Sunday, 22 January 2012

ஆங்கிலப் பெயர்சொற்கள் அட்டவணை


ஆங்கிலப் பெயர்சொற்கள் அட்டவணை (Common Nouns/Proper Nouns)

மக்கள், இடங்கள், பொருற்கள் போன்ற பெயர்கள் "பொதுவானப் பெயர்சொற்கள்" ஆகும். தனிப்பட்ட ஒரு நபரையோ, குறிப்பிட்ட ஓர் இடத்தையோ, பொருளையோ இந்த பொதுவானப் பெயர்சொற்கள் குறிப்பதில்லை.

முக்கியமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பமாகவும் தலையங்கமாகவும் எழுதும் பொழுதைத் தவிர இப்பொதுவானப் பெயர்சொற்களின் முதல் எழுத்து எந்த இடத்திலும் கெப்பிட்டல் எழுத்துக்களில் எழுதுவதில்லை.

அநேகமாக இந்த பொதுவான பெயர்சொற்களுடன் a, an, the போன்ற முன்னொட்டுகள் இணைந்து வரும்.

Common Nouns

Common Nouns
தமிழ்
Common Nouns
தமிழ்
actor
நடிகர்
shop
அங்காடி
actresssuhashuhasi
நடிகை
language
மொழி
student
மாணவன்
dog
நாய்
river
ஆறு
city
நகரம்
holiday
விடுமுறை
man
மனிதன்
religion
மதம்
coffeeshop
கோப்பிக்கடை
month
மாதம்
waiter
சிப்பந்தி
day
நாள்
jeans
காற்சட்டை
boy
பையன்
mobile
அழைப்பேசி
girl
சிறுமி
book
பொத்தகம்
school
பாடசாலை
building
கட்டிடம்
car
மகிழூந்து
country
நாடு
store
பண்டகச்சாலை



Proper Nouns

குறிப்பிட்ட ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ, மனிதனுக்கோ உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களையே "உரித்தானப் பெயர்சொற்கள்" என்று அழைக்கப்படுகின்றது.

இப் பெயர்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எப்பகுதியில் வந்தாலும் அதன் முதல் எழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை கவனத்தில் கொள்க.

Proper Nouns
தமிழ்
Proper Nouns
தமிழ்
Kamalahasan
கமலஹாசன்
Wal-Mart
வோல்-மார்ட்
Suhashini
சுஹாசினி
Tamil
தமிழ்
Sarmilan
சர்மிலன்
Puppy
பப்பி
Mississippi river
மிஸ்ஸிசிப்பி ஆறு
Chennai
சென்னை
4th of July
யூலை நான்காம் திகதி
Uruththiran
உருத்திரன்
Hindu
இந்து
Starbuks
ஸ்டார்பக்ஸ்
November
கார்த்திகை
Peter
பீட்டர்
Monday
திங்கள்
Levi's
லெவீஸ்
Sarmilan
சர்மிலன்
Nokia
நொக்கியா
Tamilovia
தமிழோவியா
Thirukkural
திருக்குறள்
Kilinochchi central college
கிளிநொச்சி மத்திய கல்லூரி
IFC Tower
ஐஎவ்சி கட்டிடம்
BMW
பி.எம்.டப்ளிவ்
Hong Kong
ஹொங்கொங்
Pandian store
பாண்டியன் பண்டகச்சாலை



Common Nouns and Proper Nouns

இப்பொழுது கீழேயுள்ள அட்டவணையைப் பாருங்கள். இதில் பொதுவானப் பெயர்சொற்கள், உரித்தானப் பெயர்சொற்கள் இரண்டுக்கும் இடையிலான வேறுப்பாட்டை மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

மனிதன், இடம், பொருள் போன்றவை பொதுவானப் பெயர்ச்சொற்கள் என்றால், அந்த மனிதனின், இடத்தின்,பொருளின், உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களே 'உரித்தானப் பெயர்சொற்கள்' என்றழைக்கப்படுகின்றது.

உதாரணம்:

"
நடிகர்" என்பது பொதுவானப் பெயர்சொல் என்றால், அந்த நடிகருக்கு உரித்தானப் பெயர் "கமலஹாசன்" என்பதாகும். மேலும் அட்டவணையைப் பார்க்கவும்.
Common Nouns
Proper Nouns
shop
Wal-Mart
actor
Kamalahasan
language
Tamil
actresssshuhashishi
Suhashini
dog
Puppy
student
Sarmilan
city
Chennai
river
Mississippi river
man
Uruththiran
holiday
4th of July
coffeeshop
Starbuks
religion
Hindu
waiter
Peter
month
November
jeans
Levi's
day
Monday
mobile
Nokia
boy
Sarmilan
book
Thirukkural
girl
Tamilovia
building
IFC Tower
school
Kilinochchi central college
country
Hong Kong
car
BMW


store
Pandian stores



மற்ற பெயர்சொற்களின் அட்டவணைகளையும் விரைவில் தருகின்றோம்.

No comments:

Post a Comment