Sunday, 15 January 2012

ஆங்கிலப் பெயர்சொற்களின் பிரிவுகள் 22


ஆங்கில பாடப் பயிற்சி 22 (may be able to)

இன்றையப் பாடம் Grammar Patterns 01 இன் இலக்க வரிசைப்படி 25 வது வாக்கியமாகும்.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

இந்த வாக்கிய அமைப்பைச் சற்று கவனியுங்கள். இதில் “may be” என்பது செய்யலாம்”, பார்க்கலாம்”, வரலாம்போன்ற நிச்சயமற்றத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.

அதேவேளை “+ able to” சாத்தியத்தை அல்லது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகின்றது. இதில் ஆங்கில பாடப் பயிற்சி 16 இல்முடியும்எனும் நிகழ்காலப் பயன்பாட்டினையும், ஆங்கில பாடப் பயிற்சி 17 இல்முடிந்ததுஎனும் இறந்தக் காலப் பயன்பாட்டினையும் கடந்தப் பாடங்களில் கற்றோம். இன்றைய இப்பாடத்தில் “may” உடன் “be able to” இணைந்துமுடியுமாக இருக்கலாம்என நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

இந்த வாக்கிய அமைப்புகளில் தன்னிலை, முன்னிலை, படர்க்கை (First, Second, Third person) மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "may be able to" மட்டுமே பயன்படுகின்றது. கீழே கவனியுங்கள்.

Positive (Affirmative)
Subject + be + able + infinitive
I /You /He /She /It / We / You /They + may be + able + to do a job.

Negative
Subject + be + not + able + infinitive
I /You /He /She /It /You /We /They + may + not + be + able + to do a job

Question (Interrogative)
Be + subject + be + able + infinitive
May + I /you /he /she /it /you /we /they + be able + to do a job?

+ be able to ஒரு துணைவினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாக்கிய அமைப்புக்களில் எப்பொழுதும் பிரதான வினைக்கு முன் “to” எனும் முன்னொட்டு இணைந்தே பயன்படும். (be able to has an infinitive form)

சரி இப்பொழுது வழமைப்போல் இவ்வாக்கிய அமைப்புக்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்வோம்.

May you be able to do a job?
உன்னால் செய்ய முடியுமாக இருக்குமா (லாமா) ஒரு வேலை?
I may be able to do a job.
என்னால்/எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.
I may not be able to do a job.
என்னால்/எனக்கு செய்ய முடியாமலிருக்கலாம் ஒரு வேலை.

May you be able to speak in English very soon?
உன்னால் பேசமுடியுமாக இருக்குமா (லாமா) ஆங்கிலத்தில் வெகு விரைவில்?
I may be able to speak in English very soon.
என்னால்/எனக்கு பேசமுடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில் வெகு விரைவில்.
I may not be able to speak in English very soon.
என்னால்/எனக்கு பேசமுடியாமலிருக்கலாம் ஆங்கிலத்தில் வெகு விரைவில்.

May you be able to go to university?
உன்னால் போகமுடியுமாக இருக்குமா (லாமா) பல்கலைக் கழகத்திற்கு?
I may be able to go to university.
என்னால்/எனக்கு போக முடியுமாக இருக்கலாம் பல்கலைக்கழகத்திற்கு.
I may not be able to go to university.
என்னால்/எனக்கு போக முடியாமலிருக்கலாம் பலகலைக்கழகத்திற்கு.

மேலும் 10 வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். பிழையற்ற உச்சரிப்புப் பயிற்சிக்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

1. I may be able to go to Australia.
எனக்கு போக முடியுமாக இருக்கலாம் அவுஸ்திரேலியாவிற்கு.

2. I may be able to read novels in the hostel.
எனக்கு வாசிக்க முடியுமாக இருக்கலாம் நாவல்கள் விடுதியில்.

3. I may be able to sing in the concert.
எனக்கு பாட முடியுமாக இருக்கலாம் சங்கீதக் கச்சேரியில்.

4. I may be able to vote next year.
எனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கலாம் அடுத்த வருடம்.

5. I may be able to go to China.
எனக்கு போகமுடியுமாக இருக்கலாம் சீனாவிற்கு.

6. I may be able to return back home tomorrow.
எனக்கு திரும்பி வர முடியுமாக இருக்கலாம் வீட்டிற்கு நாளை.

7. I may be able to buy an iPhone.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கலாம் ஓர் ஐபோன்.

8. I may be able to submit to the court.
எனக்கு ஒப்படைக்க முடியுமாக இருக்கலாம் நீதிமன்றில்.

9. I may be able to demonstrate that.
எனக்கு மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கலாம் அதை.

10. I may be able to marry next year.
எனக்கு திருமணம் செய்யமுடியுமாக இருக்கலாம் அடுத்த வருடம்.

Homework:

A. மேலே நாம் கற்ற வாக்கியங்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பின்பற்றி இந்த 10 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. ஒரு சம்பவம் அல்லது செயலின் ஆற்றலை, சாத்தியத்தின் நிச்சயமற்றத் தன்மையை வெளிப்படுத்தும் வாக்கியங்களாகமுடியுமாக இருக்கலாம், முடியாமல் இருக்கலாம்என இரண்டு பட்டியல்களாக இட்டு எழுதிப் பயிற்சி பெறுங்கள்.

D. வழமையாகக் கூறுவதையே இன்றும் கூறுகின்றோம். உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்விக் கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யுங்கள். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். இதுவே எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கான வழி. ஆரம்பத்தில் விடப்படும் சிறுப் பிழைகளும் காலப்போக்கில் மறைந்து நம்மலாலும் வெகு விரைவில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசமுடியும்.

குறிப்பு

கேட்கப்படும் கேள்விகளுக்கு உறுதியான, சரியான பதில்களாக அல்லாமல், நிச்சயமற்ற பதில்களுக்காகவே இவ்வாக்கிய அமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. எனவே இவ்வாக்கிய அமைப்புகள் பதில்களாகவே அதிகம் பயன்படுகின்றன. கேள்விகளாகப் பயன்படுவது மிகக் குறைவு.

சிறு விளக்கம் (இப்பாடத்துடன் தொடர்புடையது)

இந்த “able” எனும் சொல் ஒரு (Adjective) பெயரெச்சமாகும். இது ஆற்றலை, சாத்தியத்தை வெளிப்படுத்தப் பயன்படுகின்றது. அதாவதுமுடியும்/ முடியுமாகஎனும் அர்த்தத்தில் பயன்படுகின்றது என்பதை நாம் இப்பாடத்திலும் கடந்தப் பாடங்களிலும் கற்றுள்ளோம்.

இந்த “able” பிற்சேர்க்கையாகவும் பயன்படுகின்றது. அப்பொழுது இதன் அர்த்தம் முடியுமான/ கூடிய/ தகுந்த என்பதுப் போன்று பயன்படுகின்றது. கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.

Eat – சாப்பிடு
Able – முடியுமான/கூடிய
Eatableசாப்பிடக் கூடிய/முடியுமான

Love – நேசி
Able – முடியுமான/கூடிய
Loveableநேசிக்கக் கூடிய/முடியுமான

Use - பயன்படுத்து
Able – முடியுமான/கூடிய
Usable பயன்படுத்தக் கூடிய/முடியுமான

Sale – விற்பனைச் செய்
Able – முடியுமான/ கூடிய
Salable விற்பனைச்செய்யக் கூடிய/முடியுமான

மேலும் இது போன்ற சொற்களை அறிய விரும்புவோர் சொற்களஞ்சியத்தில் பார்க்கலாம். (அடுத்தப் பதிவில் தருகின்றோம்.)

No comments:

Post a Comment