(Computer Terms in Tamil)
"ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு" என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளாகப் பார்ப்போர் உளர்; ஆனால் அவ்வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையையும் ஒவ்வொரு கலையாகவே பழந்தமிழர் வகைப்படுத்தினர். அந்தவரிசையில் தற்போதைய தொழில்நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணைத்துக்கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொரு கலை சார்ந்த சொற்களும் காலத்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டே வருகின்றன. அவற்றையே கலைச்சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. அவ்வாறே கணினியில் தமிழ் எழுத்துக்கள் தோன்றியக் காலம் முதல், தமிழ் கணினி கலைச்சொற்களின் உருவாக்கமும் தோற்றம் பெறத்தொடங்கி விட்டது. இதில் கணினித் தமிழ் ஆர்வலர்கள், இணையத் தமிழ் சமூக குழுமங்கள், ஊடகத் துறையினர், எழுத்தாளர்கள், அரச திணைக்களங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கணினி பயனர்கள் என பலரதும் பங்கு உள்ளது.
அவ்வாறு உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்து விடுபவையும் உள்ளன. இங்கே பெரும்பாலும் இணையப் பயன்பாட்டில் அதிகம் பயன்படும் 635 ஆங்கில கணினிச் சொற்களையும் அதற்கான தமிழ் கணினிக் கலைச்சொற்களையும் அட்டவணையாக இட்டுள்ளேன்.
ஆங்கிலக் கணினிச் சொற்களின் உச்சரிப்பு பயிற்சி பெற விரும்புவோர் ஒலிதக் கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம். (விரைவில் இணைக்கப்படும்)
அவ்வாறு உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்து விடுபவையும் உள்ளன. இங்கே பெரும்பாலும் இணையப் பயன்பாட்டில் அதிகம் பயன்படும் 635 ஆங்கில கணினிச் சொற்களையும் அதற்கான தமிழ் கணினிக் கலைச்சொற்களையும் அட்டவணையாக இட்டுள்ளேன்.
ஆங்கிலக் கணினிச் சொற்களின் உச்சரிப்பு பயிற்சி பெற விரும்புவோர் ஒலிதக் கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம். (விரைவில் இணைக்கப்படும்)
English Terms | கலைச்சொல்லாக்கம் | English Terms | கலைச்சொல்லாக்கம் |
Access | அணுக்கம் | Global dashboard | கோளக் கட்டுப்பாட்டகம் |
Accuracy | துல்லியம் | Global Positioning system | கோள இருப்பிடக் கட்டகம் |
Action | செயல் | Grammar checker | இலக்கணத் திருத்தி |
Activate | இயக்கு | Graphic | வரையியல்/வரைகலை |
Active cell | இயங்கு கலன் | Group | குழுமம் |
Active file | நடப்புக் கோப்பு | Guest | விருந்தினர் |
Activity | Hand held devices | கையடக்கக் கருவிகள் | |
Adapter card | பொருத்து அட்டை | Hand held Scanner | கையடக்க வருடுபொறி |
Adaptor | பொருத்தி | Handwriting recognition | கையெழுத்து அறிதல் |
Address | முகவரி | Hard disc | வன்வட்டு |
Address bus | முகவரி பாட்டை | Hardware | வன்பொருள் |
Address modification | முகவரி மாற்றம் | Header | தலைப்பு |
Addressing | முகவரியிடல் | Help center | உதவி மையம் |
Administrator | நிர்வாகி | Help group | உதவி குழுமம் |
Album | தொகுப்பு | High speed computer | அதிவேகக் கணினி |
Algorithm language | நெறிப்பாட்டு மொழி | Higher level language | உயர்நிலை மொழி |
Algorithm | நெறிமுறை | Home | முகப்பு |
இசைவு | Homepage | முகப்புப்பக்கம் | |
Allocation | ஒதுக்கீடு | Horizontal line | கிடைக்கோடு |
Alpha testing | முதற்கட்ட சோதனை | Host computer | புரவலர் கணினி |
Alphabet | அகரவரிசை/நெடுங்கணக்கு | Hyphenation | சொல் பிரித்தல் |
Alphabetical | அகர வரிசைப்படி | Icon | உருச்சின்னம்/படவுரு |
Alphanumeric | எண்ணெழுத்து | Identity | அடையாளம் |
Ambiguation | கவர்படுநிலை | iDNS | வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம் |
Amplified | பெருக்கப்பட்ட | iDomain | வலைக்கொற்றம் |
Analog representation | ஒப்புமை மீள்வடிவாக்கம் | Ignore | புறக்கணி |
Analog | ஒப்புமை | Image | படிமம் |
Analytical Engine | பகுப்பாய்வு பொறி | Import | இறக்கம் |
Animation | அசைவூட்டம் | Incompatible | முரண்பாடு |
Anonymous | அநாமதேய | Indefinite | திட்டமிடாத |
Anti-virus | நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான் | Index | சுட்டெண் |
Appearance | Index variable | சுட்டுமாறி | |
Append | பின்சேர் | Information | தகவல் |
Applet | குறுநிரல் | Information data | தகவல் தரவு |
Application level | பயன்பாட்டு நிலை | Information super highways | தகவல் மீப் பெருவழிகள் |
Application programmer | பயன்பாட்டு நிரலாளர் | Information technology | தகவல் தொழில்நுட்பம் |
Application programming | பயன்பாட்டு நிரலாக்கம் | Input unit | உள்ளீட்டுப் பகுதி |
Application programs | பயன்பாட்டு நிரல்கள் | Insert | உள்ளிடு/செருகு |
Application service provider | பயன்பாட்டுச் சேவை வழங்குனர் | Install | நிறுவு |
Application software | பயன்பாட்டு மென்பொருள் | Installation | நிறுவுதல் |
Application | செயலி | Integrated chips | சுற்றமைப்புச் சில்லுகள் |
Architecture | கட்டமைப்பு | Integrated circuit chips | ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள் |
Archive file | காப்பகக் கோப்பு | Inter language | மொழியிடை |
Archive gateway | காப்பக நுழைவாயில் | Interactive sites | ஊடாட்ட தளங்கள் |
Archive | காப்பகம் | Interests | ஆர்வங்கள் |
Archiving | காப்பகப்படுத்தல் | Interface | இடைமுகம்/இடைமுகப்பு |
Area search | பரப்பில் தேடல் | Internal | உள்ளக |
Arithmetic | எண் கணிதம் | Internal error | உள்ளகத் தவறு |
Array processor | அணிச் செயலி | International | பன்னாட்டு |
Array | அணி | International (DNS) | பன்னாட்டுக் (கொப்பெகம்) |
Arrow key | திசை விசை/திசை குறி | Internet | இணையம் |
Artificial intelligence | செயற்கை நுண்ணறிவு | Internet protocol address | இணைய நெறிமுறை முகவரி |
Assembler | பொறிமொழியாக்கி | Internet protocol (IP) | இணைய நெறிமுறை |
Assembly Language | பொறி மொழி | Internet service provider (ISP) | இணையச் சேவை வழங்குனர் |
Audio blog | ஒலிதப்பதிவு | Interpreter | வரிமொழிமாற்றி/இடைமாற்று |
Audio | ஒலிதம் | Invalid | செல்லாத/செல்லுபடியாகாத |
Auto block | தானியங்கித் தடை | Invention | கண்டுப்பிடிப்பு |
Auto restart | தானியக்க மீள்தொடக்கம் | Italic text | சாய்வெழுத்து |
Automated data processing | தன்னியக்கத் தரவுச் செயலாக்கம் | Iteration | பன்முறைச் செய்தல் |
Automatic | தன்னியக்க | Java script | ஜாவா ஆணைத்தொகுதி |
Auxiliary equipments | துணைக்கருவிகள் | Key | விசை |
Auxiliary function | துணைச்செயற்கூறு | Keyboard | விசைப்பலகை/தட்டச்சுப்பலகை |
Auxiliary memory | துணை நினைவகம் | Keypad | விசைத்தளம் |
Auxiliary operation | துணை செயல்பாடு | Keyword | குறிப்புச்சொல் |
Auxiliary storage | துணை தேக்கம் | Landscape | அகலவாக்கி |
Availability | கிடைத்தல் | Laptop computer | மடிக்கணினி |
Axes | அச்சுகள் | Layout | தளவமைப்பு |
Back up | காப்புநகல்/காப்புநகலெடு | LCD Monitor (Liquid Crystal Display) | திரவ பளிங்குத் திரையகம் |
Background | பின்னணி | Left click | இடதுச் சொடுக்கு |
Backspace | பின்நகர்வு | Lexing error | தொகுத்தல் தவறு |
Bar chart | பட்டை வரைப்படம் | License | உரிமம் |
Bar code | பட்டைக்குறிமுறை | Light pen | எழுதுகோல் |
Bar code scanner | பட்டைக்குறிமுறை வருடி | Line | கோடு/வரி |
Bar printer | பட்டை அச்சுப்பொறி | Link | இணைப்பு/தொடுப்பு |
Basic | அடிப்படை | List | பட்டியல் |
Batch processing | தொகுதிச்செயலாக்கம் | Live | நேரடி |
Beta | அறிமுகப் பதிப்பு | Log in | புகுபதி/உற்புகு |
Binary Code | இரும குறிமுறை | Log out | விடுபதி/வெளியேறு |
Binary device | இருமக் கருவி | Machine language | பொறிமொழி |
Binary digit | இரும இலக்கம் | Machine translation | எந்திர மொழிபெயர்ப்பு |
Binary number | இரும எண் | Magnetic disk | காந்த வட்டு |
Binary operation | இரும செயற்பாடு | Magnetic tape | காந்தா நாடா |
Main Page | முகப்புப்பக்கம்/முதற்பக்கம் | ||
Bit map display | நுண் படக் காட்சி | Maintenance page | மேலாண்மைப் பக்கம் |
Bit map scanning | நுண் பட வருடி | Management | ஆளுமை/முகாமைத்துவம் |
Bit mapped screen | நுண் பட திரை | Mechanical calculator | எந்திர கணிப்பான் |
Bit values | நுண்மியின் மதிப்புகள் | Media | ஊடகம் |
Bit | நுண்மி | Media player | ஊடக இயக்கி |
Bitmap | நுண் படம் | Memory unit | நினைவகப் பகுதி |
Bit-mapped font | நுண் பட எழுத்துரு | Memory | நினைவகம் |
Blank character | வெற்றுரு | Menu | பட்டியல் |
Blank page | வெற்றுப்பக்கம் | Metadata | தரவு விவரம் |
Blanking | வெறுமைப்படுத்தல் | Micro processor | நுண் செயலி |
Block | தடை | Microphone | ஒலிவாங்கி |
Blog | வலைப்பதிவு | Modem | இணக்கி |
Blog info | வலைப்பதிவு தகவல்கள் | Moderation | மட்டுறுத்தல் |
Blog tools | வலைப்பதிவுக் கருவிகள் | Moderator | மட்டுறுத்துனர் |
Blogger | வலைப்பதிவர் | Monetize | மதிப்புடைச்செய் |
Blogger circle | வலைப்பதிவர் வட்டம் | Monitor | கணித்திரை/திரையகம் |
Blogging | வலைப்பதிதல் | More features | கூடுதல் அம்சங்கள் |
Bookmark | புத்தகக் குறி | Motherboard | தாய்ப்பலகை |
Boot | தொடக்கு | Mouse | சொடுக்கி |
Border | கரைகள் | Multimedia | பல்லூடகம் |
Branching | கிளைப்பிரிதல் | Multitasking | பல்பணியாக்கம் |
Bridge | இணைவி | My account | எனது கணக்கு |
Broadband | அகலப்பட்டை | Natural language | இயற்கை மொழி |
Browser | உலாவி | Navigation | வழிசெலுத்தல் |
Browsing | உலாவுதல் | Negative | எதிர்வு |
Buddy | நண்பர் | Network | பிணையம்/வலையமைப்பு |
Bug | வழு | Networking | வலைப்பின்னல் |
Bug report | வழு அறிக்கை | Neutral point of view | நடுநிலைநோக்கு |
Bus | பாட்டை | New post | புதிய இடுகை |
Cache | தேக்கம் | Non-terminals | முடியா முனையங்கள் |
Calculating | கணக்கிடல் | Notation | குறிமானம் |
Calculation | கணக்கீடு | Note | குறிப்பு |
Calculator mode | கணிப்பான் நிலை | Number | எண் |
Calculator | கணிப்பான் | Numeral | எண் முறை |
Cancel | தவிர் | Object | பொருள் |
Capacity | கொள்திறன் | Offline | இணைப்பறு/இணைப்பின் வெளியே |
Carriage return | ஏந்தி மீளல் | Online | இணைப்பில் |
Catalog | விவரப்பட்டியல் | Operating system | இயங்குக் கட்டகம் |
Category | பக்கவகை | Option | தேர்வு |
CD burning | குறுவட்டு எரித்தல் | Orphaned pages | உறவிலிப் பக்கங்கள் |
CD player | இறுவட்டு இயக்கி | Other languages | பிறமொழிகள்/ஏனைய மொழிகள் |
Center | மையம்/நடுவம் | Outsourcing | அயலாக்கம் |
Central processing unit (CPU) | மையச் செயலகம் | Package | பொதி |
Central processor | மையச் செயலி | Packets | பொட்டலங்கள/பொதிகள் |
Chain printer | தொடர்ப்பதிப்பான் | Page layout | பக்க வடிவமைப்பு |
Change | மாற்றல்/மாற்று | Page views | பக்கப் பார்வைகள் |
Channel | தடம் | Page | பக்கம் |
Character | வரியுரு | Panel | பலகை |
Character code | வரியுருக் குறி | Paperless office | தாளில்லா அலுவலகம் |
Character map | வரியுரு வரைப்படம் | Paragraph | பந்தி |
Character recognition | வரியுரு அறிதல் | Parallel processing computers | இணைச் செயலாக்க கணினிகள் |
Character set | வரியுருக்கணம் | Parent category | முதன்மை பக்கவகை |
Character string | வரியுருச்சரம் | Password | கடவுச்சொல் |
Chart | வரைப்படம் | Paste | ஒட்டு |
chat | அரட்டை | Patch | பொருத்து |
Checkbox | தேர்வுப்பெட்டி | Peripherals | உபகரணங்கள் |
Chips | சில்லுகள் | Permission | அனுமதி |
Clear | துடை | Personal Computer | தனி கணினி |
Click | சொடுக்கு | Photograph | புகைப்படம் |
Clipboard | மறைப்பலகை | Picture | படம் |
Close | மூடு | Piracy | களவுநகலாக்கம் |
Closed file | மூடப்பட்ட கோப்பு | Plug in | சொருகு/சொருகி |
Cloud computing | முகிலக் கணிப்பு | Pointer | சுட்டு |
Collection | திரட்டல் | Portable Printer | கையடக்க அச்சுப்பொறி |
Color coding | வண்ணக் குறிமுறை | Portal | வலைவாசல் |
Color graphics | வண்ன வரைகலை | Post | இடுகை |
Color | வண்ணம்/நிறம் | Posting | இடுகையிடல் |
Column split | நெடுவரிசைப் பிரிப்பு | Posts | இடுகைகள் |
Column | நெடுவரிசை | Preferences | விருப்புத்தேர்வுகள் |
Command key | கட்டளை விசை | Presentation | அளிக்கை |
Command | கட்டளை/ஆணை | Press | அமுக்கு |
Comment | கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை | Preview | முன்தோற்றம் |
Comments moderation | கருத்துரை மட்டுறுத்தல் | Principals | கோட்பாடு |
Common storage | பொதுத்தேக்கம் | Print | அச்சிடு |
Common | பொது | Printer | அச்சுப்பொறி |
Communication link | தொடர்பு இணைப்பு | Privacy | தனிக்காப்பு/தனிமறைவு |
Communication processor | தொடர்பு செயலகம் | Problem | சிக்கல்/பிரச்சினை |
Communication satellite | தொடர்பு செயற்கைக்கோள் | Processor | செயலி |
Communication software | தொடர்பு மென்பொருள் | Program | நிரல் |
Communication protocols | தொடர்பு நெறிமுறைகள் | Programmers | நிரலர்கள் |
Community portal | சமுதாய வலைவாசல் | Programming language | நிரலாக்க மொழி |
Compact disc (CD) | குறுவட்டு/இறுவட்டு | Prompt | தூண்டி |
Comparative operator | ஒப்பீட்டு இயக்கி | Protect | காப்புச்செய் |
Compare | ஒப்பிடு | Protection log | தடைப்பதிகை |
Comparison | ஒப்பிடுதல் | Protocols | நெறிமுறைகள் |
Compilation | தொகுப்பு | Proxy Server | பதில் சேவையகம் |
Compiler | தொகுப்பி | Public domain | பொதுக்கொற்றம்/பொதுக்களம் |
Complier language | தொகுப்பு மொழி | Publications | வெளியீடுகள் |
Component | உறுப்புக்கூறு | Publish | பதிவிடு/வெளியிடு |
Compress | அழுத்து/அமுக்கு | Publisher | பதிப்பாளர் |
Computer engineer | கணிப் பொறியாளர் | Publishing | பதிப்பிடல் |
Computer game | கணினி விளையாட்டு | Query | வினா/வினவல் |
Computer graphic | கணினி வரைகலை | RAM (Random access memory) | நினைவகம் |
Computer language | கணினி (நிரல்) மொழி | Random Page | ஒழுங்கிலாப் பக்கம் |
Computer motherboard | கணினி தாய்பலகை | Recent changes | அண்மைய மாற்றங்கள் |
Computer network | கணினி வலையமைப்பு | Recovery tool | மீட்சி கருவி |
Computer operation | கணினிச் செயல்பாடுகள் | Redirects | வழிமாற்றிகள் |
Computer program | கணனி நிரல் | Redo | செய்தது தவிர்/திரும்பச்செய் |
Computer resources | கணினி வளங்கள் | Reference desk | எடுகோள் மேடை |
Computer user | கணினி பயனர் | Reference | எடுகோள் |
Computer utility | கணனி பயனமைப்பு | Refresh | புதுப்பி |
Computer | கணினி | Reinstall | மீள்நிறுவு |
Computerization | கணினிமயமாக்கல் | Release | வெளியீடு |
Computerized data base | கணினிமய தரவு தளம் | Remember me | என்னை நினைவில் வை |
Computerized data processing | கணினிமய தரவு செயலாக்கம் | Removal | அகற்றல் |
Computing | கணினிப்பணி | Remove | அகற்று |
Condition | நிபந்தனை/நிலை | Replace | மீள்வை |
Configuration | அமைவடிமம் | Reprogramming | மறுநிரலாக்கம் |
Connectors | இணைப்பான்கள் | Required | வேண்டப்பட்ட/தேவைப்பட்ட |
Console | முனையம் | Reset | மீட்டமை |
Constants | மாறிலிகள் | Restore | மீள வை/ மீள்வி |
Content policy | உள்ளடக்கக் கொள்கை | Result | விளைவு |
Contributions | பங்களிப்புகள் | Review | மீளாய்வு |
Contributor | பங்களிப்பாளர்/பங்களிப்போர் | Revision | புதிபித்தல்/திருத்தம் |
Control key | கட்டுப்பாட்டு விசை | Right click | வலச்சொடுக்கு |
Control panel | கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம் | Root | மூலம் |
Control program | கட்டுப்பாட்டு நிரல் | Root directory | மூல அடைவு |
Control statement | கட்டுப்பாட்டுக்கூற்று | Router | வழிச்செயலி |
Control structure | கட்டுப்பாட்டு உருவம் | Row | குறுக்கு வரிசை/நிரை |
Control system | கட்டுப்பாட்டு கட்டகம் | Rule | விதி/விதிமுறை |
Control unit | கட்டுப்பாட்டு பிரிவு | Save | சேமி |
Conversion | மாற்றம் | Save as | என சேமி |
Convert | மாற்று | Scanner | வருடுபொறி |
Cookie | நினைவி | Screensaver | திரைக்காப்பு |
Copy protection | நகல் காப்பு | Search | தேடு/தேடல் |
Copy | பிரதி/நகல் | Search engine | தேடு பொறி |
Copyright status | பதிப்புரிமை நிலை | Search query | தேடல் வினா |
Copyright | பதிப்புரிமை | Search | தேடல்/தேடு |
Core storage | வளையத் தேக்கம் | Section | பகுதி |
Cost analysis | விலைப் பகுப்பாய்வு | See also | இவற்றையும் பார் |
Cost benefit analysis | விலை பயன் பகுப்பாய்வு | Select | தேர்வுசெய் |
Cost effectiveness | விலை பயன் திறன் | Sensor | உணரி |
Create | உருவாக்கு | Server | வழங்கி |
Crop | செதுக்கு | Sessions | அமர்வுகள் |
Current events | நடப்பு நிகழ்வுகள் | Setting | அமைப்புகள் |
Cursor | சுட்டி | Share my profile | எனது சுயவிவரத்தை பகிர் |
Curve fitting | வளைக்கோட்டுப் பொருத்தம் | Shared files | பகிரப்பட்ட கோப்புகள் |
Custom software | தனிப்பயன் மென்பொருள் | Shareware | பகிர்மானம் |
Customize | விருப்பமை/தனிப்பயனாக்கு | Shortcut | குறுவழி/குறுக்குவழி |
Cut | வெட்டு | Show all | எல்லாம் காண்பி |
Cyber | மின்வெளி | Shutdown | அணை/மூடு |
Dashboard | கட்டுப்பாட்டகம் | Sign in | புகுபதிகை/புகுபதிவு |
Data | தரவு | Sign off | விடுபதிகை/விடுபதி |
Data catalog | தரவு விவரப்பட்டியல் | Sign out | வெளியேறு |
Data flow | தரவுப் பொழிவு | Single click | தனிச் சொடுக்கு |
Data processing | தரவுச் செயலாக்கம் | Sister Projects | பிற திட்டங்கள் |
Database | தரவுத்தளம் | Site feed | தள ஓடை |
Decimal digit | பதின்ம இலக்கம் | Socket | பொருத்துவாய் |
Decimal number | பதின்ம எண் | Software | மென்பொருள் |
Decimal point | பதின்ம புள்ளி | Software package | மென்பொருள் பொதி |
Decimal | பதின்மம் | Sorting algorithms | தீர்வு நெறிகள் |
Decode | குறிமுறை நீக்கு/நீக்கி | Sorting and searching | வரிசையாக்கமும் தேடலும் |
Decompress | விரிவாக்கு | Sound Card | ஒலிக்கிரமி |
Default | முன்னிருப்பு/இயல்பிருப்பு | Source code | மூலவரைவு |
Definite | திட்டமிட்ட/தெளிவான | Source | மூலம் |
Delete | அழி | Space | வெளி/இடைவெளி |
Deletion | அழித்தல் | Spacing | இடைவெளியிடல் |
Description | விவரணம்/விளக்கம் | Spam | எரிதம் |
Design | வடிவமைப்பு | Speaker | ஒலிப்பெருக்கி |
Desktop computer | மேசை கணினி | Special pages | சிறப்பு பக்கங்கள் |
Desktop | முகத்திரை | Specification | விவர வரையறை |
Destination | அடையுமிடம் | Spell checker | |
Developer | மேம்படுத்துனர் | | பிரிப்பு |
Device | கருவி | Spooler | சுருளி |
Diagram | விளக்கப்படம் | Spreadsheet | விரித்தாள் |
Digital | எண்மின் | Standard | நியமம்/தரப்பாடு |
Disambiguated | தெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய | Standardisation | தரப்படுத்துதல் |
Disambiguation | தெளிவாக்கம்/தெளிவாக்கல் | Stats | புள்ளிவிவரங்கள் |
Discovery | கண்டறி/கண்டறிதல் | String literals | சர மதிப்புருக்கள் |
Discuss | கலந்தாலோசி | Structured programming | கட்டுரு நிரலாக்கம் |
Disk drive | வட்டு இயக்கி | Stub | குறுங்கட்டுரை |
Display name | தோற்றப்பெயர் | Subtitle | துணையுரை |
Distribute | வினியோகி/வினியோகப்படுத்து | Suffix | பின்னொட்டு |
DNS | கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)] | Super Computer | மிகுவேகக் கணினி/மீக்கணினி |
Document | ஆவணம் | Support | உதவி |
Documentation | ஆவணமாக்கம் | Syntax error | தொடரமைப்புத் தவறு |
Domain | கொற்றம்/ஆள்களமையம் | Sysop | முறைமைச் செயற்படுத்துனர் |
Domain Name System | கொற்றப் பெயர்க் கட்டகம் | System operator | கட்டக இயக்குநர் |
Double click | இரட்டைச் சொடுக்கு | System programmer | கட்டக நிரலாளர் |
Download | பதிவிறக்கம் | System | கட்டகம் |
Drag | இழு | Tab | தத்தல் |
Driver | இயக்கி | Technology | தொழில் நுட்பம் |
Drum plotter | உருளை வரைவு | Template | வார்ப்புரு |
Drum printer | உருளை அச்சுப்பொறி | Terminal | முனையம் |
Drum scanner | உருளை வருடி | Terms of service | சேவை விதிமுறைகள் |
E-book | மென்நூல் | Text formatting | உரை வடிவம் |
Edit | தொகு/மாற்று | உரையை பேச்சாக்குதல் | |
Edit profile | சுயவிபரத்தை மாற்று | Text to voice | உரையைக் குரலாக்குதல் |
Editor | தொகுப்பாளர் | Theme | தோற்றக்கரு |
Educational software | அறிவியல் மென்பொருள் | Theory | தேற்றை |
Effective | பயன்விளையத்தக்க | Thesis | தேற்று |
Effects | விளைவுகள் | Time zone | நேரவலையம் |
E-governance | மின்-அரசாண்மை | Title | தலைப்பு |
Electrical signal | மின் சமிக்ஞை | Toolbar | கருவிப்பட்டை |
Electronic | மின்னணு | Top level domain | உயர் மட்டக் கொற்றம் |
E-mail | மின்னஞ்சல் | Transistor | திரிதடையம் |
Embedded | பொதிந்துள்ள | Trash | குப்பை |
Emulation | போலச்செய்தல் | Uncategorized | வகைப்படுத்தப்படாதவை |
Encoding | குறியாக்கம் | Undo | செய்தவிர்/செய்ததைத் தவிர் |
Encyclopedia | கலைக்களஞ்சியம் | Unit | பிரிவு |
End | முடிவு | Update | இற்றைப்படுத்து |
Equation | சமன்பாடு | Upgrade | மேம்படுத்து/மேம்படுத்தல் |
Erase | அழி | Upload | பதிவேற்று |
Eraser | அழிப்பான் | URL | (இணைய) முகவரி |
Expansion slots | விரிவாக்க செருகுவாய்கள் | User | |
Expiry | கெடுமுடிவு/காலாவதி | User account | பயனர் கணக்கு |
Extended info | விரிவாக்கப்பட்ட தகவல் | User’s guide | பயனர் வழிக்காட்டி |
External links | வெளி இணைப்புகள் | Utility | பயனமைப்பு |
External search engine | வெளித்தேடுபொறி | Vandalism | நாசவேலை |
FAQ | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | Variable | மாறி/மாறுப்படுகிற |
Features | அம்சங்கள் | Version | பதிப்பு |
Field | புலம் | Video blog | ஒளிதப் பதிவு |
File | கோப்பு | Video | ஒளிதம்/காணொளி |
File management | கோப்பு மேலாண்மை | View profile | சுயவிவரம் காண்பி |
File share | கோப்பு பகிர்வான் | View | பார்வை |
File sharing | கோப்பு பகிர்தல் | Viewer | பார்வையாளர் |
Find | கண்டறி/தேடு | Virtual server | மெய்நிகர்ச் சேவையகம் |
Firewall | தீயரண் | Virus | நச்சுநிரல் |
Firmware | நிலைப்பொருள் | Visitor | வருகையாளர் |
Flat monitor | தட்டை திரையகம் | Voice mail | குரலஞ்சல் |
Floppy drive | நெகிழ் வட்டு | Voice recognition | |
Flow chart | நெறிமுறை விளக்கப்படம் | Volume | ஒலியளவு |
Folder | கோப்புறை | Watch list | கவனிப்புப் பட்டியல் |
Font | எழுத்துரு | Watch | கவனி |
Font and word processor | எழுத்துருவும் சொல் செயலாக்கியும் | Website | இணையத்தளம் |
Font name | எழுத்துரு பெயர் | Window | சாளரம் |
Footer | அடிப்பாகம் | Wireless | கம்பியில்லா |
Formal language | வடிவ மொழி | Wish list | விருப்பப்பட்டியல் |
Format | வடிவம்/வடிவூட்டம் | Wizard | வழிகாட்டி |
Formatting | வடிவமைத்தல் | Word processor | சொற் செயலி |
Formula | சூத்திரம் | Working environment | பணிச்சூழல் |
Free software | இலவச மென்பொருள் | Worksheet | பணித்தாள் |
Function | செயற்கூறு/செயற்பாடு | Workstation | பணிநிலையம் |
Gallery | காட்சியகம் | World Wide Web (WWW) | வைய விரிவு வலை |
Gateway | நுழைவாயில் | | |
மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்
மொழிப்பெயர்ப்பு என்பதற்கும் கலைச்சொல்லாக்கம் என்பதற்கும் இடையில் அதிக வேறுப்பாடு உண்டு. மொழிப்பெயர்ப்பு என்பது ஆங்கிலச் சொல்லுக்கான நேரடி பொருள் பெயர்ப்பாகும். கலைச்சொல்லாக்கம் என்பது ஒவ்வொரு துறையும் சார்ந்தும் அவற்றின் பொருளை எளிதாக உணர்த்தும் வண்ணம் உருவாக்கப்படும் சொற்களாகும்.
நேரடி மொழிப்பெயர்ப்பு சொற்கள்:
Application = விண்ணப்பம்
Architecture = கட்டடக்கலை
Home = வீடு
கணினித் துறைச்சார்ந்து உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள்:
Application = செயலி
Architecture = கட்டமைப்பு
Home = முகப்பு
நிலைக்கும் கலைச்சொற்கள்
ஏனைய துறைகளைப் போலவே, கணினித் துறையிலும் உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்தவையும் உள்ளன. பலரின் விருப்புக்கு அமைய நிலைத்துவிடும் கலைச்சொற்களும் உள்ளன. இருப்பினும் உருவாக்கப்படும் கலைச்சொற்கள் எந்தளவு மக்களின் புழக்கத்திற்கு சென்றடைகிறதோ அந்தளவே அச்சொற்களின் நிலைப்பும் அமைகின்றன. ஏனையவை காலப்போக்கில் மறைந்து விடுகின்றன.
எடுத்துக்காட்டாக:
"Blog = வலைப்பூ, வலைமனை, வலைப்பக்கம், வலைப்பதிவு" போன்ற கலைச்சொற்களில் தற்போது பெரும்பாலும் நிலைத்து நிற்கும் சொல் "வலைப்பதிவு" மட்டுமே ஆகும்.
"Comment = விமர்சனம், கருத்துரை, முன்னிகை, பின்னூட்டம்" என பலசொற்கள் இருந்தாலும், அநேகமானோர் பயன்படுத்தும் சொற்கள் "கருத்துரை, பின்னூட்டம்" போன்றவைகள் மட்டும் தான்.
இருப்பினும் இவ்வாறு ஒரே சொல்லுக்கான பல கலைச்சொற்கள் இருப்பதில் எவ்விதக் குறையும் இருப்பதாகக் கொள்ளமுடியவில்லை. அவை குறித்த சொல்லின் சரியான பொருளைத் தருமாயின் அவற்றை ஒத்தக்கருத்துச் சொற்களாகப் பயன்படுத்தலாம். அவை தமிழ் மொழியின் சொல்வளத்தை பெருக்கிக்கொள்ள உதவும்.
ஒலிப்பெயர்ப்பு சொற்கள்
ஆங்கிலத்திலிருந்து கலைச்சொற்களாக மாற்றக்கூடாத, மொழிப்பெயர்க்கக் கூடாத சொற்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக இலங்கையில் உள்ள "மகாராஜா நிறுவனம்" எனும் பெயரில் உள்ள "மகாராஜா" என்பதனை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை "The great King" என்றோ "Emperor" என்றோ ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுதுதல் முற்றிலும் தவறானது ஆகும். ஏனெனில் அது ஒரு பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயராகும்; அதனாலேயே மகாராஜா என்பதனை ஆங்கிலத்தில் எழுதினாலும் அப்படியே ஒலிப்பெயர்ப்பு செய்யப்பட்டு "Maharaja" என்று எழுதப்படுகின்றது. அவ்வாறே கணினித் துறையிலும் இணையத்திலும் காணப்படும் பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்களை எம்மொழியில் எழுதினாலும், அவற்றை ஒலிப்பெயர்த்து பயன்படுத்துதலே சரியானதாகும்.
Google = கூகிள்
Yahoo = யாஹு
மகாராஜா = Maharaja (Organization Limited)
கலைச்சொல் உருவாக்குனர்கள்
இந்த அட்டவணையில் காணப்படும் தமிழ் கணினிக் கலைச்சொற்களில் அதிகமானவை இணையத்தில் பரவலாக பயன்படும் சொற்களின் தொகுப்பே ஆகும். என்னால் உருவாக்கப்பட்டவை "Branching = கிளைப்பிரிதல், Customize = விருப்பமை (தனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்தல்)" போன்ற ஒரு சில சொற்கள் மட்டுமே ஆகும். கணிசமானவை விக்சனரி குழுமத்தில் கலந்தாய்வு செய்து பெறப்படும் சொற்களில் பொருத்தமானவைகளாக நான் கருதும் சொற்கள், குறிப்பாக இராம.கி ஐயாவினால் அறிமுகப்படுத்தும் அருமையான கலைச்சொற்கள் இவ்வட்டணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக:
Moderation = மட்டுறுத்தல்
Post = இடுகை
Comment = பின்னூட்டம்/முன்னிகை
System = கட்டகம்
Domain = கொற்றம்
போன்ற கலைச்சொற்கள் இராம.கி ஐயா உருவாக்கியவை ஆகும். தமிழ் மொழிக்கும், தமிழ் கலைச்சொல்லாக்கத்திற்கும் இராம.கி ஐயாவின் பங்களிப்பு காலத்தால் போற்றத்தக்கவை. இவரது வலைப்பதிவை எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கலைச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனையும் இவரது இடுகைகள் ஊடாக அறிந்துக்கொள்ளலாம்.
இராம்.கி ஐயாவின் வலைப்பதிவு: http://valavu.blogspot.com/
அண்ணா பல்கலைக்கழகத்தின்: கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி பதிவிறக்கம்
குறிப்பு: கணினி கலைச்சொற்களை தொகுத்து வழங்குவதன் நோக்கம், இன்றைய கணினி உலகில் பயன்படும் ஆங்கில கணினிச்சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்பதே ஆகும். அத்துடன் இத்தொகுப்பு மின்னஞ்சல் ஊடாக கோரப்படும் பலரது வேண்டுகோளுக்கு இணங்கவே இன்று இடப்பட்டுள்ளது. இவை மேலும் தமிழ் கணினி உலகில் பலருக்கும், குறிப்பாக புதிதாக கணினி உலகிற்குள் நுழையும் இளையோருக்கு பயன்படக் கூடியதாக இருக்கும் என கருதுகிறோம்.
மொழிப்பெயர்ப்பு என்பதற்கும் கலைச்சொல்லாக்கம் என்பதற்கும் இடையில் அதிக வேறுப்பாடு உண்டு. மொழிப்பெயர்ப்பு என்பது ஆங்கிலச் சொல்லுக்கான நேரடி பொருள் பெயர்ப்பாகும். கலைச்சொல்லாக்கம் என்பது ஒவ்வொரு துறையும் சார்ந்தும் அவற்றின் பொருளை எளிதாக உணர்த்தும் வண்ணம் உருவாக்கப்படும் சொற்களாகும்.
நேரடி மொழிப்பெயர்ப்பு சொற்கள்:
Application = விண்ணப்பம்
Architecture = கட்டடக்கலை
Home = வீடு
கணினித் துறைச்சார்ந்து உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள்:
Application = செயலி
Architecture = கட்டமைப்பு
Home = முகப்பு
நிலைக்கும் கலைச்சொற்கள்
ஏனைய துறைகளைப் போலவே, கணினித் துறையிலும் உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்தவையும் உள்ளன. பலரின் விருப்புக்கு அமைய நிலைத்துவிடும் கலைச்சொற்களும் உள்ளன. இருப்பினும் உருவாக்கப்படும் கலைச்சொற்கள் எந்தளவு மக்களின் புழக்கத்திற்கு சென்றடைகிறதோ அந்தளவே அச்சொற்களின் நிலைப்பும் அமைகின்றன. ஏனையவை காலப்போக்கில் மறைந்து விடுகின்றன.
எடுத்துக்காட்டாக:
"Blog = வலைப்பூ, வலைமனை, வலைப்பக்கம், வலைப்பதிவு" போன்ற கலைச்சொற்களில் தற்போது பெரும்பாலும் நிலைத்து நிற்கும் சொல் "வலைப்பதிவு" மட்டுமே ஆகும்.
"Comment = விமர்சனம், கருத்துரை, முன்னிகை, பின்னூட்டம்" என பலசொற்கள் இருந்தாலும், அநேகமானோர் பயன்படுத்தும் சொற்கள் "கருத்துரை, பின்னூட்டம்" போன்றவைகள் மட்டும் தான்.
இருப்பினும் இவ்வாறு ஒரே சொல்லுக்கான பல கலைச்சொற்கள் இருப்பதில் எவ்விதக் குறையும் இருப்பதாகக் கொள்ளமுடியவில்லை. அவை குறித்த சொல்லின் சரியான பொருளைத் தருமாயின் அவற்றை ஒத்தக்கருத்துச் சொற்களாகப் பயன்படுத்தலாம். அவை தமிழ் மொழியின் சொல்வளத்தை பெருக்கிக்கொள்ள உதவும்.
ஒலிப்பெயர்ப்பு சொற்கள்
ஆங்கிலத்திலிருந்து கலைச்சொற்களாக மாற்றக்கூடாத, மொழிப்பெயர்க்கக் கூடாத சொற்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக இலங்கையில் உள்ள "மகாராஜா நிறுவனம்" எனும் பெயரில் உள்ள "மகாராஜா" என்பதனை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை "The great King" என்றோ "Emperor" என்றோ ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுதுதல் முற்றிலும் தவறானது ஆகும். ஏனெனில் அது ஒரு பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயராகும்; அதனாலேயே மகாராஜா என்பதனை ஆங்கிலத்தில் எழுதினாலும் அப்படியே ஒலிப்பெயர்ப்பு செய்யப்பட்டு "Maharaja" என்று எழுதப்படுகின்றது. அவ்வாறே கணினித் துறையிலும் இணையத்திலும் காணப்படும் பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்களை எம்மொழியில் எழுதினாலும், அவற்றை ஒலிப்பெயர்த்து பயன்படுத்துதலே சரியானதாகும்.
Google = கூகிள்
Yahoo = யாஹு
மகாராஜா = Maharaja (Organization Limited)
கலைச்சொல் உருவாக்குனர்கள்
இந்த அட்டவணையில் காணப்படும் தமிழ் கணினிக் கலைச்சொற்களில் அதிகமானவை இணையத்தில் பரவலாக பயன்படும் சொற்களின் தொகுப்பே ஆகும். என்னால் உருவாக்கப்பட்டவை "Branching = கிளைப்பிரிதல், Customize = விருப்பமை (தனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்தல்)" போன்ற ஒரு சில சொற்கள் மட்டுமே ஆகும். கணிசமானவை விக்சனரி குழுமத்தில் கலந்தாய்வு செய்து பெறப்படும் சொற்களில் பொருத்தமானவைகளாக நான் கருதும் சொற்கள், குறிப்பாக இராம.கி ஐயாவினால் அறிமுகப்படுத்தும் அருமையான கலைச்சொற்கள் இவ்வட்டணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக:
Moderation = மட்டுறுத்தல்
Post = இடுகை
Comment = பின்னூட்டம்/முன்னிகை
System = கட்டகம்
Domain = கொற்றம்
போன்ற கலைச்சொற்கள் இராம.கி ஐயா உருவாக்கியவை ஆகும். தமிழ் மொழிக்கும், தமிழ் கலைச்சொல்லாக்கத்திற்கும் இராம.கி ஐயாவின் பங்களிப்பு காலத்தால் போற்றத்தக்கவை. இவரது வலைப்பதிவை எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கலைச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனையும் இவரது இடுகைகள் ஊடாக அறிந்துக்கொள்ளலாம்.
இராம்.கி ஐயாவின் வலைப்பதிவு: http://valavu.blogspot.com/
அண்ணா பல்கலைக்கழகத்தின்: கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி பதிவிறக்கம்
குறிப்பு: கணினி கலைச்சொற்களை தொகுத்து வழங்குவதன் நோக்கம், இன்றைய கணினி உலகில் பயன்படும் ஆங்கில கணினிச்சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்பதே ஆகும். அத்துடன் இத்தொகுப்பு மின்னஞ்சல் ஊடாக கோரப்படும் பலரது வேண்டுகோளுக்கு இணங்கவே இன்று இடப்பட்டுள்ளது. இவை மேலும் தமிழ் கணினி உலகில் பலருக்கும், குறிப்பாக புதிதாக கணினி உலகிற்குள் நுழையும் இளையோருக்கு பயன்படக் கூடியதாக இருக்கும் என கருதுகிறோம்.
No comments:
Post a Comment