Tuesday 3 April 2012

உங்களுக்கு தெரியுமா?--வேர்ட் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…--தேவைகளை நிறைவேற்றும் – தகுதிகளைப்பணமாக்கும்--டேட்டா ரெகவரி--கூகுள் குரோம் பிரவுசரை உங்களுடையதாக்க ….


உங்களுக்கு தெரியுமா?


ஒரு பைலை அதன் புரோகிராம் மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம். குறிப்பாக படங்கள் பைல்களை இந்த வகையில் திறக்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அனைத்து வகை பைல்களையும் திறக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வெகு விரைவில் கம்ப்யூட்டரில் லோட் ஆகும். ஆனால் படங்களைத் திறக்கும் பிக்சர் மேனேஜர், அடோப் போட்டோ ஷாப் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் திறக்கப்பட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? அந்த பைலை அப்படியே மவுஸால் இழுத்து வந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவில் போட்டுவிட வேண்டியதுதான். பட பைல்கள் மட்டுமின்றி டெக்ஸ்ட் பைல்களையும் இது திறக்கும். அவுட்லுக் இமெயில்கள், ஏன் எம்.எஸ்.ஆபீஸ் டாகுமெண்ட்களையும் இது திறக்கும். ஆனால் இதற்கு மட்டும் அந்த கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இது போதாதா? சரி, அப்படியானால் ஒரு போல்டர் முழுவதையும் அப்படியே இழுத்து வந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ வில் போட்டால் என்னவாகும்? அனைத்து பைல்களும் காட்டப்படும். பின் திறக்கப்படும். வேர்டில் ஒரு சொல்லை டைப் செய்திடு கையில் அதன் பின் புலத்தில் பல வேலைகள் நடைபெறும். சொல்லின் எழுத்துக்கள் சரியாக அமைகின்றனவா என்று ஒரு சோதனை நடை பெறும். டைப் செய்வதில் உள்ள தவறுகளை மையப்படுத்தி ஏற்கனவே அவற்றிற்கான திருத்தங்கள் ஆட்டோ கரெக்ட் பட்டியலில் இருந்தால் அவை தானாக மாற்றப்படும். அந்த பட்டியலில் குறிப்பிட்ட சொல் இல்லை; ஆனால் அதில் தவறு இருந்தது என்றால் அந்த சொல்லின் கீழாக சிகப்பு நிறத்தில் கோடிழுக்கப் படும். அதில் ரைட் கிளிக் செய்தால் ஒன்றுக்கு மேற்பட்ட அதே எழுத்துக்களில் அமைக்கப் படக் கூடிய சொற்களின் பட்டியல் தரப்படும். அதிலிருந்து நமக்குத் தேவையான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வேர்டில் ஏதேனும் கிழமையை டைப் செய்திடுங்கள். கிழமைக்கான பெயர் முழுவதும் சிறிய எழுத்தில் டைப் செய்திடுங்கள். தானாக முதல் எழுத்து கேப்பிடல் எழுத்தாக மாற்றப்படும்.
wednesday என டைப் செய்தால் “Wednesday” என மாற்றப்படும். மைக்ரோசாப்ட், மொபைல் போனில் உள்ள டேட்டாவிற்கு பேக் அப் செய்திடும் வசதியினை இலவசமாக அளிக்கிறது.
My Phone’ என்னும் இலவச பேக் அப் புரோ கிராமினை அளிக்கிறது. இதனை விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். பதிந்து இயக்கினால், அதன் வெப்சைட்டில் பாஸ்வேர்ட் கொடுத்து டேட்டாவினைப் பாதுகாக்க முடியும். அந்த மொபைல் இயங்க முடியாமல் போய், புதிய மொபைலுக்கு மாறுகையில், நேரடியாக இந்த தளத்திலிருந்து டேட்டாவினை இறக்கிக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் இலவசம் என்றாலும் டேட்டாவினை அனுப்ப உங்கள் சர்வீஸ் புரவைடருக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அப்ளிகேஷன் போட்டோக் கள், வீடியோ கிளிப்புகள், டாகுமெண்ட்ஸ், காண்டாக்ட்ஸ் தகவல்கள், மியூசிக், காலண்டர் அப்பாய்ண்ட்மென்ட்ஸ், ரிமைண்டர்கள் என அனைத்தையும் ஒருமுகமாக (சிங்க்ரனைஸ்) ஒருங்கிணைக்கிறது.
வை–பி தொழில் நுட்பம் ரேடியோ அலை வரிசையில் செயல்படுகிறது. அனுப்புபவர் மற்றும் பெறுபவரிடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக ஒரு வை–பி இணைப்பு சராசரியாக 50 மீட்டர் தூரத்தில் செயல்படும். வை–பி செயல்பாட்டை மிக எளிதாகவும் பயனுள்ளதாகவும் கொண்டி ருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம் கொண்டுள்ளது. இதனை அடுத்து பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை உள்ளன.
ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ளது போலவே, ஒரு வேர்ட் ப்ராசசர், ஒரு ஸ்ப்ரெட் ஷீட் அப்ளிகேஷன், பிரசன்டேஷன் மேனேஜர் மற்றும் ஒரு டேட்டா பேஸ் அப்ளிகேஷன் ஆகியவை உள்ளன. கூடுதலாக ஒரு வெக்டார் – கிராபிக்ஸ் புரோகிராம் மற்றும் மேத்தமடிகல் பார்முலா எடிட்டரும் கிடைக்கின்றன.
பே பால் (Pay Pal) என்பது உலகின் பெரிய ஆன் –லைன் பேங்க். ஆன்லைனில் அடிக்கடி வர்த்தகம் மேற்கொள்பவர்கள் இந்த பேங்க்கில் நிச்சயம் அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். ஒரு அக்கவுண்ட்டில் 19 கரன்சிகளைப் புழங்கலாம். அமெரிக்க டாலர், கனடியன் டாலர், ஆஸ்தி ரேலியன் டாலர், ஈரோ, பவுண்ட், ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், சீன ஆர்.எம்.பி., செக் நாட்டின் கொரோனா, டேனிஷ் குரோன், போலந்து ஸ்லாட்டி, சிங்கப்பூர் டாலர், ஸ்வீடனின் க்ரோனா, ஸ்விட்சர்லாந்தின் பிராங்க், மெக்ஸிகோவின் பீஸோ, இஸ்ரேலின் ஷெகல் ஆகிய கரன்சிகளில் நீங்கள் அக்கவுண்ட்டினைக் கையாளலாம்.

No comments:

Post a Comment