Sunday, 15 January 2012

ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் 23


ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Countable Nouns & Uncountable Nouns)

ஆங்கில பெயர்சொற்களின் வகைகளில் அதிகமாக பயன்படுவது கணக்கிடுப் பெயர்சொற்களும், கணக்கிட முடியாப் பெயர்சொற்களும் ஆகும். இவற்றை இன்றையப் பாடத்தில் பார்ப்போம். இந்த இரண்டு வகைகளையும் இரண்டு தலைப்புகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

கணக்கிடுப் பெயர்சொற்கள் (Countable Nouns)

கணக்கிடுப் பெயர்சொற்களை மிக எளிதாக அறிந்துக்கொள்ளலாம். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக்கூடிய பெயர்கள் எல்லாம் கணக்கிடுப் பெயர்சொற்களாகும். ( Countable nouns can be "counted".)
No:
Countable Nouns
தமிழ்
1
bookbookbookbookbook
பொத்தகம்
2
applesshuhashishi
குமளிப்பழம்
3
dog
நாய்

4
cat
பூனை
5
animal
மிருகம்

6
man
மனிதன்
7
person
நபர்

8
bottle
போத்தல்

9
box
பெட்டி

10
coin
நாணயம்

11
computer
கணனி

12
shirt
சட்டை
13
trouser
சட்டை

14
cup
கோப்பை

15
plate
தட்டு

16
spoon
கரண்டி

17
fork
முற்கரண்டி

18
table
மேசை

19
chair
ஆசனம்

20
bag
பை

21
carton
அட்டைப்பெட்டி

22
bowl
கிண்ணம்
23
calendar
நாற்காட்டி

24
house
வீடு

25
people
மக்கள்


உதாரணம்: ஒரு மேசையின் மேல் பொத்தகங்கள் இருக்கின்றன. அவை எத்தனை பொத்தகங்கள், என்று அறிந்துக்கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வோம்? நாம் ஒன்று, இரண்டு, மூன்று, என எண்ணி கணக்கிடுவோம் அல்லவா? ஆம்! அவ்வாறு எண்ணி கணக்கிடக் கூடிய எல்லா பெயர்களுமேகணக்கிடுப் பெயர்சொற்கள்ஆகும்.

எடுத்துக்காட்டாக:

a book, two books, three books.
an apple, two apples, three apples

கணக்கிடுப் பெயர்சொற்கள் ஒருமையாகவோ பன்மையாகவோ இருக்க முடியும். (Countable nouns can be singular or plural.)

book – books
apple – apples

இவ்வாக்கியங்களில் ஒருமை பன்மை பயன்படும் விதங்களை அவதானியுங்கள்.

My dog is playing.
My dogs are playing.

கணக்கிடுப் பெயர்சொற்கள் ஒருமையாகப் பயன்படும் போது ஓர், ஒரு (a/ an) போன்ற சுட்டிடைச் சொற்களை நாம் பயன்படுத்த முடியும். (We can use the indefinite article a/an with countable nouns)

My wife is a Doctor.
Sarmilan is an English Teacher.

எண்ணிக்கையை இலக்கங்களால் ஒன்று, இரண்டு, மூன்று என பயன்படுத்துவதுப் போன்றேகொஞ்சம், ஏதாவது, ஒரு சில, நிறைய” (Some, any, a few, may) போன்ற சொற்களையும் கணக்கிடுப் பெயர்சொற்களுடன் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் உள்ளன. (We can use some, any, a few, many with countable nouns.)

I need to buy some new trousers
Have you got any pens?
I've got a few dollars.
I haven't got many pens.

கணக்கிட முடியாப் பெயர்சொற்கள் (Uncountable Nouns)

எண்ணிக்கை அடிப்படையில் எண்ணிக் கணக்கிட முடியாதப் பெயர்கள் அல்லது சொற்கள்கணக்கிட முடியாப் பெயர்சொற்கள்ஆகும். (Uncountable nouns cannot be counted.) ஆங்கிலத்தில் இதை “Mass Nouns” என்றும் அழைப்பர்.

உதாரணம்:
No:
Uncountable Nouns
தமிழ்
1
adviceadviceadviceadvice
அறிவுரை
2
bread sshuhashishi
வெதுப்பி
3
rice
அரிசி/ சோறு

4
sugar
சீனி
5
sand
மணல்

6
flour
மாவு (தூள்)
7
powder
துகள்

8
dust
தூசு

9
jelly
குழம்பு/ பாகு

10
oil
எண்ணை

11
water
தண்ணீர்

12
juice
சாறு
13
milk
பால்

14
gas
வாயு

15
butter
வெண்ணை

16
music
இசை

17
furniture
தளப்பாடம்

18
coffee
கோப்பி

19
wet
ஈரம்

20
messy
அசுத்தம்

21
rain
மழை

22
knowledge
அறிவு
23
electricity
மின்சாரம்

24
power
சக்தி

25
news
செய்தி


சாதாரணமாக கணக்கிட முடியாப் பெயர்சொற்கள் ஒருமையானதாகவே கருதப்படுகின்றது. (We usually treat uncountable nouns as singular.)

எடுத்துக்காட்டாக:

Milkபால்

இது ஒரு ஒருமை சொல்லாகும். இதனை ஒரு போத்தல் பால், இரண்டு போத்தல் பால், மூன்று லீட்டர் பால் என அதன் கொள்ளளவை அளவிட்டுக் கூறமுடியுமே தவிர; ஒரு பால், இரண்டு பால்கள், மூன்று பால்கள் என பாலை கணக்கிட்டு பன்மையாகக் கூறமுடியாது. அதனால் தான் இவற்றை கணக்கிட முடியாப் பெயர்சொற்கள் எனப்படுகின்றன.

a liter of milk
a bottle of milk

இதுப்போன்ற கணக்கிட முடியாப் பெயர்சொற்களை எண்ணிக்கையின் அடிப்படியில் அல்லாமல், அளவுகளால் அளவிட்டுப் பேசப்படுகின்றது. அதாவது கொள்ளளவுகளை எண்ணிக்கையால் கூறப்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

a glass of waterஒரு கிளாஸ் (அளவிளான) தண்ணீர்
two glass of waterஇரண்டு கிளாஸ் (அளவிளான) தண்ணீர்
three glass of waterமூன்று கிளாஸ் (அளவிளான) தண்ணீர்

இப்பொழுது விளங்குகின்றதா? மேலும் இதுப்போன்றகணக்கிட முடியாப் பெயர்சொற்களைபாகங்களாக, அளவுகளாக, கொள்ளளவுகளாகக் கணக்கிடலாம். அவற்றை கீழுள்ள உதாரணங்களூடாக அறிந்துக்கொள்வோம். இது பிழையற்ற ஆங்கிலப் பயன்பாட்டிற்கு மிகவும் அவசியமானதாகும்.

water, wine, sugar, cheese, meat, butter, ketchup, mustard, rice, etc.,

a glass of water

a bottle of wine

a spoon of sugar

a jug of water

a slice of cheese

a chunk of cheese

a piece of cheese

a piece of meat

a slice of meat

a pound of meat

a bar of butter

a bottle of ketchup

a tube of mustard

a kilo of rice

a plate of rice

நீங்கள் சில வேளை, ஏன் அரிசியை எண்ணி கணக்கிட முடியாதா என்று கேட்கலாம். சிலர் ஒரு கொத்து அரிசியில் எத்தனை அரிசிகள்? என்று கேட்பதையும் நாம் பார்த்துள்ளோம். உண்மையில் அரிசி, சோறு, சீனி போன்றவற்றை ஒரு பேச்சுக்காக எண்ணி கணக்கிட முடியும் என்று நாம் கூறினாலும், அவற்றை எண்களால் எண்ணிப் பயன்படுத்துவதில்லை. காரணம் அவை நமது பார்வைக்கு மிகவும் சிறியதாக இருப்பதால் மொழி அடிப்படையில் அவற்றை அளவுகளாகவே பயன்படுத்தப் படுகின்றது. (இன்றைய விஞ்ஞான உலகிலோ தூசு, துகள்களைக் கூட கணக்கிடக்கூடிய தொழில் நுற்பச் சாதனங்கள் தோன்றிவிட்டன என்பது வேறு விடயம்.)

கவனிக்கவும்:

1. கணக்கிட முடியாப் பெயர்சொற்களுக்கு முன்பாக ஓர், ஒரு (a/ an) போன்ற சுட்டிடைச்சொற்கள் பயன்படுவதில்லை. (They do not take a/an before them.)

2. ஒன்று இரண்டு மூன்று போன்ற எண்ணிக்கையை குறிக்கும் சொற்களை கணக்கிட முடியாப் பெயர்சொற்களுக்கு முன்பாகப் பயன்படுத்துவது இல்லை.
ஆனால் சிலர் எண்ணிக்கைகளாகப் பயன்படுத்துவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். அவற்றை சற்று தெளிவுப் படுத்திக்கொள்வோம்.

Usually I have two coffees a day.
சாதாரணமாக நான் அருந்துகிறேன் இரண்டு கோப்பிகள் ஒரு நாளைக்கு.

இவ்வாக்கியத்தைச் சற்று அவதானியுங்கள். இங்கேஇரண்டு கோப்பிகள்” (two coffees) எனும் சொல், எண்ணிக்கை அடிப்படையில்இரண்டுஎன பொருள் கொள்வது தவறாகும். அதாவதுஇரண்டு கோப்பைகள் கொள்ளளவிலான கோப்பிஎன்பதையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்க. (Here coffees refers to the number of cups of coffee.)

இவ்வாக்கியத்தை இவ்வாறு கூறுவதே மிகவும் பொருத்தமானது.

Usually I have two cups of coffee a day.
சாதரணமாக நான் அருந்துகிறேன் இரண்டு கோப்பை (அளவிளான) கோப்பி ஒரு நாளைக்கு.

கேள்விகள் கேட்கும் பொழுது இவ்வாறு கேளுங்கள்.

Can/Could I have some coffee, please?

Can/Could I have a cup of coffee, please?

இதுப்போன்ற கணக்கிட முடியாப் பெயர்சொற்கள் சில சமயங்களில் கணக்கிடக்கூடிய பெயர்சொற்கள் போன்று குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றது. இவற்றை அவதானித்துப் பார்ப்பீர்களானால் அவை வகைகளாகவோ, அளவுகளாகவோ இருக்கும். இதுப்போன்ற பயன்பாட்டை அறிந்து குழப்பத்தைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

3. some, any, a little, much போன்ற சொற்களையும் கணக்கிட முடியாப் பெயர்சொற்களுடன் பயன்படுத்தலாம்.

I have got some money.
Have you got any rice?
I have got a little money.
I haven't got much rice.

4. ஆங்கிலத்தில் சில கணக்கிட முடியாப் பெயர்சொற்கள் தமிழ் உற்பட சில மொழிகளில் கணக்கிடக் கூடிய பெயர்சொற்களாக பயன்படுகின்றது. (Some uncountable nouns in English are countable in other languages including Tamil. ) இவை குழப்பமானதாகவும் இருக்கலாம். இவற்றை நாம் விளக்கமாக அறிந்துக்கொள்வது பயனுள்ளதாகும்.

Accommodation - தங்குமிடம்
advice - அறிவுரை
baggage – பயணப் பொதி
bread - வெதுப்பி
equipment - சாதனம்
furniture - தளபாடம்
garbage - குப்பை
information - தகவல்
knowledge - அறிவு
luggage - பயணப் பொதி
money - பணம்
news - செய்தி
progress - அபிவிருத்தி
research - மீளாய்வு
travel - பயனம்
work - வேலை

மேலுள்ள பெயர்சொற்களை நாம் தமிழில் தங்குமிடம்தங்குமிடங்கள், அறிவுரை - அறிவுரைகள், பொதிபொதிகள், வெதுப்பிவெதுப்பிகள், சாதனம்சாதனங்கள், தளபாடம்தளபாடங்கள், குப்பைகுப்பைகள், தகவல்தகவல்கள், அறிவுஅறிவுகள், பொதிபொதிகள், செய்திசெய்திகள், அபிவிருத்திஅபிவிருத்திகள், மீளாய்வுமீளாய்வுகள், பயனம்பயனங்கள், வேலைவேலைகள் என்று ஒருமையாகவும் பன்மையாகவும் அதாவது கணக்கிடு பெயர்சொற்களாகப் பயன்படுத்துகின்றோம். ஆனால் ஆங்கிலத்தில் இவற்றை கணக்கிட முடியாப் பெயர்சொற்களாகவே பயன்படுத்துகின்றனர்.

இந்த கணக்கிட முடியாப் பெயர்சொற்களை பன்மையாக வெளிப்படுத்த வேண்டுமாயின் ஆங்கில மொழியில் அவற்றின் அளவை, பாகத்தை, கொள்ளளவையே கணக்கிட்டுக் கூறவேண்டும். இங்கே அவ்வாறு பயன்படுத்தும் வாக்கிய அமைப்புகள் சில:

accommodation - a place to stay
advice - a piece of advice
baggage
- a piece of baggage
bread - a slice of bread, a loaf of bread
equipment - a piece of equipment
furniture
- a piece of furniture
garbage - a piece of garbage
information
- a piece of information
knowledge - a fact
luggage - a piece of luggage, a bag, a suitcase
money - a note, a coin
news - a piece of news
research
- a piece of research, a research project
travel - a journey, a trip
work
- a job, a position

சரி! இனி உங்கள் பயிற்சிகளைத் தொடருங்கள்.

ஏனைய பெயர்சொற்களின் அட்டவணைகளை எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.

ஆங்கிலப் பெயர்சொற்களின் வகைகள் (Types of Nouns) இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்

No comments:

Post a Comment