Sunday 18 March 2012

இறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்,வெளித்தோற்ற அடிப்படையில் நீக்குதல்,பயனற்ற கோழிகளை நீக்குதல்


இறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்

இறகு உதிர்வது கோழி முட்டையிடுவதன் ஒரு அறிகுறி ஆகும். நல்ல முட்டை உற்பத்தியுள்ள கோழிகள் தாமதமாக இறகை உதிர்க்க ஆரம்பித்தாலும்  விரைவில் உதிர்ந்து விடும். சில சமயம் இறகு உதிர்ந்து கொண்டிருக்கும் போதே முட்டையிட ஆரம்பித்து விடும். ஆனால் முட்டை இட இயலாத கோழிகள் முன்னதாகவே ஆரம்பித்து நீண்ட நாட்களுக்கு இறகை உதிர்த்துக் கொண்டே இருக்கும். ஆனால் முட்டை இடாது. இறக்கையில் இருந்து உதிர ஆரம்பிக்கும் கடினமான முதல் நிலை இறகுகளை எண்ணுவதன் மூலம் கோழியின் தன்மையை அறிந்து கொள்ள இயலும். முதலில் உள் இறகும் பின்பு மைய இறகு உதிர ஆரம்பிக்கும். புதிய முதல் நிலை இறகுகள் 6 வாரத்திலும் பின்பு வளர்ந்த இறகுகள் அடுத்த 2 வாரத்திலும் உதிரும். இறகு உதிரும் (சமயங்களில்) காலத்தில் 4 புதிய முதல் நிலை இறகுகளுடன் இருந்தால் கோழியானது இறகு உதிர்வதன் 12வத வாரத்தில் இருப்பதாகக் குறிக்கும்.
ஒரு வருட உற்பத்திக்குப் பின் முட்டை உற்பத்தி குறையத் தொடங்கிவிடும். அதன் பின் அக்கோழிகளைப் பராமரிப்பது பொருளாதார ரீதியில் இலாபகரமானதாக இருக்காது. ஏதேனும் கால்மோனைல்லா போன்ற நோய் பரவத் தொடங்கினால் உடனே அனைத்தையும் அழித்து விடுதல் நன்று.

வெளித்தோற்ற அடிப்படையில் நீக்குதல்

வெளித்தோற்ற அமைப்பு உற்பத்தியை அதிகம் பாதிக்காது எனினும் கோழியின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலைக் குறித்துத்தெரிந்து கொள்ள இது உதவும் நல்ல முட்டை உற்பத்திச் செய்யும் கோழிக்கும் சாதாரண கோழிக்கும் உள்ள வேறுபாடு.
பண்புகள்முட்டையிடும் கோழிமுட்டையிடாத கோழி
கொண்டை மற்றும் தாடிமுழுவதும் சிவப்பு நிறமாக மெழுகு போன்ற, வெல்வெட்.வறண்ட, சுருங்கிய சற்று கடினமான.
அலகுநன்கு வளைந்து, சிறிது மஞ்சளாக, நல்ல தேகத்துடன், தேய்ந்து காணப்படும்.நீண்டதாக, மெல்லிய கூரிய முனையுடன், நல்ல மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும்.
கண்கள்பளிச்சென்று எப்போதும் விழிப்புடன் இருக்கும்.சோர்ந்து தூங்குவது போல் இருக்கும்.
காதுமெழுகு போன்று வெல்வெட் தன்மையுடன் முழுமை பெற்றிருக்கும்.சொரசொரப்பாக சுருங்கி இருக்கும்.
இடுப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ள எலும்புவிரிந்த நிலையில் (இரு விரல்கள்) மெல்லிய வளையும் தன்மையுடையதாக இருக்கும்.சற்று மூடிய நிலையில் கெட்டியானதாக இருக்கும்.
வயிறு3-5 விரல்கள் அளவு பெரிதாக விரிந்து, குறைந்த கொழுப்புடன் மென்மையானதாக இருக்கும்.2 விரல் அளவுக்குக் குறைவாகவே இருக்கும். அதிகக் கொழுப்புடன் கடினமானதாக இருக்கும்.
கழிவுத்துவாரம் / எச்சவாய்பெரிதாக ஈரப்பதத்துடன் இருக்கும்.சிறியதாக உலர்ந்து சுருங்கிக் காணப்படும்.

பயனற்ற கோழிகளை நீக்குதல்

பயனற்ற, உற்பத்தியற்ற கோழிகளை வருடம் ஒரு முறை நீக்குதல் சிறந்தது. உடல் கோளாறுகள், உடற்செயலை பாதிக்கும் அல்லது சரிப்படுத்த இயலாத நோய்கள் கொண்ட, முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்ட பறவைகளை நீக்கி விடுதல் வேண்டும். வெளிப்புறத் தோற்றக் குறைபாடுகள் சில சமயம் முட்டை உற்பத்தியைப் பாதிக்காது. இதைச் சோதிக்க முட்டையிடும் கொட்டகையில் வைத்துச் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். இவற்றைப் பார்த்து இரவில் நீக்கம் செய்வத தொந்தரவைக் குறைக்கும்.

No comments:

Post a Comment