கருவாடு உற்பத்தி என்பது நமது நாட்டின் பழமையான, சிக்கனமான மற்றும் பாரம்பரிய முறையாகும்
- பொதுவாக, கருவாடு உற்பத்திக்கு, தரம் குறைந்த மீனை உபயோகிப்பது.
- இதில் உபயோகிக்கும் உப்பு, மிக தரம் குறைந்ததாக, மண் மற்றும் அழுக்குடன் இருக்கும். இதனால் இந்த உப்பை உபயோகித்து பதப்படுத்தப்படும் மீன், தரம் குறைந்ததாக இருக்கும்.
- மீன் பதப்படுத்தப்படும் பண்ணையில் நல்ல நீர் கிடைப்பது அரிது.
- கடலிலிருந்து கொண்டுவரப்படும் மீன்கள், பெரிய சிமெண்ட் தொட்டியில் அடுக்கடுக்காக, உப்பினை நடுவில் இட்டு அடுக்கப்படும். இடமும் சுத்தமாக இருக்காது. இப்படி தொட்டிகளில் இரண்டு அல்லது மூன்று தினங்கள் வைத்த பின்னர், கடற்கரையில் திறந்த வெளியில், சூரியனில் உலர்த்தப்படும். இப்படி வைக்கும் பொது, நிறைய மணல் மீன் மேல் ஒட்டிக் கொள்ளும். பின்னர் குவித்து வைக்கப்படும்.
- இப்படி பதப்படுத்தப்படும் மீன், சிகப்பு ஹலோபிலிக் பாக்டீரியாவால் மாசுபடுவதனால், இரண்டிலிருந்து மூன்று வாரம் மட்டுமே, பதப்படுத்திய மீனை சேமிக்கலாம்.
|
|
கேரள மாநிலம், கலிக்கட்டில் உள்ள, மத்திய மீன் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், தரமான பதப்படுத்தப்பட்ட மீன் தயாரிப்புக்கு, சில முறைகளை வகுத்துள்ளது. அவற்றின் குறிப்புகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
- புதிய மீன் கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட பின்பு, உடனடியாக சுத்தமான கடல் நீரில் கழுவி, மீன் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும், அழுக்கு மற்றும் ஏனையவற்றை நீக்க வேண்டும்.
- இவைகளை பின்னர் பதனிடும் இடத்திற்குச் எடுத்துசென்று, மிக கவனமாக சுகாதாரம் மற்றும் தரத்தை பேன வேண்டும். வழக்கமான முறையை போல் அல்லாமல், ஏனைய பதனீட்டு செயல்பாடுகளை, மேஜைகள் மேல், மேற் கொள்ள வேண்டும். இதனால் அழுக்கு, மணல் போன்றவைகளால் மாசுபடுவது கட்டுப்படுத்தப்படும்.
- 10% குளோரின் அளவு கொண்ட நீரை சுத்தப்படுத்த பயன்படுத்துதல் நல்லது.
- பதனிடப்படும் மேஜைகளில், மீன்கள் உள்உடலுறுப்புகளை நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். Êசார்டீன் போன்ற மீன்களில், பதப்படுத்தப்பட்ட பொருளின் தோற்றத்தை மேம்படுத்த, செதில்களை நீக்கலாம். நீக்கப்பட்ட உடலுறுப்புகள், மேஜையின் கீழ் வைக்கப்பட்ட கழிவு கூடையில் உடனே போடப்பட வேண்டும். உள்உடலுறுப்புகளை நீ்க்குவது சாத்தியமற்ற சிறிய மீன்களை, நன்றாக சுத்தம் செய்த பின்னர் நேரடியாக உப்பில் இட வேண்டும்.
- இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட மீன்களை, நல்ல நீரில் கழுவி, நீரை வடிகட்ட வேண்டும். இதை ஜல்லடை போன்ற அமைப்பையுடைய பிளாஸ்டிக் பாத்திரத்தில் எளிதாக செய்யலாம்.
- நன்றாக வடிகட்டிய பின்னர், மீனை உப்பிடும் மேஜைக்கு எடுத்துச் சென்று, தரமான உப்பை ஒழுங்காக கையினால் இட வேண்டும். இதை இடும் வேலையாட்களின் கை, சுத்தமாக இருக்க வேண்டும். பொதுவாக மீன் மற்றும் உப்பின் விகிதம் 1:4 என்ற முறையில் இருக்க வேண்டும்.
- உப்பு நேர்த்தி முடிந்தவுடன், மீனை சத்தமான சிமெண்ட் தொட்டியில் குறைந்தது 24 மணி நேரம் அடுக்கி வைக்க வேண்டும். பின்னர் மீனை வெளியில் எடுத்து, மேலே ஒட்டியுள்ள உப்பு கட்டிகள் நீங்கும் பொருட்டு, நீரினால் கழுவ வேண்டும்.
- இவ்வாறு உப்பிடபட்ட மீன்கள், சுத்தமான உலர்த்தும் மேடைகளில் உலர்த்தப்பட வேண்டும். மேடைகளானது, உயர்த்தப்பட்ட சிமெண்ட் மேடை அல்லது மூங்கில் தட்டிகளாகவோ இருக்கலாம். இவை இல்லையென்றால், மீனை மூங்கில் பாயிலும் உலர்த்தலாம்.
- ஒவ்வொரு தருணத்திலும், சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
|
|
- இந்த முறையில் பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கு, கால்சியம் புரோபியோனேட் மற்றும் தூள் உப்புக் கொண்ட கலவையை தூவ வேண்டும்.
- இந்த கலவையை மூன்று பகுதிகள் கால்சியம் புரோபியோனேட் மற்றும் 27 பகுதிகள் தூள் உப்புக் கொண்டு, உடனுக்குடன் தயாரித்துக் கொள்ளலாம்.
- மீனின் அனைத்து பரப்புகளிலும், ஒரே சீராக படும்படி கலவையை இட வேண்டும்.
- பொதுவாக 1 கிலோ கலவையைக் கொண்டு 10 கிலோ மீனுக்கு தூவலாம்.
- இதன் பின்னர், உதிரி விற்பனைக்கு குறிப்பிட்ட அளவினை எடையிட்டு, பாலீதீன் பைகளில் அடைக்கலாம். மொத்த விற்பனைக்கு, பாலீதீன் இழையிடப்பட்ட, சாக்குகளில் அடைக்கலாம். இவ்வாறு பாக்கேஜ் செய்யப்படுவதால், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போது, பதப்படுத்த்ப்பட்ட மீன் அதிகமாக உலர்வது தடுக்கப்படும். மேலும், பாதிப்பு உருவாக்ககூடிய பாக்டீரியாவில் இருந்தும் பாதுகாக்கப்படும்.
- Êசமைப்பதற்கு முன்னர், மீனை நீரில் ஈடும் போது, உப்புடன் சேர்ந்து, இந்த கவவையும் நீக்கப்படும்.
- எனவே பதனிட்ட மீனை நீன்ட நாள் வைப்பதற்கு மிக எளிய, பாதுகாப்பான மற்றும் தரமான முறையாகும்.
- இவ்வாறு பாதுகாக்கப்பட்ட மீனை குறைந்தது, எட்டு மாதம் வரை நல்ல நிலையில் வைத்து இருக்கலாம்.
|
|
- இம்முறை மிக எளிய மற்றும் சராசரி மனிதனாலும் எளிதாக கையாளபடக்கூடிய முறை.
- இது கொடிய பாக்டீரியாவில் இருந்து மீனை பாதுகாப்பதால், பதனிடப்பட்ட மீனின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தும்.
- மீனின் நிறம், வாசனை மற்றம் சுவையை, கால்சியம் புரோபியோனேட் எந்த வகையிலும் பாதிக்காது.
- மற்ற முறைகளுடன் ஒப்பிடும் போது மிக மலிவான முறையாகும். சேமிப்பு காலம் அதிகரிப்பு மற்றும் அதிக விலை கிடைத்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், இம்முறைக்கு ஆகும் தயாரிப்புச் செலவு மிகுதி, மிக குறைவாகும்
|
|
மூலம்: மத்திய மீன் தொழில்நுட்ப நிறுவனம், கொச்சீன், கேரளா
|
No comments:
Post a Comment