Sunday, 22 January 2012

அட்டவணை Third Person Singular


அட்டவணை Third Person Singular (He, She, It: infinitive + e/ es)

He, She, It “மூன்றாம் நபர் ஒருமை” (Third Person Singular) சாதாரண நிகழ்கால வாக்கியங்களின் பொழுது பிரதான வினைச் சொற்களுடன் எப்பொழுதும் s, es எனும் எழுத்துக்கள் இணைந்தே பயன்படும்.

கீழுள்ள அட்டவணையைப் பாருங்கள்.

Third Person Singular (He, She, It: infinitive + e/ es)
I/We/They
He/She/It
தமிழ் விளக்கம்
apply
applies
விண்ணப்பி
come
comes
நிறுவனம்
bring
brings
கொண்டு வா

begin
begins
ஆரம்பி
drive
drives
ஓட்டு

do
does
செய்
draw
draws
(படம்) வரை,பெறு

drink
drinks
குடி

eat
eats
சாப்பிடு

forget
forgets
மற

feel
feels
உணர்

fight
fights
சண்டையிடு
fly
flies
பற

give
gives
கொடு

get
gets
பெறு/அடை

go
goes
போ

have
has
இரு

keep
keeps
வை

know
knows
தெரிந்துக்கொள்

lie
lies
பொய் பேசு

look
looks
பார்

make
makes
தயாரி/தயார் செய்
meet
meets
சந்தி

ride
rides
ஓட்டு

play
plays
விளையாடு

put
puts
வை

say
says
சொல்

sell
sells
விற்பனைச் செய்

send
sends
அனுப்பு

shake
shakes
குலுக்கு

sing
sings
பாடு
speak
speaks
பேசு

spit
spits
துப்பு

steal
steals
திருடு

take
takes
எடு

tell
tells
சொல்

think
thinks
நினை

understand
understands
விளங்கிக்கொள்

wear
wears
உடுத்து/உடையணி

write
writes
எழுது

watch
watches
கவனி


உதாரணம்:

He speaks in English.
அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்.
She speaks in English.
அவள் பேசுகின்றாள் ஆங்கிலத்தில்.
It speaks in English.
அது பேசுகின்றது ஆங்கிலத்தில்.

இப்பாடத்துடன் தொடர்புடைய Grammar Patterns 2 யும் பார்க்கவும்.

விதிமுறைகள்

வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன்iesஇணைத்துக்கொள்ள வேண்டும். (சில சொற்கள் விதிவிலக்கானவை)

உதாரணம்:

Try - tries
Worry - worries

அதேப்போன்று “s,  x,  z,  ch,  sh, o" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன்esஇணைத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணம்:
do - does
go - goes

'have'
என்பதற்கு 'has' என மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.

have - has

குறிப்பு:

He
எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக ஆண்களின் பெயருடனும், She எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பெண்களின் பெயருடனும், It எனும் சுட்டுப் பெயருக்குப் பதிலாக (மனிதரல்லாத) உயிருள்ள உயிரற்ற பொருற்களுடனும் s, es சாதாரண நிகழ்கால வாக்கியங்களில் பிரதான வினைச் சொல்லுடன் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள்.

No comments:

Post a Comment