Thursday, 22 March 2012

ஒட்டக் கூத்தர் நூல்கள் (Ottakoothar Books),, இராசராசசோழன் உலா - மூவருலா (Rajaraja Cholan Ula - Muvarula)


ஒட்டக் கூத்தர் நூல்கள் (Ottakoothar Books)


Ottakoothar 
ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கது.  


இரண்டாம் இராசராசனைப் பாராட்டி ஒட்டக்கூத்தர் பாடியது இராசராசசோழன் உலா ஆகும். இவ்வுலாவிற்கு, இம்மன்னன் கண்ணி தோறும் ஆயிரம் பொன பரிசளித்ததாக அறியப்படுகிறது. 


நூல்


புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச்
செயல்வண்ணங் காட்டிய சேயோன் - உயிரனைத்தும்
1

காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி
பூட்டுந் தனியாழிப் பொற்றேரோன் - ஓட்டி
2

அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி
புறவாழி முட்டப் புரந்தோன் - மறையோற்குப்
3

பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும்
நாவிற் பழுதஞ்சி நல்கினோன் - வாவியிற்
4

புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும்
ஒக்க வொருகாலத் தூட்டினோன் - புக்கால்
5

மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப்
புறாநினை புக்க புகழோன் - அறாநீர்த்
6

தரங்கக் கடலோழுந் தன்பெயரே யாகத்
துரங்கப் பசுநாடித் தொட்டோன் - வரங்கொள்
7

சுரநதி தன்பெய ராகச் சுருதி
வரனதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர்
8

மல்லன் மரபை ரகுவின் மரபென்று
சொல்ல வுலகளித்த தொல்லையோன் - செல்லலால்
9

வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய
இந்திரனை யேறாக்கி யேறினான் - முந்தும்
10

ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர்
வருதேரால் வான்பகையை மாய்த்தோன் - பொருது
11

சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு
மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே
12

வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத்
தூங்கும் புரிசை துணிந்தகோன் - வீங்கு
13

குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும்
வடகடற்குந் தென்கடற்கு மன்னன் - தரையின்
14

கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப
வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின்
15

பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன்
திருமகளைக் கல்யாணஞ் செய்தோன் - பரநிருபர்
16

கன்மலை மார்புங் கடவுள் வடமேருப்
பொன்மலை மார்பும் புலிபொறித்தோன் - சொன்மலைய
17

நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் காற்றளையை விட்டகோன் - புல்லார்
18

தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும்
தழும்புடைய சண்டப்ர சண்டன் - எழும்பகல்
19

ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து
வேழந் திறைகொண்டு மீண்டகோன் - சூழி
20

மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டித்
துதகையைத் தீத்த வுரவோன் - முதுவானக்
21

கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும்
மங்கையுட னாடு மரபினோன் - பொங்கி
22

அலைவீசி வேலை யனைத்தினும்போய்த் தெம்மீன்
வலைவீசி வாரிய மன்னன் - கொலையானை
23

பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் - ஒப்பொருவர்
24

பாட வரிய பரணி பசுடொன்றின்
கூடல சங்கமத்துக் கொண்டகோன் - நாடும்
25

கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி
உலகை முன்காத்த வுரவோன் - பலவும்
26

தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப்
பரணி புனைந்த பருதி - முரணில்
27

புரந்தர னேமி பொருவு மகில
துரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபனென்
28

றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து
சேய பெரிய திருக்குலத்து - நாயகன்
29

சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும்
மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய
30

மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும்
சூளிகையு மெத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான்
31

கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில்
வாயிற் றிருச்சுற்று மாளிகையும் - தூயசெம்
32

பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்தும்
முன்னிற் கடலகழின் மூழ்குவித்த - சென்னி
33

திருமகன் சீராச ராசன் கதிரோன்
மருமக னாகி மறித்தும் - திருநெடுமால்
34

ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப்
பாதிப் பகைதடிந்து பாதிக்கு - மேதினியிற்
35

செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க
வந்தான் மனுவங்க்ச மாமேரு - முந்தி
36

உடுத்த திகிரிப் பதினா லுலகும்
அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக்
37

கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும்
தண்ணென் கவிகைச் சனநாதன் - எண்ணும்
38

தவன குலதிலகன் றன்பெருந் தேவி
புவன முழுதுடைய பூவை - அவனியில்
39

எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப்
பெண்பெருமா ளந்தப் புரப்பெருமாள் - மண்பரவ
40

ஓகை விளைக்கு முபய குலரத்னத்
தோகை யுடனே துயிலெழுந் - தாகிய
41

மூர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித்
தீர்த்தத் தபிடேகஞ் செய்தருளிப் - போர்த்திகிரி
42

மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும்
காலைக் கடவ கடன்கழித்து - மூலப்
43

பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை
வரும்பே ரணியென்ன வாய்ப்ப - நிரம்பப்
44

பவளச் சடையோன் பணித்த படியே
தவளத்ரி புண்டரஞ் சாத்திக் - குவளைப்பூங்
45

கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன்
போர்க்கோலங் காண்பானே போற்கொண்டு - பார்த்திபர்தம்
46

தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம்
தில்லைதா திருநடனஞ் சிந்தித்து - வல்லவர்
47

சூழச் சுருதி யனைத்துந் தொகுத்தெடுப்ப
வேழப் பெருமானை மேல்கொண்டு - வாழி
48

அரச வலம்புரி யார்ப்ப வதன்பின்
முரசொரு மூன்று முழங்கத் - திரையின்
49

சுடற்பொற் கவரி யெழப்பொங்கத் தொங்கற்
கடவுட் கவிகை கவிப்ப - புடவியின்
50

மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன்
தீட்டுங் கொடிப்புலியாய்ச் சேவிப்ப - வாட்டானைத்
51

தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து
மன்னரு மாளவரு மாகதரும் - பின்னரும்
52

காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட
பூந்தார் நரபாலர் முன்போத - வேந்தர்
53

பொருவாத பூபால கோபால னென்னும்
திருநாம நின்று சிறந்த - வருநாளில்
54

தென்மாடக் கூடற் சிறைவிட்ட கார்புகார்ப்
பொன்மாட வீதிப் பொடியடக்கத் - தன்மீது
55

கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன்
பொன்மாரி பெய்யும் புயலேவப் - பின்னரும்
56

காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும்
பூமாரி கௌமாரி முன்பொழிய - யாமந்தீர்
57

காலை வெயிலொதுங்கக் கார்களாற் கார்களும்போய்
மாலை வெயிலால் மறித்தொதுங்கக் - கோலப்
58

பெருங்குற் றுடைவாளப் பேரொளி மேரு
மருங்கிற் பெரும்புலி மான - நெருங்கிய
59

கோளி னொழுங்கு மழுங்கக் குலரத்ன
ஒளி மகர வொளியெறிப்பத் - தோளில்
60

இருபொறை தீரு மிருபாப் பரசும்
இருதொடி யாயகொல் லென்ன - வரரத்னம்
61

தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ்
மாமேரு வென்ன முடிவயங்கப் - பூமேற்
62

புடைநிலவுந் தங்கள் புகழ்நிலவின் மேலே
குடைநிலவுஞ் சக்ரகிரி கோல - உடையதன்
63

கைவைத் தருளாமே தாமே கடன்கழிக்கும்
தெய்வப் படையைந்துஞ் சேவிப்பப் - பெய்கணைத்
64

தூணிப் புறத்தோடுந் தோளிற் சிலையோடும்
பூணித் தனங்கவேண் முன்போத - மாணிக்கக்
65

கோவையான் முக்குவட்டுக் குன்றா யொருதிருப்
பாவையாற் கொல்லிப் பனிவரையாய் - ஓவாது
66

செய்ய தமிழ்முழங்கத் தெய்வப் பொதியிலாய்
வெய்ய புலிமுழங்க மேருவாய் - வையகஞ்சூழ்
67

கோர முடன்பொத நேமிப் பொலன்குன்றாய்
வார்சுவரி யாலிமய மால்வரையாய் - வேரி
68

விடுங்குழையார் சென்னி மிலைச்சிய சென்னி
கொடுங்குழையார் வீதி குறுக - நடுங்காமல்
69


குழாங்கள்

விண்ணாடு காத்த முககுந்தன் மீண்டநாள்
மண்ணாடு கண்ட மடந்தையரும் - நண்ணார்மேல்
70

சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர
வாள கிரியர மங்கையரும் - தோளிணையால்
71

கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த
ஆழியிற் கொண்ட வரம்பையரும் - ஊழியின்
72

சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால்
வாய்த்த வரையர மாதரும் - போய்த்தனியே
73

கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்ட
வேதண்டலோக விமலையரும் - காதலால்
74

தந்த பணிபதி தன்மகளைச் சேவித்து
வந்த கடவுண் மடந்தையரும் - பந்தாடும்
75

மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள்
வாரும் வரையர மாதரும் - வீரவேள்
76

வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன்
தூங்கெயிலிற் கைக்கொண்ட தோகையரும் - பாங்கின்
77

நிதியோடுங் கூட நிதியோ னளகைப்
பதியோடுங் கொண்டார் பலரும் - முதலாய
78

சாய லரமகளிர் தந்தந் திருமரபில்
கோயி லுரிமைக் சூழாநெருங்கி - வாயிலும்
79

மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும்
சூளிகையு மெம்மருங்குந் தோரணமும் - சாளரமும்
80

தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும்
சுற்றிய பாங்கருந் தோன்றாமே - பற்றி
81

மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர் - தயங்கிழையீர்
82


குழாங்களின் கூற்று

தற்கோடி யோரிரண்டு கொண்டு சதகோடி
கற்கோடி செற்ற சிலைகாணீர் - முற்கோலி
83

வட்ட மகோததி வேவ வொருவாளி
விட்ட திருக்கொற்ற விற்காணீர் - வெட்டிச்
84

சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய
85

மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும்
பதியெறிந்த கொற்றவாள் பாரீர் - உதியர்
86

இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட
கடப்ப முதுமுரசங் காணீர் - கொடுப்பத்
87

தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக்
கரைகொண்ட போர்முரசங் காணீர் - சரதப்
88

பவித்ர விசயப் படைப்பரசு ராமன்
கவித்த வபிடேகங் காணீர் - தவித்துலகில்
89

மூவெழுகா லெக்கோக் களையு முடித்தவனி
மூவெழுகாற் கொண்ட முடிபாரீர் - தாவி
90

வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண்
பரப்பு மொருவேங்கை பாரீர் - புரக்கநின்
91

றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட
கூடம் பொருவுங் குடைபாரீர் - கூடற்
92

பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்பு
வரும்பொருமாள் வந்தனன் வாரீர் - இருங்கடற்
93

றோன்றருக்க மண்டலமுந் தோற்க வுலகங்கள்
மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர் - தோன்ற
94

அணைத்தரு காயிர மாயிர மாகப்
பணைத்த பணிவலயம் பாரீர் - அணைக்கட்
95

சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன்
பரித்த மணியாரம் பாரீர் - தரிந்தருள
96

வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட
பாண்டியன் கட்டு வடம்பாரீர் - மீண்டும்
97

திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி
இருந்த படிபாரீ ரென்பார் - பெருந்தேவர்
98

முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த
எக்கொடியு முன்ன ரெடுத்துளவால் - அக்கொடியால்
99

தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர்
எல்லாருங் காணு மினவென்பார் - புல்லிய
100

நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார்
போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின் - போர்ப்பூவில்
101

மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்த
தாதகி யொன்றூமே சார்பென்பார் - மீது
102

பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணி
இரந்தன கொண்டன வென்று - புரந்து
103

தனிச்சே வகம்பூமி தன்னதே யாக
இனிச்சே வடிவிடா ளெனபார் - பனிச்சாரல்
104

மண்டு மலையால் வருந்தா வகைவருந்திப்
பண்டு கலக்கிய பாற்கடலுட் - கொண்டதோர்
105

செங்கோ கனகை திருமார்பி லன்றியே
எங்கோ விருப்பா ளினியென்பார் - நங்காய்
106

திருப்பதி மாபதி யித்திரு மார்பில்
இருப்பது காட்டுமி னென்பார் - சிரித்தெதிரே
107

அங்கட் கமலை யமலன் பெருந்தேவி
கங்கட் புலனாயி னன்றென்பார் - நங்கைமீர்
108

கண்ணாகுந் தாமரையுங் கைதொழுதே மெம்மறையும்
பண்ணாகுஞ் செந்தா மரைபணிந்தேம் - வண்ணத்
109

தொடித்தா மரையுந் தொழுதன நாபிக்
கடித்தா மரைதொழுவேங் காட்டீர் - பிடித்தென்ன
110

அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றி
மைத்தா மரைக்கொளிதோ மற்றென்பார் - உய்த்தால்
111

ஒருபொருந் தாதகி தோய்சுரும்பை யோட்டற்
கிருபெருஞ் சாமரையு மென்பார் - அருவி
112

அருகெய்த வொட்டா வயிரா பதத்தின்
இருகன்ன சாமரையு மென்பார் - தெருவத்துத்
113

தங்களின் மாறாடி யுள்ளந் தடுமாறித்
திங்க ணுதலார் தெருமரலும் - அங்கவரில்
114


பேதை

பேதைக் குழாத்தொரு பேதை சிலபழங்
காதற் குழாத்தோர்தங் கையடைளாள் - மீது
115

பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை
மறந்தணிய செவ்வி மடமான் - புறந்தணியத்
116

தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தாற் சுற்றத்தார்க்
கோகை விளைக்கு மொருகரும்பு - பாகைத்
117

தொடைபோய முல்லைத் தொடையலே போல
இடைபோய தூய வெயிற்றாள் - உடையோன்
118

செறிந்து விடாத திருத்தோற்ற முற்றும்
அறிந்து பிறந்த வறிவோ - நெறிந்தகுழல்
119

எம்பாவை யெங்கொல்லிப் பாவை யெனப்பாடும்
அம்பாவை பாடும் படியறிவாள் - உம்பர்
120

வெருவக் கரையை மிகும்பொன்னி யன்றிப்
பருவத்து வேறு படியாள் - உருவக்
121

குறைவனை யென்றெழுதுங் கோலத்து ஞாலத்
திறைவனை யல்லா லெழுதாள் - இறைவன்
122

முழங்கேழ் கடல்கொடுத்த முத்தேழு மல்லால்
கழங்கேழு மாடக் கருதாள் - வழங்கிய
123

முற்றி லெடுத்துக் கொழித்து முழுமுத்தால்
சிற்றி லிழைக்கின்ற செவ்விக்கண் -சுற்றும்
124

பனிநீங்கத் தோன்றும் பகலவன் போல் வையம்
துனிநீங்கத் தோன்றிய தோன்றல் - முனியும்
125

பொறைவிட் டெயில்விட்டுப் பொய்கை கவிக்குச்
சிறைவிட்ட சோளேந்த்ர சிங்கம் - நறைவிட்ட
126

அந்தாமச் செங்கழுநீர் மார்ப னழகிய
செந்தா மரைக்கட் டிருநெடுமால் - வந்தானை
127

ஓகைய ராகி யுலப்பில் பலகோடித்
தோகைய ரோடத் தொடர்ந்தோடித் - தாகம்
128

தணியத் தணியத் தமரும் பிறரும்
பணியப் பணியப் பணிந்தாள் - மணிமார்பில்
129

ஆரந்தான் கண்டா ளயிரா பதந்தொழுதாள்
கோரந் தெரியவுங் கும்பிட்டாள் - வீரன்
130

படாகைப் பெரும்புலியும் பார்த்தொழிந்தா ளண்ட
கடாகத் ததிர்முரசுங் கண்டாள் - அடாதனவும்
131

சொல்லி யறியா தொழிந்தாள் சுருப்புநாண்
வில்லி யறியாது விட்டதே - நல்லார்சூழ்
132


பெதும்பை

மற்று மொருத்தி வலம்புரி யாயிரம்
சுற்றுஞ் சலஞ்சலம்போற் றோன்றுவாள் - சுற்றுடன்
133

அன்ன நடக்க நடந்தா ளருங்கிள்ளை
பின்ன ருடன்பேசப் பேசினாள் - இன்னிசையாழ்
134

பாட வதனுடனே பாடினாள் பைந்தோகை
ஆட வதனுடனே யாடினாள் - கூடிய
135

நல்லிள மானோக்க நோக்கினா ணாணிரம்பி
முல்லை முகிழ்க்க நகைமுகிழ்த்தாள் - கொல்லும்
136

மழகளிற்றின் கோடேழுச்சி யென்று மரவின்
குழவி யெயிறெழுச்சி யென்றும் - பழகி
137

எறியு மழையெழுச்சி யென்று முலகம்
அறியு முலையெழுச்சி யன்னம் - செறியும்
138

வரையேழி லுள்ள வயிரமும் வாங்கும்
திரையேழின் முத்தின் றிரளும் - தரையேழிற்
139

பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக
மின்னுஞ் சுடிகை வெயின்மணியும் - பின்னும்
140

பொழிலேழிற் போதும் புனையப் புனைவாட்
கெழிலேறும் நாளையே யென்னக் - கழிய
141

உழப்போ மினியென் றுடலுள்ள போழ்தே
எழப்போக வெண்ணு மிடையாள் - மழைத்துப்
142

புடைபோ யுளகம் பொதுக்குவதன் முன்னே
கடைபோ யுலகளக்குங் கண்ணாள் - உடையதன்
143

சேரிச் சிறுசோறுஞ் சிற்றிலும்போய்ச் சில்லணிபோய்ப்
பேரிற் பெருஞ்சோற்றுப் பேரணியாள் - ஒரையில்
144

தன்னாய நிற்பத் தனிநா யகன்கொடுத்த
மின்னாயஞ் சேவிப்ப வீற்றிருப்பாள் - மென்மலர்
145

மேய சிறுமுல்லைப் பந்தர் விடவெடுக்கும்
பாய பருமுத்தின் பந்தராள் - நாயக
146

உச்சியிற் கொண்டை முடிப்பி னுலகுடையோன்
முச்சியிற் சூட்டு முடிக்குரியாள் - நிச்சமும்
147

நல்லுயிர்ப் பாவை துணைபெற நாயகன்
கொல்லியிற் பாவை கொளவிருப்பாள் - மெல்லியற்
148

பாங்கிக்கு நங்கோமன் விந்தைப் பசுங்கிளியை
வாங்கித் தரப்போய் வணங்கென்பான் - ஆங்கொருத்தி
149

மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின்
மேயமான் வேண்டி விடப்பெறுவாள் - சேயவொளி
150

தென்பா லிலங்கைவாழ் தெய்வ மணிபணிப்பீர்
என்பாவை பூண வினிதென்பாள் - அன்பால்
151

உயிர்த்துணைப் பாங்கி யொருநோன் புணர்த்த
எயிர்புறத் தெல்லாருஞ் சூழ - அயிற்படை
152

வீரனை யெய்த வியன்காவிற் சென்றெய்தி
மாரனை நோக்கி வழிபட - மாரன்
153

படியில் கடவுட் பணைமுழங்க வென்றிக்
கொடியின் மகரங் குமுற - நெடிய
154

அலகி லசோக நிழற்ற வடைய
உலகில் மதுகரமூதக் - கலகித்
155

தலங்க லடவிக் குயிற்குல மார்ப்ப
விலங்கன் மலயக்கால் வீசக் - கலந்தெழும்
156

ஆவி யகிலொடு நீரோ டரமகளிர்
தூவிய தண்ணறுஞ் சுண்ணமும் - காவில்
157

விடவிட வந்துயிர் மீதடுத்துப் போன
வடிவும் பழம்படியே வாய்ப்பக் - கொடியிடை
158

எண்ணிய வெண்ண முடிப்ப வவளெய்தும்
புண்ணியம் போலப் பொழில்புகுந்தான் - அண்ணல்
159

சரம்போலுங் கண்ணி தனக்கனங்கன் றந்த
வரம்போல் வளமறுகில் வந்தான் - வரும்போதில்
160

ஏன்று மதன னியமியம்ப வேயனகன்
மூன்று முரசு முழங்கின - தோன்றாத
161

வாரிக் களிறு முழங்கவே மானதன்
மூரிக் களிறு முழங்கியது - வேரித்தார்
162

கற்கு மசோக நிழற்றவே பார்கவித்து
நிற்குங் கவிகை நிழற்றியது - முற்கொண்டு
163

மற்றை யலகின் மதுகர மூதவே
ஒற்றை வலம்புரி யூதியது - முற்றாத
164

சொற்குதலைக் கோகுலங்க ளார்க்கவே சோளேசன்
அற்கமணிக் காகளங்க ளார்த்தன - தெற்கெழுந்த
165

மல்லன் மலயக்கால் வீசவே மானதன்
மெல்லென் கவரிக்கால் வீசியது - மெல்லியலும்
166

காமன் பெருநோன்பு கைவந்த தென்றெதிரே
கோமைந்தன் வேழங் குறிகினாள் - கோமனும்
167

மல்கு மூவகைக் கலுமி வரவரப்
பில்கு மதர்வைப் பெரும்பரப் - பல்குலும்
168

கொங்கைப் புதுவரவுந் தோளுங் குறைநிரம்ப
மங்கைப் பருவத்தை வாங்கினாள் - மங்கை
169

திருக்கொள்ளு மார்பற்குக் காமவேள் செவ்வேள்
வெருக்கொள்ளுஞ் செவ்வி விளைத்தாள் - பெருக்க
170

ஒருவ ரொருவர்க் குருகி யுருகி
இருவரு மீடழிய நோக்கி - வருகாமன்
171

செஞ்சாயல் வல்லியையுஞ் செந்தா மரைத்தடங்கண்
மஞ்சாய கோல மணாளனையும் - அஞ்சாதே
172

கொய்யும் பகழி கரும்பிற் சுரும்பிற்கோத்
தெய்யுந் தரமே யெழப்போனான் - தையல்
173


மங்கை

ஒருத்தி தரள மிருநிரைகொண் டொப்பித்
திருத்தி யனைய வெயிற்றாள் - கருத்தின்
174

நிலையிற் சிறந்த நிகரிலா மேரு
மலையிற் பிறந்த வயிரம் - அலையிற
175

பழக்கச் சலஞ்சலம் பாற்கடலே போல
முழக்கக் கருவுயிர்த்த முத்தம் - தொழத்தகும்
176

முன்னை யுலக முழுதுந் தருமுரசு
மன்ன னபிடேக மாணிக்கம் - முன்னவன்
177

பாற்கட னீங்குநா ணீங்கப் பழம்படியே
நாற்கட னாயகனை நண்ணுவாள் - மேற்கவின
178

பண்டு கடல்கடைந்தும் பாரெடுத்தும் வில்லிறுத்தும்
கொண்ட துணைவியருங் கூசுவாள் - புண்டரிகத்
179

தாடும் பொழுதினு மன்னப் பெடையயிர்ப்பப்
பாடு மழலைப் பரிபுரத்தாள்- நீடிய
180

தூசுகள் வெள்ளென்று தூயன சேயன
கோசிக மாக்குங் குறங்கினாள்- கூசிப்
181

பணியு மரசுப் பணிச்சுடிகை யேகோத்
தணியு மரைப்பட் டிகையாள் - துணியுங்கால்
182

அற்றுண் டிலதென்று மம்மருங்கு லின்றெமக்குப்
பற்றுண் டெனுமுதர பந்தனந்தாள் - கொற்றவன்
183

சங்க நிதிமுத்தத் தாமத்தாள் பத்மநிதி
துங்க நவரத்னத் தோள்வளையாள் - புங்கம்
184

தொடுக்கு மலரோன் சுறவுக் குறவு
கொடுக்கு மகரக் குழையாள் - அடுத்துப்
185

பணிதந் தலகில் பராவெடுத்துத் சிந்தா
மணிதந்த சூளா மணியாள் - அணியே
186

பரவி விறலியரும் பாணருந் தற்சூழந்
திரவி புகார்பாடு மெல்லை - வரவரக்
187

கொங்கைக்குந் தோளிணைக்கு மாற்றாக் கொடிமருங்குல்
நங்கைக்கு வந்தொருத்தி நாயகியே - கங்கைத்
188

துறைவன் பொறையன் றமிழ்நாடன் சோணாட்
டிறைவன் றிருப்பவனி யென்றாள் - பிறைநுதலும்
189

வேனிற் கணிய குயில்போன்றும் வீழ்தாரை
வானிற் கணிய மயில்போன்றும் - தானே
190

வரவே நினையு மனக்களியா லிற்றை
இரவே நமக்கிடையூ றென்றாள் - இரவில்
191

செயிர்க்கரங்கள் வேண்டா டிருக்குலத்து வெய்யோன்
வெயிற்கரங்க ளூடாட வேண்டும் - உயிர்க்கொலைசூழ்
192

தென்மலயத் தென்றலை யோட்டிப் புலியிருந்த
பொன்மலைய வாடாய் புகுதென்னும் - முன்மலைந்த
193

கார்க்கடல் வாயடங்க நாயகன் கண்வளர்ந்த
பாற்கடல் வாராய் பரந்தென்னும் - மேற்பரந்து
194

கார்பாடும் புள்வாய்க் கடுப்பெய் தமுதிறைவன்
பேர்பாடும் புள்வாயிற் பெய்கென்னும் - ஈர்குரல்
195

அன்றிற் கொழிய மகன்றிற்கே யாக்குமிம்
முன்றிற் பனையு மெனமொழியும் - இன்றிரவை
196

ஊழிக் குயில்காய்ந் தொருபுலரி கூவிய
கோழிக்கே சோலை கொடீரென்னும் - வாழிய
197

பள்ளி யெழுச்சி பவனி யெழுச்சிதரும்
வெள்ளி யெழுச்சி யெனவிளம்பும் - நள்ளிருட்
198

கங்குற் கடற்கெல்லை யிவ்வாறு கண்டுவந்த
மங்கைப் பருவத்து வாணுதலும் - பொங்கொலிநீர்
199

வையகங் காவலற்குப் பெய்யு மலர்மழைக்குக்
கொய்பொழில் சென்று குறுகினாள் - செய்ய
200

கொடுங்குழை மின்னக் குயில்கொழுதக் கோத
விடுங்குழை தேமாவின் மின்ன - நெடுங்குழை
201

வல்லிக் கொடிய முறுவலிப்ப வந்தெதிர்
முல்லைக் கொடியு முறுவலிப்ப - மெல்லியற்
202

பாந்தளுந் தோற்கும் பகட்டல்குல் கைம்மலரக்
காந்தளு நின்றெதிர் கைம்மலரப் - போந்தார்
203

பரவு மரப்பாவை கொள்ளப் பயந்த
குரவு மரப்பாவை கொள்ளப் -புரிகுழற்
204

சோலையின் மான்மதஞ் சூழ்வர வேழிலைப்
பாலையின் மான்மதம் பாரிப்பச் - சோலையின்
205

வாங்கும் புதுமது வாணுதல் கொப்புளிப்பக்
கோங்கு மதுவெதிர் கொப்புளிப்ப -ஆங்குத்
206

திருவஞ்சு கோலத்தாள் செவ்வியா லெல்லாம்
பருவஞ்செய் சோலை பயப்பப் - பெருவஞ்சி
207

கொய்தன கொய்தன யாவும் பலகூறு
செய்தனர் செய்தனர் பின்செல்லக் - கொய்யாத
208

பொன்மல ராயம் பொழியப் பொழிற்கொண்ட
மென்மலர் கொண்டு வௌிப்பட்டாள் - மன்னனும்
209

எப்போதிற் போது மொருபோதி லேந்திழை
கைப்போதிற் பெய்தன கண்டருளா - அப்போதே
210

செங்கை தடவந்துஞ் சீறடி தீண்டியும்
கொங்கை கணங்கெறிந்துங் கொப்பளித்தும் - மங்கை
211

பரிசி லுருவம் பயந்தன வென்று
குரிசி லெதிர்கவர்ந்து கொண்டான் - தெரிவரிய
212

தூசுந் துகிலுந் தொடியுங் கடிதடஞ்சூழ்
காசும் பலகாற் கவர்ந்ததற்குக் -கூசி
213

இலகுஞ் சுடர்முடியு மியானையு மீரேழ்
உலகுங் கொடுப்பானே யொப்பப் - பலகாற்
214

கொடாத திருநோக்க முற்றுங் கொடுத்து
விடாது களிறகல விட்டான் - அடாதான்பால்
215


மடந்தை

ஈரடியான் மூவுலகுங் கொண்டானை யெப்பிறப்பும்
ஓரடியு நீங்காதா ளோராணங்கு - சீருடைய
216

மானுங் கலையும் வளர வுடன்வளர்ந்து
தானு மதிய மெனத்தகுவாள் - பானின்று
217

அனலுங் குழைமகர மஞ்சப் புடைபோய்க்
கனலுங் கயலனைய கண்ணாள் - மினலால்
218

இருளுடைய மேனின் றெறிசுடிகைப் பாப்புச்
சுருளுடைய வீங்கிய தோளாள் - அருளொடும்
219

தம்புறஞ் சூழ்போதத் தாயரே வீக்கிய
வம்பற வீங்கும் வனமுலையாள் - பைம்பொனின்
220

பண்ணிறக் காஞ்சியுங் கட்டிய பட்டிகையும்
கண்ணிறப் போய கடி தடத்தாள் - தண்ணுறந்தார்
221

மின்மணி மோலியான் வீதி வரவேற்றுத்
தன்மணி மாளிகைத் தாழ்வரையிற் -பொன்னுருவில்
222

தைத்துத் துகிரு மரகதமுந் தாறாக
வைத்துக் கமுக வளஞ்செய்து - முத்தின்
223

பொலன்றோ ரணநிரைத்துப் பொன்னடுத்த மேக
தலந்தோய் விசால தலத்து - மலர்ந்தபூங்
224

கற்ப தருநிரைக் கற்ப லதைபடர்ந்து
பொற்ப மிசையடுத்த பூம்பந்தர் - நிற்பப்
225

புகரற்ற ரத்ன விதானமேற் போக்கி
நகைவச்ர மாலையே நாற்றி - பகல்விளங்கா
226

மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே
எல்விளக்கு மாசு வெதிரெடுத்து - நொல்விய
227

பூநறுஞ் கண்ணப் பொடியடங்க வீசிய
நான நறுநீர்த் தளிநளிய - மேனிலையிற்
228

கங்கையி னீர்முகந்தோ காவிரியி னீர்கொணர்ந்தோ
கொங்கை யினைநீர்க் குடநிரைத்து - எங்கும்
229

அசும்பு பொலன்கொடியா லவ்வெல்லை யுள்ள
விசும்பு தவிர வலிக்கிப் - பசும்பொன்யாழ்
230

முட்ட முயன்ற விறலியர் முன்னிருப்ப
இட்ட தவிசின் மிசையிருந்து -பட்டினஞ்சூழ்
231

பொன்னிக்குங் கோதா விரிக்கும் பொருநைக்கும்
கன்னிக்குங் கங்கைக்குங் காவலனைச் - சென்னியை
232

தானைப் பெருமானை நல்ல சகோடங்கொண்
டியானைப் பெருமானை யேந்தெடுப்பாள் - மேனாள்
233


யானையின் பெருமை

உகந்த பிடியுடனே யோரெண் பிடியும்
திகந்த களிறெட்டுஞ் சென்று - முகந்து
234

துறக்குங் கடன்முத லேழுஞ் சொரியச்
சிறக்கு மபிடேகஞ் செய்து - விறக்கும்
235

உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும்
அயிரா பதமத யானை - உயரும்
236

கடநாக மெட்டுங் கடநாக மெட்டும்
படநாக மெட்டும் பரந்தீர்த் - துடனாகத்
237

தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும்
கன்னாவ தங்கிசமாக் கைக்கொண்டு - பின்னவர்
238

வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டுக்
கோளகையா கக்கொண்ட கோக்களிறு - மாளிகை
239

தாங்குண்ட வாயில்க டோறுந் தனிதூங்கித்
தூக்குண்ட கண்டை தொடருடனே - வீக்குண்டங்
240

காராத நாளைக்குப் போதக் கிடந்தார்ப்பத்
தாராகக் கொண்ட மதாசலநீர் - வாரா
241

நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும்
குதிக்கு மதர்சுவடு கோத்து - மதிக்கும்
242

பிடிவிடாக் காதற் பெருங்களிறுங் கன்றும்
அடிவிடா தவ்வா றடையப் - படிவிடா
243

தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்னக்
கூட்டும் பெருங்கடவுட் கொல்யானை - நாட்டில்
244

பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்றப்
பணிகொண்ட பொவம் பரக்க - பணிகொண்ட
245

கார்முற்றும் பேரிடி வீழ்ப்பக் கௌரியர்
ஊர்முற்றுஞ் செற்ற தொருகூற்றம் - சேரர்
246

கனக்கு மனீகக் களந்தொறுங் கைக்கொண்
டினக்கு மரசுவா வெல்லாம் - தனக்குத்
247

துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்கப்
பணிக்குங் கடவுட் பசுடு - தணிப்பரிய
248

பூகங்கை தாடோயச் செங்கை புயல்வானின்
மாசுங்கை தோயப்போய் மாமேரு - நாகங்கைக்
249

கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்பக்
கண்டு களிக்குங் களியானை - வண்டலம்ப
250

நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெக்
குன்று மொளித்துக் குளிப்பமுன் - சென்றழுத்திப்
251

பண்டு வௌியின் மகதத்தைப் பாவடியால்
செண்டு வௌிகண்ட செங்கைமாக் - கண்ட
252

மதிலே யகழாக வாங்கி யகழே
மதிலா வெழாநிற்க வைத்துப் - புதுமலர்செய்
253

வாவியைச் செய்குன்ற மாக்கியச் செய்குன்றை
வாவிய தாக வெனவகுத்துத் - தாவுமான்
254

வெள்ளிடை கோநக ராக்கியச் கோநகர்
வெள்ளிடை யாக வுடன்விதித்துத் - தெள்ளிப்
255

புரப்பா ரிரப்பாராய்ப் போத விரப்பார்ப்
புரப்பாரே யாக்கும் புகர்மாத் - திருக்குலத்துக்
256

கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக்
கொண்ட தொருசுவடு மேல்கொண்டு - வண்டு
257

கடியுங் களிறுங் களிறாமே காதற்
பிடியும் பிடியாமே பின்னர்க் - கடிமதில்
258

மாற்று மருமணம் வங்காள பாகத்து
வேற்று மதமா ம்ருகமத்தைப் - போற்றார்
259

வயிரா கரமெறிந்த மானதன் கண்டன்
அயிரா பதமதமே யாக்கிச் - செயிர்தீர்ந்த
260

காதற் பிடிதேற்றற் தேறாக் கடாக்களிறென்
றேதப் பெயரு மொருபொருப்புப் - பாதையிற்
261

கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற்
கொச்சியிற் கோதா விரிக்குளத்தில் - விச்சியில்
262

வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில்
நெல்லூரிற் புத்தூரி னெட்டூரிற் - செல்லூரிற்
263

கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில்
வாட்டாற்றிற் காம்பிலியின் மண்ணையில் - வேட்டுத்
264

தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும்
பரணி புனைந்த பகடு - சரணென்று
265

வாடா மதுரயாழ் வாங்கி மடவரல்
பாடா விருந்த பருவத்து - நீடாப்
266

பரிசி லுடனே பணிப்பதுபோல் யானை
குரிசி லுடன்வந்து கூடத் - தெருவில்
267

வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன்
பொரவந்தான் கைவாங்கிப் போனான் - விரல்கவரும்
268

வீணைச் சுகப்பட வேழ மிடற்றுக்கும்
ஆணைப் பெருமா ளகப்பட - வாணுதல்
269

ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலை
தந்து தொழவெழுந்து சாத்தினாள் - மைந்தனும்
270

பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும்
கண்ணுக்குந் தோலானே கைக்கொண்டான் - வண்ணமும்
271

வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையுந் தோள்வளையும்
கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போற் - பண்டை
272

முடியுஞ்சிங் காதனமு முத்தக் குடையும்
படியு மரசும் பணித்தான் - பிடியும்
273

சிவிகையு நிற்பவச் சேயிழை வீதி
கவிகையுந் தானுங் கடந்தான் - குவிமுலை
274


அரிவை

ஏனை யரிவை யொருத்தி யிகன்மாரன்
சேனை திரண்டனைய செவ்வியாள் - வானில்
275

விடுசுடர்க் செக்கர் வியாழமுந் தோற்கும்
படுசுடர்க் செம்பொற் படியான் - வடிவு
276

நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரே
படிதோற்கும் முத்தின் படியாள் - முடிவில்
277

குலபதும ராக பதிகுதி கொள்ளும்
பலபதும ராகப் படியாள் - அலைகடலில்
278

முற்றா மரையாண் முகத்தா மரையாளப்
பொற்றா மரையாளப் போதுவாள் - அற்றைநாள்
279


நீர் விளையாட்டு

தண்ணென் கழுநீர்த் தடம்பொய்கை நாமெலாம்
அண்ணல் வருமளவும் மாடுதுமென் - றெண்ணிப்
280

புணைக்கும் மொருதன் புறங்காவ லாயத்
துணைக்குந் தடஞ்சுருங்கத் தோயப் - பணைத்துப்
281

புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும்
நடைக்கு முதற்பகை நாமென் - றுடைப்புண்டு
282

பின்னர்ப் பெருஞ்சக்ர வாகப் பெருங்குலமும்
அன்னக் குழை மலம்வரப் -பின்னரும்
283

காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகுத்
தேற்குந் தரமேநா மென்றுபோய்த் - தோற்கின்ற
284

வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும்
தாவி விழுந்து தடுமாறத் - தீவிய
285

பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும்
அம்மென் கழுத்துக்கு மாற்றாது - மம்மர்ப்பட்
286

டெங்குத் தரியா திரியல் போ யாமையும்
சங்குந் தடத்தை விடத்தவழ - நங்கைதன்
287

செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கி
எவ்வாயுங் காணா தெதிரேநின் - றவ்வாய
288

கொள்ளைக் குமுத மலருங் குழையிள
வள்ளைக் கொடியு முடன்மயங்க - வெள்ளம்போல்
289

பெய்யு மதயானைக் கோடும் பெருநெருங்
கையும் புடைப்பக் கலுழ்ந்தனபோல் - தொய்யில்சூழ்
290

தாம முலையாலுந் தோளாலுந் தாக்குண்டு
காமர் தடமுங் கரைகடப்பக் - கோமகன்
291

உள்ளம் பெருகப் பெருக வுலாக்கொண்டு
கள்ளம் பெருகுங் கருநெடுங்கண் -வெள்ளம்
292

படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன்
வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப - நெடிது
293

திளைக்குந் திருமகளை வாவியிற் சேவித்
திளைக்குங் கொடியிடையா ரேத்தித் - திளைத்துமிழ்த்
294

தம்மைக் கமல மலர்க்களித்துத் தாமவற்றின்
செம்மை கவர்ந்த திருக்கண்ணும் - மெய்ம்மையே
295

மெய்போய வைய மருங்குலு மேகலைபோய்க்
கைபோ யகன்ற கடிதடமும் - பைபோய்
296

நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள்
எறிக்கும் பெரும்பே ரெழிலும் - நெறிப்படக்
297

கொண்டுபோந் தேறிய கோமகள் பேரழகு
பண்டுபோ னோக்கப் பயப்படுவார் - கண்டு
298

கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற்
பொலன்கலன் கொண்டு பொதிந்தார் - இலங்கிழை
299

யானைப் பெருமா ளயிரா பதத்திருந்த
தானைப் பெருமாளைச் சந்தித்தாள் - மேனி
300

பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதாத்
திருவிற்கே குற்றேவல் செய்வான் - பொருவிற்கை
301

வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதே
வேனிற்கோ னேபரவ மேற்செல்வான் - வானத்
302

தெடுக்குங் கொடிமகர ராசித் தொடையிற்
றொடுக்கு மகரம்போற் றோற்ற - வடுத்தெய்யும்
303

மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண்
தென்றறேர் தானனங்கன் செற்றதென - மென்றோளி
304

பாங்கி யெடுத்த படாகைப் பசும்பொற்பூ
வாங்கி யெதிர்தூய் உணங்கினாள் - தாங்கி
305

ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலை
கொடுப்ப விறையவனுங் கொண்டான் - கொடுத்தவற்றுட்
306

பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன்குவளை
நன்மாலை சாத்தினா னாயகனும் - தன்மார்பில்
307

ஆர்மாலை கோமா னருளினா னம்மாலை
கார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் - பார்மாலே
308


அரிவையின் முறையீடு

மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள்
கோதண்டத் தீஞ்சாறு கொள்ளாதோ - மாதண்ட
309

முற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னம்
கொற்றத் தனிவிற் குனியாதோ - நற்றடத்துள்
310

ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர
வேறு முறிய வெறியாதோ- மாறாது
311

காந்து முழுமதியை யோரோர் கலையாக
ஏந்து சுடர்வடியா ளீராதோ - பாந்தண்மேல்
312

வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய்
உய்ய வொருகுரல்வந் தூதாதோ - வையம்
313

தணியுந் தகைத்தோ தமியன்மா லென்று
பணியு மடக்கொடியைப் பாரா - வணிய
314

உருத்தந்த தோற்றங்க ளொன்றினுந் தப்பா
வருத்தந் திருமனத்து வைத்தே - திருந்தடந்
315

தோளுந் திருமார்பு நீங்காத் துணைவியரில்
நாளும் பிரியாமை நல்கினான் - மீள
316

ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம்
திருமகன் போலத் திளைப்பான் - இருநிலம்
317

தாளா வளந்து தரும்பெரியோன் றாதகித்
தோளா லளந்த துணைமுலையா - ணாளும்
318

திரையர மாதருஞ் சேவிப்பாண் மேரு
வரையர மாதரின் வாய்ப்பாள் -கரையில்
319

விருப்பவனி கூர வருகின்ற மீளி
திருப்பவனி முன்விரைந்து செல்வா - ளுருப்ப
320

அணந்த பணிவலைய வண்ணன் முதனாண்
மணந்த மணச்செவ்வி வாய்ப்பக் - கொணர்ந்தணிந்த
321

சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும்
கோட மணிமகர குண்டலமும் - ஆடிய
322

சச்சையு மாலையு மாரமுந் தாமமுங்
கச்சையு மேகலையுங் காஞ்சியும் - பச்சென்ற
323

பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும்
கட்டுங் கனவயிரக் காறையும் - இட்ட
324

திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா
உலகமுந் தோற்கு முருவும் - கலகமும்
325

மாரனுந் தானும் வருவாளை மன்னரில்
வீரனுங் காணா வெருவராப் - பாரனைத்தும்
326

தேறுந் திருவைத் திருவவ தாரங்கள்
தோறும் பிரியாத் தொடர்பாலும் - ஏறுங்கண்
327

வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமைத்
தோளாலு மீளத் துவக்குண்டு - நீளிய
328

மைவிடா நோக்கி திருக்கைம் மலரணை
கைவிடா வார்வங் கடைப்பிடித்துத் - தெய்வப்
329

புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம்
அவனி முழுது மளித்தான்போற் - கவினிய
330

அற்புத மாலை யணியப் பணிசெய்யுங்
கற்பக மொன்று கடைக்கணித்தான் - பொற்படிக்குப்
331

பாதங்க ளாதி முடியளவும் பாரிப்ப
மாதங்க ராசிதிரு வாய்மலர்ந்தான் - ஓதி
332

முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின்
படிக்குச சலாபம் பணித்தான் - வடிப்பலகை
333

அச்சிரா பரண மனைத்திற்குந் தன்வட
வச்சிரா கரமே வழங்கினான் - பச்சை
334

மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப்
பணிக்கு த்ரிகூடம் பணித்தான் - தணிப்பில்
335

பெரும்பே ருவகைய ளாகிப் பெருமாள்
விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் - பெரும்போர்
336

வெருவரும் பார்வேந்தர் வேந்தனைப் போற்றும்
பொருநரும் பாணரும் புக்கார் - தெரிவைக்குப்
337

பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும்
ஆடிக் குடக்கூத்து மாடினார் - பாடியில்
338

ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற்
கோநிரையு மீளக் குழாங்கொண்டு - மீளிரையின்
339

மீதும் புடையு மிடைய விழவெழவேய்
ஊதுந் திருப்பவள முட்கொண்டு - சீதக்
340

கடந்தூர வந்தக ககன தளமும்
இடந்தூர வந்து மிணையக் - குடங்கள்
341

எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள்
விழவிழ மேன்மேல் விழுந்தும் - பழகிய
342

தோளிரண்டுந் தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும்
தோளிரண்டு மென்றென்று சொல்லியும் - கோளொளிய
343

நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற்
பொன்வேய்ங் குழலொன்று போக்கினான் - முன்னே
344

தசும்பிற்கு மாறாகத் தங்கோமா னாவற்
பசும்பொற் றசும்பு பணித்தாள் - ஒசிந்துபோய்
345

நாடகப் பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்த
ஆடகப் பாம்பொன் றருளினாள் -பாடுநர்மேல்
346

வற்றாத மானத வாவியல் வாடாத
பொற்றா மரையே புனைகென்றாள் - கொற்றவன்
347

கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு
மந்தார மாலை வருகென்றாள் - நந்தாத
348

பேறுந் திருவருளு மெய்தி யவர்பெயர
ஏறுந் தவிசுதர வேறினாள் - வேறொருத்தி
349


பேரிளம் பெண்

கச்சை முனியுங் கனதனமுங் குங்குமச்
சச்சை கமழுந் தடந்தோளு -நிச்சமுரு
350

ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும்
போந்த திருமகள் போலிருப்பாள் - வேந்தர்
351

பணியுந் தடமகுடம் பன்னூறு கோடி
அணியுந் திருத்தா ளபயன் - பணிவலய
352

வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகரத்
தாக்கிலே சாய்ந்த தடமுலையாள்-பூக்கமழும்
353

ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம்
பேரேற்ற தெய்வப் பெருமானைக் - காரேற்
354

றடல்போ லடுதிகிரி யண்ணலைத் தன்பாற்
கடல்போல லகப்படுத்துங் கண்ணாள் - மடல்விரி
355

தெங்கினு மேற்குந் தசும்பினுந் தேர்ந்தளி
பொங்கு நுரையினும் போய்ப்புகா - தங்கு
356

நறவு குவளை நறுமலர்தோய்த் துண்ணும்
இறவு கடைக்கணித் தெய்தச் - சுறவுக்
357

கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கை
நெடியோனை நேமிப் பிரானைப்-படியோனைக்
358

கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக்
கொண்டனை யென்று குறுகுவாள் - கண்டு
359

மலர்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத்
திலகங் குறுவியராற் றேம்பப் - பலகுதலை
360

மாற்றந் தடுமாற்ற மெய்த மனத்துள்ள
தேற்றம்பித் தேற்றஞ் சிதைவிப்ப- ஏற்று
361

துகிலசைந்து நாணுந் தொலைய வளக
முகிலசைந்து நோவிடைக்கு முற்ற - அகிலமும்
362

சேனையு மன்னருந் தெய்வப் பெருமாளும்
யானையு நிற்க வெதிர்நின்று - கோனே
363

சதயுக மேனுந் தரணிபர் மக்கள்
பதயுக மல்லது பாரார் - உதயாதி
364

காந்தநின் கைத்தலத்தைப் பார்மடந்தை கற்பாந்தத்
தேந்து மரவர சென்றிகவாள் -பூந்தொடி
365

நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய
வெற்போ ரிரண்டென்று வீற்றிருக்கும் - பொற்பிற்
366

கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென்
பொலந்தா மரையென்று போகாள் - நிலந்தாரா
367

அந்தா மரையா ளருட்கண்ணைத் தண்ணிரண்டு
செந்தா மரையென்று செம்மாக்கும் - முந்துற்ற
368

மல்லா புரேச சிலகால மற்றிவை
எல்லாந் தனித்துடையோம் யாமன்றே - அல்லாது
369

மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறை
ஏகோ தகம்பொழிந்தா லென்செய்யும் - மாகத்துக்
370

காலை வெயில்கொண்டுந் தாமரைக்குக் கற்பாந்த
வேலை வெயிலெறிக்க வேண்டுமோ - மாலைச்
371

சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால்
நிலாவட்ட நின்றெறிக்க நேரோ - குலாவலைஞர்
372

சேற்றாக்கான் மீளுந் திருநாடா நீதருமால்
ஆற்றாக்கான் மேன்மே லளிப்பரே - கோற்றொடியார்
373

நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால்
தாங்கரிய வேட்கை தவிப்பாரே - யாங்களே
374

தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும்
உண்மை யறியா வுணர்வினேம் - வெண்மையினிற்
375

செல்லாத கங்குலேந் தீராத வாதரவேம்
பொல்லாத வெம்பசலைப் போர்வையேம் - நில்லாத
376

வாமே கலையே முலைவீக்கா வம்பினேம்
யாமேயோ விப்போ தௌிவந்தேம் - யாமுடைய
377

நன்மை யொருகாலத் துள்ள தொருகாலாத்
தின்மை யுணராயோ வெங்கோவே - மன்னவநீ
378

முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது
பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே - மின்போல்
379

இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போ
தமைக்குந் துகிலினை யன்றே - அமைத்ததோர்
380

பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது
கார்க்கடற் சென்று கவர்சங்கே-சீர்க்கின்ற
381

தண்ணந் துழாய்பண்டு சாத்துந் திருத்தாமம்
கண்ணியின் றாரின் கவட்டிலையே - தண்ணென்ற
382

பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர்
பள்ளி யறையின்று பாசறையே - வெள்ளிய
383

முத்தக் குடைகவித்து முன்கவித்த மாணிக்கக்
கொத்துக் குடையொக்கக் கூடுமே - இததிறத்தால்
384

எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும்
அண்ணற் கிகழ வடுக்குமே - விண்ணப்பம்
385

கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற்
றண்டரளக் கொற்றத் தனிக்குடையோன் -பண்டறியா
386

ஆரமு மாலையும் நாணு மருங்கலா
பாரமு மேகலையும் பல்வளையு - மூவரும்
387

பிடியுஞ் சிவிகையுந் தேரும் பிறவும்
படியுங் கடாரம் பலவும் - நெடியோன்
388

கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள்
அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் - எடுத்துரைத்த
389

பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக
மாதர் மனங்கொள்ளா மால்கொள்ளச் -சோதி
390

இலகுடையான் கொற்றக் குடைநிழற்று மீரேழ்
உலகுடையான் போந்த னுலா.
391


வெண்பா

அன்று தொழுத வரியை துளவணிவ
தென்று துயில்பெறுவ தெக்காலம் - தென்றிசையில்
நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த
வீரதரா வீரோ தயா.



இராசராசசோழன் உலா முற்றிற்று.

No comments:

Post a Comment