Sunday 18 March 2012

கிருமிநாசினிகளும் பயன்பாடும், பூஞ்சை நச்சு / காளான் நச்சு, நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்


கிருமிநாசினிகளும் பயன்பாடும்

1.லைசோல்
1-2 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தலாம். கோழிப்பண்ணையில் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகள், நடக்கும் பாதை போன்றவற்றைச் சுத்தம் செய்யச் சிறந்தது.

2.சுண்ணாம்புப் பொடி
சுவர்களைச் சுத்தம் செய்யப் பயன்படும் மலிவான கிருமிநாசினி 2-5 சதவிகிதம்
லாசோட்டா வெள்ளைக் கழிச்சல் (தேவைக் குறிப்புகள்)
குடிநீரில் கலந்து20வது வாரம்
லாசோட்டா (தேவை ஏற்படின்)குடிநீரில் கலந்து40வது வாரம்
கரைசல் கொண்டு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் பல்வேறு வகை தொற்றுக் கிருமிகளை நீக்கக்கூடியது. தோலில் பட்டால் அரிப்பை ஏற்படுத்தும்.

3.சலவை சோடா
இது கோழிகள் இல்லாத வீட்டின் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது.

4.ஃபினால்
நச்சுத்தன்மை குறைவு ஆனால் விலை அதிகம் 2-4 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தி வீடுகளையும், கருவிகளையும் சுத்தப்படுத்தலாம்.

பூஞ்சை நச்சு / காளான் நச்சு

கோழிக்குஞ்சுகளின் தீவனத்தில் இப்பூஞ்சை நச்சு இருந்தால் அது முட்டை உற்பத்தி மற்றும் கோழி வளர்ச்சியைப் பாதிக்கிறது. இது கோழியின் முட்டையிடும் திறன், கருவுறுதிறனைப் பாதிக்கிறது. கோழிகளை விட இப்பூஞ்சை நச்சு வாத்துக்களை அதிகம் பாதிக்கிறது.
எனவே தீவனங்களை இப்பூஞ்சை நச்சு தாக்காமல்  பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஈரப்பதம் 11 சதவிகிதம் மேல் இருந்தால் பூஞ்சை வளர்ந்து விடும். நன்கு தீவனங்களை உலர்த்துதல், காற்றுப் புகாத இடத்தில் வைத்தல், ஈரப்பதத்தைக் குறைத்தல் மூலம் தீவனத்தை பூஞ்சை பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம். நச்சுக் கட்டுப்பாட்டு மருந்து அல்லது பூஞ்சைத் தடுப்பு மருந்துகளைத்  தீவனத்தில் கலப்பதும் சிறந்தது.

நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்

ஆயிரக்கணக்கில் கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கும் போது நோய் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு இலாபகரமான கோழிப்பண்ணைக்கு திட்டமிட்ட நோய்க் கட்டுப்பாடு முறை இன்றியமையாததாகிறது. அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவுகின்றன.
  • ஒரு புதிய கோழிகளை கொட்டகையினுள் விடுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே கொட்டகையை சுத்தம் செய்து வைக்கவேண்டும்.
  • பழைய கோழியின் எச்சங்களை கூடிய சீக்கிரம் அகற்றிவிடவேண்டும். சுவர், மேல்கூரை போன்றவைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தவேண்டும்.
  • ஒரு நல்லக் கிருமி நாசினிக் கொண்டு இவையனைத்தையும் சுத்தம் செய்தல் வேண்டும்.
  • பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் கிருமி நாசினிக்  கொண்டு சுத்தம் செய்து உலர வைத்த பின்பே உபயோகிக்கவேண்டும்.
  • ஒளி எதிரொளிப்பான் மற்றும் வளி உமிழும் விளக்குகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவேண்டும். பயனற்ற விளக்குகளை  அகற்றி புதிய விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
  • எலி, நாய், பூனை போன்ற விலங்குகளை பண்ணைக்கருகே அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • பார்வையாளர்களை அதிகம் உள்ளே வராமல் தடுப்பது நன்று.
  • இறந்து போன கோழிகளை உடனே தொலைவில் கொண்டு சென்று புதைத்து விடுதல் வேண்டும்ட.
  • 1 சதவிகிதம் அம்மோனியாக் கரைசல் கொண்டு நீர் மற்றும் தீவனத் தொட்டிகளைத் தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
  • உள்ளே செல்லும் பாதை அமைப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
  • பண்ணையைச் சுற்றிலும் நல்ல சுகாதாரமான முறையைக் கடைபிடிக்கவேண்டும்.
  • ஈரமானக் கூளங்களை  உடனே நீக்கி புதிய கூளங்களை மாற்றவேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் கோழிகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா, இல்லை  சோர்ந்து ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தீவனமிடும்போதும் மற்றும் உள்ளே சென்று வரும் போதும் கவனிக்கவேண்டும்.
  • நல்ல உற்பத்தி நேரத்திலும் மற்றும் இதர அட்டவணை நேரப்படியும் குடற்புழுநீக்க மருந்து  அளிக்கவேண்டும்.
  • ஏதேனும் நோய்பரவல் அல்லது தாக்கம்  தெரிந்தால் உடனே  தேவையான நடவடிக்கைகளை உடனே


No comments:

Post a Comment