Thursday 22 March 2012

பொது அறிவு வினா-விடை page 2


101. தில்லியிலிருந்து தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் எதனால் தலைநகரை மாற்றினார்?

அ. தேவகிரி நிர்வாகத்திற்கு ஏற்ப மையத்தில் அமைந்திருந்ததால்
ஆ. மங்கோலிய படையெடுப்புகளால் தில்லி பாதுகாப்பு இல்லாதிருந்ததால்
இ. இந்தியாவின் தென் பகுதிகளை வெல்ல விரும்பியதால்
ஈ. இவை அனைத்துமே 


102. குதுப்மினாரை யாருடைய ஞாபகார்த்தமாக இல்டுமிஷ் கட்டினார்?

அ. அய்பக்
ஆ. பக்தியார் காகி
இ. ரசியா பேகம்
ஈ. பெரோஷா துக்ளக் 


103. தில்லியின் முதலாவது முஸ்லிம் ஆட்சியாளர் யார்?

அ. குத்புதீன் அய்பக்
ஆ. இல்டுமிஷ்
இ. உல்துஷ்
ஈ. கோபாட்சா 


104. இந்தியாவில் துருக்கியரின் ஆட்சிக்கு வழிவகுத்தது எது?

அ. முதலாவது தரைன் போர்
ஆ. இரண்டாம் தரைன் போர்
இ. முதலாம் பானிபட்டு போர்
ஈ. இவை அனைத்துமே 


105. ஆரியர்கள் இந்தியாவிற்கு எங்கிருந்து வந்தனர்?

அ. அண்டார்டிகா
ஆ. கிழக்கு ஐரோப்பா
இ. வட அமெரிக்கா
ஈ. மத்திய ஆசியா


106. இந்தியாவில் ஆரியர்களின் முதல் நிரந்தர இருப்பிடம் எது?

அ. பஞ்சாப்
ஆ. ராஜஸ்தான்
இ. சிந்து
ஈ. குஜராத் 


107. ரிக்வேத காலத்து ஆரியர்கள் எங்கு வசித்தனர்?

அ. நகரங்கள்
ஆ. கிராமங்கள்
இ. சிறிய நகரங்கள்
ஈ. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் 


108. ரிக் வேத காலத்தில் ஒருவரை செல்வம் மிக்கவர் என அழைத்தது இது அதிகமாக இருந்தால் தான்

அ. பணம்
ஆ. நிலம்
இ. தங்கம்
ஈ. பசு 


109. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த காலம்?

அ. கி.மு. 3000
ஆ. கி.மு. 1500
இ. கி.மு. 2500
ஈ. கி.மு. 1000 


110. பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?

அ. புஷன்
ஆ. அக்னி
இ. விஷ்ணு
ஈ. இந்திரா 




விடை: 101. ஈ 102. ஆ 103. அ 104. ஆ 105. ஈ 106. அ 107. ஆ 108. ஈ 109. ஆ 110. இ 
111. ரிக் வேத காலத்தில் காணப்படும் காயத்ரி மந்திரம் யாரைக் குறிக்கிறது?

அ. இந்திரன்
ஆ. சாவித்ரி
இ. வருணன்
ஈ. அக்னி


112. சுக்தம் என்பது எதைக் குறிக்கிறது?

அ. வேதகாலத்து அரசரை
ஆ. ஒரு பிராமணரை
இ. வேதத்தில் உள்ள மந்திரங்களை
ஈ. உபநிடம் ஒன்றின் பெயரை


113. சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?

அ. சந்தோக்ய உபநிடம்
ஆ. முண்டக உபநிடம்
இ. மைத் உபநிடம்
ஈ. கதக உபநிடம்


114. காந்தாரக் கலை புத்த மதத்தின் எந்தப் பிரிவோடு தொடர்புடையது?

அ. ஹீனயானம்
ஆ. மகாயானம்
இ. வஜ்ராயனம்
ஈ. ஜென் புத்த பிரிவு


115. பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்?

அ. புஷ்யமித்திரர்
ஆ. அக்னிமித்திரர்
இ. சுஜ்யேஷ்தர்
ஈ. சுமித்திரர்


116. யாருடைய காலத்தில் அஜந்தா ஓவியங்கள் வரையத் தொடங்கப்பட்டன?

அ. சுங்கர்
ஆ. சாதவாகனர்
இ. கன்வர்
ஈ. குஷாணர்


117. சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன?

அ. பிரம்மாண்டமான கோயில்கள்
ஆ. சிறந்த நகர்ப்புற திட்டமிடல்
இ. கலை மற்றும் கட்டிடக் கலை
ஈ. பெரிய ஸ்தூபிகள்


118. ஹரப்பாவின் எந்தப் பகுதியோடு நெல் பயிரிடுதல் தொடர்புடையது?

அ. களிபங்கன்
ஆ. லோதல்
இ. கோட் டிஜி
ஈ. ரோபார்


119. பின்வரும் வெளிநாட்டு தூதர்களில் யார் இந்தியாவிற்கு வரவில்லை?

அ. ஹுவான் சுவாங்
ஆ. அதனேஷியஸ் நிகிடின்
இ. எட்வர்ட் பார்போசா
ஈ. எட்வர்ட் டிரேக்


120. இந்திய தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ. அலெக்சாண்டர் கன்னிங்காம்
ஆ. கர்சன் பிரபு
இ. மார்டைமர் வீலர்
ஈ. ஜான் மார்ஷல்




விடை: 111. ஆ 112. இ 113. ஆ 114. ஆ 115. அ 116. ஆ 117. ஆ 118. ஆ 119. ஈ 120. அ


121. பின்வருவனவற்றில் எது மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?

அ. அரிசி
ஆ. சோளம்
இ. பார்லி, கோதுமை
ஈ. மில்லட்


122. சமஸ்கிருத மொழி வார்த்தையான இந்து எதைக் குறிக்கிறது?

அ. மொழி
ஆ. ஆறு
இ. மதம்
ஈ. ஜாதி


123. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

அ. இரும்பு
ஆ. செம்பு
இ. வெண்கலம்
ஈ. தகரம்


124. அசோகரின் கல்வெட்டுக்கள் 1837ல் யாரால் விளக்கப்பட்டன?

அ. ஜேம்ஸ் பிரின்செப்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. வின்சென்ட் ஸ்மித்
ஈ. மேக்ஸ் மியூலர்


125. ரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சி எவ்வாறும் அழைக்கப்படுகிறது?

அ. அக்டோபர் புரட்சி
ஆ. நவம்பர் புரட்சி
இ. டிசம்பர் புரட்சி
ஈ. ஜனவரி புரட்சி


126. சிந்து சமவெளி நாகரீகம் எங்கு பரவியிருந்தது?

அ. பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், குஜராத்
ஆ. பஞ்சாப், சிந்து, வங்காளம், பீகார்
இ. பஞ்சாப், சிந்து, ஜம்மு காஷ்மீர், ஒரிசா
ஈ. சிந்து, கங்கை கரையோரப் பகுதிகள்


127. பின் வேத காலம் என்பது

அ. ரிக் வேத காலம்
ஆ. இதிகாச காலம்
இ. உலோக காலம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்


128. ரிக் வேதத்தில் சாதிகளைப் பற்றிய குறிப்பு உள்ள பாடல்

அ. கிரகஸ்தம்
ஆ. புருஷசூக்தம்
இ. கோஷோலிங்கம்
ஈ. மனிஷ்தம்


129. சிந்து சமவெளி நகரான மொஹஞ்சதாரோவைக் கண்டுபிடித்தவர்

அ. சர் ஜான் மார்ஷல்
ஆ. ஆர்.டி. பானர்ஜி
இ. தயாராம் ஷானி
ஈ. சர்மார்டிமர் வீலர்


130. பின் வேத காலத்தில்

அ. பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்
ஆ. பலதார மணம் நடைமுறையில் இருந்தது
இ. குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன
ஈ. பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது




விடை: 121. ஆ 122. ஆ 123. ஆ 124. அ 125. அ 126. அ 127. ஆ 128. ஆ 129. ஆ 130. ஆ


131. கீழ்க்கண்டவற்றை சரியாக வரிசைப்படுத்துக.

1. கிரகஸ்தம்
2. வனப்பிரஸ்தம்
3. சன்னியாசம்
4. பிரமச்சரியம்

அ. 4, 1, 2, 3
ஆ. 1, 2, 4, 3
இ. 1, 4, 2, 3
ஈ. 4, 2, 3, 1 


132. இரும்பு காலத்தில் செய்யப்பட்ட கருவிகள்

அ. கத்தி
ஆ. கலப்பை
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை


133. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. மொஹஞ்சதாரோ - பஞ்சாப்
ஆ. காலிபங்கன் - ராஜஸ்தான்
இ. லோத்தல் - குஜராத்
ஈ. எதுவுமில்லை 


134. பின் வருவனவற்றில் எது சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?

அ. குதிரை
ஆ. எருமை
இ. செம்மறி ஆடுகள்
ஈ. பன்றி 


135. சிந்து சமவெளி நாகரீகத்தில் மக்களை ஆட்சி செய்தது யார்?

அ. குருக்கள்
ஆ. வியாபாரிகள்
இ. பேரரசர்
ஈ. மக்களுடைய பிரதிநிதிகள்


136. சிந்து சமவெளி நாகரீக மக்கள் வணங்கிய கடவுள் யாருடைய சாயலில் இருந்ததாக கூறப்படுகிறது?

அ. விஷ்ணு
ஆ. வருணர்
இ. பசுபதி
ஈ. பிரம்மா 


137. சிந்து சமவெளி நாகரீகத்தின் துறைமுக நகரம் எது?

அ. பானாவளி
ஆ. லோதல்
இ. ரோபார்
ஈ. ஹரப்பா 


138. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது?

அ. கோதுமை
ஆ. அரிசி
இ. பார்லி
ஈ. சோளம்


139. சிந்து சமவெளி மக்கள் எதை புனிதமாக வணங்கினார்கள்?

அ. மயில்
ஆ. கருடன்
இ. பசு
ஈ. திமில்காளை 


140. சிந்து சமவெளி மக்கள் எதிலிருந்து பெறப்பட்ட ஆடையை அணிந்தனர்?

அ. பட்டு
ஆ. விலங்கு தோல்
இ. பருத்தி
ஈ. பருத்தி மற்றும் கம்பளி




விடை: 131. அ 132. இ 133. அ 134. அ 135. ஆ 136. இ 137. ஆ 138. அ 139. ஈ 140. ஈ

141. ஹரப்பா மக்கள் கீழ்க்கண்ட எந்த நாட்டினரோடு வாணிபத் தொடர்பு வைத்திருக்கவில்லை?

அ. ஈரான்
ஆ. மெசபடோமியா
இ. ரோம்
ஈ. ஆப்கானிஸ்தான் 


142. சிந்து சமவெளி நாகரீகத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் எதில் செய்யப்பட்டவை?

அ. கற்கள்
ஆ. டெர்ரகோட்டா
இ. வெண்கலம்
ஈ. செம்பு


143. ஹரப்பா மண் பாண்டங்கள் பொதுவாக எந்த நிறத்தைக் கொண்டிருந்தன?

அ. மஞ்சள்
ஆ. ஊதா பச்சை
இ. கருஞ்சிவப்பு
ஈ. இளஞ்சிவப்புடன் கூடிய மஞ்சள்


144. வேத வழிபாட்டு நூல்

அ. ரிக் வேதம்
ஆ. சாம வேதம்
இ. யஜூர் வேதம்
ஈ. அதர்வண வேதம் 


145. மகாவீரர் பிறந்த இடம்

அ. லும்பினி
ஆ. கயா
இ. குந்தகிராமம்
ஈ. லிச்சாவி


146. ரிக் வேதத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ. 1024
ஆ. 1028
இ. 1032
ஈ. 1036


147. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்

அ. கூன்பாண்டியன்
ஆ. சடாவர்ம சுந்தரப் பாண்டியன்
இ. விஜயாலய சோழன்
ஈ. சேரன் இளஞ்சேரலாதன்


148. புத்த மற்றும் சமண சமயங்கள் தோன்ற காரணமான சூழல் எது?

அ. சமய இலக்கியங்கள் புரியாத சமஸ்கிருதத்தில் இருந்தன
ஆ. சடங்குகள் மற்றும் வேள்விகள்
இ. சாதிமுறை கடுமையாக இருந்தன
ஈ. இவை அனைத்தும் 


149. கீழ்க்கண்ட யார் புத்த மதத்தின் கடும் எதிரி?

அ. கனிஷ்கர்
ஆ. ஹர்ஷர்
இ. அஜாத சத்ரு
ஈ. புஷ்ய மித்ர சுங்கன் 


150. நான்காவது புத்த மத மாநாட்டை கூட்டியவர்

அ. அசோகர்
ஆ. கனிஷ்கர்
இ. ஹர்ஷர்
ஈ. விக்ரமாதித்யர்



விடை: 141. இ 142. ஆ 143. ஈ 144. இ 145. இ 146. ஆ 147. அ 148. ஈ 149. ஈ 150. ஆ

151. மெகஸ்தனிஸ் எழுதிய வரலாற்று படைப்பு

அ. இண்டிகா
ஆ. அர்த்த சாஸ்திரம்
இ. குஜராத் வரலாறு
ஈ. அனைத்தும் 


152. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு

அ. யானை
ஆ. மாடு
இ. குதிரை
ஈ. மான் 


153. அலெக்சாண்டரின் நண்பர்

அ. செலியூகஸ் நிகேடர்
ஆ. அரிஸ்டாடில்
இ. நியர்சஸ்
ஈ. பிலிஃப் 


154. பொருத்துக:

I. பத்ரபாகு - 1. கலிங்க அரசன்
II. சசாங்கன் - 2. சமணத் துறவி
III. பிரகதத்தன் - 3. மௌரிய அரசன்
IV. விசாகத்தன் - 4. முத்ரா ராட்சசம்

அ. I-1, II-2, III-3, IV-4
ஆ. I-1, II-3, III-2, IV-4
இ. I-2, II-1, III-4, IV-3
ஈ. I-2, II-1, III-3, IV-4 


155. சமண மதம் எந்த 2 பிரிவுகளாகப் பிரிந்தது?

அ. ஹீனயானம், மகாயானம்
ஆ. தெரவாடின், ஷின்டோ
இ. திகம்பர், ஸ்வேதாம்பர்
ஈ. மகாசங்கிகர், வஜ்ரயானர் 


156. மௌரியக் கலையின் சிறப்பம்சம் என்ன?

அ. பூக்கள் வடிவம்
ஆ. விலங்கள் வடிவம்
இ. கடவுளின் உருவங்கள்
ஈ. தூண்கள் 


157. மௌரியக் கட்டடங்கள் மற்றும் சிற்பங்களுக்கான கல் எங்கிருந்து வந்தது?

அ. ஜெய்பூர்
ஆ. தென்னிந்தியா
இ. இந்தியாவிற்கு வெளியிலிருந்து
ஈ. சுணார் 


158. ஹைடஸ்பஸ் என்னும் நதிக்கரையில் அலெக்ஸாண்டர் போரஸ் மன்னரை தோற்கடித்தார். இந்த ஹைடஸ்பஸ் என்பது பஞ்சாபின் எந்த நதியைக் குறிக்கிறது?

அ. ஜீலம்
ஆ. சட்லஜ்
இ. பியாஸ்
ஈ. சீனாப் 


159. குப்த பேரரசை நிறுவியவர் யார்?

அ. ஸ்ரீகுப்தர்
ஆ. கடோகசர்
இ. முதலாம் சந்திரகுப்தர்
ஈ. சமுத்திரகுப்தர் 


160. விக்கிரமாதித்யர் என்னும் பட்டம் யாருக்குத் தரப்பட்டது?

அ. இரண்டாம் சந்திரகுப்தர்
ஆ. முதலாம் சந்திரகுப்தர்
இ. கடோகசர்
ஈ. ஸ்கந்தகுப்தர் 




விடை: 151. அ 152. ஈ 153. இ 154. 155. இ 156. ஆ 157. இ 158. அ 159. அ 160. அ

161. எந்த குப்த மன்னன் காலத்தில் பாகியான் இந்தியாவிற்கு வந்தார்?

அ. குமாரகுப்தர்
ஆ. ஸ்கந்தகுப்தர்
இ. முதலாம் சந்திரகுப்தர்
ஈ. இரண்டாம் சந்திரகுப்தர் 


162. சதி என்னும் உடன்கட்டையின் தொடக்க கால நடைமுறை கி.பி. 510ல் குப்தர்கள் காலத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. இது எங்கு காணப்பட்டது?

அ. விதிஷா
ஆ. மால்வா
இ. உஜ்ஜயின்
ஈ. எரான் 


163. பின்வரும் கலை வடிவங்களில் எது குப்தர்களின் காலத்தோடு அடையாளம் காணப்படுகிறது?

அ. மெக்ரவுலியில் உள்ள இரும்பு தூண்கள்
ஆ. சுல்தான்கஞ்சில் உள்ள புத்தன் வெண்கலச் சிலை
இ. புமாரா, பிடார்காவுன், பிரிட்டா, தியோகல் உள்ள செங்கல் கோவில்கள் மற்றும் அஜந்தா ஓவியங்கள்
ஈ. இவை அனைத்துமே 


164. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காளிதாசன் படைப்பு எது?

அ. துசம்ஹாரம்
ஆ. மேகதூதம்
இ. சகுந்தலம்
ஈ. ஹவம்சம் 


165. யாத்திரிகர்களின் இளவரசர் என அழைக்கப்படுபவர் யார்?

அ. பாகியான்
ஆ. யுவான்சுவாங்
இ. இட்சிங்
ஈ. இவர் அனைவருமே 


166. பொருளாதார மற்றும் கலாச்சாரம் தொடர்பானவற்றில் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் பாலமாக விளங்கியது யார்?

அ. ராஷ்டிரகூடர்கள்
ஆ. பாலர்கள்
இ. பல்லவர்கள்
ஈ. சோழர்கள் 


167. சோழப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. விஜயாலயா
ஆ. முதலாம் ராஜேந்திரர்
இ. ராஜராஜன்
ஈ. விஜயேந்திரர் 


168. வர்த்தமானர்களின் தலைநகரம்

அ. தானேஸ்வரம்
ஆ. தட்ச சீலம்
இ. அவந்தி
ஈ. எதுவுமில்லை 


169. 'சாக்கியமுனி' என்று பாராட்டப்படுபவர்

அ. பாகியான்
ஆ. மகாவீரர்
இ. ஹேமச்சந்திரர்
ஈ. யுவான் சுவாங் 


170. கீழ்க்கண்ட எது ஹர்ஷரால் எழுதப்பட்டது?

அ. இரத்னாவளி
ஆ. காதம்பரி
இ. சுலோகபாரதி
ஈ. ஹர்ஷ சரிதம் 




விடை: 161. ஈ 162. ஈ 163. ஈ 164. இ 165. ஆ 166. அ 167. அ 168. அ 169. ஈ 170. அ

171. கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.

அ. (A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம்
ஆ. (A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல
இ. (A) சரி (R) தவறு
ஈ. (A) தவறு (R) சரி 


172. ஹர்ஷர் தானேஸ்வரத்தின் மன்னனாக பதவியேற ஆண்டு

அ. கி.பி. 606
ஆ. கி.பி. 608
இ. கி.பி. 609
ஈ. கி.பி. 611 


173. ஹர்ஷர் மரணமடைந்த ஆண்டு

அ. கி.பி. 619
ஆ. கி.பி. 637
இ. கி.பி. 647
ஈ. கி.பி. 657 


174. இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் காட்சி ஓவியமாக செதுக்கப்பட்டுள்ள இடம்

அ. அஜந்தா
ஆ. எல்லோரா
இ. பாதாமி
ஈ. அய்ஹோலி 


175. இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்ட ஆண்டு

அ. கி.பி. 642
ஆ. கி.பி. 753
இ. கி.பி. 755
ஈ. கி.பி. 767 


176. ராஷ்டிர கூடர்களில் சிறந்த அரசர்

அ. தண்டி துர்கா
ஆ. மூன்றாம் கோவிந்தர்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. ஜெயவர்தனன் 


177. பிரயாகை நதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசர்

அ. இரண்டாம் புலிகேசி
ஆ. ஹர்ஷவர்த்தனர்
இ. மூன்றாம் கோவிந்தர்
ஈ. அனைவரும் 


178. 'சியூக்கி' என்னும் நூலை எழுதியவர்

அ. தர்மபாலர்
ஆ. ஹரிசேனர்
இ. யுவான் சுவாங்
ஈ. பாஹியான் 


179. 'மகிபாலர்' என்பவர்

அ. கன்னோசி அரசன்
ஆ. வங்காள அரசன்
இ. ஹர்ஷரின் தளபதி
ஈ. மாளவ அரசன் 


180. பொருத்துக:

I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3 




விடை: 171. இ 172. 606 173. இ 174. அ 175. அ 176. ஆ 177. ஆ 178. இ 179. ஆ 180. ஆ

181. சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதை கண்டறிக.

அ. பிரித்திவிராசன் - சவுகான்
ஆ. ஜெயசந்திரன் - கஜினி நகர்
இ. ஷாநாமா - அபுபாஸல்
ஈ. தில்வாரா - ஆக்ரா 


182. 'பதஞ்சலி' என்பவர்

அ. கன்வர்களின் படைத்தளபதி
ஆ. கலிக மரபின் அரசர்
இ. ஒரு சமஸ்கிருத இலக்கண வல்லுனர்
ஈ. பாலி மொழியில் புத்தகத்தை பரப்பியவர் 


183. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.

1. அசுவகோஷர் - மகாவிபாஷம்
2. காளிதாசர் - மாளவி காக்கினி மித்ரம்
3. விசாகதத்தர் - முத்ரா ராக்டியம்

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 2 மற்றும் 3
ஈ. 1 மற்றும் 3 


184. சுங்கர்களின் லட்சியமாக இருந்தது

அ. புத்த மதத்தை உலகெங்கும் பரப்புதல்
ஆ. வேத மதமான இந்து மதத்தை பரப்புதல்
இ. இலக்கியப் பணிகளில் முத்திரைப் பதித்தல்
ஈ. கட்டிடக் கலையில் சாதனை 


185. சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு

அ. கி.பி. 72
ஆ. கி.பி. 120
இ. கி.பி. 78
ஈ. கி.பி. 90 


186. கீழ்க்கண்டவற்றில் தவறான தகவல்

1. மகாயானத்தில் புத்தர் கடவுளாக கருதப்படுகிறார்
2. மகாயானம் சமஸ்கிருதத்தில் பரப்பப்பட்டது
3. மகாயானம் ஹர்ஷரால் பின்பற்றப்பட்டது

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 3 மட்டும்
ஈ. எதுவுமில்லை 


187. கீழ்க்கண்டவற்றில் இந்தியாவில் உள்ள சிந்துவெளி நாகரீக நகரம்

1. ரூபர்
2. லோத்தல்
3. மொஹஞ்சதாரோ

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 1 மற்றும் 3
ஈ. 2 மற்றும் 3 


188. ஹரப்பா நாகரீகத்தில் இருந்த துறைமுக நகர்

அ. மொகஞ்சதாரோ
ஆ. ரூபர்
இ. காலிபங்கன்
ஈ. லோத்தல் 


189. சுசுருசமிதம் எழுதிய சுசுருதர் கீழ்க்கண்ட யார் காலத்தைச் சார்ந்தவர்

அ. கனிஷ்கர்
ஆ. ஹர்ஷர்
இ. இரண்டாம் சந்திர குப்தா
ஈ. அனைவர் காலத்திலும் வாழ்ந்தவர் 



190. சாத வாகனர்கள் ஆண்ட பகுதி

அ. இந்தியாவின் வடமேற்கு பகுதி
ஆ. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி
இ. கங்கைச் சமவெளி மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு
ஈ. கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளுக்கு இடையில் 





விடை: 181. அ 182. இ 183. இ 184. ஆ 185. இ 186. ஈ 187. ஆ 188. ஈ 189. அ 190. ஈ

191. சமுத்திர குப்தரை இந்திய நெப்போலியன் என்று வர்ணித்தவர்

அ. ஜான் மார்ஷல்
ஆ. டாக்டர் ஸ்மித்
இ. ஆர்.டி. பானர்ஜி
ஈ. டாக்டர். பி. மங்கள முருகேசன் 


192. சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல்

அ. மூவருலா
ஆ. பதிற்று பத்து
இ. புறநானூறு
ஈ. பரிபாடல் 


193. 'அவனி சுந்தரி' கதையை எழுதியவர்

அ. கல்கி
ஆ. பரஞ்சோதி
இ. யுவான்சுவாங்
ஈ. தண்டின் 


194. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான பிரதிகாரர்கள் மரபை தோற்றுவித்தவர்

அ. மகேந்திரபாலன்
ஆ. நாகப்பட்டர்
இ. விசால் தேவர்
ஈ. பிரிதிவி ராசன் 


195. ராஜேந்திர சோழனால் கங்கை கரையில் தோற்கடிக்கப்பட்டவர்

அ. தர்மபாலன்
ஆ. கோபாலன்
இ. மகிபாலன்
ஈ. உபேந்திரர் 


196. கஜினியால் தாக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தின் அமைவிடம்

அ. தில்வாரா
ஆ. சித்தோர்கர்
இ. கத்தியவார்
ஈ. புவனேஸ்வரம் 


197. கஜினி முகம்மதுவின் இந்தியாவில் கடைசி படையெடுப்பு

அ. மதுரா
ஆ. கலிஞ்சார்
இ. சோமநாதபுரம்
ஈ. தானேஸ்வரம் 


198. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான சந்தேல மரபின் கடைசி அரசனை தோற்கடித்தவர்

அ. கஜினி முகமது
ஆ. கோரி முகமது
இ. குத்புதீன் அய்பெக்
ஈ. சபக்டிஜின் 


199. ராஜபுத்ர மன்னர்கள் போரில் இறந்தால் அல்லது தோல்வியடைந்தால் அரச குடும்பத்து பெண்கள் தீக்குளித்து இறந்து விடுவர். இந்நிகழ்வு கீழ்க்கண்டவாறு அழைக்கப்பட்டது.

அ. சதி
ஆ. ஜவ்ஹர்
இ. விலாவித்
ஈ. எதுவுமில்லை 


200. ராஜசேகரர் எழுதிய நூல்

அ. பால ராமாயணம்
ஆ. பாலபாரதம்
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை 




விடை: 191. ஆ 192. ஆ 193. ஈ 194. ஆ 195. இ 196. இ 197. ஈ 198. இ 199. ஆ 200. ஆ 





No comments:

Post a Comment