Wednesday 28 March 2012

அசுவினி,பரணி, கார்த்திகை,ரோகிணி

அசுவினி

(12 இலக்கின பொதுப் பலன்கள்)


 நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலியாகவும், பலராலும், விரும்பி நேசிக்கப்பட்டவராகவும், செல்வந்தராகவும், நன்கு வளர்க்கப்பட்டவராகவும் விளங்குவீர்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை காட்டும் பண்பாடும் உண்மைபேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் உங்களிடம் காணப்படும். நீங்கள் உங்கள் தொழிலில், பயிற்சி பெற்றவராக விளங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளைப் பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்ல உடையுடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் ஆசை கொண்டவர். உங்களுக்கு பருமனான உடல் கட்டிருந்தாலும், பலவீனமான கல்லீரல் இருக்கும். உங்களுடைய 20 - வது வயதிலிருந்து, நீங்கள் நல்ல அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள். குந்த் முல நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்திருப்பதால், பூஜைகளைச் செய்திடவேண்டும்.



பரணி

(12 இலக்கின பொதுப் பலன்கள்)



நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், உங்களைப் பற்றிய அபாண்டமான வதந்திகளுக்கு, நீங்கள் இலக்காவீர்கள். உபயோகமற்ற முயற்சிகளில், நீங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். அன்றாடப் பணிகளில், நீங்கள் ஒழுங்காகச் செயல்படமாட்டீர்கள் வழக்கத்துக்கு விரோதமான செயல்களில் நீங்கள் நாட்டம் காட்டுவீர்கள் 



கார்த்திகை

(12 இலக்கின பொதுப் பலன்கள்)


இந்த நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்தவராதலால், நீங்கள் கஞ்சத்தனமாகவும், நன்றிகெட்டவராகவும், எப்போதுமே பதட்டம் மிகுந்த, மனக் கவலையுடையவராகவும் இருப்பீர்கள். உங்கள் பண நிலைமை, சிறப்பாக இராது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு நல்லுறவு நிலவாது. உணவு மற்றும் லவங்க சாமான்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு பளிச்சென்ற நல்ல தோற்றமிருக்கும் நீங்கள் பரவலாகப் புகழ்பெற்று விளங்குவீர்கள். யாருமே, உங்களை நம்ப முடியாது நியாயமற்ற வழிகளில் நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால். உங்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை முடித்துக் கொடுக்கும் திறமை, உங்களுக்கு இருக்கிறது.





ரோகிணி

(12 இலக்கின பொதுப் பலன்கள்)


நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் மதத்தில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு விவசாயம் முலமாகத்தான், முக்கியமாக வருமானம் கிடைக்கும். நீங்கள், நல்ல அழகிய தோற்றமுடையவராகவும், புத்திசாலியாகவும், புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் மிகுந்த சாமர்த்தியசாலியாகவும் விளங்குவீர்கள்

No comments:

Post a Comment