Wednesday 14 March 2012

தியானங்கள் பலவிதம்


சென்னை அருங்காட்சியகம்

visu brnda at vishnubrundha222 - 1 day ago
அறிய பொருட்களை காட்சிப்படுத்தும் ஓர் இடமே அருங்காட்சியகம். அறிவியல், வரலாறு, புவியியல், பண்பாடு, கலை போன்ற பல்துறை அறிவை மனப்பாடம் செய்யாமலேயே காட்சிகளாக நம் மனதில் பதித்து விடுவதே அருங்காட்சியகத்தின் சிறப்பம்சமாகும். தற்காலத்தில் காணமுடியாத அல்லது நெருங்கி சென்று பார்க்க முடியாதவைகளை எட்டும் தூரத்திற்கு இவை கொண்டு வந்து விடுகிறது. இந்தியாவின் முதல் அருங்காட்சியகமானது 1814 இல் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து வகையான பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. எனவேதான் இதற்கு இந்திய அருங்காட்சியகம் என்றே பெயர் வைத்தனர்.இதன் தொடர்ச்சியா... more »

4 ஆயிரம் ஆண்டு கால பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு

visu brnda at vishnubrundha222 - 2 days ago
4 ஆயிரம் ஆண்டு கால பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும், சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தை பொங்கல். தை பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்... more »

ஹதயோகம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
ஹதயோகம்[image: Post image for ஹதயோகம்] பதஞ்சலி முனிவரின் யோக சாஸ்திரத்தில் யோகா நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் மற்றும் ராஜயோகம். ஹதயோகம் ராஜயோகத்தின் ஓர் அங்கம் என்றும் தனியான பகிரங்க யோகமென்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஹதயோகத்தைபற்றி இப்போது தெரிந்து கொள்வோம். ஹதயோகம் இந்த யோகா பிரிவின் அடிப்படை உடற்பயிற்சிகளால் (ஆசனங்கள்) மனதையும், உடலையும் நல்ல ஆரோக்கிய நிலையில் வைப்பது. ஹதயோகத்தின் முடிவில் ராஜயோகம் அடிப்படைகள் ஆரம்பிக்கின்றன. ராஜயோகம் மிக முன்னேறிய யோக நிலை. ஹதயோகம் ராஜயோக சித்தியை அடைய உதவும் முதல் படி. ஹதயோகம் வெறும் உடற்பயிற்சி மட்டுமல்... more »

மத்ஸ்யாசனம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
மத்ஸ்யாசனம்[image: Post image for மத்ஸ்யாசனம்] ‘மத்ஸ்யம்’ என்றால் மீன். மீன் தண்ணீரில் சுவாசிப்பதைப் போல், நமது சுவாசத்தை உயர்த்துவதால் இந்தப் பெயர் வந்தது. செய்முறை 1. இந்த ஆசனத்தை “பத்மாசனம்” போல் சப்பணமிட்டு உட்கார்ந்து செய்யலாம், இல்லை மல்லாந்து படுத்து கொண்டு செய்யலாம். 2. முதுகு தரையில் படுமாறு மல்லாந்து படுக்கவும். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி தரையில் வைக்கவும். கால்கள் சேர்ந்திருக்க வேண்டும். 3. வலது காலை மடக்கி இடது தொடையிலும், இடது காலை மடித்து வலது தொடையிலும் வைக்கவும். படுத்த நிலையில் பத்மாசனத்தில் இருப்பது போல் தோன்றும். பத்மாசனத்தில் ஆரம்பித்தால், மல்லாந்து பின் சாய்து பட... more »

மகராசனம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
மகராசனம்[image: Post image for மகராசனம்] மகரம் என்றால் முதலை. முதலை படுத்திருப்பதைப் போல் குப்புறப்படுத்து செய்ய வேண்டிய ஆசனம். செய்முறை 1. தரை விரிப்பின் மேல் குப்புறப்படுத்து கால்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளவும். நெற்றி (முகம்) தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். 2. கைகளை தலைக்கு மேல் நீட்டி தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். கால்களை நன்கு நீட்டிக் கொள்ளவும். 3. மூச்சை உள்ளிழுத்து கைகளையும், கால்களையும் தரையிலிருந்து தூக்கவும். அவை நீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதியே உடலின் எடையை தாங்கும். 4. இந்த கைகள், கால்கள் தூக்கிய நிலையில் சாதாரணமாக மூச்சுவிட்டு சில நொடிகள... more »

மன அழுத்ததிற்கு யோகா

visu brnda at vishnubrundha222 - 2 days ago
மன அழுத்ததிற்கு யோகா * * இந்த யுகத்தின் பெரிய பிரச்சனை மன அழுத்தம். பெரியவர்கள் மட்டுமல்ல, 5 வயது குழந்தைகள் கூட பாதிக்கப்படுகின்றனர். வேலைப்பளு, குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. பகவத் கீதையில் மன அழுத்தம் பற்றி கூறப்படுகிறது. ஒரு பொருளை பற்றி தொடர்ந்து யோசிக்ககும் போது அதன் மீது பற்று உண்டாகிறது. பற்று ஆசைகளை உண்டாக்கும். ஆசை ஆங்காரத்தை, கோபத்தை உண்டாக்கும். பொருட்கள் மட்டுமல்ல, உணர்ச்சிகளின் மீது கூட பற்றுதல் உண்டாகும். யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவர் ‘கிலேசங்கள்’ பற்றி விவரித்திருக்கிறார். மனக்கிலேசங்கள் கவலையை குறிக்கும். தற்போது நாம் வாழும் உலகம் பரபரப்பானது. போட்டிகள் நிறைந்தது... more »

முதியோர்களும் யோகாவும்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
முதியோர்களும் யோகாவும் * * யோகா செய்வதற்கு வயது வரம்பில்லை. வயது 9 க்கு மேல் சிறுவர்கள் யோகாசனம் செய்யலாம் என்றாலும் சில யோகா நிபுணர்கள் 3 வயது சிறுவர்கள் கூட எளிய ஆசனங்களை செய்யலாம் என்கின்றனர். சிறு வயதிலும் இளவயதிலும் யோகா செய்யாமலிருந்து விட்டு 40 வயதுக்கு மேலானவர்கள் யோகா செய்யும் பொழுது பிரச்சனைகள் எழலாம். ஒருவர் வயதாகும் போது அவரது உடல் விறைத்து தசை இயக்கங்கள் நிதானமாக செயல்படுகின்றன. வயதானவர்களால் சில ஆசனங்கள் செய்ய முடியாது. இவர்கள் எளிய ஆசனங்களை செய்யலாம். பிராணாயாமம், தியானங்களில் ஈடுபடலாம். ஆசனங்களை சௌகரியமாக உடல்வலியின்றி செய்ய முடியும் வரை செய்யலாம். 60 வயதை தாண்டினால் ... more »

பத்தகோனாசனா

visu brnda at vishnubrundha222 - 2 days ago
பத்தகோனாசனா * * ‘பத்தா’ என்றால் பிடிப்பு, பந்தம் என்று பொருள். “கோன” என்றால் கோணம். செய்முறை 1. தரையில் கால்களை முன் நீட்டிக் கொண்டு உட்காரவும். முதுகெலும்பு நேராக நிமிர்ந்திருக்கட்டும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகளை பக்கவாட்டில் தொங்க விட்டு உள்ளங்கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும். 2. கால்களை மடித்து உடலருகே கொண்டு வரவும். இரு கால்களின் குதிகால்கள், உள்ளங்கால் ஒன்றையன்று தொட்டுக் கொண்டு இருக்கும் படி வைத்துக் கொள்ளவும். 3. தொடைகளை விரித்து முழங்கால்களை தரையை தொடுமாறு கீழே இறக்கவும். 4. பாதங்களை, இரு கைவிரல்களை பின்னிக் கொண்டு, பிடித்துக் கொள்ளவும். 5. மூச்சை வெளியே விட்டுக் கொண்ட... more »

பஸ்சிமோத்தாசனம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
பஸ்சிமோத்தாசனம் * * ‘பஸ்சிமம்’ என்றால் மேற்குதிசை. இங்கு முதுகை குறிக்கும். ‘உத்தானா’ என்றால் ‘நீட்டுவது’. இந்த ஆசனத்தில் முதுகுப் பகுதி நன்கு இழுக்கப்படுவதால், ‘பஸ்சிமோத்தாசனம்’ என்ற பெயர் வந்தது. செய்முறை 1. தரையில் உட்கார்ந்து கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளவும். கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். நார்மலாக மூச்சு விடவும். 2. கைகளை நேராக உயர்த்தி (மூச்சை உள்ளிழுத்து) காதோடு ஒட்டி இருக்குமாறு தூக்கவும். 3. அப்படியே கைகளை முன்னால் சாய்த்து, இடுப்பை வளைத்து குனியவும். பாதி வரை குனியவும். 4. அப்படியே தொடர்ந்து குனிந்து, கை விரல்களால் கால் கட்டை விரல்களை ப... more »

பத்மாசனம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
பத்மாசனம் ‘பத்மம்’ என்றால் தாமரை. இதை செய்யும் போது தாமரை மலர் போல் தோன்றுவதால் இந்தப் பெயர். தியானம் செய்வதற்கு ஏற்ற ஆசனம். இதை ஆசனம் என்று சொல்வதை விட, யோக முத்திரை என்று சொல்லலாம். செய்முறை 1. தரை / தரை விரிப்பின் மேல் உட்காரவும். கால்களை நீட்டிக் கொள்ளவும். 2. முதுகை நிமிர்த்தி நேராக வைக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். நார்மலாக சுவாசிக்கவும். 3. வலது காலை தூக்கி இடது தொடையில் வைக்கவும். அதே போல இடது காலை மடித்து தூக்கி வலது தொடையில் வைக்கவும். 4. இரண்டு குதிகால்களும் அடிவயிற்றை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். 5. இடது கையை நீட்டி வலது கால் முட்டியின் மீது வைக்க... more »

யோகாவும், உடற்பயிற்சியும்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
யோகாவும், உடற்பயிற்சியும் * * உடலின் இயக்கத்திற்கு பயிற்சி தருவது, எந்த முறையில் செய்தாலும் சரி, நல்லதே. உடலுழைப்பு இல்லாமல், எந்த வித உடற்பயிற்சிகளும் இல்லாமல் இருப்பவர்களுக்கு தான் வியாதிகள் அதிகம் வருகின்றன. ஆரோக்கியமான உடல் நிலைக்கு யோகா அல்லது உடற்பயிற்சி ஒரு அவசியமான தேவை என்பது தற்போது நிரூபிக்கப்பட்ட விஷயம். உடற்பயிற்சி சிறந்ததா அல்லது யோகா சிறந்ததா என்று பார்க்கும் போது முதலில் புலனாவது இரண்டில் ஏதாவது ஒன்றையாவது கட்டாயம் செய்ய வேண்டும் என்பது. யோகா நமது தேசத்தில் உருவாகி, உலகெங்கும் பரவிய கலை. அதில் உள்ள சில நன்மைகளை பார்ப்போம். 1. உடற்பயிற்சியில், பெயருக்கு ஏற்ப, உடலின் அ... more »

சவாசனம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
சவாசனம் * * யோகாசனங்களில் முக்கியமானது சவாசனம். ஆசனங்களைப் பற்றிய பல பழைய நூல்களில் விடாமல் குறிப்பிடப்படுவது சவாசனம். பெயருக்கேற்றபடி “சவம்” போல் படுத்து செய்யப்படுவது இந்த ஆசனம். கேட்க, பார்க்க சுலபமாக தோன்றினாலும் செய்ய கடுமையானது. மற்ற ஆசனங்கள் படி, இதை குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வழிகாட்டியாக இதை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் கால்களை நீட்டி நேராக படுத்து கொள்ளவும். கண்களை மூடவும். சமமட்டமாக படுக்க வேண்டும். தலையை வலது புறமோ, இடது புறமோ திருப்பாமல் நேராக வைத்துக் கொள்ளவும். உடல், தசைகளை தளரவிடுங்கள். எந்த விதமான அசைவும் கூடாது. கால்களை அகற்றி ... more »

சத்கர்மங்கள்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
சத்கர்மங்கள் * * சத் கர்மங்கள் அல்லது சத் கிரியைகள் ஹதயோகத்தின் அம்சங்கள் தான். இவை 6 சுத்திகரிப்பு முறைகளாக சொல்லப்படுகின்றன. இந்த ஆசனங்கள் மிகவும் முன்னேறியவை. நல்ல யோகா குருவிடம் முறையாக பயின்ற பின்பே இவைகளை செய்ய வேண்டும். உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சத்கர்மங்களைப் பற்றி இங்கு சுருக்கமாக சொல்லப்படுகிறது. சத்கர்மங்களின் இலட்சியம் நம் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை நீக்குவது. உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறாவிட்டால் பல நோய்கள் உண்டாகும். கீழ்க்கண்டவை கடினமான ஆசனங்கள். இவற்றை நீங்களாக செய்ய வேண்டாம். 1. ஜல நேதி – இதற்கு மூக்குக் குழாயுடைய கிண்டி போன்ற உபகரணம் பயன்படுத்த... more »

சிறுநீரகமும் யோகாவும்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
சிறுநீரகமும் யோகாவும் * * அவரைக்கொட்டை போல் தோற்றமுடைய சிறுநீரகங்கள் இரண்டாக இருக்கும். ஒவ்வொன்றும் 4 (அ) 5 அங்குல நீளம் உடையது. ஆரோக்கியமான மனிதனுக்கு ஒரு சிறுநீரகமே போதுமானது. சிலர் ஒரு சிறுநீரகத்துடனேயே பிறக்கின்றனர். சிறுநீரகத்தின் முக்கியமான பணி ரத்தத்திலிருந்து கழிவுப்பொருட்களை நீக்கி சிறுநீராக வெளியேற்றுவது. சிறுநீரக கோளாறுகள் சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன. சிறுநீரக கோளாறுகளை போக்கும் ஆசனங்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள் சூரிய நமஸ்காரம் – சிரசாசனம், சர்வங்காசனம், சலபாசனம், தனுராசனம், மத்ஸ்யேந்திராசனம்,... more »

செக்ஸ் ஆசனங்கள்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
செக்ஸ் ஆசனங்கள் * * மனிதர்களின் பாலியல் செயல்பாடுகள் சிக்கலானவை. உடலும் மனமும் இணைந்து செய்ய வேண்டிய செயல் ஆண் – பெண் உடலுறவு. உடலுறவு திருப்தியாக இருக்க எண்ணங்கள், உணர்ச்சிகள், ஹார்மோன்கள், சூழ்நிலை, பார்வை, ஸ்பரிசம், வாசனை போன்ற பலவற்றின் சரியான செய்கைகளே பாலுணர்வை தூண்டி பாலியல் உறவுக்கு உதவுகின்றன. ஆண்களில் பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. பாலுறவின் போது நுகர்தல் (வாசனையை உணரும் திறன்) மற்றும் உணர்தல் (தொடுவதை உணரும் திறன்) ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன இதனை சிறப்பாகச் செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான் பெண்கள் மாதவ... more »

சூர்ய நமஸ்காரம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
சூர்ய நமஸ்காரம் * * சூரியனே அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. அநேக ஆயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக நெடுங்காலமாக இந்நாட்டில் பயிலப் பெற்று வந்துள்ளது. இன்றும் பலர் பயிலுகின்றனர். சூரிய நமஸ்காரம் நிமிர்ந்து நின்றும், குனிந்தும், வளைந்தும், படுத்தும் செய்யப்படுகின்றது. ஆரம்பத்தில் இவற்றைச் செய்வதில் சில சிரமங்கள் இருக்கலாம். உடம்பின் சில பாகங்களில் வலி ஏற்படும். சில பகுதிகள் சரி... more »

சுப்த வஜ்ராசனம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
சுப்த வஜ்ராசனம் * * இந்த ஆசனம் ‘சசாங்க ஆசனத்திற்கு’ மாற்று ஆசனம். சசாங்க ஆசனம் செய்த பின் இந்த ஆசனத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும். செய்முறை 1. சசாங்காசனத்தின் துவக்க நிலை போலவே, கால்களை நீட்டி உட்கார்ந்து, பிறகு இரு கால்களை மடக்கி, ஆசனப்பகுதியில் வைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும். 2. மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு பின்பக்கம் சாயவும். கைகளை பின்பக்கம் கொண்டு போய், உடலின் சுமையை வலது முழங்கை மீதும் பிறகு இடது முழங்கைகளின் மீதும் வைத்து சாயவும். கைகளை பின்புறம் மடித்து தலையின் மேல் வைத்துக் கொண்டு நன்றாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். 3. பிறகு மூச்சை வெளியேவிட்டு கைகளை விடுவித்து, முழ... more »

தியானங்கள் பலவிதம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
தியானங்கள் பலவிதம் * * சிகிச்சைகளில் சிறந்த சிகிச்சை யோகாவும் அதன் உள்ளடங்கிய ஹதயோகமும், பிராணாயாமமும், தியானமும் ஆகும். ஹதயோகத்தால் உடலுக்கும், பிராணாயாமத்தால், சுவாசத்திற்கும் தியானத்தால் மனதிற்கும் சிகிச்சை தரப்படுகிறது. நவீன ஆராய்ச்சிகள் தியானத்தால், குறிப்பாக ஆழ்நிலை தியானத்தால் ஏற்படும் பயன்களை நிரூபிக்கின்றன. அரை மணி நேர தியானம் 6 மணி நேர தூக்கத்தால் கிடைக்கும் ஒய்வுக்கு சமானம். தியானம் தரும் நன்மைகள் 1. மனம் அமைதியடைந்து மகிழ்வுறுகிறது. 2. பிராண வாயுவின் தேவை குறைவதால் வளர்சிதை மாற்றம் (விமீtணீதீஷீறீவீsனீ) நிதானமாகிறது. 3. மனம் ஒரு நிலைப்படுகிறது. தேர்ந்தெடுத்த ஒரே விஷயத்தைப்ப... more »

தடாசனம்

visu brnda at vishnubrundha222 - 2 days ago
தடாசனம் * * தடாசனம் அடிப்படை ஆரம்ப ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனம். “தடா” என்றால் மலை குன்று போல் ஸ்திரமாக நிற்பதை குறிக்கும் ஆசனமிது. நின்ற கொண்டு செய்ய வேண்டிய ஆசனங்களை தொடங்கும் முன்பும், முடித்த பின்பும் தடாசனம் செய்ய வேண்டும். செய்முறை 1. நன்கு நிலை கொண்டு நிற்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் அழுத்தமாக வைக்கவும். 2. முழங்கால்கள் வளையாமல் நேராக நிற்கவும். 3. கைகளை தலைக்கு மேல் தூக்கி, இரண்டு கைகளையும் சேர்த்து வந்தனம் (நமஸ்காரம்) செய்வது போல் வைத்துக் கொள்ளவும். 4. மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக குதிகால்களை உயர்த்தவும். 5. குதிகால்களை உயர... more »

No comments:

Post a Comment