நல்வரவு (Introduction)
முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் இலக்கண பாடப் பயிற்சிகள்
நீங்கள் பாடசாலை மாணவரா?
பட்டப் படிப்பிற்காக ஆங்கிலம் கற்பவரா?
தொழில் வாய்ப்புக்காக கற்க விரும்புகின்றவரா?
ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா?
பல்லாண்டுகள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றும், ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்று கவலையடைந்துள்ளவரா?
எதுவானாலும் கவலையை விடுங்கள்; இதோ இது உங்களுக்கான வலைத்தளம்.
எவரும் மிக இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடிய பாடத்திட்டம்.
விரும்புவோர் எந்த வயதினராயிருந்தாலும் இணைந்து கற்கலாம்.
இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் சகல "Grammar Patterns" களையும் உள்ளடக்கிய ஆங்கில இலக்கண பாடத் திட்டம்.
இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கான ஒலிதக் கோப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அவை பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு உதவியாக இருக்கும்.
Everyone Can Learn English! English Is Easy to Understand!
Learn to write cover letters and resumes to get the job you deserve.
Improve your writing skills.
Learn English grammar for school, college, exams, or whatever the reason.
Discover the most common mistakes made in English, so you can avoid them.
It is always a good idea to learn correct punctuation, in English.
Everyone Can Improve Their Life!
THE FASTEST WAY LEARN TO SPEAK, READ AND WRITE IN ENGLISH
with Tamil Explanation
குறிப்பு:
தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் "தமிழ் கூறும் நல்லுலகம் நலம்பெறும் வகையில் ஏதாவதொரு பணியினை செய்திட வேண்டும் எனும் பொறுப்பும் கடமையும் உண்டு." அந்தவகையிலேயே இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் தோற்றம் பெறுகிறது. இன்றைய தொழில் நுட்ப உலகில் ஆங்கிலம் கற்காமல் எந்தவொரு வளர்ச்சிப் படியையும் எவரும் எளிதாக எட்டிவிட முடியாது எனும் காலக்கட்டத்திலேயே நாம் உள்ளோம். ஜப்பான், சீனம், பிரஞ்சு மொழிகளில் போன்று உலகின் அனைத்து கற்கை நெறிகளும், கண்டுப்பிடிப்புகளும் எமது மொழியிலேயே கிடைக்கக்கூடிய நிலை எம்தமிழருக்கு இல்லை; அதற்கான அரசியல் பின்புலமும் எமக்கு இல்லை. தமிழர்களைப் பொறுத்த மட்டில், ஆங்கிலம் ஒரு தொடர்பாடலுக்கான மொழியாக மட்டுமன்றி, உலகின் அனைத்து உயர் கற்கை நெறிகளுக்குமான ஒரு திறவுகோளாகவே உள்ளது என்பதே உண்மை.
எனவே தமிழர் அனைவரும் ஆங்கிலம் கற்றுயர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
தமிழ் வளர, தமிழர் வளரவேண்டும். தமிழர் கொத்துக்கொத்தாய் கொன்றொழிந்து விட்டால் தமிழ் எப்படி வளரும்? தமிழ் வளர, தமிழன் உயிர் வாழ்ந்தால் மட்டும் போதாது, தமிழர் ஒரு வளம் பெற்ற இனமாக உலக அரங்கில் உயரவேண்டும்.
கல்வி வளம் பெற்று, பொருளாதர வளம் ஈட்டி, அரசியல் பலம் நிலைநாட்ட வேண்டும்.
அப்பொழுது தான் தமிழர் எனும் ஒரு தொன்மையான இனம் தன்மானத்துடன் தலை நிமிரல் முடியும்.
இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் உலகில் ஏதோவொரு மூலையில் இருக்கும் தமிழருக்கு என்றாலும் உதவியாக இருக்குமானால், அதுவே எனக்கு மிகுந்த உவப்பைத் தரும்.
இவ்வலைத்தளத்திற்கு வருகைத் தந்திருக்கும் உறவுகளே! இத்தளத்தில் ஆங்கிலம் கற்று உங்களில் ஒரு சிலரேனும் உயர்வார்களானால் அதுவே எனக்கு நிறைவைத்தரும்.
உங்களின் பங்களிப்பு:
இவ்வலைத்தளத்திற்கு வருகை தரும் உறவுகளே!
இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் எந்தளவுக்கு பயனுள்ளது என்பதை உங்களால் தான் மதிப்பிட முடியும். எமது இந்த ஆங்கில பாடப் பயிற்சிகள் பயனுள்ளது என நீங்கள் கருதினால், இத்தளத்தை ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்கள், மாணவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துங்கள். அது நீங்கள் இந்த தளத்திற்கு செய்யும் பங்களிப்பில் ஒன்றாக இருக்கும்
கடைக்கோடி தமிழனும் கற்கட்டும் ஆங்கிலம்!
வேண்டுகோள்:
நீங்கள் ஒரு இணையத்தள உரிமையாளராகவோ, வலைப்பதிவராகவோ, இருந்தால் இத்தளத்தில் காணப்படும் நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Template) ஒட்டி (Copy - Paste) இத்தளத்திற்கு இணைப்பு வழங்குங்கள். கீழுள்ளவாறு தோற்றமளிக்கும். அது ஆங்கிலம் கற்க விரும்பும் யாரேனும் ஒருவருக்கு நீங்களும் உதவியதாக
No comments:
Post a Comment