தோல்நோய்களை குணமாக்கும் சல்மூக்ரா எண்ணெய்!
மரங்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. டையேஷியஸ் மரம் அல்லது சல்மூக்ரா எனப்படும் பசுமை மாறா மரம் மேற்கு மலைத் தொடர்களின் காடுகளிலும் கொங்கனில் தெற்குப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது இந்த மரத்தின் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. இந்த விதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
விதைகளில் ஹிட்னோகார்ப்பிக் மற்றும் சால்மூக்ரிக் அமிலங்கள், கோர்லிக், ஒலியிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்கள் இவற்றோடு க்ரைசோக்ரைசால், ஐசோஹிட்னோ கார்ப்பின் அகிய வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
சல்மூக்ரா எண்ணெய்
விதைகளில் உள்ள டேனின்கள் காய்ச்சலை குணமாக்கும். அலோபதி மருத்துவத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த எண்ணெயாக சல்மூக்ரா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் லேப்ரஸிக்கு பயன்படுத்தப்படுகிறது.
தோல்நோய்களுக்கு மருந்தாகும்
தோல்நோய்களுக்கு மருந்தாக இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆழமான வெட்டுக்காயம், தோல் நோயினால் ஏற்பட்ட தழும்புகளையும் நீக்கி மேற்புறத்தோலினை பழைய நிலைக்கு கொண்டுவரும். என்சைமா, அரிப்பு, படை உள்ளிட்ட தோல்நோய்களுக்கும் இந்த சல்மூக்ரா எண்ணெய் சிறந்த மருந்தாகும். குழந்தை பிறப்பிற்கு பின்னர் வயிற்றுப்பகுதி சுருங்கி தழும்பு ஏற்படும் போது அவற்றை நீக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.
குஷ்டநோய்க்கு மருந்து
சால்மூக்ரா களிம்பு ஒரு பகுதி எண்ணெய் 4 பகுதி வாஸலினுடன் கலந்து தயாரிக்கப்படும். இது பல தோல்நோய்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும். எலுமிச்சை சாற்றோடு கலந்து வாத நோயில் ஏற்படும் சுளுக்குகளை குணப்படுத்தும். விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் குஷ்ட நோய்க்கு மருந்தாகும். 5துளிகள் அளவு எடுத்து படிப்படியாக 30 துளிகள் வரை அதிகரித்து தசைக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும். இதற்கு எத்தில் எஸ்டர்கள் மற்றும் ஹிட்னா கார்ப்பிக் அமில உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
அரைத்த விதைகள் பிற பொருட்களான சல்ஃபர்,கற்பூரம்,எலுமிச்சை சாறு ஆகியவற்றோடு கலந்து மற்றும் ஜட்ரோஃபா சர்க்காஸ் விதை எண்ணெயோடு கலந்து காயங்கள் மற்றும் புண்கள் குணப்படுத்தப் புறப்பூச்சாகப் பயன்படும்.
No comments:
Post a Comment