Thursday, 5 April 2012

எங்கிருந்து வந்தாய் என் செல்லமே? ஜிமெயில் டிப்ஸ்--மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த--Firefox மொஸில்லா டிப்ஸ்--உங்கள் மேக் கம்ப்யூட்டரை வேகப்படுத்துங்கள்--வெப்சைட்டுக்கு வீடியோ--சந்தேகமும் விளக்கமும்--சுருட்டும் கீ போர்டு


எங்கிருந்து வந்தாய் என் செல்லமே? ஜிமெயில் டிப்ஸ்


நீங்கள் கூகுள் தரும் ஜிமெயில் புரோகிராமினை ஆர்வத்துடன் தொடர்ந்து பயன்படுத்துபவரா?
உங்களுக்கு வரும் ஸ்பேம் மெயில் அல்லது புதிய இமெயிலினை அது எங்கிருந்து வந்தது என்று அறிந்து கொள்ள ஆவலா? அப்படியானால் இதனை நீங்கள் நிச்சயமாய்ப் படிக்க வேண்டும். இந்தவிபரத்திற்கான அடிப்படை விபரங்கள் இமெயிலின் ஹெடரில் இருக்கும். முதலில் எந்த மெயில் குறித்துத் தெரிய விரும்புகிறீர்களோ அந்த இமெயில் மெசேஜைத் திறந்து கொள்ளவும். அதன்பின் மேலாக வலது மூலையினைப் பார்க்கவும்.
அங்கு ஒரு அம்புக் குறி இருக்கிறதா? அதில் கிளிக் செய்திடவும். இதில் கீழ் நோக்கி ஒரு மெனு விரியும். இதில் Show Original  என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்கு பல சொற்கள் குவிந்து பல வகை வரிசையாய் விளங்காத வகையில் எண்களும் சொற்களும் இருக்கும். இதில் உங்களுக்குத் தேவையானது அந்த இமெயில் அனுப்பப்பட்ட ஐ.பி. முகவரிதான். அந்த குழப்பமான வரிசைகளை உற்று நோக்கினால் ஐ.பி. முகவரியினைக் கண்டறியலாம். ஐ.பி .முகவரி தெரிந்து விட்டதா? இது யாரிடமிருந்து எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று இன்னும் விபரமாகத் தெரிய வேண்டுமா? அப்படியானால் http://www.who.is  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு ஐ.பி. முகவரியினை டைப் செய்ய வேண்டிய இடம் ஒன்று இருக்கும். அதில் இந்த ஐ.பி. முகவரியினை பேஸ்ட் செய்திடவும்; அல்லது டைப் செய்திடவும். உடன் உங்களுக்கு யாரிடமிருந்து இந்த இமெயில் மெசேஜ் வந்தது என்ற விபரம் கிடைக்கும்.
ஐகான்களை இஷ்டப்படி அமைத்திட….
விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தில் நம் கம்ப்யூட்டர் ஐகான்களை நம் இஷ்டப்பட்ட இடைவெளியில் அமைக்கலாம். ஐகானின் சைஸைக் கூட மாற்றலாம்; என்ன அப்படியா! என்கிறீர்களா!! அது எப்படி என்று பார்ப்போம்.
டெஸ்க்டாப்பில் எங்காவது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties   பிரிவைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள  Appearance  டேபில் கிளிக் செய்திடவும். அங்குள்ள  Advance  பட்டனில் அதன்பின் கிளிக்கிடவும். அங்கு Item  என்ற பிரிவில் உங்கள் ஐகானை எப்படி எல்லாம் வளைக்கலாம் என்று காணலாம். எடுத்துக்காட்டாக நெட்டு வரிசையிலும் படுக்கை வரிசையிலுமாக ஐகான்கள் அமைக்கப்படும் இடைவெளியை மாற்றலாம். அனைத்தையும் முடித்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் செட் செய்தபடி ஐகான்கள் அமைந்திருக்கும்.
எழுத்துக்களை இன்ஸ்டால் செய்திட…
எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எழுத்து வகைகளை எப்படி இன்ஸ்டால் செய்வது என்றும் நீக்குவது என்றும் பார்க்கலாம். எழுத்து என்பது டாகுமென்ட் ஒன்றில் நாம் உருவாக்கும் வடிவங்களின் அமைப்பு என்று அடிப்படையில் கொள்ளலாம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படுகையில் சில வகை எழுத்துக்கள் தாமாக பதியப்பட்டே கிடைக்கின்றன.  அவற்றில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்:
Verdana, MS Serif, MS Sans Serif, Arial, Times New Roman, Symbl, Wingdings  இவை எல்லாம் ட்ரூ டைப் (True Type)  என்ற வகை எழுத்து வடிவங்களாகும். நீங்கள் புதியதாக ஒரு எழுத்து வகையினை கம்ப்யூட்டரில் பதிக்க விரும்பினால் அது இந்த வகையில் அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த எழுத்துவகை பைலை அப்படியே முதலில் ஜஸ்ட் காப்பிசெய்து கொள்ளுங்கள். பின் விண்டோஸ் டைரக்டரியைத் திறக்க வேண்டும். சில வேளைகளில் மறைக்கப்பட்ட டைரக்டரிகளைத் திறக்கவா என்று கேள்வி கேட்கப்படும்; அதற்கு ஓகே கிளிக் செய்தால் பாண்ட்ஸ் என்னும் போல்டர் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்து திறக்க வேண்டும். பின் வழக்கமாக பைலை பேஸ்ட் செய்வது போல பேஸ்ட் கட்டளை கொடுத்தால் அந்த எழுத்து வகை இன்ஸ்டால் செய்யப்படும். போல்டரை ரெப்ரெஷ் செய்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்த எழுத்து வகை அகர வரிசையில் பட்டியலில் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். எந்த எழுத்து வகையினையேனும் நீக்க எண்ணினால் இதே பாண்ட்ஸ் போல்டரைத் திறந்து குறிப்பிட்ட பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் கட்டளை கொடுத்தால் போதும். எழுத்துவகைகளுடன் செயல்படுகையில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். எந்த எழுத்துவகையையும் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து நேரடியாக இமெயில் அட்டாச்டு பைலாக அனுப்ப முடியாது. எனவே அதனை வேறு ஒரு டிரைவ் அல்லது போல்டருக்குக் காப்பி செய்து பின்னரே அட்டாச் செய்து அனுப்ப முடியும்.
விண்டோஸ் வரைபடத்தில் இன்னொரு மைல்கல்
இப்படி தலைப்பிட்டுத்தான் சென்ற மாதம் மைக்ரோசாப்ட் வாடிக்கை நிறுவனங்களுக் கெல்லாம் ஒரு கடிதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் பில் வெக்டே அனுப்பியுள்ளார். அதில் விண்டோஸ் 7 என்னும் மாபெரும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும் ஜனவரி 2010ல் வெளிவரும் என்று அறிவித்துள்ளார். இன்னும் 18 மாதந்தான்; விஸ்டாவிற்கு அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரப்போகிறது. எக்ஸ்பிக்கும் விஸ்டாவிற்கும் இடையே 5 ஆண்டுகள் இடைவெளி இருந்தது.
தற்போது இதனைக் குறைத்து புதிய சிஸ்டம் வர இருக்கிறது. இது விஸ்டா போல பகுதி பகுதியாக இல்லாமல் தொடர்ந்து ஒரே தொகுப்பாக உள்ளது.  விஸ்டாவிற்கும் அதற்கு முந்தைய தொகுப்புகளுக்கும் இடையே பைல்களுக்கான இணைந்து செல்லும் இயக்கம் இருக்கவில்லை. இதனால் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். விஸ்டா அவ்வளவாகப் பிரபலமாகாததற்கான காரணங்களில் அதுவும் ஒன்று. எனவே விஸ்டா உருவான அதே கட்டமைப்பில் தான் விண்டோஸ் 7 பதிப்பும் உருவாகி வருகிறது. இதனால் விஸ்டா மற்றும் எக்ஸ்பி தொகுப்புக்கும் விண் டோஸ் 7 பதிப்பிற்கும் இடையே இணைந்த செயல்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டனைக் காணோம்
உங்கள் பட்டன் எப்போதாவது காணாமல் போயிருக்கிறதா? நான் இங்கு குறிப்பிடுவது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் உள்ள பட்டன்களை. பலர் மிக அவசரமாக மெனுக்களைக் கையாள்கையில் தங்களை அறியாமல் சில அடையாளங்களை ஏற்படுத்தி Create Mail, Reply, Forward, Send/Receive, Delete  போன்ற பட்டன்க ளை மறைந்து போகச் செய்துவிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் உங்கள் இமெயில் கடிதங்களை கையாள இவை வேண்டுமே. எப்படி காணாமல் போனதோ அப்படியே அவற்றை மிக எளிதாகத் திரும்பவும் கொண்டு வந்துவிடலாம்.
இந்த பட்டன்கள் எங்கு வழக்கமாக அமருமோ அந்த இடத்தில் காலியாக கிரேயாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Customize  என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.  Current Toolbars  என்று காட்டப்படும் பெட்டியில் Reset  என்னும் பட்டனில் கிளிக் செய்திடுங்கள். அனைத்து பட்டன்களும் மீண்டும் திரும்ப அதனதன் இடத்தில் வந்து அமரும். நீங்கள் கூடுதல் மகிழ்ச்சியோடு உங்களுக்கான இமெயில் கடிதங்களைக் கையாளலாம்.
73 லட்சத்து 40 ஆயிரம்
கிரே மார்க்கட் எண்ணிக்கை இல்லாமல், அசெம்பிள்டு கம்ப்யூட்டரையும் கணக்கெடுக்காமல் இந்தியாவில் சென்ற நிதியாண்டில் (2007–08)முறையாக விற்பனையான கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 73 லட்சத்து 40 ஆயிரம். இது டெஸ்க் டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் இணைந்த விற்பனையாகும்.
இந்த விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 16% கூடுதல் என இதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. லேப் டாப் கம்ப்யூட்டர் விற்பனை 114% கூடியுள்ளது. ஆனால் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் 1% மட்டுமே அதிகரித்துள்ளது. டெஸ்க் டாப் விற்பனை ரூ. 10.216 கோடி. லேப் டாப் விற்பனை மதிப்பு ரூ. 7,289 கோடி. 18 லட்சம் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 85 லட்சம் கம்ப்யூட்டர் கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment