உங்கள் இனிய தோழன் லேப்டாப்
சிறியதாக, எங்கும் எடுத்துச் செல்வதாக, அதிகத் திறன் கொண்டதாக இன்று மாணவர்கள், அலுவலர்கள் ஆகியோர்கள் அன்போடு பயன்படுத்தும் சாதனங்களில் ஒன்று லேப் டாப் கம்ப்யூட்டராகும். குறைவான விலையில், அதிக திறனோடு, கூடுதல் வசதிகளோடு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வருவதால், நீங்கள் நிச்சயமாய் ஒன்றை வாங்கியிருப்பீர்கள். புதிதாய் வாங்கிப் பயன்படுத்தும் வேளையில் சில பிரச்சினைகளைச் சந்தித்திருப்பீர்கள். அவை குறித்தும், அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம். தொடக்கத்தில் நாம் விரும்பிய, எதிர்பார்த்ததற்கு மேலாகவே லேப்டாப் செயல்பட்டிருக்கும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதன் வேலைத்திறன் வேகம் குறைந்திருக்கும். பேட்டரியின் திறன் எதிர்பார்த்த செயல் நேரத்தை அளிக்கத் தவறும். இன்டர்நெட் இணைப்புகள் தேவையான வேகத்தில் செயல்படாமல் தவங்கும். இந்த தடைகளை நீக்கி எப்படி உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை அதிக வேகத்துடன் செயல்பட வைக்கும் வழிகளை இங்கு காணலாம்.
1. முதலில் தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குங்கள். இவை வெளிப்படையாக இயங்கவில்லை என்றாலும், பின்னணியில் இயங்கி, உங்கள் லேப்டாப்பின் இயங்கும் திறனைத் தாமதப்படுத்தும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி என்றால் கண்ட்ரோல் பேனல் (Control Panel) சென்று அதில் ஆட் / ரிமூவ் புரோகிராம் (Add/Remove Programs)தேர்ந்தெடுத்து தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். விஸ்டா எனில் புரோகிராம்ஸ் அன்ட் பீச்சர்ஸ் (Programs and Features)தேர்ந்தெடுத்து நீக்குங்கள்.
அடுத்ததாக உங்கள் கீழாக உள்ள உங்கள் டாஸ்க் பாரில் கடிகார நேரத்திற்கு அருகே உள்ள ஐகான்களைக் கவனியுங்கள். இவை எல்லாம், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் லேப்டாப்பில் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் சார்பாக இருக்கும் ஐகான்கள். உங்கள் மவுஸின் கர்சரை, அவற்றின் மேலாகக் கொண்டு சென்றால் அந்த ஐகான்கள் எந்த புரோகிராம்களைக் காட்டுகின்றன என்று தெரியவரும். அவை வேண்டுமா என்று முடிவு செய்து, தேவையில்லை என்றால் உடனே அவற்றை நீக்கலாம்.
இந்த புரோகிராம்களை நீக்குவதால் உங்கள் ராம் மெமரியில் மற்ற புரோகிராம்கள் தாராளமாகவும் விரைவாகவும் இயங்க இடம் கிடைக்கும். ஆனால் மெமரியின் அளவு கூடாது. இதற்கு சிறிது செலவாகும். இப்போதைய லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ராம் மெமரியை அதிகப்படுத்தும் வசதிகளோடுதான் வருகின்றனர். எனவே உங்களுடைய லேப்டாப்பில் 512 எம்பி மெமரி உள்ளது எனில் அதனை 2 ஜிபி வரை உயர்த்தலாம். அப்படி உயர்த்தினால் உங்கள் எக்ஸ்பி அல்லது விஸ்டா நிச்சயம் சண்டிக் குதிரை வேகத்தில் ஓட ஆரம்பிக்கும்.

இது மிகவும் எளிதான வேலைதான். உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே உள்ள ராம் மெமரி சிப்கள் மற்றும் அவற்றினை ஏற்றுக்கொள்ளும் போர்ட்களின் தன்மை குறித்து அறிந்து கொண்டு அதற்கான கூடுதல் மெமரி சிப்களை வாங்கி பொருத்த வேண்டியதுதான். அடுத்ததாக லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பேட்டரி. காலப் போக்கில் இவை தங்களின் முழுத் திறனை இழக்கத் தொடங்கும். இதன் இடத்தில் புதிய பேட்டரிகளை வாங்கிப் பொருத்துவது நல்ல முடிவு என்றாலும், இப்போதைய லேப்டாப்களில் பேட்டரி மேனேஜ்மென்ட் சாப்ட்வேர் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். மெயின் இணைப்பிலிருந்து லேப்டாப்பினை நீக்கியவுடன், குறைவான மின்சக்தியைப் பயன்படுத்த இந்த சாப்ட்வேர்கள் இயங்கும். மேலும் தேவையில்லாத போது ஹார்ட் டிஸ்க்குகள் சுழல்வது நிறுத்தப்படும்.
இந்த ஏற்பாட்டினை நாமாகவும் மேற்கொள்ளலாம். கண்ட்ரோல் பேனல் சென்று பவர் ஆப்ஷன்ஸ்(Power options) என்பதனைத் தேர்ந்தெடுத்து அந்த அந்த விண்டோவில் தந்திருக்கும் ஒவ்வொன்றையும் செட் செய்திடலாம். இதில் மானிட்டர் மற்றும் ஹார்ட் டிஸ்க்கினை, லேப்டாப் எவ்வளவுநேரம் வேலை எதுவுமின்றி இருந்தால், நிறுத்தி வைக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். இதனால் பேட்டரியின் சக்தி கணிசமாக மிச்சம் ஆகும். இதனால் பெரிய அளவில் மின்சக்தி மிச்சமாகும் என எதிர்பார்க்க முடியாது என்றாலும், ஓரளவிற்கு பேட்டரியின் வாழ் நாள் கூடும்.
நீங்கள் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், பேட்டரியின் திறனை அதிகப்படுத்த ஒரு இலவச புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து இயக்கலாம். இந்த புரோகிராமின் பெயர் விஸ்டா பேட்டரி சேவர் (Vista Battery Saver). இதனைwww.codeplex.com/vistabattery என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை டவுண்லோட் செய்து இயக்கிவிட்டால், அது தானாகவே, லேப்டாப் மெயின் இணைப்பிலிருந்து விலக்கப்படுகையில் , அதிகம் பவர் எடுக்கும் ஏரோ ஸ்பேஸ் மற்றும் சைட் பார் டூல் ஆகியவற்றின் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்.

இன்னொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யினையும் நாம் மேற்கொள்ளலாம். சிடி அல்லது டிவிடி ட்ரைவில் எந்த ஒரு சிடியும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிடி ஏதேனும் இருந்தால், நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கும் போதெல்லாம், இந்த டிரைவ் சுழன்று செயல்பட ஆரம்பிக்கும். புதிய பேட்டரி ஒன்றை லேப்டாப்பிற்கென வாங்குவதாக இருந்தால், லேப்டாப் தயாரித்த நிறுவனம் பரிந்துரைத்த பேட்டரியினை மட்டுமே வாங்கிப் பொருத்த வேண்டும். அந்நிறுவனத்தின் இணையதளத்தினைக் காண்பது இதற்கு உதவிடும். விலை குறைவாக உள்ளது என்று அதே போன்ற வேறு பேட்டரியினை வாங்கிப் பயன்படுத்துவது லேப்டாப்பிற்கு கேடு விளைவிக்கும்.
புதிய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் தரப்படும் சில கூடுதல் வசதிகள் பழைய மாடல் லேப்டாப்களில் இல்லை என்பது பலரின் குறை. எடுத்துக் காட்டாக வெப் கேம், டிவி ட்யூனர் போன்றவற்றைக் கூறலாம். இது கம்ப்யூட்டர் உலகில் சகஜம் தான். தொடர்ந்து நமக்கான வசதிகள் பெருகி, நவீன சாதனங்கள் வந்து கொண்டு தான் உள்ளன. இதனை எளிதாகச் சமாளிக்கலாம். நூற்றுக்கணக்கான சாதனங்கள் இன்று லேப்டாப்பின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் உள்ளன. எடுத்துக் காட்டாக டிவி ட்யூனரை இணைக்கலாம்; இணைத்த பின்னர் உங்கள் லேப்டாப் ஒரு டிவியாகவும், வீடியோ ரெகார்டராகவும் செயல்படும்.

இதே போல வீடியோ சேட்டிங் செய்திடப் பயன்படும் வெப் கேமரா, வேகமான இணையத் தேடலுக்கு மொபைல் பிராட்பேண்ட் சாதனம் ஆகியவற்றை, லேப்டாப்பின் இயக்கத்தினை நிறுத்தாமலேயே, இணைத்துப் பயன்படுத்தலாம்.
யு.எஸ்.பி.போர்ட் தவிர, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் வேறு வகை இணைப்பு முகங்கள் உள்ளன. உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் பக்கவாட்டில் பாருங்கள். அங்கு பி.சி. கார்ட் அல்லது புதிதாக வந்துள்ள எக்ஸ்பிரஸ் கார்ட் ஸ்லாட் இருக்கும். இதன் மூலம் கூடுதல் சாதனங்களை இணைக்கலாம்.
எவ்வளவுக் கெவ்வளவு கூடுதலான நேரம் உங்கள் லேப்டாப்பினைப் பயன்படுத்து கிறீர்களோ, அந்த அளவிற்கு அது வெப்பத்தை வெளியிடும். இது போகப் போக அதிகரித்துக் கொண்டே இருக்கும். லேப்டாப் செயல்படாமல் போவதற்கான காரணங்களில் வெப்பமும் ஒன்று. லேப்டாப்பின் உள்ளே தரப்பட்டிருக்கும் சிறிய மின்விசிறிகள் இந்த வெப்பத்தைக் கடத்தி உள்ளே உள்ள சிப்களைக் காப்பாற்றும் என்றாலும், கூடுதலாக ஒரு கூலிங் பேட் ஒன்றை வாங்கி இணைத்துப் பயன்படுத்துவது இவ்வகையில் பாதுகாப்பினைத் தரும்.
லேப்டாப் வேகமாகவும், சிறப்பாகவும் இயங்கினாலும் அது மற்றவர்களால் தவறான வழிகளில் பயன்படுத்தப்படக் கூடாது; மேலும் அது திருடப்படக் கூடாது என்ற இரண்டு பயம் நம்மிடம் எப்போதும் உண்டு. ஏனென்றால் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதால், இது திருடு போகும் வாய்ப்பு அதிகம். மேலும் நாம் இதனைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கையில், நாம் அறியாமல் மற்றவர் இதனைப் பயன்படுத்தவும் கூடும். இதனைத் தடுக்கக் கம்ப்யூட்டரில் ஒவ்வொரு விண்டோஸ் அக்கவுண்ட்டுக்கும் ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது அவசியம். லேப்டாப்பினை இன்ஸூர் செய்வது ம் நம் இழப்பை ஒரு வகையில் ஈடு செய்திடும்.

அடுத்ததாக உங்கள் லேப்டாப்பினை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பலர் லேப்டாப்பினைச் சாதாரண லெதர் பேக்குகளில் வைத்து எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டுள்ளனர். அல்லது சூட்கேஸ்களில் மற்ற பொருள்களுடன் வைத்து எடுத்துச் செல்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் தன் லேப்டாப் கம்ப்யூட்டரினை, அதற்கெனத் தயாரிக்கப்பட்ட கேரி பேக்கில் வைத்தே விற்பனை செய்கின்றன. எனவே அவற்றையே பயன்படுத்த வேண்டும்.
இறுதியாக இன்னொன்றையும் கூற வேண்டும். லேப்டாப்பினை அப்படியே மின் சாரம் தரும் ப்ளக் ஹோலில் இணைத்துப் பயன்படுத்தலாம் என்றாலும், ஒரு சிறிய சர்ஜ் புரடக்டர் ஒன்றில் இணைத்துப் பயன்படுத்துவது நல்லது. இது மெயின் பவர் சாக்கெட்டுக்கும், லேப் டாப் அடாப்டருக்கும் இடையே அமர்ந்து தேவையற்ற மின் ஏற்ற இறக்கத்தினைச் சமாளிக்கின்றன. எந்த சாதனமும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் தன் புதுமையையும், பயன்பாட்டுத் தன்மையையும் சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கிவிடும். இருப்பினும் மேலே கூறப்பட்டுள்ள சில வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நம் லேப்டாப் கம்ப்யூட்டரின் பயன்பாட்டு நலனை கூடுதலாகச் சில ஆண்டுகள் தக்கவைக்கலாமே!

விண்டோஸ் 7 நீங்களும் கண்காட்சி நடத்தலாம்
வரும் அக்டோபர் 22ல் வெளியாக இருக்கும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கண்காட்சியினை நீங்கள் உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ, அரங்கிலோ நடத்தலாம். இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து உதவிகளையும் தருகிறது. கண்காட்சிக்கு நீங்கள் அழைக்கும் நபர்களுக்கு சிறிய பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். உங்களுக்கு விண்டோஸ் 7 தொகுப்பு பரிசாகத் தரப்படும். என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.
தன்னுடைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை அறிமுகப்படுத்துகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், சில வேளைகளில் புதிய வகையில் முயற்சிகளை மேற்கொள்ளும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுக சரித்திரத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 95 வெளியான வகைதான் இன்றும் சிறப்பாகப் பேசப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு இது வெளியானபோது அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து விளம்பரங்கள் மேற்கொள்ளப் பட்டன. விண்டோஸ் 95 தொகுப்பினை வாங்காதவர்கள் ஏதோ பாவம் செய்தவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் அதற்கான விளம்பரங்கள் இருந்தன.
வர இருக்கும் விண்டோஸ் 7 தொகுப்பினை அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் முற்றிலும் புதிய திட்டம் ஒன்றினை மேற்கொள்ள இருக்கிறது. ஆம்வே மற்றும் டப்பர்வேர் சாதனங்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்திட அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் போல மைக்ரோசாப்ட் நிறுவனமும் திட்டமிடுகிறது.

இந்த கண்காட்சியை நீங்கள் நடத்த விரும்பினால் www.houseparty.com என்ற இணைய தள முகவரி சென்று பதிந்து கொள்ளுங்கள். அவ்வாறு பதிகையில் மைக்ரோசாப்ட் உங்களிடமிருந்து பல கேள்விகளுக்குச் சரியான விடைகளை எதிர்பார்க்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் விண்டோஸ் 7 தொகுப்பை எதிர்கொள்ளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட ஒன்றா என்றெல்லாம் கணிக்கிறது. பின் உங்களைப் பற்றிய குறிப்புகளை, முகவரியை வாங்கிக் கொண்டு, விரைவில் நீங்கள் கண்காட்சி நடத்த தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்களா என்று அறிவிப்போம் எனச் செய்தி தருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்குத் தேவையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர், அதற்கான குறிப்புகள் எல்லாம் தரப்படும். நீங்கள் இதனை உங்கள் நண்பர்களுக்குப் போட்டுக் காட்டி விளக்க வேண்டும். இது போன்ற சிறிய அளவிலான காட்சி விளக்கக் கூட்டங்களுக்கு வருபவர்களில் ஒரு சிலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வாங்குவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.

இது போல ஹவுஸ் பார்ட்டி நடத்தி விண்டோஸ் 7 காட்டுவதற்கு இந்தியா உட்பட 12 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 22 முதல் 29 தேதி வரை, ஆங்காங்கே சிறு திருவிழாக்கள் போல் நடத்தி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து ஓர் எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் உருவாக்கத் திட்டமிடுகிறது.
இந்த ஐடியாவினை மைக்ரோசாப்ட், மொஸில்லா பயர்பாக்ஸிடமிருந்து பெற்றிருக்கலாம். ஏனென்றால் கடந்த ஜுன் மாதம் தன் பயர்பாக்ஸ் பதிப்பு 3 னை வெளியிட்ட போது, இது போன்ற பார்ட்டிகளை மொஸில்லா நடத்தியது. இந்த பதிப்பினை குறிப்பிட்ட நாளில் டவுண்லோட் செய்திடுமாறு கேட்டுக் கொண்டு அதில் கின்னஸ் சாதனை மேற்கொண்டது. ஜூன் 17 ஆம் நாள், 24 மணி நேரத்தில் 80,02,530 பேர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்து இந்த சாதனை மேற்கொண்டனர்.

விஸ்டா தொகுப்பிற்கு அவ்வளவாக வரவேற்பில்லை. மக்கள் எக்ஸ்பி தொகுப்பிலேயே நின்று விட்டனர். எனவே விண்டோஸ் 7 தொகுப்பிற்கு நல்ல வரவேற்பினைக் காட்ட வேண்டும் என மைக்ரோசாப்ட் திட்டமிடுகிறது. ஏற்கனவே விண்டோஸ் 7 சோதனைத் தொகுப்பினை இயக்கிப் பார்த்த சோதனையாளர்கள் மிகவும் நல்ல முறையில், நவீன வசதிகளை இது கொண்டுள்ளதாக எழுதி உள்ளனர். இந்த சூழ்நிலையில் மக்களிடம் இதனை சரியான முறையில் கொண்டு சேர்க்க மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது.
நீங்களும் இந்த திருவிழாவினை நடத்துவதில் பங்கு கொள்ள விரும்பினால் www.houseparty.comதளம் சென்று பதிந்து கொள்ளுங்கள்.
நீங்களும் இந்த திருவிழாவினை நடத்துவதில் பங்கு கொள்ள விரும்பினால் www.houseparty.comதளம் சென்று பதிந்து கொள்ளுங்கள்.
பயர்பாக்ஸ் பாதுகாப்பு
இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக பிளாக்குகள் அமைப்பவர்களிடையே, பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடிய வசதி, பயன்படுத்த எளிமையான இன்டர்பேஸ், நம்பிக்கை தரும் இயக்க தன்மை ஆகிய இதன் சிறப்புகளே, பலரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு இதனைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன. அனைத்து இன்டர்நெட் பிரவுசர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் புரோகிராம்கள் மற்றும் கெடுதல் விளைவிப்பதற்காகவே எழுதப்படும் புரோகிராம்கள் பிரவுசர் வழியாக வந்துவிடுகின்றன. பொதுவாக ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில் அடிப்படை யில் ஒரு சில பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை பழகிப் போனதால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புபவர்கள் இவற்றை மீறிச் செயல்படும் வகையில் அவற்றை வடிவமைத்து விடுகின்றனர். எனவே தொடர்ந்து பிரவுசரைப் பாதுகாக்கும் வகையில் நாம் அதனைப் பலப்படுத்த வேண்டியுள்ளது.
மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர், கம்ப்யூட்டரை, இது வைரஸ் போன்ற தீய செயல்களை மேற்கொள்ளும் தொகுப்புகளிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களை சப்போர்ட் செய்கிறது. அத்துடன் பயர்பாக்ஸ் பிரவுசருக்கென வடிவமைக் கப்பட்டுள்ள பல ஆட் ஆன் தொகுப்புகளும் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றையும் பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்கிறது. வங்கிக் கணக்குகள் கையாளுதல், ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் செய்து வாங்குதல், அவற்றிற்குப் பணம் செலுத்துதல், சோஷியல் நெட்வொர்க் கிங்கில் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளல், கல்வி கற்றல் போன்ற பணிகளில் நாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துவதால், ஒரு பாதுகாப்பான சூழ்நிலை நமக்கு அவசியமாகிறது.
மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் தரப்பட்டுள்ள ஆட்–ஆன் தொகுப்பு களிலிருந்து சிறப்பாகச் செயல்படும் சில தொகுப்புகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.
மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் தரப்பட்டுள்ள ஆட்–ஆன் தொகுப்பு களிலிருந்து சிறப்பாகச் செயல்படும் சில தொகுப்புகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.
1.Adblock Plus: இந்த ஆட் –ஆன் தொகுப்பு வாரந்தோறும் ஏறத்தாழ 8 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பேனர்கள், விளம்பரங்களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களை முற்றிலுமாய்த் தடுக்கிறது. கிடைக்கும் இணையதள முகவரி: http://addons.mozilla.org/enUS/firefox/addon/1865 இந்த தொகுப்பைப் பதிந்த பின்னர், ஏதேனும் பேனர் விளம்பரம் வந்தால், அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கான்டெக்ஸ்ட் மெனுவில் Adblock Plus என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அந்த பேனர் மீண்டும் ஒரு முறை அந்த கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்படமாட்டாது. அல்லது தொகுப்பை முதலில் பயன்படுத்தத் தொடங்குகையில் பில்டர் பயன்பாட்டினை இயக்கிவிட்டால் இது போன்ற பேனர் விளம்பரங்களை அண்டவிடாது.
2.Better Privacy:
பொதுவாக குக்கிகளால் நமக்கு சில நன்மைகள் இருந்தாலும், பல குக்கிகள் நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் வேலைக்கே அனுப்பப்படுகின்றன. இவற்றை நம் பிரவுசிங் முடிந்த பின்னர் அழித்துவிடலாம். ஆனால் சில குக்கிகள் அழிக்கப்பட முடியாத வகையில் உருவாக்கப்பட்டு பதிக்கப்படுகின்றன. இவற்றை சூப்பர் குக்கிகள் என அழைக்கின்றனர். இவற்றிலிருந்தும் பாதுகாக்கும் வேலையை இந்த ஆட் ஆன் புரோகிராம் தருகிறது. இந்த ஆட் ஆன் புரோகிராமினை https://addons.mozilla. org/enUS/firefox/addon/6623 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த பிளாஷ் குக்கிகளை எல்.எஸ்.ஓ. குக்கிகள் எனவும் அழைக்கின்றனர். இவை நம் கம்ப்யூட்டரில் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வகையில் பதியப்படும். ஒரு குக்கியின் அளவு 100 கேபி. வழக்கமான சாதாரண குக்கியின் அளவு 4 கேபி மட்டுமே. இந்த குக்கிகளை பிரவுசர்கள் அறிவதில்லை. எல்.எஸ்.ஓ. குக்கிகளை பிரவுசர்களாலும் அழிக்க முடிவதில்லை. இந்த வகை குக்கிகள் சிஸ்டத்தில் பதிந்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாகப் பெற்று, நாம் அறியாமலேயே மற்ற கம்ப்யூட்டருக்கு அனுப்பும் தன்மை கொன்டவை.
பிளாஷ் குக்கிகள் எப்போது சென்ட்ரல் சிஸ்டம் போல்டரில் தான் பதியப்படுகின்றன. எனவே இவை நீக்கப்படாது. நீக்குவதும் சிரமம். Better Privacy புரோகிராம் ஒவ்வொரு முறை நீங்கள் பிரவுசரை மூடும்போது, இவை அனைத்தையும் நீக்கிவிடுகிறது. அல்லது ஒவ்வொரு பிளாஷ் குக்கியாக இந்த புரோகிராம் மூலம் பெற்று அவற்றை நீக்குவதா, வைத்துக் கொள்வதா என நீங்கள் தீர்மானிக்கலாம்.

3. No Script:
இணையத்தில் எந்த வகையில் நம்மை அழிக்கும் புரோகிராம்கள் வரும் என்று சொல்ல முடியாத வகையில் பல வகை புரோகிராம்கள் உள்ளன. இவற்றில் ஸ்கிரிப்ட் என்பதுவும் ஒன்று. இதிலிருந்து பாதுகாக்கும் வழிகளை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த புரோகிராமினை https://addons.mozilla. org/enUS/firefox/addon /722 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
2006 ஆம் ஆண்டின் சிறந்த புரோகிராமாக இது விருது பெற்றது. பிரவுசருக்கான சரியான பாதுகாப்பினைத் தருகிறாது. இந்த புரோகிராம் ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றை நாம் அனுமதிக்கும் நேரத்தில், அனுமதிக்கும் தளங்களில் இருந்து வந்தால் மட்டுமே இயங்க வைக்கும். இந்த புரோகிரா மினைப் பயன்படுத்துவது குறித்த மேலதிகத் தகவல்களுக்குhttp://noscript. net/faq என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

4. WOT Web of Trust:
இணையப் பயன்பாட்டின் போது, நம்முடைய கம்ப்யூட்டருக்குள் நம் அனுமதியின்றி சிலர் ஊடுருவி, பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பார்கள். இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் இந்த புரோகிராம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும். https://addons.mozilla.org/enUS/firefox/addon/ 3456 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆபத்து நிறைந்த இணைய தளங்களுக்கு நீங்கள் செல்கையில் இது பலத்த எச்சரிக்கையினைத் தரும். ஓர் இணைய தளம் ஸ்பேம் மற்றும் மால்வேர்களை அனுப்ப முயற்சிக்கையில் இந்த புரோகிராம் அந்த செயலை மோப்பம் பிடித்து அறிந்து உடனே எச்சரிக்கை கொடுத்து, நம்மை அந்த தளத்தின் இணைப்பைத் துண்டித்துக் கொள்ளச் சொல்லும். இந்த புரோகிராமில் பல லட்சம் தளங்களின் தன்மை குறித்த தகவல் பதியப்பட்டுள்ளது. இந்த புரோகிராம் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களுக்கும் சப்போர்ட்டுக்கும் http://www.mywot.com/ support என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

5.Stealther: நாம் இணையத்தில் உலா வருகையில், தகவல்களைத் தேடுகையில், இமெயில் களைப் பெறுகையிலும் அனுப்பும்போது நம் இணையப் பயணம் குறித்த பல தடயங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ், டிஸ்க் கேஷ், பைல் ஹிஸ்டரி, படிவங்களில் தரப்படும் தகவல்கள் என இவை பலவகைப்படுகின்றன. இது போன்ற எந்த தடயமும் இல்லாமல் இந்த புரோகிராம் பார்த்துக் கொள்கிறது. இதனை https://addons. mozilla.org/enUS/firefox/addon/ 1306 என்ற முகவரியில் பெறலாம். இந்த புரோகிராம் நாம் பிரவுசரை இயக்கியவுடன் தானும் இயங்கி தடயங்களை ஏற்படுத்தும் புரோகிராம் பகுதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.
6. Roboform Toolbar: நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இந்த புரோகிராம் உதவுகிறது. https://addons.mozilla.org/enUS/ firefox/addon/750என்ற தளம் இந்த புரோகிராமைத் தருகிறது.
பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்து நாம் அவற்றை முறையாகவும் தவறின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.
பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்து நாம் அவற்றை முறையாகவும் தவறின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.
7. Key Scrambler Personal:
நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் மற்றும் பிற முக்கிய தகவல்களை, நாம் அறியாமலேயே நம் கம்ப்யூட்டர் களுக்குள் அமர்ந்து அறியும் புரோகிராம் களில் ஒரு வகை கீ லாக்கர் என்பதாகும். இவை நாம் அழுத்தும் கீகளைப் பதிவு செய்து பின் இதனைப் பதித்தவருக்குத் தரும். இன்டர்நெட் மையங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பொது கம்ப்யூட்டர்களில் சிலர் இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்துவார்கள். ஏன், நம் கம்ப்யூட்டர்களில் பிறரை அனுமதித்தால், நம் அனுமதியில்லா மலேயே அவர்கள் இந்த வேவு பார்க்கும் வேலையை மெற்கொள்ளலாம். இத்தகைய கீ லாக்கர்கள் புரோகிராம்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது இந்த Key Scrambler Personal புரோகிராம். இதனை https://addons. mozilla.org/enUS/firefox /addon/3383 என்ற முகவரியிலிருந்து பெறலாம்.
பிரவுசர் பாதுகாப்பு என்பது நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு தடுப்பு வழியாகும். அப்போதுதான் நாம் நிம்மதியாக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

பிளாஷ் டிரைவில் அப்ளிகேஷன் புரோகிராம்கள்
எளிதான டேட்டா பரிமாற்றத்திற்கு உதவியபிளாஷ் டிரைவ்கள், தற்போது மேலும் பல பயன்களைத் தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சில அப்ளிகேஷன் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல் பயன்படுத்த இந்த பிளாஷ் டிரைவ்கள் பயன்படுகின்றன.
பிளாஷ் டிரைவ்களில் காப்பி செய்து அப்படியே கம்ப்யூட்டரில் செருகிப் பயன்படுத்த ஆங்காங்கே இணையத்தில் கிடைக்கும் புரோகிராம்கள் குறித்து சில தகவல்கள் ஏற்கனவே இந்த பக்கங்களில் தரப்பட்டுள்ளன. ஆனால் அண்மையில் ஓர் இணைய தளம் இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் பலவற்றை வகை வகையாய் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இணைய தளத்தின் முகவரி:http://portableapps.com/apps இங்கே நூற்றுக் கணக்கில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று அப்படியே வைத்துப் பயன்படுத்தக் கூடிய தன்மை உடையவை என்பது இவற்றின் சிறப்பு. இவை அனைத்தும் கீழே குறிப்பிடப்படும் தலைப்புகளில் குழுக்களாக அமைத்துத் தரப்பட்டுள்ளன. அவை: Accessibility, Development Education Games Graphics & Pictures Internet Music & Video Office Operating Systems, Utilities.
இவற்றை பிளாஷ் டிரைவில் பதிய முதலில் பிளாஷ் டிரைவினைக் கம்ப்யூட்டரில் இணைக்க வேண்டும். பின் இந்த புரோகிராம் மீது கிளிக் செய்தால்,எங்கு இன்ஸ்டால் செய்திட என்ற கேள்வி கேட்கப்படும். அப்போது பிளாஷ் டிரைவின் டிரைவைக் கிளிக் செய்தால், பிளாஷ் டிரைவில் அந்த புரோகிராம் பதியப்படும். பின் அதனை எடுத்துச் சென்று, கம்ப்யூட்டரில் இணைத்து நேரடியாகப் பயன்படுத்தலாம். புரோகிராமினை கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
விண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்
விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன.
1. ஐகால்சி – iCalcy
உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இயக்கிப் பாருங்களேன். இந்த புரோகிராம்http://aviassin.wikidot.com/icalcy என்ற முகவரியில் இலவசமாக டவுண்லோ செய்து கொள்ள கிடைக்கிறது.
2. விண்டோஸ் 7 சூப்பர் பார்:
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியான தகவல்களில் அதன் தோற்றங்கள் சிலவற்றில், சிலருக்கு ஆர்வம் இருக்கலாம். இந்த சிஸ்டத்தின் சைட் பார் விஸ்டாவின் டாஸ்க் பார் போல இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். இந்த விருப்பத்தின் அடிப்படையில் சீன கம்ப்யூட்டர் பொறியாளர் ஒருவர் டாஸ்க் பாரினைச் சற்று மாற்றி விண்டோஸ் 7 சூப்பர் பார் போல அமைத்துத் தந்துள்ளார். இந்த புரோகிராம் இலவசமாகhttp://flarejune.deviantart.com/art/ TaskbarResizeToolforVista104078306 என்னும் முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்த்தும் கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் விசுவல் சி ப்ளஸ் ப்ளஸ் 2008 இல்லை என்று பொருள். அதனை இன்ஸ்டால் செய்து பின் இந்த புரோகிராமினை இயக்க வேண்டும். இந்த விசுவல் சி++ புரோகிராம் கிடைக்க http://www. microsoft.com /downloads /details.aspx? familyid= A5C842753B974AB7A40D3802B2AF5FC2&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. கிளாஸ் சி.எம்.டி. (GlassCMD) “டெஸ்க்டாப்பில் கிடைக்கும் விண்டோ எல்லாம், சும்மா பளபளன்னு இருக்கணும்; அடுத்த பக்கம் ஊடுறுவித் தெரியும்படி கண்ணாடியா இருக்கணும்” என்று என் நண்பர் ஒருவர் கதை அடித்துக் கொண்டிருப்பார். அவரைப் போன்ற விருப்பம் உள்ள நபர்களுக்காகவே கிளாஸ் சி.எம்.டி. என்ற புரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சின்ன புரோகிராம்; எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்; இதைக் கம்ப்யூட்டரில் பதிந்து, அதன் மீது டபுள்கிளிக் செய்தால், சிஸ்டம் ட்ரேயில், கடிகாரம் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது.உங்களுடைய கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை, ஊடுறுவிச் செல்லும் கண்ணாடியாக மாற்றுகிறது. இது உங்கள் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மாற்ற வில்லை. அதனை பின்புறம் உள்ள பொருட்களைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுகிறது. இந்த புரோகிராமினை http://komalo.deviantart.com/art/GlassCMDforVista121457868 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இது ராம் மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் 1 எம்பிக்குக் குறைவாக உள்ளதால், தாராளமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.

4. பயர்பாக்ஸ் கண்ணாடி (Glassy Firefox):
பயர்பாக்ஸ் பிரவுசரின் மிகப் பெரிய பலம் அது தரும் பாதுகாப்பு; அதற்கு அடுத்தபடியாக, அதன் ரசிகர்கள் கூட்டம். பல கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் தீம்ஸ், எக்ஸ்டென்ஷன்ஸ் என்ற பெயரில் பல அரிய, வேடிக்கையான மற்றும் கூடுதல் பயன்தரும் புரோகிராம்களை உருவாக்கி அவற்றை ஆட் ஆன் தொகுப்புகளாகத் தருகிறார்கள். நியோவின் (Neowin) என்பவர் அம்ப்ரூஸ் (Ambroos) என்னும் கிளாஸி பயர்பாக்ஸ் தீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனைப் பதிந்து இயக்க 64 பிட் விண்டோஸ் இயக்கத் தொகுப்பு இருக்க வேண்டும். ஜிமெயில் செக்கர் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டால், நீங்கள் இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். இது பயர்பாக்ஸ் தளத்தில் கிடைக்கவில்லை. கிடைக்கும் முகவரிhttp://www.neowin.net /forum/index.php?s=ee8053c 1716233beb4b6dcb3715500cc&showtopic=7 46714

5. நோட்பேட் கண்ணாடி (Transparent Notepad): கிளாஸ் சிஎம்டி போல இது இருந்தாலும் சற்று வித்தியாசமான ஊடுறுவும் கண்ணாடியில் இயங்குவது போல நோட்பேடினை இந்த புரோகிராம் அமைக்கிறது. மற்ற புரோகிராம் போல, ஜஸ்ட் ஒரு கண்ணாடி இன்டர்பேஸ் தராமல், மொத்த நோட்பேட் புரோகிராமினையும் ஒரு கிளாஸ் தட்டில் அமைக்கிறது. ஒரு விதத்தில் வேர்ட்பேட் போலவும் செயல்படுகிறது. அனைத்து பைல்களையும் ஆர்.டி.எப். (.rtf) பார்மட்டில் சேவ் செய்கிறது. இருப்பினும் டி.எக்ஸ்.டி. (.txt) அல்லது எச்.டி.எம்.எல். (.html) பார்மட்டில் சேவ் செய்திடும் ஆப்ஷனையும் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://sourceforge.net /projects/transnote/
6. கிளாஸ் 2கே (Glass 2K):
மற்ற புரோகிராம்கள் போல் கண்ணாடி போன்ற எபக்ட் தராமல், சற்று ஒளி ஊடுருவும் வகையில் இது விண்டோ வினை அமைக்கிறது. ஒவ்வொரு விண்டோவினையும் இவ்வாறு செயல்படுத்துகிறது. தற்போதைக்கு விண்டோஸ் 2000 மற்றும் எக்ஸ்பியில் மட்டும் செயல்படுகிறது. இதைச் செயல்படுத்தும்போது ‘Runtime DLL/OCX File error’ போன்ற எர்ரர் ஏற்பட்டால், இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இதற்கான தீர்வுகளும் கிடைக்கின்றன.
No comments:
Post a Comment