Tuesday 8 May 2012

உன் மனதோடு





நீ நடந்து செல்லும் பாதையோரம்
ஒற்றைக்காலில் நிற்கிறேன்..
ஒரு மழைக்காவது நிழலுக்காவது
என் கீழ் வந்து ஒதுங்குவாய் என்று..
தினமும் நீ என்னை கடந்து போகையில்
என் மலர்களை உன் மீது தூவி விடுகிறேன்..
என் இமைகளை அசைத்து
காற்றாக உன் சுவாசத்தில் கலக்கிறேன்..
என் சருகுகளை உன் பாதங்களினால்
மிதித்து விட்டு போகையில்
சரசரக்கும் ஒலியில் என் இதயத்துடிப்பு
கேட்கிறது..
உன் மனதோடு வெறும் மரமாகவே
நான் வாழ்கிறேன்..
எனக்குள் துடிக்கும் அன்பை
நீ அறிய மாட்டாய் அன்பே..

No comments:

Post a Comment