபாய். கூட்டி, கழித்து பார்க்கும்போது பூட்ட ஒரு லட்ச ரூபாய் முதலீட்டை ஒரு வருடத்தில் எடுத்து விடலாம்.

ஆரம்பத்தில், ஆறு மாதங்களுக்கு தினமும் உணவுக்காக 150 ரூபாய் (10 நாய்க் குட்டிகளுக்கு) வரை செலவாகும். இந்த அளவுக்கு செலவு செய்தால்தான் நாய்கள் பார்க்க நன்றாகவும், அதிகமாக குட்டிகளையும் ஈனும். முதலில் சிறிய அளவில் பண்ணை அமைத்து பிறகு படிப்படியாக விரிவு படுத்துவதே சிறந்ததாகும். விற்பனையை பொறுத்த வரை உங்களிடம் நாய்கள் இருப்பதை பல பேருக்கு உங்கள் நண்பர்கள்,உறவினர்கள் மூலமாக தெரியப்படுத்தவும். ராஜபாளையம் பகுதியில் நாய் வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. சொந்தமாக பண்ணை அமைப்பதற்கு முன்பாக அவற்றையெல்லாம் பல முறை பார்த்து நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த பகுதியிலும் உங்களுடைய அனுபவங்களை பதிவு செய்யுங்கள்.


வரவு/செலவு கணக்கு விவரங்கள்
0.5 ஏக்கரில் 12.0 மாதத்துக்கான வரவு/செலவு விவரங்கள்
இடத்தின் அளவு குத்து மதிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரவு/செலவு கணக்கு ஒரு வருடத்திற்கானது. இரண்டாம் ஆண்டிலிருந்து நாய்குட்டிகள் வாங்கிய செலவை, வரவில் வைத்துக் கொள்ளலாம்.
விவரம் செலவு (ரூபாயில்) வரவு (ரூபாயில்)
பெட்டை நாய்குட்டிகள் 8 X 3000 24000.0 0.0
ஆண் நாய்குட்டிகள் 2 X 4000 8000.0 0.0
இடம்,தீவனம் மற்றும் இதர செலவுகள் 62000.0 0.0
நாய்க்குட்டிகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் ( 48 குட்டிகள் X 3000 ) 0.0 144000.0
வருமானம் (வரவு - செலவு) 50000.0

No comments:

Post a Comment