Thursday 22 March 2012

ஆமை புகுந்த வீடு…


ஆமை புகுந்த வீடு…

Image
ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்)
வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால்
ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும்.
திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம்.
திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம்.
‘எனவே ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்பது தவறான
கருத்தாகும்.
உங்களுக்கு காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம்,
மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து
சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும்
ஒரு வகைப் பூஞ்சை தான் இது.
இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள்.
எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய
மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும்.
இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன்
இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச்
சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய்,
சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும்.
கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு
வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி
வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு
மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த
இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும்.
இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:
‘ஆம்பி பூத்த வீடு உருப்படாது’
(ஆம்பி = காளான்)
இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான ‘ஆம்பி பூத்த’ என்பன கொச்சைச்
சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ்
வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு
உள்ளது.
ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த.


ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்கிறார்களே? அர்த்தம் என்ன
ஆமை என்பது ஒரு அவதாரம். தசாவதாரத்தில் ஒரு அவதாரம் ஆமை. ரமணர் போன்ற பெரிய சித்தர்களெல்லாம் ஆமை போல அடங்கியிரு என்பார்கள். ஐம்புலன்களும் ஆமை போல அடக்கமாக இருக்க வேண்டும். சலனமோ, சத்தமோ, ஆபத்தோ என்றால் தன்னுடைய உடல் உறுப்புகளை அந்த ஓட்டிற்குள் ஒடுக்கிக்கொள்ளும். 

அப்படிப்பட்ட ஆமை ஒரு இடத்திற்கு வருகிறதென்றால் அவர்கள் கொஞ்சம் ஒடுங்கப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம். தெய்வத்தினுடைய வருகை ஒடுங்கும். ஆயுள் ஒடுங்கும். இதுபோன்ற சில விஷயங்களும் ஒடுங்கும். அதற்காகத்தான் அதுபோலக் குறிப்பிடப்படுகிறது. 
அதனால்தான் ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள். அமீனா என்பவர் நீதிமன்ற உத்தரவுப் படி வீட்டை காலி செய்பவர். இந்த இரண்டு பேருடைய வரவும் வீட்டிற்கு இருக்கக்கூடாது என்பார்கள். இதெல்லாம் ஒரு அறிகுறி என்று சொல்லலாம். ஆமை புகுந்தால் செல்வங்கள் குறையும், சொத்துக்கள் விற்கும்படி ஆகும். கஷ்டங்களைக் கொடுக்கும். செளகரியத்தைக் கெடுக்கும்

No comments:

Post a Comment