பொன்மொழிகள்
எனக்குப் பிடித்த பொன்மொழிகள் சில....
- இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடினால்
நாளை உன்னைத் தேடிவரும் இன்பங்களை யார் வரவேற்பது?
- உன் கண்கள் நேர்மைறையாக இருந்தால் உனக்கு இந்த உலகத்தைப் பிடிக்கும்!
உன் நாக்கு நேர்மறையாக இருந்தால் இந்த உலகத்துக்கு
உன்னைப் பிடிக்கும்!
உன்னைப் பிடிக்கும்!
- எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் இயற்கையில் நமக்கு இல்லை. ஆனால் நம் நல்ல பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தவை!
- திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.
- நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது ஆனால் அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிது.
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ்
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் - எமர்சன்
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது - இந்தோனேசியா
கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது - தாமஸ் ஆல்வா எடிசன்
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் - செனாக்கா
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - ஜார்ஜ்
எலியட்ய் நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது- கார்ல் மார்க்ஸ்
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள் - ஜி. டி. நாயுடு
சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் நமக்கு வேண்டும் - நேரு
உனக்கு ஒரே நண்பன் நீயே, ஒரே பகைவனும் நீயே, உன்னைத் தவிர பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை
இயற்கை தன் வழியிலேயே செல்லும், அடக்குதல் என்ன செய்யும்.
சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை.
No comments:
Post a Comment