Tuesday 8 May 2012

அநாதைகள்



உலகில்
ஜந்துநிமிட சுகத்திற்காக மட்டும்
பிறக்கும் குழந்தைகள்
அநாதைகள்....
காமம் என்னும்
தேகசூட்டிற்கு பலியாகும்
இந்த குழந்தைகள்
பிறக்கும் போது - தங்கள்
முகவரிகளை இழந்துவிடுகிறார்கள்.
குப்பைமேடு கோயிலாய்- தினமும்
எச்சி இலைகளுக்கு
சண்டையிடும் நய்களாய்
சாலையோர வீதிகலளில் - தங்கள்
வாழ்கையை தொலைத்துவிடுகிறார்கள்...
சுகம் முடிந்தது என அவனும்.
சுமை முடிந்தது என அவளும்
சென்றுவிட்டாள்.
இந்த பாரத்தை பூமியில் சுமப்பதற்கு
யாரும் அன்னை தெரசாக்கள் இல்லை

No comments:

Post a Comment