கூண்டு முறை வளர்ப்பில் அதிக எண்ணிக்கையிலான முயல்களை வளர்க்க இயலும். இம்முறையில் முயல்களை பராமரிப்பதும் எளிது. இட அளவு
- வளர்ந்த ஆண்முயல் - 4 சதுர அடி
- தாய் முயல் - 5 சதுர அடி
- இளம் முயல் - 1.5 சதுர அடி
பெரிய முயல் கூண்டு 1.5 அடி நீளம், 1.5 அடி அகலம் மற்றும் 1.5 அடி உயரம் உள்ள கூண்டுகள் பெரிய மற்றும் வளரும் முயல்களுக்கு போதுமானது. இந்த அளவுடைய கூண்டுகளில் ஒரு பெரிய முயலினையோ அல்லது இரண்டு வளரும் முயல்களையோ பராமரிக்கலாம் வளரும் முயல் கூண்டு
- நீளம் - 3 அடி
- அகலம் - 1.5 அடி
- உயரம் - 1.5 அடி
இந்த அளவுள்ள கூண்டுகளில் 4 முதல் 5 முயல்களை மூன்று மாத வயது வரை ஒன்றாக வளர்க்கலாம் குட்டி ஈனும் முயல்களுக்கான கூண்டு தாய் முயல்களுக்கான கூண்டுகள் வளரும் முயல்களுக்கான கூண்டின் அளவே இருக்க வேண்டும். இக்கூண்டுன் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டுப்பகுதி 1.5 x 1.5 அங்குலம் என்ற அளவிலான (பற்றவைக்கப்பட்ட கம்பியால் ஆனது) வெல்டு மெஸ்ஸால் ஆனதாக இருக்கவேண்டும். இது இளங்குட்டிகள் கூண்டினை விட்டு வெளியே வராமல் தடுக்க உதவும். குட்டி ஈனும் பெட்டி முயல்கள் குட்டி போடும் போது அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலை அமைய குட்டி ஈனும் பெட்டி அவசியம். இப்பெட்டிகளை மரம் அல்லது துருப்பிடிக்காத இரும்புத்தகடு கொண்டு செய்யலாம். குட்டி ஈனும் பெட்டியினை குட்டி போடும் கூண்டினுள் வைக்கக்கூடிய அளவிற்கு செய்யவேண்டும். குட்டி ஈனும் பெட்டியின் அளவு
- நீளம் - 22 அங்குலம்
- அகலம் - 12 அங்குலம்
- உயரம் - 12 அங்குலம்
குட்டி ஈனும் பெட்டி
குட்டி ஈனும் பெட்டிகள் மேல் பகுதியில் திறக்கக்கூடியவாறு செய்யப்பட வேண்டும். அடிப்பகுதி முழுவதும் 1.5 x 1.5 அங்குலம் என்ற அளவிலான (பற்றவைக்கப்பட்ட கம்பியாலானதாக) வெல்டு மெஸ்ஸாலானதாக இருக்கவேண்டும். பெட்டியினுடைய நீளவாட்டுப்பகுதியில் பெட்டியினுடைய அடிப்பகுதியிலிருந்து 10 செ.மீ உயரத்தில் 15 செ.மீ விட்டம் உள்ள வட்டவடிவ ஓட்டை அமைக்க வேண்டும். இது குட்டி போட்ட தாய் முயல் உள்ளே போய் வரப்போதுமானது. மேலும் இந்த ஓட்டை பெட்டியினுடைய அடிப்பகுதியிலிருந்து 10 செ.மீ உயரத்தில் இருப்பதால் இளங்குட்டிகள் வெளியே வராமல் தடுக்கிறது. புறக்கடை முயல் வளர்ப்பு கூண்டுகள் இக்கூண்டுகள் தரை மட்டத்திலிருந்து 3 அல்லது 4 அடி உயரத்தில் அடிப்பகுதியில் தண்ணீர் உள்ளே போகாதவாறு செய்ய வேண்டும். தீவனம் மற்றும் குடிநீருக்கான உபகரணங்கள் பொதுவாக இவை துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்படுகின்றன. தீவன தொட்டிகள் "J" வடிவில் கூண்டின் முன்பகுதியில் வெளிப்புறமாக பொருத்தும் படி அமைக்கப்படவேண்டும். செலவினை குறைக்க சிறிய கிண்ணங்களை தண்ணீர் மற்றும் தீவனம் அளிக்கப் பயன்படுத்தலாம்
"J" வடிவ தீவன தொட்டிகள் சிறிய தண்ணீர் கிண்ணம்
|
No comments:
Post a Comment