Sunday 18 March 2012

உணவுக் கட்டுப்பாட்டு முறைகள், உணவுக் கட்டுப்பாட்டின் நன்மைகள்


உணவுக் கட்டுப்பாட்டு முறைகள்


இரண்டு முறைகள் உணவுக் கட்டுப்பாட்டில் பின்பற்றப்படுகின்றன.
  • ஒரு குறிப்பிட்ட இனத்தின் உடல் எடை அதிகரிப்பை அட்டவணையுடன் ஒப்பிட்டு அதை விட அதிகமாக இருப்பின் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
  • ஒரு நாள் உணவை நிறுத்தி ஒரு நாள்விட்டு, ஒரு நாள் என்று மாற்றி உணவிடலாம் அல்லது வாரத்திற்கு 2 நாட்கள் என்றவாறு குறைத்துக் கொள்ளலாம்.
  • உணவுக் குறைப்புத் திட்டத்தின் முக்கிய அம்சம் வாரம் ஒரு முறை எடைச் சரிபார்த்தலே ஆகும். எனவே மாதிரிப் பறவைகளை முன்பே எடையிட்டு பிற கோழிகளும் அந்த எடையில் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். மாதிரியாக எடுத்துக் கொள்ளும் கோழிகள் ஒப்பிட்டுப் பார்க்கும் கோழிகளின் அதே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்கவேண்டும்.

உணவுக் கட்டுப்பாட்டின் நன்மைகள்

  • அனைத்துக் கோழிகளும் ஒரே அளவில் இருக்கும்.
  • உணவைக் குறைக்கும் போது இடும் முட்டையின் அளவு ஆரம்பத்தில் சற்று பெரியதாக இருக்கும்.
  • பருவமடையும் போது உடல் எடை (சரியாக) குறைந்து இருக்கும்.
  • முட்டையிடும் காலம் அதிகமாக இருக்கும்.
  • கருத்தரித்தல் மற்றும் குஞ்சு பொரிக்கும் தருணங்களில் அதிகப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
  • அதிகத் தீவனம், உண்பதால் வரும் கால் நோய்கள், பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • அதிக தீவனத்தால் சில சமயங்களில் கோழிகள் இறக்க நேரிடலாம்.
  • சேவல்கள் அதிக எடையுடன் இருந்தால் இனச்சேர்க்கை செய்வது கடினம். இது போன்ற பல பிரச்சனைகளை உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் தவிர்க்கலாம்.

இறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு

இறைச்சிக் கோழிகள் பொதுவாகவே விரைவில் வளரக் கூடியவையாக இருக்கும். உடல் வளர்ச்சியும் இனப்பெருக்கத் திறனும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக அமைந்திருக்கும். எனவே உடல் வளர்ச்சி அளவுக்கு மீறி மிகுந்துவிடாமல் சரியான அளவு உணவுக் கொடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment