கூகுள் விளம்பரம் கெடுதல் விளைவிக்குமா?
கூகுள் விளம்பரம் கெடுதல் விளைவிக்குமா?
நெய்வேலியில் இருந்து வாசகர் ஒருவர் குகூள் தளம் தங்கள் வாடிக்கையாளர்களின் பெர்சனல் விருப்பங்களைக் கேட்டு அறிவதாகவும் அவற்றைத் தன் விளம்பரங்கள் சார்ந்து பயன்படுத்திக் கொள்வதாகவும் படித்ததாக எழுதி இருந்தார். தொடர்ந்து இது உண்மையா? உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது நம் கம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்காதா? என்றும் கேட்டிருந்தார். அவருடைய கேள்வி பலரின் மனதில் இருக்கும் சந்தேகங்களை எதிரொலிப்பதாக உள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் கீழே தரப்படுகின்றன. இன்டர்நெட் விளம்பரத்தினை கூகுள் Internet based advertising என அழைக்கிறது. இந்த வகையில் அண்மையில் புதிய தொழில் நுட்பம் ஒன்றினையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் உங்களுடைய பெர்சனல் விருப்பங்கள் பெறப்படுகின்றன. இவற்றைப் பெற்றுக் கொண்ட பின்னர் நீங்கள் கூகுள் சார்ந்த தளங்கள் செல்கையில் உங்கள் விருப்பங்களுக்கேற்ப விளம்பரங்கள் பாப் அப் முறையில் காட்டப்படும். இவ்வாறு விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதன் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு பணம் சேரும்.
இப்போது எதனால் இந்த விளம்பரம் என்று தெரிந்து கொண்டீர்களா? இனி இது எப்படி செயல்படுகிறது என்பதனையும் அதனால் தீங்கு எதுவும் ஏற்படாது என்பதனையும் காணலாம்.
இன்டர்நெட் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்டுவதற்கான அடிப்படை குக்கிகள் தான். இணைய தளம் ஒன்றுக்குச் செல்கிறீர்கள். நிச்சயம் அங்கு கூகுள் நிறுவனத்தின் விளம்பரங்கள் காட்டப்படும். இந்த தளத்திற்கு நீங்கள் செல்கையில் உங்களுக்கென ஒரு அடையாள எண் தரப்படும். இது ஒரு குக்கி பைலாக உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்யப்படும். இந்த எண் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணாது. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரை அடையாளம் கண்டு கொள்ளும். இந்த குக்கியில் உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல் எதுவும் ஸ்டோர் செய்யப்படாது.
நீங்கள் தொடர்ந்து மேலும் பல தளங்களைப் பார்க்கிறீர்கள். இது போன்ற அடையாளம் எண் குறிக்கப்பட்ட தளத்திற்கு நீங்கள் செல்கையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குக்கி நீங்கள் இது போல இந்த தளத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்ற செய்தியினை கூகுள் சர்வருக்கு அனுப்பும். இப்போது பெரும்பாலான இணைய தளங்களில் கூகுள் விளம்பரங்கள் இருப்பதால் நிச்சயம் நீங்கள் தளங்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் அடையாள எண் கூகுள் சர்வருக்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நீங்கள் எந்த வகை தளங்களைப் பார்க்கிறீர்கள் என்பதை தகவலாக ஸ்டோர் செய்து கொள்ளும். அவற்றின் அடிப்படையில் தன்னிடமுள்ள விளம்பரங்களை உங்களுக்கு பாப் அப் முறையில் காட்டும்.
அடுத்து இதில் தனிமனித உரிமை, விருப்பங்கள் குறித்த சர்ச்சைகளைப் பார்ப்போம். இதனை முதலில் தெரிந்து கொள்ளும் பலர் ஏன் கூகுள் என் விருப்பங்களை தெரிந்து கொள்கிறது? நான் எந்த தளத்திற்குப் போனால் இதற்கென்ன? என்றெல்லாம் மனதிற்குள் குமைந்து போவார்கள். நானும் கூட முதலில் இப்படித்தான் எண்ணினேன். பின் என் முடிவை மாற்றிக் கொண்டேன். ஏன்? முதலாவதாக கூகுள் உங்களைப் பின்பற்றி வரவில்லை. அந்நிறுவனம் நீங்கள் எந்த மாதிரி தளங்களைப் பார்க்கிறீர்கள் என்றுதான் கண்காணித்து தகவல்களை சேர்க்கின்றனர். உங்களுடைய பெயர், இமெயில் முகவரி அல்லது முகவரியினை எல்லாம் தெரிந்து கொள்வதில்லை. மிக எளிதாக ஏதோ ஒரு எண்ணை உங்கள் கம்ப்யூட்டரை அடையாளம் காண அனுப்புகிறது.
எனக்குப் பிடித்த விஷயங்கள் குறித்த விளம்பரங்களை நான் காண வேண்டும் என்றால் அதற்கென சிரமம் எடுத்தல்லவா நான் என் நேரத்தையும் செலவழித்துச் செல்ல வேண்டும். அதற்குப் பதிலாக கூகுள் தானே எடுத்துக் கொடுக்கையில் ஏன் அதனைத் தடுக்க வேண்டும். ஆனால் கூகுள் நீங்கள் செல்லும் தளங்கள் குறித்த தகவல்களைப் பின் தொடர்ந்து பார்க்கக் கூடாது என்று எண்ணினால் அதனையும் மேற்கொள்ளலாம். இதற்குhttp://www.google.com/ads/preferences/html/about.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
வித்தியாசமான சர்ச் இஞ்சின் Wolfram/Alpha
Wolfram/Alpha இந்த சொல்லைப் படித்தவுடன் இது என்ன விநோதமான பெயராக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இது ஒரு விடை தரும் இஞ்சின். யாஹூ ஆன்ஸர் தளம் போல இயங்குகிறது. ஆனால் இதன் செயல்பாட்டில் பெரும் வேறுபாடு உள்ளது. இதில் பார்முலா, கேள்விகள் என எதனை வேண்டுமானாலும் டைப் செய்து விடையை எதிர்பார்க்கலாம். எடுத்துக்காட்டாக நான் இந்த தளம் சென்ற போது “Where is Fiji?”என்ற கேள்வியை டைப் செய்தேன். மற்ற தளங்கள் என்ன செய்திடும்? அனைத்து சர்வர்களிலும் தேடி ஒரு நீள பட்டியலைக் கொடுக்கும். பின் அதனைப் படித்துப் பார்த்து தளத்தைக் கிளிக் செய்து தகவல்களைத் தேடிப் பெற வேண்டும். ஆனால் இந்த இஞ்சின் எனக்கு ஒரு உலக மேப்பினைத் திரைக்குக் கொண்டு வந்து இதுதான் பிஜி தீவு என்று காட்டியது.
இது எப்படி செயல்படுகிறது? இணையப் பயனாளர்கள் தரும் கேள்வியைக் கொண்டு தன்னுடைய டேட்டா ஸ்ட்ரக்சரைத் தேடி விடையை அமைத்து இந்த தளம் கொடுக்கிறது. ஏறத்தாழ ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனச் சொல்லப்படும் வகையில் இது செயல்படுகிறது. மேத்ஸ் பார்முலா, நகரங்களின் பெயர்கள், சில தேதிகள் மற்றும் இது போன்றவற்றை இந்த தேடல் இஞ்சினில் கொடுத்துப் பார்த்தால் இதன் வழிமுறை தெரிய வரும்.
புதுக் கம்ப்யூட்டரா! படியுங்கள் கீழே
புதுக் கம்ப்யூட்டரா! படியுங்கள் கீழே
புதியதாக டெஸ்க் டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை உங்களுக்கென வாங்கியுள்ளீர்களா! பாராட்டுக்கள். அந்த கம்ப்யூட்டர் உங்களுக்கு எந்த வேலைக்கு வேண்டுமானாலும் பயன்படலாம். வீட்டில் பொழுது போக்க, மல்ட்டி மீடியா பார்த்து ரசிக்க, குழந்தைகள் விளையாட, சிறிய அலுவலகங்களில் பயன்படுத்த, சிறிய வர்த்தக காரியங்களுக்கு பயன்படுத்த என நோக்கம் எது வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் சற்று தாமதியுங்கள். உடனே கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் தொடர்பு கொண்டு உங்கள் நண்பர்களுக்கெல்லாம் நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கிய செய்தியை இமெயிலாக அனுப்ப முயற்சிக்க வேண்டும். அல்லது உங்களுக்குப் பிடித்தமான பாடல்களை அல்லது ஆடல் காட்சிகளை உடனே இயக்கி ரசிக்க வேண்டாம். அந்த கம்ப்யூட்டரில் பாதுகாப்பாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அவை எவை என இங்கு பார்க்கலாம்.
புதியதாக டெஸ்க் டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை உங்களுக்கென வாங்கியுள்ளீர்களா! பாராட்டுக்கள். அந்த கம்ப்யூட்டர் உங்களுக்கு எந்த வேலைக்கு வேண்டுமானாலும் பயன்படலாம். வீட்டில் பொழுது போக்க, மல்ட்டி மீடியா பார்த்து ரசிக்க, குழந்தைகள் விளையாட, சிறிய அலுவலகங்களில் பயன்படுத்த, சிறிய வர்த்தக காரியங்களுக்கு பயன்படுத்த என நோக்கம் எது வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் சற்று தாமதியுங்கள். உடனே கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் தொடர்பு கொண்டு உங்கள் நண்பர்களுக்கெல்லாம் நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கிய செய்தியை இமெயிலாக அனுப்ப முயற்சிக்க வேண்டும். அல்லது உங்களுக்குப் பிடித்தமான பாடல்களை அல்லது ஆடல் காட்சிகளை உடனே இயக்கி ரசிக்க வேண்டாம். அந்த கம்ப்யூட்டரில் பாதுகாப்பாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அவை எவை என இங்கு பார்க்கலாம்.
1.எமர்ஜென்ஸி டிஸ்க் தயாரியுங்கள்: சில கம்ப்யூட்டர்களுடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சிக்கலான நேரங்களில் மீண்டும் பதிந்திட ஓ.எஸ். உள்ள சிடி அல்லது டிவிடியினை வழங்கி இருப்பார்கள். சில நிறுவனங்கள் ரெகவரி சிடி என ஒன்றை வழங்குவார்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் முடங்கிப் போனால் இந்த ரெகவரி சிடியை இயக்கி கரப்ட் ஆன பைல்களை சரி செய்திடலாம். இது போன்ற சிடிக்கள் கொடுக்கப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தி புதிய கம்ப்யூட்டரில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அமைத்தவுடன் பத்திரமாக வைத்திட வேண்டும். அதனை எங்கு பத்திரமாக வைத்துள்ளீர்கள் என்பதனையும் குறித்து வைக்க வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்தே தரப்படுகிறது என்று கூறி அதற்கான விலையையும் சேர்த்தே நம்மிடம் வாங்கி விடுவார்கள். ஆனால் லைசன்ஸ் கீ என்று சொல்லி ஒரு பேப்பர் உரிமை கொடுப்பார்கள். சில நிறுவனங்களோ சிபியு கேபினட்டின் பின்புறம் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதுதான் ஓ.எஸ். லைசன்ஸ் என கூறிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
இப்படி ஒன்றும் உங்களிடம் தரப்படவில்லை என்றால் உடனே சிஸ்டத்துடன் வந்துள்ள மேனுவல் எனப்படும் குறிப்பு நூலைப் படித்து எப்படி எமர்ஜென்சி ஓ.எஸ். சி.டி தயாரிப்பது என அறிந்து அதில் குறிப்பிட்டுள்ள வழிகளைப் பின்பற்றி ஒரு எமர்ஜென்ஸி ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடி தயரித்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு இரண்டாகத் தயாரித்து வைத்துக் கொள்வதும் நல்லது.
2. பாதுகாப்பு சாப்வேர் இன்ஸ்டால் செய்க: கம்ப்யூட்டரை இன்டர்நெட்டுடன் இணைக்கும் முன் அதில் செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திட வேண்டும். நன்றாகச் செயல்படக் கூடிய பயர்வால் மற்றும் ஆண்டி வைரஸ் தொகுப்பு கட்டாயம் பதியப்பட வேண்டும். இவை இல்லாமல் இன்டர்நெட்டில் உலா வந்தால் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ், மால்வேர் மற்றும் பல வகை கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் நிச்சயம் உருவாகும். உங்களிடம் அல்லது அலுவலகத்தில் அல்லது நண்பரிடத்தில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டர் மூலம் பயர்வால், ஆண்டி வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான சாப்ட்வேர்களை டவுண்லோட் செய்து அதனை சிடி அல்லது பிளாஷ் டிரைவில் காப்பி செய்து பின் புதிய கம்ப்யூட்டரில் பதியவும். இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் புது கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கிய நிறுவனம் ஏதேனும் இது போன்ற செக்யூரிட்டி சாப்ட்வேர்களில் ஒன்றை பதிந்தே உங்களுக்கு விற்பனை செய்திருக்கும். பொதுவாக அத்தகைய சாப்ட்வேர்கள் அவ்வளவு திறனுடம் இருக்காது. எனவே தான் வேறு செக்யூரிட்டி சாப்ட்வேர் களை நாம் புதிய கம்ப்யூட்டரில் பதிக்கிறோம். அவ்வாறு பதியும் முன் கம்ப்யூட்டருடன் வந்த செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்புகளை நீக்கிவிட வேண்டும்.
3. தேவையற்றதை நீக்குங்கள்: கம்ப்யூட்டருடன் வந்த அனைத்து புரோகிராம்களையும் கவனமாகப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் “Add/Remove Programs”ஐகானில் கிளிக் செய்தால் இந்த பட்டியல் கிடைக்கும். இதில் ஏதேனும் ட்ரையல் கேம்ஸ், உங்களுக்குத் தேவையில்லாத போட்டோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், வெப்சைட் டூல்பார்கள் என தேவையற்ற புரோகிராம்களை நீக்கிவிடுங்கள். அதற்கான வசதி அந்த விண்டோவிலேயே கிடைக்கும்.
4. புதிய வெப் பிரவுசர்: உங்கள் கம்ப்யூட்டருடன் வெப் பிரவுசர் புரோகிராம் ஒன்று இணைந்தே தரப்பட்டிருக்கும். இதனைத் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மொஸில்லா பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா எனப் பல பிரவுசர்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். புதிய ஒன்றைப் பயன்படுத்தினாலும் சிஸ்டத்துடன் வந்த பிரவுசரை அவ்வப்போது அப்டேட் செய்திடவும். அப்போதுதான் வைரஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.
5. அனைத்தையும் அப்டேட் : இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன் இணையப் பக்கங்களைத் தேடிச் செல்லாமல் உங்களிடம் உள்ள வெப் பிரவுசர்கள், ஆண்டி வைரஸ் புரோகிராம் மற்றும் இணையம் சம்பந்தப்பட்ட அனைத்து சாப்ட்வேர்களையும் அப்டேட் செய்துவிடவும். குறிப்பாக அடோப் அக்ரோபட் ரீடர் மற்றும் மல்ட்டி மீடியா புரோகிராம்களை அவசியம் அப்டேட் செய்திட வேண்டும். இவற்றுடன் இன்டர்நெட்டிலிருந்து இறக்கப்படும் பைல்களை இயக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் அப்டேட் செய்வது நல்லது. இந்த புரோகிராம்களில் உள்ள வலுவற்ற கட்டமைப்பின் வழியாக நுழையும் வகையிலேயே வைரஸ்களும் மற்ற மோசமான மால்வேர்களும் எழுதப்படுவதால் இவற்றைக் கட்டாயம் அப்டேட் செய்திட வேண்டும். அப்டேட் செய்திடுகையில் அண்மைக் காலம் வரை இத்தகைய வலுவற்ற இடங்களைச் சரி செய்திட தரப்பட்டுள்ள பேட்ச் பைல்கள் இயக்கப்பட்டு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களின் கட்டமைப்பு சரி செய்யப்படும். இதனால் வைரஸ்கள் வருவது தடுக்கப்படும். மேலே சொன்ன ஐந்து வழிமுறைகளை அவசியம் புதிய கம்ப்யூட்டரை இயக்கி இணையத்தில் நுழையும் முன் மேற்கொள்வது மிக அவசியம்.
மொஸில்லா பயர்பாக்ஸ் புதிய வசதிகள்
மொஸில்லா பயர்பாக்ஸ் புதிய வசதிகள்
இன்டர்நெட் பிரவுசர் தொகுப்புகளில் நாளுக்கு நாள் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று வருவதில் முன்னணியில் இருப்பது மொஸில்லா பயர்பாக்ஸ் தொகுப்பாகும். இதன் வசதிகள், டிப்ஸ் குறித்து பல கட்டுரைகள் இந்த மலரில் வெளியாகியுள்ளன. சென்ற வாரம் இதில் அவ்வளவாக ஆனால் அதிகப் பயனுள்ள சில வசதிகளை அறிய முடிந்தது. அடடா! இத்தனை நாளாய் அறியாமல் இருந்து விட்டோமே என்ற ஆதங்கம் தான் ஏற்பட்டது. அவை என்ன எனப் பார்ப்போமா!
1. சேவ் செய்யப்பட்ட பாஸ்வேர்ட்: இன்டர்நெட்டில் குறிப்பிட்ட இணைய தளப் பக்கத்திற்கான பாஸ்வேர்டினை சேவ் செய்திடும் பழக்கம் உங்களிடம் உண்டா? அப்படி சேவ் செய்த பின் உங்களுடைய ஞாபக மறதியினால் அந்த பாஸ்வேர்டினை மீண்டும் சரியாக நினைவிற்குக் கொண்டு வர முடியவில்லையா? அப்படியானால் அந்த பக்கத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் View Page Info என்பதைத் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் விண்டோவில் உள்ள செக்யூரிட்டி டேப்பில் “View Saved passwords”என ஓர் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். அப்படியானால் இது சரியான வழி இல்லையே? பாஸ்வேர்டினை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடாதே என்று நினைக்கிறீர்களா? இங்கு தான் உங்களுக்கு உதவிட ஒரு Master Password வருகிறது. இதனைப் பயன்படுத்த Tools> Options> Security எனச் செல்லவும். அங்கு “Use Master password” என்று ஒரு செக் பாக்ஸ் கிடைக்கும். இதனை செலக்ட் செய்து நீங்கள் நினைவில் கொள்ளும் ஏதாவது ஒன்றினை டைப் செய்து என்டர் செய்திடவும். இனி யாராவது ஒருவர் நீங்கள் அளித்த பாஸ்வேர்டினைப் பார்க்க முயன்றால் வேறு ஒரு பாஸ்வேர்ட் தான் கிடைக்கும்.
2. டூப்ளிகேட் டேப்: டேப்களுடன் உள்ள பாரினைப் பார்க்கும் போது ஒரே செயல்பாட்டிற்கு இரண்டு டேப் வெவ்வேறு இடங்களில் இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால் எந்த டேப்பிற்கு டூப்ளிகேட் டேப் வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதனை கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே கர்சரைக் கொண்டு இழுத்து காலியான இடத்தில் விடவும். இன்னொரு டூப்ளிகேட் டேப் அங்கு அமைக்கப்படும்.
3. டூல்பாரில் சிறிய ஐகான்: இது ஒரு சின்ன விஷயம்தான். பயர்பாக்ஸ் டூல்பாரில் உள்ள ஐகான்கள் சைஸ் மற்றும் அவை அமையும் இடம் குறித்து மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டுமா? ஹோம் ஐகானில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் இதண்ணிட்டித்ஞு என்பதைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் விண்டோவில் டூல் பாரில் உள்ள ஐகான்களை பலவிதமாக மாற்றுவதற்கு வசதிகள் தரப்பட்டுள்ளன.
மேப்பூச்சு அல்ல மேட்டர் அதிகம்-விண்டோஸ் 7
மேப்பூச்சு அல்ல மேட்டர் அதிகம்-விண்டோஸ் 7
விஸ்டாவிற்கு மேக் அப் போட்டு விண்டோஸ் 7 வருகிறது என்று விண்டோஸ் 7 சோதனைத் தொகுப்பை இறக்கிப் பயன்படுத்தியவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இது உண்மைக்குப் புறம்பானதாகும். பல பயன்பாட்டு அம்சங்கள் இதில் மேம்படுத்தப்பட்டுத் தரப்பட்டுள்ளன. அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. முழுமையான தொகுப்பு வருகையில் இன்னும் சில கூடுதல் மேம்பாடுகள் கிடைக்கலாம்.
விஸ்டாவிற்கு மேக் அப் போட்டு விண்டோஸ் 7 வருகிறது என்று விண்டோஸ் 7 சோதனைத் தொகுப்பை இறக்கிப் பயன்படுத்தியவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இது உண்மைக்குப் புறம்பானதாகும். பல பயன்பாட்டு அம்சங்கள் இதில் மேம்படுத்தப்பட்டுத் தரப்பட்டுள்ளன. அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. முழுமையான தொகுப்பு வருகையில் இன்னும் சில கூடுதல் மேம்பாடுகள் கிடைக்கலாம்.
1.Problem Steps Recorder: விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நாம் பிறரை நாடுவோம்; நம் நண்பர்கள் நம்மிடம் உதவி கேட்பார்கள். இனி யாரும் மற்றவரை எதிர்பார்க்க வேண்டியதில்லை. இனி விண்டோஸ் 7 தொகுப்பில் ஏதேனும் ஒரு புரோகிராம் பிரச்சினை செய்தது என்றால் மற்றவரின் உதவியை நாடாமல் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி PSR என டைப் செய்து என்டர் அழுத்திய பின் மீண்டும் Start Record என்பதில் அழுத்த வேண்டும். அதன்பின் நாம் அந்த புரோகிராமில் அழுத்தும் கீகள் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அனைத்தும் பதியப்படும். செயல்பாட்டில் மாறும் திரைகள் பதியப்படும். இவை அனைத்தும் ஸிப் செய்யப்பட்ட பைலாக நமக்குக் கிடைக்கும். பிரச்சினை ஏற்பட்டால் இதனைத் திறந்து பார்த்து எந்த நிலையில் பிரச்சினை ஏற்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். இதனையே விபரம் தெரிந்த உங்கள் நண்பர்களுக்கு இமெயிலில் அனுப்பி உதவி கேட்கலாம்.
2. Burn images: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பல ஆண்டுகளாக இருந்ததை விண்டோஸ் இறுதியாகத் தானும் தந்துள்ளது. சிடி மற்றும் டிவிடிக்களில் ஐ.எஸ்.ஓ. இமேஜ் பதியும் திறனே அது. இதனைப் பதிவதும் எளிது. இந்த இமேஜில் டபுள் கிளிக் செய்து பதிய வேண்டிய டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் காலியான சிடியைப் போட்டு Burn பட்டனில் கிளிக் செய்தால் இமேஜ் பதியப்படும்.
3.Trouble shoot problems: விண்டோஸ் 7 பதிப்பின் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டால் உடனே அதனைச் சரி செய்திட ரெகவரி டிஸ்க்கெல்லாம் தேடி எடுத்து பூட் செய்திட வேண்டியதில்லை. Control Panel அழுத்திப் பின் Find and fix problems (or ‘Troubleshooting’)ஐத் தேர்ந்தெடுத்தால் உங்கள் பிரச்சினை சரி செய்யப்படும்.
4. Take control: நம் கம்ப்யூட்டர் முழுமையாக நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நாம் இல்லாத போது குழந்தைகள் கன்னா பின்னாவென பல சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வதனை அனுமதிக்கக் கூடாது. இதற்கான வசதியை விண்டோஸ் 7 தருகிறது. விண்டோஸ் 7 உடன் வரும் AppLocker என்ற புரோகிராம் மூலம் இதனை மேற்கொள்ளலாம். நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் நாம் அனுமதிக்கும் புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வி கேட்க வேண்டாம். சிஸ்டம் விண்டோவில் Computer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker என வரிசையாகச் சென்று இந்த புரோகிராமினை இயக்கிப் பார்த்தால் கட்டுப்பாடு அமைப்பது எவ்வளவு எளிது என்பது தெரியவரும்.
5.Calculate more:விண்டோஸ் 7 உடன் தரப்படும் கால்குலேட்டர் தோற்றத்தில் விண்டோஸ் விஸ்டாவில் உள்ளது போல மிகச் சாதாரணமாகத்தான் தெரிகிறது. இதில் உள்ள மெனுவில் சென்றால் Statistics மற்றும் Programmer வியூக்களைப் பெற்று எவ்வாறு பல பயனுள்ள வழிகளில் இயக்கலாம் என்பதனை அறியலாம். இது புரியவில்லை என்றால் Options மெனுவில் இயங்கிப் பார்க்கலாம். இதில் யூனிட் எனப்படும் அலகு மாற்றங்கள், தேதிகளைக் கொண்டு கணக்கிடுவது, ஸ்ப்ரெட் ஷீட் போன்ற அமைப்பில் கணக்கிடுவது, கடன் வட்டி விகிதம் போன்ற பல கணக்கு வழக்குகளைக் கையாளலாம்.
6. Switch to a projector: விண்டோஸ் 7 இயங்கும் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டரை இணைத்திருந்தால் ஒன்றை புரஜக்டராக மாற்றிக் காணலாம். Win+P அழுத்தலாம்; அல்லது Display Switch.exe என்ற புரோகிராமினை இயக்கலாம்.
7. Preview Fonts: விண்டோஸ் சிஸ்டம் போல்டரில் உள்ள பாண்ட்ஸ் போல்டரை இயக்கினால் நாம் எக்ஸ்பியிலும் விஸ்டாவிலும் எழுத்துக்களின் பெயர்களை மட்டுமே பார்க்க முடிகிறது. மேலும் அவை ட்ரூ டைப்பா அல்லது ஓப்பன் டைப்பா எனவும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் 7 தொகுப்பில் அந்த பாண்ட் எப்படித் தோற்றமளிக்கும் என்பதனையும் காணலாம். ஒரே குடும்பத்தில் உள்ள அனைத்து பாண்ட்களும் இதுவரை தனித்தனி பைலாகத்தான் காட்டப்பட்டு வந்தன. விண்டோஸ் 7 தொகுப்பில் அவை அனைத்தும் ஒரே குழுவாகக் காட்டப்படுகின்றன. எடுத்துக் காட்டாக Times New Roman, Times New Roman Bold, Times New Roman Bold Italic என்ற பாண்ட்கள் அனைத்தும் Times New Roman என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாக இருப்பதால் அவை Times New Roman என்ற ஒரு குழுவில் ஒரே என்ட்ரியாகக் காட்டப்படும்.
வழக்கமான எழுத்து வகைகளுடன் விண்டோஸ் 7, Gabriola என்ற ஒரு பாண்டைக் கொடுத்துள்ளது. இது ஒரு ஓப்பன் டைப் பாண்ட். மிகவும் ஸ்டைலாக எழுத வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.
8. Automatic PC clean up: நமக்குத் தெரியாமலோ நமக்குத் தெரிந்தோ நம் நண்பர்கள் நம் கம்ப்யூட்டரில் தேவையற்ற மாற்றங்களை மேற்கொள்வார்கள். செட்டிங்ஸை மாற்றுவார்கள்; நம்பிக்கை அற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வார்கள்; முக்கியமான நம் பைல்களை அழிப்பார்கள். இன்னும் என்னென்னவோ மாற்றங்களை மேற்கொள்வார்கள். நாம் என்ன செய்வது? ஒன்றும் செய்திட வேண்டாம். நம் விண்டோஸ் 7 இதிலிருந்து நம் கம்ப்யூட்டரைக் காப்பாற்றுகிறது. இதில் உள்ள PC Safeguard என்ற புரோகிராம் இதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. நம் நண்பர், அவர் எவ்வளவு பெரிய கம்ப்யூட்டர் வித்தை தெரிந்தவராய் இருந்தாலும், கம்ப்யூட்டர் பயன்பாடு முடித்து லாக் ஆப் செய்திடுகையில் PC Safeguard அவர் ஏற்படுத்திய அனைத்து மாற்றங்களையும் கேன்சல் செய்து பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வந்துவிடும். ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்ட Windows steady state என்ற மைக்ரோசாப்ட் புரோகிராம் இதனைத்தான் செய்கிறது. இது முன்பு இலவச ஆட் ஆன் புரோகிராமாக இருந்தது. தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனைச் சோதித்துப் பார்க்க Control Panel >User Accounts and Family Safety > User Accounts>Manage another account > Create a new account என்று சென்று ஒரு புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும். பின் அந்த அக்கவுண்ட்டில் PC Safeguard இன்ஸ்டால் செய்திடவும். பின் இயக்கி Apply கிளிக் செய்திடவும். இந்த புதிய அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து மேலே குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொள்ளவும். ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். பின் ரீஸ்டார்ட் செய்து பார்த்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் இருக்காது.
9. Understanding System Restore: முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் சிஸ்டம் ரெஸ்டோர் இயக்குவது சற்று விந்தையானது. எந்த அப்ளிகேஷன் புரோகிராமின் டிரைவர்களை அது நீக்கித் தரும் என்பது உறுதியாக நமக்குத் தெரியாது. விண்டோஸ் 7 இதிலிருந்து சற்று மாறுபட்டது. மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து Properties > System Protection > System Restore > Next செல்லவும். எந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டிற்குச் செல்ல விரும்புகிறோமோ அந்த பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இதில் ‘Scan for affected programs’ என்ற புதிய பட்டன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்தால் விண்டோஸ் 7 எந்த புரோகிராம்கள் நீக்கப்பட உள்ளன; எந்த டிரைவர்கள் அழிக்கப்பட உள்ளன என்று காட்டும்.
10.Desktop Slideshow: விண்டோஸ் 7 அதிகமான எண்ணிக்கையில் வால் பேப்பர்களைக் கொண்டுள்ளது. இருந்து என்ன பிரயோசனம்? ஒன்றுதானே ஒரு நேரத்தில் கொள்ள முடியும் என்று அங்கலாய்க்கிறீர்களா? இப்போதைய டிஜிட்டல் போட்டோ பிரேம் போன்று உங்களுக்குப் பிடித்த வால் பேப்பர் அனைத்தையும் டெஸ்க் டாப்பில் தோன்றுமாறு செய்திடலாம். டெஸ்க் டாப்பில் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து Personalise > Desktop Background என்று செல்லவும். பின் கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு நமக்குப் பிடித்த வால் பேப்பர் படங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பின் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை தேர்ந்தெடுத்த வால் பேப்பர்கள் மாற்றப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்திடவும். தினந்தோறும் ஒன்று தோன்றும்படியும் செட் செய்திடலாம்; அல்லது பத்து விநாடிகளுக்கு ஒரு முறையும் மாறும்படி செட் செய்திடலாம். தேர்ந்தெடுத்த வால் பேப்பர்கள் ஒரே மாதிரி மாறிக் கொண்டிருந்தாலும் நமக்கு சலிப்பு தட்டலாம். எனவே மாறி மாறி எந்த வரிசையிலும் இல்லாமல் தோன்ற வேண்டும் என்றால் Shuffle என்பதில் கிளிக் செய்து ஓகே செய்துவிட்டால் போதும்.
11. Custom power switch: விண்டோஸ் 7, ஸ்டார்ட் மெனுவில் ‘Shut down’என்னும் பட்டனைக் கொண்டுள்ளது. நீங்கள் அடிக்கடி கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்பவராக இருந்தால் இந்த பட்டனை அவ்வாறாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
12. Auto arrange your desktop: டெஸ்க் டாப்பில் பல ஐகான்கள் சிதறிக் கிடக்கிறதா? விஸ்டாவில் உள்ளதைப் போல View > Auto arrange கிளிக் செய்தால் ஐகான்கள் வகைப்படுத்தப்பட்டு வரிசைப் படுத்தப்படும். ஆனால் விண்டோஸ் 7ல் இன்னொரு வழி தரப்படுகிறது. எப்5 கீயை அழுத்தி சிறிது நேரம் பிடித்துக் கொண்டால் டெஸ்க் டாப்பில் உள்ள ஐகான்கள் தாமாக வரிசைப்படுத்தப்படுகின்றன.
13. Stiky Notes: விண்டோஸ் 7–ல் ஸ்டிக்கி நோட்ஸ் அப்ளிகேஷன் வித்தியாசமாகச் செயல்படுகிறது. StikyNote.exe என்ற பைலை இயக்கியவுடன் கீ போர்டு மூலம் டெக்ஸ்ட்டை டைப் செய்திடலாம். டெக்ஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து அதன் வண்ணத்தை மாற்றலாம். நோட் டைட்டில் பார் மீது + அடையாளம் கிளிக் செய்தால் இன்னொரு நோட் இணைக்கலாம். முடிவில் Alt +4 கிளிக் செய்தால் அந்த நோட் தானாக சேவ் செய்யப்படும்.
14 More Videos: விண்டோஸ் மீடியா பிளேயர், ஆடியோ மற்றும் வீடியோக்ககளை இயக்க சக்தி வாய்ந்த ஒரு புரோகிராம் ஆகும். ஆனாலும் இந்த புரோகிராம் சில பார்மட் பைல்களை இயக்க மறுப்பதனை நாம் அடிக்கடி பார்க்கிறோம். விண்டோஸ் 7 உடன் வரும் விண்டோஸ் மீடியா பிளேயர் ஏற்கனவே இயக்க மறுத்த பல பார்மட் பைல்களை இயக்குகிறது.
15. New WordPad formats: வேர்ட் பேடில் என்ன டைப் செய்தாலும் அது Rich Text Format, RTFல் தான் சேவ் செய்யப்படும். இப்போது தரப்பட்டிருக்கும் விண்டோஸ் 7 வேர்ட் பேடில் டாகுமெண்ட் பார்மட்டிலும் சேவ் செய்திட முடியும்.
16. An Alt + Tab alternative: நம் கம்ப்யூட்டரில் ஐந்து விண்டோக்களைத் திறந்து ஒவ்வொன் றிலும் ஒரு பைலை எடிட் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றில் ஏதேனும் ஒரு பைலை இயக்கிப் பார்க்க ஆல்ட் + டேப் அழுத்தி பைல்களின் ஐகான்களைக் கிளிக் செய்து வந்தோம். விண்டோஸ் 7 பேக்கேஜில் கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறு விண்டோஸ் ஐகான் மீது கிளிக் செய்தால் போதும்.
17. Parallel defrags: விண்டோஸ் 7 தொகுப்பில் டிபிராக் செய்வது விந்தையாகவும் வேடிகையாகவும் உள்ளது. டிபிராக் கட்டளையுடன் /r ஸ்விட்ச் சேர்த்துக் கொடுத்தால் ஒரே நேரத்தில் பல டிரைவில் டிபிராக் செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. வழக்கமான டிபிராக் ஆப்ஷன்களுடன் மேலும் சில வசதிகளுடன் டிபிராக் தேவை என்றால் /h ஸ்விட்ச் கொடுக்க வேண்டும். /u ஸ்விட்ச் கொடுத்தால் டிபிராக் மேற்கொள்ளப்படும் நேரத்தில் என்ன நிகழ்கிறது என்று ரிபோர்ட் நமக்குக் கிடைக்கிறது. எனவே defrag/c/h/u/r எனக் கட்டளை கொடுத்து டிபிராக் நடைபெறுவதை அழகாக வேடிக்கை பார்க்கலாம். இன்னும் என்ன என்ன வசதிகளை இதில் பெறலாம் என்பதற்கு defrag/? எனக் கட்டளை கொடுத்தால் பெறலாம்.
18. Right click everything: நம் மானிட்டர் ஸ்கிரீன் ரெசல்யூசன் மாற்ற அதன் மெனுவெல்லாம் சென்று டிஸ்பிளே செட்டிங்ஸ் பெற்று மாற்ற வேண்டியதில்லை; டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்தால் எழுந்து வரும் மெனுவில் ரெசல்யூசன் மாற்ற ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதிலேயே புதிய மாற்றங்களை அமல்படுத்தலாம். டாஸ்க்பாரில் விண்டோஸ் பின் செய்திடும் புரோகிராம் ஐகான்களை அவை தேவை இல்லை என்றால் அவற்றின் மீது ரைட் கிளிக் செய்து ‘Unpin this program from the taskbar’ என்பதில் கிளிக் செய்தால் போதும். அந்த புரோகிராம் டாஸ்க் பாரில் இருந்து நீக்கப்படும்.
19. Protect your data: யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்கள் டேட்டாவினைப் பதிந்து கொண்டு செல்ல மிகவும் வசதியான சாதனங்கள் ஆகும். ஆனால் மிகவும் ரகசியமான அடுத்தவர் பார்க்க முடியாத டேட்டாவைப் பதிந்த பின்னர் அவை தொலைந்து போனால் அதனால் ஏற்படும் இழப்பு பெரியதாயிற்றே. இதற்கு விண்டோஸ் 7 ஒரு தீர்வினைத் தந்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் BitLocker தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி முதலில் டேட்டாவை என்கிரிப்ட் செய்திடலாம். இதற்கு பாஸ்வேர்டும் வழங்கிவிட்டால் அந்த பாஸ்வேர்டைப் பயன்படுத்தி மட்டுமே டேட்டாவினைப் படிக்க முடியும். இதற்கு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் ரைட் கிளிக் செய்து BitLocker–ஐ இயக்க வேண்டும். அதன் பின் அது தரும் வழி காட்டுதல் படி சென்று டேட்டாவை என்கிரிப்ட் செய்து பாதுகாக்கலாம்.
20. Find bottlenecks: விண்டோஸ் 7 இயக்குகையில் சிஸ்டம் மிக மெதுவாக இயங்குவதாகத் தெரிந்தால் அதற்கான காரணத்தை எப்படி தெரிந்து கொள்வது? ஸ்டார்ட் கிளிக் செய்து RESMON என டைப் செய்தால் ரிசோர்ஸ் மானிட்டர் என்ற புரோகிராம் இயக்கப்படும். இதில் CPU, Memory, Disk மற்றும் Network tabs என்றவற்றின் இயங்கு தன்மை குறித்த தகவல்கள் காட்டப்படும். ஏதேனும் ஒரு புரோகிராம் பிரச்சினை கொடுத்து இயங்காமல் முடங்கிப் போவதாகத் தெரிந்தால் பட்டியலில் அதன் பெயரில் ரைட் கிளிக் செய்து Analyze Process என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் முடங்கிப் போன புரோகிராமினை ஆய்வு செய்து எதனால் பிரச்சினை என்று காட்டும்.
21. New Shortcuts: விண்டோஸ் 7 பல புதிய ஷார்ட் கட் கீ தொகுப்புகளை வழங்கியுள்ளது.
அவற்றில் சில:
Alt+P:எக்ஸ்புளோரர் பிரிவியூ பேனைக் காட்டும்; மறைத்து வைக்கும்.
Windows Logo + G: மற்ற விண்டோக்களின் முன்னால் சாதனங்களைக் காட்டும்.
Windows Logo ++ (plus key): தேவையான இடத்தில் ஸூம் செய்திடும்
Windows Logo + (minus key): தேவையான இடத்தில் ஸூம் ஆனதைக் குறைத்திடும்.
Windows Logo + Up : தற்போதைய விண் டோவினை மேக்ஸிமைஸ் செய்திடும்.
Windows Logo+Down: தற்போதைய விண் டோவினை மினிமைஸ் செய்திடும்.
Windows Logo + Left: ஸ்கிரீனின் இடது பக்கத்தில் ஆப்ஜெக்டைத் தள்ளி வைத்திடும்.
Windows Logo + Right: ஸ்கிரீனின் வலது பக்கத்தில் ஆப்ஜெக்டைத் தள்ளி வைத்திடும்.
Windows Logo + H ome: கர்சர் இருக்கும் விண்டோ தவிர மற்றவற்றை மினிமைஸ் அல்லது மேக்ஸிமைஸ் செய்திடும்.
22.Faster program launches: புரோகிராம் ஒன்றைத் திறந்து பைல் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இனி இன்னொரு முறை அதே புரோகிராமினை இயக்கி வேறு ஒரு பைலைத் திறக்க திட்டமிடுகிறீர்கள். இதற்கு மீண்டும் ஒரு முறை ஸ்டார்ட் மற்றும் ஆல் புரோகிராம்ஸ் செல்லத் தேவையில்லை. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த புரோகிராமின் ஐகான்மீது கிளிக் செய்தால் போதும். அல்லது நடுவே உள்ள மவுஸ் பட்டன் மூலம் கிளிக் செய் திடலாம்.
புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7
புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7
முற்றிலும் புதியதொரு அனுபவத்தையும் கூடுதல் வசதிகளையும் கொண்டதாக விரைவில் விண்டோஸ் 7 நமக்குக் கிடைக்க இருக்கிறது. தொடக்கத்தில் Blackcomb, Vienna என குறியீட்டுப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு விண்டோஸ் 7 என்ற பெயரில் விரைவில் வெளிவர இருக்கிறது.
முற்றிலும் புதியதொரு அனுபவத்தையும் கூடுதல் வசதிகளையும் கொண்டதாக விரைவில் விண்டோஸ் 7 நமக்குக் கிடைக்க இருக்கிறது. தொடக்கத்தில் Blackcomb, Vienna என குறியீட்டுப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு விண்டோஸ் 7 என்ற பெயரில் விரைவில் வெளிவர இருக்கிறது.
விண்டோஸ் 7 இறுதி சோதனைத் தொகுப்பினைப் பல்லாயிரக் கணக்கானவர்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தித் தங்களுக்கேற்பட்ட அனுபவத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். விரைவில் இதன் முழுமையான பாதுகாப்பான பதிப்பினை மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறது. முதலில் சோதனைத் தொகுப்புகள் வெளி வந்த போது இந்த புதிய பதிப்பு விஸ்டாவிற்கு மேக் அப் போட்டு வெளிவந்துள்ளது என்று பலர் எழுதி வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள, வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கையில் விண்டோஸ் 7 பல்வேறு முனைகளில் பயனாளர்களுக்குப் புதிய வசதிகளைத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் புதிய அம்சங்கள் இங்கே தரப்படுகின்றன.
அடுத்த கட்டுரையில் இதன் மேம்படுத்தப்பட்ட வசதிகள் பட்டியலிடப்படுகின்றன.
1. முற்றிலும் மாற்றப்பட்ட டாஸ்க் பார்: மானிட்டர் திரையில் கீழாக நமக்கு டாஸ்க் பார் அமைகிறது. இதில் உள்ள குயிக் லாஞ்ச் டூல்பார் மாற்றப்பட்டுள்ளது. இதில் இயக்கப்படும் புரோகிராம்களின் டேப்கள் காட்டப்பட்டு அவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் நமக்கு அவை விரைவாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் டாஸ்க்பாரில் நாம் எந்த புரோகிராமையும் பின் செய்து வைக்கலாம். அங்கு கிளிக் செய்து அவற்றை எளிதாகப் பெறலாம். புரோகிராம்களின் ஐகான்களை நம் இஷ்டப்படி இழுத்து எடுத்து வைக்கலாம். இவற்றைப் பெரிதாக்கி வைக்கலாம். இந்த ஐகான்களில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால் அந்த புரோகிராம்களில் திறந்திருக்கும் பைல்களின் சிறிய படக் காட்சி (தம்ப் நெயில் அளவில்) காட்டப்படும். அந்தப் படக் காட்சிகளின் மீது கர்சரைக் கொண்டு சென்றால் அந்த விண்டோவின் பிரிவியூ காட்சி கிடைக்கும். கர்சரை அவற்றிலிருந்து நீக்கினால் அந்தக் காட்சி மறைந்துவிடும்.
வலது ஓரத்தில் உள்ள சிஸ்டம் கடிகாரம் அருகே ஒரு சிறிய கட்டம் தரப்பட்டுள்ளது. இது Aero Peek என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்றால் டெஸ்க் டாப்பில் உள்ள புரோகிராம்களின் விண்டோக்கள் அனைத்தும் ட்ரான்ஸ் பரண்ட்டாகக் காட்டப்படுகின்றன. நாம் நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். ஒரு விண்டோவின் மேலாகக் கிளிக் செய்தால் அது தானாக மேக்ஸிமைஸ் ஆகிவிடும். மீண்டும் கிளிக் செய்தால் அனைத்தும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் கிடைக்கும். இன்னும் ஒரு சிறப்பான செயல்பாடும் இந்த விண்டோக்களில் கிடைக்கிறது. இதனை ஷார்ட் கட் கீகள் மூலம் மேற்கொள்ளலாம். மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோக்களில் மவுஸ் கர்சரை வைத்து விண்டோஸ் கீயையும் மேல் அம்புக் குறியையும் அழுத்தினால் விண்டோ மேக்ஸிமைஸ் ஆகும். கீழ் அம்புக் குறியை அழுத்தினால் விண்டோ மினிமைஸ் ஆகும். பக்க வாட்டில் உள்ள அம்புக் குறிகளை அழுத்தினால் இடது வலது என ஓரமாக ஒதுங்கும்.
2. ஜம்ப் லிஸ்ட்ஸ்: விண்டோஸ் 7 தொகுப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் அனைத்தும் நம் கண் முன் காட்டப்படும் வகையில் அமைக்க வழி தரப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஜம்ப் லிஸ்ட் ஆகும். நாம் பயன்படுத்தும் பைல்களை வெகு சீக்கிரம் பெற்று பயன்படுத்த இந்த வசதி உதவுகிறது. நாம் அப்போது பயன்படுத்திக் கொண்டிருந்த பைல்களைப் பெற டாஸ்க்பாரில் உள்ள இந்த புரோகிராமின் ஐகானில் ரைட் கிளிக் செய்திட வேண்டும். எடுத்துக் காட்டாக டாஸ்க் பாரில் உள்ள வேர்ட் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் வேர்ட் புரோகிராமில் நாம் பயன்படுத்திய அனைத்து பயல்களும் காட்டப்படும். இந்த பட்டியலிலிருந்து நமக்குத் தேவையான பைலைக் கிளிக் செய்து பெறலாம். ஒரு சில புரோகிராம்கள் இந்த ஜம்ப் லிஸ்ட் பயன்பாட்டில் சற்று முன்னதாகவே சில வசதிகளை அளிக்கின்றன. எடுத்துக்காட்டாக விண்டோஸ் மீடியா பிளேயர் இந்த ஜம்ப் லிஸ்ட்டில் இருக்கையில் அதன் மீது கர்சரைக் கொண்டு செல்கையில் மீடியா பிளேயரில் உள்ள பாடல்களை இயக்க ஆப்ஷன் உடனடியாகக் கிடைக்கும். இதே போல் ஜம்ப் லிஸ்ட்டில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நெருங்கினால் நாம் ஏற்கனவே பார்த்த தளங்களின் பட்டியல் காட்டப்பட்டு அவற்றை நேரடியாகப் பெறும் ஆப்ஷன் கிடைக்கிறது. இவ்வாறு சில இமெயில் புரோகிராம்களில் அவற்றைத் திறக்காமலேயே மெயில் மெசேஜ் டெக்ஸ்ட் அமைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கிறது. இப்படி பல புரோகிராம்கள் அவற்றைத் திறக்காமலேயே அதன் இயக்கத்திற்கு வழி வகுத்துத் தருகின்றன.
3.டெஸ்க் டாப் மேம்பாடு: விண்டோஸ் 7 தொகுப்பு இயக்கத்தில் டெஸ்க் டாப் இயக்கம் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்க் டாப்பில் புரோகிராம்களை இயக்கும் விதத்தில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக இரண்டு விண்டோக்களைத் திறந்தால் அவற்றை இதுவரை நாமாகத்தான் அட்ஜஸ்ட் செய்து வைக்க வேண்டும். விண்டோஸ் 7ல் ஸ்நாப்ஸ் என்னும் வசதி மூலம் விண்டோ ஒன்றை மவுஸால் பிடித்து இழுத்து எந்த இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் எந்த இரண்டு விண்டோவினையும் நமக்கு வசதியாக வைத்துக் கொண்டு ஒப்பிட்டு இயக்கலாம்.
நம் விண்டோவில் உள்ள பைல்களில் ஒன்றை உடனடியாகப் பார்க்க,இயக்க விரும்புவோம். டெஸ்க் டாப்பினை முழுமையாகப் பார்க்க திரையின் வலது கீழ் மூலைக்குக் கர்சரை எடுத்துச் சென்றால் உடனே அனைத்து புரோகிராம்களும் ஒன்றோடொன்று தெரியும்படி ட்ரான்ஸ்பரண்டாகக் காட்டப்படும். இவற்றில் ஒரே ஒரு விண்டோ உங்களுக்கு வேண்டும் என்றால் அதன் மேலாகச் சென்று கர்சரால் அழுத்தியவாறு சற்று அசைத்தால் போதும். திறந்திருக்கும் மற்ற அனைத்து விண்டோக்களும் டாஸ்க் பாருக்கு மினிமைஸ் செய்யப்பட்டு நாம் விரும்பிய அந்த விண்டோ மட்டும் கிடைக்கும். மீண்டும் கர்சரை மேலாகக் கொண்டு சென்று அழுத்தி அசைத்தால் பழையபடி அனைத்து விண்டோக்களும் கிடைக்கும்.
4. விண்டோஸ் வழி தேடல்: ஏதேனும் பொருள் குறித்து தகவல் வேண்டுமென்றால் என்ன செய்கிறோம்? இன்டர்நெட் இணைப்பில் சர்ச் இஞ்சினில் சென்று தேடுகிறோம். அதே போல இப்போது நம் கம்ப்யூட்டரிலும் தேடலாம். இது விஸ்டா சிஸ்டத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட வசதி என்றாலும் விண்டோஸ் 7ல் இது இன்னும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கிறது.
ஒரு பைல் அல்லது இமெயில் அல்லது ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராம் தேவையா? ஸ்டார்ட் பட்டன் அழுத்தினால் ஸ்டார்ட் மெனுவின் கீழாக ஒரு சர்ச் பாக்ஸ் கிடைக்கும். இதில் அந்த பைல் அல்லது அப்ளிகேஷனுடைய பெயரில் ஒரு சொல் அல்லது சில எழுத்துக்களை டைப் செய்து என்டர் தட்டினால் உடனே அதற்கான தேடல் முடிவுகள் நமக்குக் காட்டப்படும். இதில் என்ன விசேஷம் என்றால் குறிப்பிட்ட வகை பைல்கள் பல டைரக்டரிகளில் இருக்கும். விண்டோஸ் 7 இவை அனைத்தையும் மொத்தமாகப் பட்டியலிட்டு கொடுக்கும். இதனால் நம் தேடல் நேரம் மிச்சமாகும். எடுத்துக் காட்டாக மை போட்டோஸ் என்னும் போல்டரில் உங்கள் போட்டோக்கள் அனைத்தையும் சேவ் செய்திருப்பீர்கள். சிலவற்றை இன்னும் சில போல்டர்களிலும் இருக்கும். இவை அனைத்தையும் விண்டோஸ் 7 லைப்ரரீஸ் மொத்தமாக எடுத்துக் காட்டும்.
5. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8: விண்டோஸ் 7 தொகுப்புடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 தரப்படுகிறது. ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ன் புதிய வசதிகள் குறித்து கட்டுரை தரப்பட்டது. அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு பார்க்கலாம். இத்தொகுப்பில் ஏதேனும் தேடல் குறித்த சொற்களை அமைக்கையில் அதனைத் தொடங்கியவுடனேயே பல ஆப்ஷன்களை தேடல் விண்டோ கொடுக்கிறது. நம் இணைய பிரவுசிங் ஹிஸ்டரியையும் அடிப்படையாகக் கொண்டு ஆப்ஷன்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்து நம் தேடலை எளிதாக்குகிறது. இதில் தரப்பட்டுள்ள Live Maps Accelerator நம் இடத் தேடலை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுகிறது. ஏதேனும் தெருவின் பெயரை டைப் செய்து ரைட் கிளிக் செய்தால் ஆக்ஸிலரேட்டர் இட இமேஜை உடனே தருகிறது.
ஓர் இணைய தளம் குறித்த தகவலை அந்த தளம் சென்று பெறாமல் வெப் ஸ்லைஸ் என்னும் புதிய வசதி மூலம் பெற முடிகிறது. ஏலப் பொருட்கள், கேம்ஸ் ஸ்கோர்ஸ், பொழுது போக்கு நிகழ்வுகள், சீதோஷ்ண நிலை விவரங்கள் போன்றவற்றை இந்த வகையில் பெறலாம்.
6. ஸ்கிரீன் மேனேஜ்மென்ட்: விண்டோஸ் இயக்கம் வந்த காலம் முதல் நாம் பல்வேறு சாதனங்களைத் தனித்தனி விண்டோவில் ஒரே நேரத்தில் பார்த்து இயக்க முடிந்தது. ஆனால் விண்டோஸ் 7 மூலம் இவை அனைத்தையும் Devices and Printers என்ற விண்டோவின் மூலம் இயக்கலாம். மேலும் விண்டோஸ் 7 இயக்கத்தில் Device Stage என்னும் இன்னுமொரு புதிய வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு சாதனைத்தையும் இயக்கலாம். இந்த புரோகிராமினைத் தங்கள் இயக்கத்தில் வைத்துள்ள ஒரு சாதனத்தை மிக விரைவாகவும் எளிதாகவும் இயக்கலாம். எடுத்துக் காட்டாக டிஜிட்டல் கேமரா ஒன்று இதற்கேற்ப புரோகிராம் செய்யப்பட்டிருந்தால் அந்த கேமராவினைக் கம்ப்யூட்டரில் இணைத்தவுடன் டிவைஸ் ஸ்டேஜ் மூலம் அதில் எத்தனை போட்டோக்கள் உள்ளன மற்றும் சார்ந்த தகவல்களைக் காணலாம்.
7. ஹோம் குரூப்: இன்றைக்குப் பல வீடுகளில் நாம் வைத்து இயக்கும் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் இணைப்பை பகிர்ந்து பயன்படுத்த ஹோம் நெட்வொர்க்கினை ஏற்படுத்துகிறோம். ஆனால் இதன் மூலம் மற்ற சாதனங்களை இயக்குவது சற்று சிரமமானது.நம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இருக்கலாம்; ஆனால் பிரிண்டர் ஒன்றுதான் வைத்திருப்போம்.
படுக்கை அறையில் லேப் டாப் பயன்படுத்துவோம். அதில் உள்ள ஒரு பைலை பிரிண்ட் எடுக்க பிரிண்டர் வீட்டில் இன் னொரு அறையில் இருக்கலாம்; என்ன செய்வோம்? நான் அதனை இமெயில் மூலம் அக்கவுண்ட் ஒன்றுக்கு அனுப்பி பின் அந்த பைலை பிரிண்டருடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வழியாகப் பெற்று அச்செடுப்போம். அல்லது யு.எஸ்.பி. டிரைவ் ஒன்றைப் பயன்படுத்தி பைலை மாற்றுவோம். ஹோம் குரூப் இந்த் தொல்லைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. விண்டோஸ் 7 பதியப்பட்டு இயக்கப்படும்போதே அந்த கம்ப்யூட்டரில் ஹோம் குரூப் இயங்கத் தொடங்குகிறது. பின் வீட்டில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்களையும் இதன் மூலம் இயக்கலாம். போட்டோக்களை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து பின் ஹோம் குரூப் மூலம் லேப் டாப்பில் பெறலாம். இதே போல் பைலை அச்சிடும் வேலையையும் மேற்கொள்ளலாம்.
மேலும் விண்டோஸ் 7, எந்த நெட்வொர்க்காயினும், அது எப்படிப்பட்ட வகையில் இணைக்கப்பட்டிருந்தாலும் (வயர்டு,வைபி, மொபைல் பிராட்பேண்ட், டயல் அப், கார்பொரேட் நெட்வொர்க் போன்றவை) கம்ப்யூட்டர்களுக்குள் பைல் மாற்றத்தை ஒரே கிளிக்கில் தருகிறது. ஏற்கனவே இருந்த பல வசதிகள் மேம்படுத்தப்பட்டு இந்த தொகுப்புடன் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் காலண்டர் புது வடிவில் புரோகிராமர் மற்றும் ஸ்டேட்டிக்ஸ் என தரப்பட்டுள்ளது.
கண்ட்ரோல் பேனலில் Clear Type Text Tuner, Display Calibration Wizard, Gadgets Recover, Trouble shooting, Workspaces Center, Location and Other Sensors, Credential Manager, Biometric Devices, System Icons மற்றும் Display ஆகிய வசதிகள் புதியனவாகச் சேர்க்கப்பட்டுள்ளன. Windows Security Centreஆக இருந்த பிரிவு Windows Action Centre என மாற்றப்பட்டுள்ளது.
விண்டோஸ் 7 வருவதற்கு முன் வந்த சிஸ்டங்களில் இருந்த சில வசதிகள் இதில் இணைக்கப்படவில்லை. அவை – விண்டோஸ் காலண்டர், விண்டோஸ் மெயில், விண்டோஸ் மூவி மேக்கர், விண்டோஸ் போட்டோ காலரி. இவற்றில் சில விண்டோஸ் லைவ் எசன்ஷியல்ஸ் என்ற அடிப்படையில் இலவச புரோகிராம்களாகத் தரப்படுகின்றன.
விண்டோஸ் விஸ்டாவில் இருந்து நீக்கப்பட்ட Internet Spades, Internet Backgamm on and Internet Checkers புரோகிராம்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் 12 சேர்க்கப்பட்டுள்ளன. நாம் விரும்பினால் விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பைச் செயல்படவிடாமல் மாற்றிவிடலாம். இந்த வரிசையில் விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் சர்ச் மற்றும் விண்டோஸ் கேட்ஜட் பிளாட்பார்ம் ஆகியவை உள்ளன.
எக்ஸெல் பங்சன்கள்
எக்ஸெல் பங்சன்கள்
எக்ஸெல் தொகுப்பில் பெரும்பாலான டேட்டாக்கள் எண்களாகவே உள்ளன. இவற்றைக் கொண்டு பல பொதுவான கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் இதற்கான பார்முலாக்களை அமைத்து செயல் படுத்தினால் நேரம் வீணாகும் என்பதற்காக எக்ஸெல் தொகுப்பில் டிபால்ட்டாக பல கணக்கீடு பங்சன்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் நினைவில் கொள்ள வேண்டிய சில பங்சன்கள் குறித்த விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.
1. Average: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தருகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: AVERAGE (A:A4) இந்த பார்முலாவில் A1முதல் A4வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதாவது A1 முதல் A4 வரையிலான எண்கள் கூட்டப்பட்டு கூட்டுத் தொகை 4ஆல் வகுக்கப்பட்டு தரப்படும். இந்த பார்முலா எந்த செல்லுக்கென எழுதப் பட்டுள்ளதோ அந்த செல்லில் பதியப்படும்.
2. Count: கொடுக்கப்பட்டுள்ள செல்களில் எத்தனை செல்களில் மதிப்பு தரப்பட்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பு பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும். இதனை அமைக்கும் விதம் COUNT (A1:A4)
3.Max: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது அதிக மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும். இதனைப் பயன்படுத்தும் விதம்: MAX(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது பெரிய எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.
4. Min: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும்.
இதனைப் பயன்படுத்தும் விதம்: Min (A1:A4) இந்த பார்முலாவில் A1முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்பு கொண்ட எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.
5 Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது.
இதனைப் பயன்படுத்தும் விதம்: SUM (A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள டேட்டாக்கள் கூட்டப் படுகின்றன.
இந்த பங்சனில் உள்ள பார்முலாவை எந்த செல்லில் அமைக்கிறீர்களோ அந்த செல்லில் இந்த கூட்டுத்தொகையின் மதிப்பு பதியப் படும். மேலே தரப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுக்களில் செல்களின் எண்களாக நமக்குத் தேவைப் படும் செல்களின் எண்களைத் தரலாம்.
No comments:
Post a Comment