Tuesday 8 May 2012

வாராயோ என் காதலனே..




பூக்கும் இதயத்தை
புன்னகையால் கொய்தவனே..
சேர்க்கும் கரங்கள் கொண்டு
சைகை செய்தவனே ...
பார்க்கும் இடமெல்லாம்
பாசமழை பொழிந்தவனே...
பாரே காயுதடா
பாவிமனம் நோகுதடா ..
காயா நதி போல - என்
கண்ணீரை சிந்த வைத்தாய்
காயங்கள் ஆறுமுன்னே - என்
கண்முன்னே வாராயோ ..
பூத்துத் ததும்பும் முல்லை
பொலிவிழந்து நிற்கிறது
சாய்ந்து விழுமுன்னே - என்
கண்முன்னே வாராயோ ..
தேக்கு மரமென்று - உனை
திடமாக நம்பினேனே
தேற்றுவார் யாருமின்றி
தேம்பி அழுகின்றேன்
தேயா நிலவழகி
இளந்தென்றல் பேச்சழகி - எனை
தேனின்ப வார்த்தைகளால்
எனைத் தேரேற்றி வைத்தவனே..
நீ சென்ற இடமறியேன்
என் கண்ணீரே வற்றியது
என்முன்னே வாராயோ - உன்
இன்முகத்தை காட்டாயோ ..
தவறேதும் இழைக்காதததும்
பாவை நானாவேன்
என்னுயிரே இந்நொடியே
என்னருகே வாராயோ...
என் உடலோ நலிகிறது
என் உயிர் போகத்துடிக்கிறது
உனைக்காணும் நாள்வரைக்கும்
என் உயிர் போகமாட்டாது ...!

No comments:

Post a Comment