Friday 20 January 2012

பழங்கள்


பழங்கள் (List of Fruits)

பழ வகைகளின் பெயர்கள் இங்கே ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பழங்களின் தமிழ் பெயர்கள் தெரியாததால் அல்லது இல்லாததால் ஆங்கில ஒலிப்பெயர்ப்புச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்பெயருக்குரிய பழங்கள் எது என்று தெரியாவிட்டால், குறிப்பிட்ட பெயரைச் சொடுக்கி பழத்தின் நிழல் படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள்.

இப்பழங்களின் பெயர்களுக்கான சரியான உச்சரிப்புக்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.


ஆங்கிலம்
தமிழ்
ஆங்கிலம்
தமிழ்
Apple
குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
மஞ்சல் நிற சிறிய பழம்
அம்பிரலங்காய்
லன்சியம்
சீத்தாப்பழம்
வர்க்கப்பழம்
முற்சீத்தாப்பழம்
எழுமிச்சை
சர்க்கரைப்பாதாமி
லோகன் பெறி
வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
கடுகுடாப் பழம்
Banana
வாழைப்பழம்
லொவிப்பழம்
லொவிப்பழம்
லைச்சி
பஞ்சலிப்பழம், ஜம்பு
மண்டரின் நாரந்தை
அவுரிநெல்லி
Mango
மாம்பழம்
மேற்கத்திய நாவற்பழம்
மெங்கூஸ் பழம்
கறுந்திராட்சை
இன்னீர்ப் பழம், முழாம்பழம்
ஒரு வகை நெல்லி
மசுக்குட்டிப்பழம்
கொட்டைப்பலா, சீமைப்பலா
முசுக்கட்டைப் பழம்
ஆனைக்கொய்யா
திராட்சை
மஞ்சல் நிற முலாம்பழம்
Orange
தோடம்பழம்
முந்திரிப்பழம், கஜு
பனம் பழம்
சீத்தாப்பழம்


சேலாப்பழம்
Papaya
பப்பாப் பழம்
சீமையிலுப்பை
கொடித்தோடை
கடார நாரந்தை
குழிப்பேரி
கிச்சலிப்பழம்
பேரி, பெயார்ஸ்
கமலாப்பழம்
Pine apple
அன்னாசிப் பழம்
சாத்துக்கொடி
ஆல்பக்கோடா
நாரந்தை
மாதுளம் பழம், மாதுளை
கொகோப்பழம்
பம்பரமாசு
குருதிநெல்லி
(ஒரு வகை)றம்புட்டான்
வெள்ளரிப்பழம்
சீமை மாதுளம்பழம்
சீத்தாப்பழம்
றம்புட்டான்
ஒரு வித நாவல் நிறப்பழம்
புற்றுப்பழம்
பேரீச்சம் பழம்
செவ்வாழைப் பழம்
பேயத்தி
ஒரு வித லொவி
ட்றொகன் பழம்
சீமையிலுப்பை
டுக்கு
நாரத்தை
முள்நாரிப்பழம், தூரியன்
அன்னமுன்னா பழம்
நெல்லி
செம்புற்றுப்பழம்
Eugenia rubicunda
சிறு நாவற்பழம்
ஜம்புப்பழம்
புளிக்கொய்யா
குறுந்தக்காளி
அத்திப்பழம்
புளியம்பழம்
சீமை பனிச்சம்பழம்
தேன் நாரந்தை
கூஸ்பெறி
Tomato
தக்காளிப்பழம்
பம்பரமாசு
முரட்டுத் தோடை
கொடி முந்திரி, திராட்சை
வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
Guava
கொய்யாப்பழம்
நீர்குமளிப்பழம்
தேன் முழாம்பழம்
இளஞ்செம்புற்றுப் பழம்
(ஒரு வித) நெல்லி
விளாம்பழம்
பலாப்பழம்
பசலிப்பழம்
ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
(பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
நாகப்பழம்


குறிப்பு:

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை என்றே நினைக்கின்றேன். காரணம் உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்தந்த நாட்டு தற்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை, அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.

உதாரணமாக:

Lychee -
லைச்சி (இது சீனாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு விதப்பழம். சீன மொழியிலான " Lychee" எனும் பெயரே இன்று உலகளாவிய ரீதியாகப் புழக்கத்தில் உள்ளது. இன்னுமொரு பழம் "Mandarin" இது ஒரு சில அடிகள் மட்டுமே வளரும் சிறிய மரத்தில் தோன்றும் ஒரு வித நாரந்தம் பழம். சீன மண்டரின் மக்களின் பெருநாள் காலத்தில் (இம்மரத்தின் காய்கள் பழுக்கும் காலம்) அப் பழங்களோடு மரத்தை வீடுகளில், கட்டிடங்களில் அழகுக்கு வைப்பது அவர்கள் மரபு. இதனால் இப்பழத்தின் பெயர் "Mandarin" என்றே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

தமிழில் எமது மொழிப் பெயரான "மாங்காய்" என்பதையல்லோ "Mango" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.

எனவே உலகில் உள்ள எல்லா வகையானப் பழங்களது பெயர்களையும் தமிழ் படுத்துதல் அவசியமான ஒன்றாகத் தோன்றவில்லை. அப்படியே தமிழ் படுத்தினாலும் அது அனைத்து தமிழ் சமுகத்தையும் சென்றடையுமா? என்பது இன்னுமொரு கேள்வியாகும். "Apple" எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான் அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.

இருப்பினும் புழக்கத்தில் வேற்று மொழி சொற்களை நாம் பயன்படுத்தினாலும், அவற்றிற்கான தமிழ் கலைச்சொற்கள் இருக்குமாயின் அவற்றை தமிழர்களான நாம் அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும். இவ்வலைத்தளத்தில் எழுதப்பட்டிருக்கும் பழங்களின் பெயர்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் அல்லது வேறு ஒத்தக்கருத்துச் சொற்கள் அறிந்திருப்பீர்களானால் அவற்றைப் பின்னூட்டத்தில் குறித்து வைத்துவிட்டுச் செல்லும் படிக்கேட்டுக்கொள்கின்றேன். அவை யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம் அல்லவா?

No comments:

Post a Comment