Monday, 30 January 2012

விண்டோஸ் புதியவர்களுக்கு

விண்டோஸ் புதியவர்களுக்கு


விண்டோஸ் இயக்கத் தொகுப்புக்கு முதல் முதலாக அறிமுகம் ஆகும் புதியவர்களுக்காக    எளிய வழிகள். நீங்கள் விண்டோஸ் குறித்து நன்கு அறிந்தவர் எனில், இவற்றைப் புதிதாய் விண்டோஸ் கற்றுக்கொண்டு பயன்படுத்தும் உங்கள் நண்பருக்கு, குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
1. பைல்களைக் காண விண்டோஸ் எக்ஸ்புளோர ருக்குச் செல்கிறீர்கள். விண்டோஸ் R + E அழுத்தலாம்; ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Explore அழுத்திப் பெறலாம்.
2. பின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் தரும் டைரக்டரிகளில், பல போல்டர்களைத் திறந்து பார்க்கிறீர்கள். இங்கே தரப்பட்டுள்ள சில ஐகான்களைப் பார்க்கலாம். இந்த ஐகான்களைக் கவனியுங்கள். முதலில் உள்ள ஐகானைக் கிளிக் செய்தால், அப்போது நீங்கள் இருக்கும் போல்டருக்கு முன் எந்த போல்டரைப் பார்த்துக் கொண்டிருந்தீர்களோ, அந்த போல்டருக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். கர்சரை அந்த ஐகான் மீது கொண்டு சென்றாலே, அதில் நீங்கள் இதற்கு முன் பார்த்த டைரக்டரி பெயர் கொடுக்கப்பட்டு Back என்ற சொல்லுடன் தரப்படும். இதே போல அடுத்த அம்புக்குறி உள்ள ஐகானில் கிளிக் செய்தால், நீங்கள் பின் செல்வதற்கு முன் பார்த்த டைரக்டரிக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
மேலே அம்புக்குறி கொண்டுள்ள ஐகானில் கிளிக் செய்தால் “தணீ” என்ற சொல் கிடைக்கும். அதாவது நீங்கள் முன் செல்ல வேண்டிய டைரக்டரிக்கு உங்களை இட்டுச் செல்லும்.
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தேடியும், நீங்கள் தேடும் பைல் கிடைக்கவில்லை என்றால், தேடுவதற்கு மீண்டும் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி சர்ச் பாக்ஸ் செல்ல வேண்டியதில்லை. இதிலேயே மேலே காட்டப்படும் Search ஐகானை அழுத்தித் தேடலாம்.
பக்கத்தில் காணப்படும் போல்டர்ஸ் ஐகானில் அழுத்தும் போது, அங்கே இருக்கும் இரண்டு பிரிவு (போல்டர்கள், போல்டரில் உள்ள பைல்கள்) மறைந்து பைல்கள் மட்டும் காட்டப்படும். மீண்டும் அழுத்தினால், போல்டர்கள் பிரிவும் காட்டப்படும்.
நீங்கள் பைல்கள் மற்றும் போல்டர்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த வகையில் அவற்றைக் காட்டுமாறு நீங்கள் விண்டோஸ் இயக்கத்தினை செட் செய்திடலாம். இதற்கு மேலாக உள்ள மெனுபாரில் உள்ள வியூ (View) என்ற பிரிவில் அழுத்தவும். இங்கு ஒரு கீழ் விரி மெனு கிடைக்கும். இதில் எப்படி பைல் மற்றும் போல்டர்கள் காட்டப்பட வேண்டும் எனப் பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் விரும்பும் அனைத்துப் பிரிவுகளிலும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி பின் அப்ளை (Apply) கிளிக் செய்து வெளியேறலாம். இதில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், பைல்கள் வைக்கப்பட்டுக் காட்டப்படும் நிலை முற்றிலும் மாறிவிடுமோ என்று கவலைப்பட வேண்டாம். பைல்களும் போல்டர்களும் அப்படியே தான் இருக்கின்றன. அவை காட்டப்படும் விதத்தைத்தான் நீங்கள் உங்கள் விருப்பப்படி மாற்றுகிறீர்கள். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
பைல் மற்றும் போல்டர்கள்: பைல் என்பதற்கும் போல்டர் என்பதற்கும் வேறுபாடு தெரியாத தொடக்க நிலை கம்ப்யூட்டர் பயனாளர் பலரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். நான் ஒரு படத்தை டவுண்லோட் செய்தேன். ஆனால் அது எந்த பைலில் உள்ளது என்று தெரியவில்லை என்று சொல்வார்கள். உண்மையில் அவர்கள் போல்டரைத்தான் தேடுகிறார்கள். எந்த போல்டரில் அவர் டவுண்லோட் செய்த பட பைல் இருக்கிறது என்பதைத்தான் அவர் தேடுகிறார்.
இனி விளக்கத்திற்கு வருவோம். பைல் என்பது உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் ஒரு ஐட்டம். அது போட்டோவாகவோ, வேர்ட் டாகுமெண்ட்டாகவோ, டேட்டா பேஸ் ஆகவோ, இமெயில் இணைப்பாகவோ இருக்கலாம். ஸிப் பைல் (zip file) என்பது பல பைல்கள் சேர்ந்து சுருக்கப்பட்டு இருப்பது. இதனை விரித்தால், அந்த ஸிப் பைலில் இருப்பவை எல்லாம் தனித்தனி பைலாகக் கிடைக்கும்.
போல்டர் என்பது இந்த பைல்களைத் தாங்கி வைத்திருக்கும் ஒரு கன்டெய்னர். விண்டோஸ் உங்களுக்கு பல போல்டர்களைக் காட்டி தன் வேலையைத் தொடங்கும். அவை Documents, Music, Pictures போன்றவையாக இருக்கலாம்.
சிங்கிள், டபுள் கிளிக்: அடுத்து விண்டோஸ் இயக்கத்திற்கு அறிமுகமானவர்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்னையைப் பார்க்கலாம். அது சிங்கிள் மற்றும் டபுள் கிளிக். சில செயல்பாடுகள் மவுஸின் இடது பக்கம் ஒரு கிளிக் மூலம் தொடங்கலாம். சில இரண்டு கிளிக் மூலம் தொடங்கலாம். இது இப்படித்தான் என விண்டோஸ் இயக்கத்தில் எங்கும் வரையறை செய்யப்படவில்லை. இருப்பினும் இது சார்ந்த சில வழக்கு விதிகளைக் காணலாம்.
1.வெப் பிரவுசரில் இரண்டு கிளிக் வேண்டாம். ஒரு பிரவுசரில் நீங்கள் சந்திக்கும் லிங்க், பட்டன், டேப், டூல்பார் ஐகான்கள், இமெயில் முகவரி மற்றும் பிறவற்றில் ஒரு கிளிக் செய்தால் போதும். இமெயில் முகவரி ஒன்றில் நீங்கள் இரண்டு கிளிக் செய்வதாக வைத்துக் கொள்வோம். உடனே இரண்டு இமெயில் விண்டோக்கள் உங்களுக்குத் திறக்கப்பட்டு கிடைக்கும்.
2. உங்களுடைய விண்டோஸ் குயிக் லாஞ்ச் பாரில்(ஸ்டாட் பட்டனுக்கு வலதுபுறமாகக் காணப்படும்) உள்ள ஐகான்கள் மீது டபுள் கிளிக் வேண்டாம். டாஸ்க்பாரில் உள்ளவற்றில் எதிலும் இரண்டு கிளிக் தேவையில்லை.
3. டெஸ்க்டாப்பில் உள்ள புரோகிராம் ஐகான்களில் இரண்டு கிளிக் செய்தால் தான் அவை செயலாக்கத்திற்குக் கிடைக்கும்.

No comments:

Post a Comment