மைதா மாவு - 250 கிராம்
அஸ்கா சர்க்கரைப் பொடி - 125 கிராம்
வெண்ணெய் - 125 கிராம்
தேன் - 2 டீஸ்பூன்
இஞ்சி சாறு - 1/4 டீஸ்பூன்
ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 4 ஸ்பூன்
இஞ்சிப் பொடி - 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/4 ஸ்பூன்
முட்டை - 1
செய்முறை:
* முட்டையை அடித்துக் கொள்ளவும்.
* மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து நன்கு சலித்துக் கொள்ளவும்.
* வெண்ணெயுடன் சர்க்கரைப் பொடியைச் சேர்த்து அடித்து கலவையாக்கவும்.
* இதில் முட்டை 4 டீஸ்பூன், மைதா மாவு சேர்த்து, கரண்டிக் காம்பால் கலக்கி கொள்ளவும்.
* இஞ்சி துருவல், இஞ்சி சாறு, இஞ்சி பொடி, தேன் சேர்த்து நன்றாகக் கலந்து மிருதுவான கலவையாக்கிக் கொள்ளவும்.
* இந்த மாவை 1/4 இன்ச் கனமான சப்பாத்திகனாக தேய்த்து வட்டவடிவமாக துண்டு செய்து கொள்ளவும்.
* நெய் தடவிய டிரேயில் பரவலாக அடுக்கி போர்க்கினால் மேலே மெதுவாகக் குத்திக்கொள்ளவும்.
* 350 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் பேக் செய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment