Monday 2 April 2012

விண்டோஸ் 7 – சில வசதிகள் ,,வேர்டு: டிப்ஸ் டிப்ஸ் ,,சமுதாய தளங்களின் இலக்கு மாறிய 2009 ,,டிவி க்களில் ஸ்கைப்,,பயர்பாக்ஸ் பேட்ச் பைல் ,,ஹேக்கர்களின் புதிய இலக்குகள்


விண்டோஸ் 7 – சில வசதிகள்

விண்டோஸ் 7 தொகுப்பு தரும் கூடுதல் வசதிகளினால், பலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு விரும்பி மாறியுள்ளனர். புதிதாக விற்பனை செய்யப்படும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பதிந்து தரப்படுகிறது. எனவே வாசகர்கள் பலர் விண்டோஸ் 7 தரும் சின்ன சின்ன வசதிகள் குறித்துத் தொடர்ந்து எழுதும் படி கேட்டுள்ளனர். ஏற்கனவே சில வாரங்களில் இது குறித்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதோ இன்னும் சில!
டாஸ்க் பார் பெரிதா – குறைக்கலாமே!
விண்டோஸ் 7 சிஸ்டத்தின் டாஸ்க் பார், வழக்கத்திற்கு மாறாகச் சற்றுப் பெரிதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மானிட்டர் திரையின் அடிப்பாகத்தில் சற்று அதிகமாகவே இடத்தை எடுத்துக் கொள்கிறது.இதனால் பட்டன்கள் பெரிதாக இருக்கின்றன. நீங்கள் டச் ஸ்கிரீன் பயன்படுத்தினால், எளிதாக பட்டன்களை அழுத்தி கம்ப்யூட்டரை இயக்க முடியும். அதே நேரத்தில் சற்று சிறிதான அளவில் உள்ள மானிட்ட ர்களை இயக்குபவர்களுக்கு இது சிரமத்தைத் தரும் அம்சமாக இருக்கும். டாஸ்க் பார் எடுத்துக் கொள்ளும் இடத்தை அப்ளிகேஷன்களுக்குத் தந்தால் விரைவாகச் செயல்படலாம் என்று பலர் ஏங்குவார்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள ஒரு வழி உள்ளது. இதன் மூலம் டாஸ்க் பாரினைச் சற்றுச் சுருக்கிக் கொள்ளலாம்.
1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பிராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.
2. உடன் பல டேப்கள் அடங்கிய Taskbar and Start Menu Properties என்னும் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
3. இதில் Use small icons என்னும் பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
4. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.
இனி டாஸ்க் பார் சிறிய இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஏன், தேவையில்லாத போது இந்த டாஸ்க் பாரை மறைந்து கொள்ளும்படி செய்துவிடலாமே என்று உங்களில் பலர் நினைக்கலாம். தாராளமாக அவ்வாறும் செட் செய்திடலாம். இதற்கு மேலே 2ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ள Taskbar and Start Menu Properties டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். இதில் டாஸ்க் பார் (Taskbar) என்னும் டேப் திறக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இதில் Taskbar appearance என்பதற்குக் கீழாக Autohide the taskbar என்பதில் டிக் அடையாளம் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். உங்களு டைய செட்டிங்ஸ் சேவ் செய்யப்பட்டு, அவற்றில் அமைத்தபடி டாஸ்க் பார் இயங்கும். இனி உங்கள் அம்புக் குறியினை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிட்டால், டாஸ்க் பார் மறைந்துவிடும். அந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றால், டாஸ்க் பார் தோன்றும்.
கடிகாரம், சிஸ்டம் ஐகான்களை மறைக்கலாமா?
விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் கடிகாரம், சிஸ்டம் மற்றும் பிற ஐகான்களை மறைக்க முடியுமா? மறைக்க முடியும் என்றால் பலர் அவற்றை மறைக்கவே விரும்புவார்கள். வால்யூம் கண்ட்ரோல், நெட்வொர்க் இயக்க ஐகான், பவர் லெவல் என பல ஐகான்களை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிடலாம். ஏனென்றால் இவற்றை நாம் பார்ப்பது அரிது. சரி, எப்படி எடுத்துவிடலாம் அல்லது மறைத்துவிடலாம்.
1. டாஸ்க் பாரின் வலது மூலையில் மேலே சுட்டிக் கொண்டிருக்கும் அம்புக் குறி ஒன்றைக் காணலாம். அதன் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அப்போது Show hidden icons என்று காட்டப்படும். அந்த பட்டனில் கிளிக் செய்து இதண்tணிட்டித்ஞு என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இப்போது Notification Area Icons என்னும் கண்ட்ரோல் பேனல் கிடைக்கும். இந்த விண்டோவின் கீழாக உள்ள Turn system icons on or off என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இதனை அடுத்து எந்த ஐகானில் மாற்றங்கள் தேவையோ, அல்லது எந்த ஐகானை மறைக்க செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த ஐகானில் கிளிக் செய்து, மெனு பெற்று அதனை ஆப் அல்லது ஆன் செய்திடலாம்.
4. அதன் பின் டயலாக் பாக்ஸில் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.

No comments:

Post a Comment