Sunday 1 April 2012

பிளாஷ் ஷாக்வேவ் என்ன வேறுபாடு, டிஸ்க்கில் காலி இட அளவு கம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கூகுள் BUZZ சில டிப்ஸ்கள்


பிளாஷ் ஷாக்வேவ் என்ன வேறுபாடு


சில எளிய, அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வேறுபாடுகளை இங்கு காணலாம்.
இணைய தளங்களில் அம்சமான முறையில் நல்ல பொழுதுபோக்கினைத் தர வேண்டும் எனத் திட்ட மிடுகிறீர்களா? அப்படியானால் இணையதளத்தை வடிவமைக்கும் நீங்கள் பயன்படுத்த வேண்டியது பிளாஷ் அல்லது ஷாக்வேவ் சாப்ட்வேர் தொகுப்பு களைத்தான். சில இணைய தளங்கள் இந்த சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுக்களை நடத்துபவர்கள் ஷாக்வேவ் சாப்ட்வேர் தொகுப்பை முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடுமாறு கேட்டுக் கொள்வார்கள். சரி, பிளாஷ் மற்றும் ஷாக் வேவ் – இந்த இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? செயல்படும் விதத்திலா? பயன்பாட்டிலா?
இரண்டுமே:
1. முன்பு மேக்ரோமீடியா என அழைக்கப்பட்ட அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பங்களாகும்.
2. இணைய தளங்களுக்கான ப்ளக் இன் புரோகிராம்கள்.
3. வெப் பிரவுசரில் ஆக்டிவ் எக்ஸ் பயன்படுத்து கின்றன.
4. கிராபிக்ஸ், வீடியோ, அனிமேஷன்ஸ் போன்ற ஆப்ஜெக்ட்களை இணையப் பக்கங்களில் இணைக்க பயன்படுகின்றன.
இருப்பினும் இரண்டையும் சற்று உற்று நோக்கினால், சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால், இவை சற்று சாதாரணமானவை தான். இவற்றைப் பிரித்து இந்த வேறுபாடுகளைக் காணலாம்.
அடோப் பிளாஷ்:
1. அடோப் பிளாஷ் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர். பல இணைய தளங்கள் பிளாஷ் தொகுப்பை இன்ஸ்டால் செய்வதனைக் கட்டாயப்படுத்துகின்றன. டெக்ஸ்ட், கிராபிக்ஸ், வீடியோ, ஒலி ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்தி சிறப்பான விளைவுகளை உண்டாக்க இது இணைய தளங்களை வடிவமைப்பவர்களுக்கு உதவுகிறது. தளங்களைப் பார்வையிடுபவர்களிடமிருந்து தகவல்களைப் பெறும் வகையிலான வசதிகளையும் தருகிறது.
2. பிளாஷ் சார்ந்த விஷயங்கள், ஷாக்வேவ் தருவதைக்காட்டிலும் வேகமாக பிரவுசரில் தரப்படுகின்றன.
3. இணைய தளத்தைப் பார்வையிடுபவர்களிடம் ஆப்ஷன்ஸ் மற்றும் தகவல் கேட்டு அமைக்கப்படும் இன்டராக்டிவ் பக்கங்களில் பிளாஷ், பக்கங்களை வடிவமைப்பவர்களுக்கு பக்க பலமாக உதவிடுகிறது.
4. ஷாக் வேவ் தொகுப்பைக் காட்டிலும் பிளாஷ் தொகுப்பு விலை குறைவானது.
5. பிளாஷ் .SWF என்னும் பிளாஷ் பார்மட்டில் செயல்படுகிறது. “SIMPLE” Scripting Level என்பதன் ஒரு பகுதியாகும்.
அடோப் ஷாக்வேவ்:
1. 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் இணைய தளங்களைப் பார்வையிடுபவர்களால் அடோப் ஷாக்வேவ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதாக அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. முப்பரிமாணத்தில் தரப்படும் விளையாட்டுகள், சில சாதனங்கள் மற்றும் பொருட்களுக்கான காட்சிப் படங்கள், ஆன்லைனில் கற்றுக் கொள்வதற்கான பாடங்களின் விளக்கப்படங்கள் ஆகியவற்றில் ஷாக்வேவ் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
2. ஷாக்வேவ் பெரும்பாலும் ஆன்லைன் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக புரோகிராமிங் தேவைப்படும் பிரிவுகளில் இது துணைபுரிகிறது. இதன் மூலம் ஆப்ஜெக்ட்களை சுழற்றிக் கொண்டு வரலாம்.
3.பிளாஷ் பார்மட்டைத் தன் பார்மட்டிற்குள் கொண்டு வரும் திறன் ஷாக்வேவ் தொகுப்பிற்கு உண்டு. ஆனால் பிளாஷ் தொகுப்பில் இந்த வசதி கிடையாது.
4. ஷாக்வேவ் உருவாக்க அடோப் டைரக்டர் வசதி கட்டாயம் வேண்டும். இது Advanced Scripting Language என்பதன் ஒரு பகுதியாகும்.ஷாக் வேவ் பயன்படுத்த தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.
5.ஷாக் வேவ், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும் விலை மிக அதிகம்.
6. ஷாக் வேவ் .DCR என்னும் ஷாக்வேவ் பார்மட்டினைப் பயன்படுத்துகிறது. இந்த பார்மட்டினை பிரித்துப் பார்ப்பதோ, மாற்றங்களை ஏற்படுத்துவதோ மிக கடினமான ஒரு வேலையாகும். அநேகமாக முடியாது.

No comments:

Post a Comment